தேன் முத்தங்கள் போதுமே
5 தேன் முத்தங்கள் போதுமே..
“நாளை நல்ல நாள் காலையில் ஆரம்பிச்சுக்கிறேனே முருகன்..”
சிவா மெல்லிய குரலில் தயக்கமாக கூற..
“அட.. காரியமே கெட்டது போங்க.. உங்களுக்கு என்று ஏகப்பட்ட பில்டப்பு கொடுத்துட்டு வந்துருக்கேன்.. நாளைக்கு என்றால் நான் தரை தளத்தில் நடக்க முடியாது.. ஒன்னு செய்யலாம்.. ஜிஎம் சார் பணம் ரெண்டாயிரம் என்கிட்டே சும்மா தான் இருக்கு.. கொடுத்துட்டு வந்திடுறேன் காலையில் ஆரம்பிச்சுக்கலாம் கெத்தா சொல்லிக்கலாம் .. சரியா?”
ஆர்வக்கோளாறில் இவள் பதில் எதிர்பார்க்காது, எண்ணிய கர்மம் திண்ணிய தோளோடு முடித்தே தீருவேன் முருகன் பறந்து விட..
வேண்டாத வேலையெல்லாம் பறந்து செய்வார்.. இவரு கடுப்பானாள் முருகனின் மேலதிகாரி..
சாயங்காலம் வீடு திரும்பும் போது தான் பார்த்தாள் ஜெப்ரியின் குரல்வழி செய்தியை..
உன் செய்திகளை எதிர்பார்த்தேன் சிமி .. பட் ஒரு நாகரீகத்துக்கு கூட பதில் போடல.. ஒரு வேளை நீ அழுத்தக்காரியோ? பீல் பேட்..
இனி இதற்கு ஏதும் பதில் தந்துவிடாதே இட்ஸ் அக்லி குட் மார்னிங்.. சாரி சாரி குட் ஈவ்னிங் சிமி.. முடித்திருக்க…
கேட்டவளுக்கோ இதயத்தில் எடை குண்டு வைத்த சுமை.. உனக்கு வாழ்க்கை இனிக்கிறது ஜெப்ரி சின்ன சின்ன விஷயங்களுக்கு பெருசா யோசிக்கிற..
தீயின் தகிப்பில் துடிக்கும் பொழுது ஆகம சடங்குகள் மனம் பார்க்காது..
உனக்கு செய்திகள் வாராது என்றால் எனக்கு பதில் தர தெரியாது.. உன் வயசுக்கும் என் இளமைக்கும் என்ன சம்பந்தம்? என்ன பேசினாலும் அபத்தம்..
உன்னை வா போ என எனக்குள் பேசுவதை உன்னிடம் நேரில் பேச முடியுமா? முரண்பாடுகளை முதலில் மனக்கடல் திரும்ப திரும்ப அலையாய் அனுப்பிட்டாலும் ஆழ் மனம் .. தவறே !!! பேசிவிடு சுந்தரி!!!
உந்தி தள்ள…
மிக சரியான வார்த்தை ஏதும் பேசிடாதே.. அக்லி
இதை தாண்டி அழகியலாக எப்படி செய்தி போடுவது? யோசனையில் மெல்லிய உதட்டை பட்டையாகும் படி யோசனையின்றியே கடித்தாள்..
எப்போவுமே தோன்றாத குறுக்கு புத்தி விளையாட்டா வர.. டன்…
இப்போ என்ன செய்யுற பார்க்கிறேன் ஜெப்ரி..
ஐ லவ் யூ ஜெப்ரி.. அவனுக்கு பதில் எழுதிவிட்டு.. சிரிப்பும் கூச்சமும் தாளாது செல்லை “பிளைட் மோட்”யில் போட்டுட்டு வீட்டில் சாதாவா சுற்றினாள்..
அப்பா ரெண்டு ஆளாய் வீட்டுக்கு வந்த பின்.. தாயையும் அழைத்து பக்கத்தில் அமர்த்தி..
வேலையை விட்டு என்னை எடுக்க போறாங்க போல.. என்ன செய்ய? கவலையை வார்த்தையில் தடவி.. பெற்றோரின் ரியாக்சனுக்கு எதிர்பார்த்து கூர்ப்பாய் நிற்க..
ஏன்? ஏன்? அவர்களும் திகைப்பில் கேள்வி கேட்க..
இன்னைக்கு ஹெட் ஆபிசில் இருந்து ரகசியமா எனக்கு மெயில் வந்துச்சு.. சென்னை ப்ரான்ச் நஷ்டத்தில் நடக்குது அதனால் ஆட்குறைப்பு அல்லது சம்பள குறைப்பு இருக்கும்.. அதனால் உங்கள் வசதி பார்த்துக்கோங்க.. இதை யாரிடமும் டிஸ்கஸ் பண்ணக்கூடாது என்றும் காப்பு வாங்கிட்டாங்க.. இனி என்ன செய்வது தெரிலம்மா..
கோர்வையாக குடும்பநலத்துக்காய் பொய் ஒன்றை மிக யோசித்தே வினையமாக சிவா சொல்ல..
இதே சம்பளத்தில் வேலை கிடைக்குமா சுந்தரி?
“விடு அவ வீட்டில் கிடக்கட்டும்.. இவ சம்பாரிச்சு தான் குடிசை கோபுரம் ஆவப்போவுதோ?” அப்பாக்கு சந்தோசம் போல.. வரட்டுத்தனமா முட்டு கொடுக்க..
“அட! சும்மா நீர் இரும் .. இப்போதான் மாரியாத்தா நம்ம மேல கருணை காட்டி இருக்கா என்று நிம்மதியா இருந்தேன்.. யாரு கண்ணு பட்டுச்சி? வயிறு கலக்குதே எனக்கு … மாசமானா வாசலில் நிக்கும் ஆட்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” பலவித குழப்பத்தில் தாய் தவிக்க..
போலீஸ் ல கப்லைன்ட் கொடுப்போம்.. அப்புறம் எப்படி வாசலுக்கு வருவானுக பார்ப்போம்.. அசலுக்கு மேலே வட்டி கொடுத்தாச்சு.. போ போ.. நீதானே வாங்கினே? நீயே பேசு.. தனியா எழுந்து காற்று வராதா பெட்ரூமில் போய் படுத்துக்கொண்டார்.. அவ்ளோதான் எனக்கும் பொறுப்புக்கும் உள்ள சம்பந்தம் என்பது போல..
அம்மாக்கு கண்ணில் அடைபெடுத்த அருவியென கண்ணீர் பொழிய.. நானா தின்னேன் .. குடும்பத்துக்குள்ள தானே போட்டேன் .. இந்தாளுக்கு பொறுப்பு இருந்தா குடும்பம் என்றோ சீர் பட்டிருக்குமே.. நஞ்சும் குஞ்சும் சம்பாரிக்கிறதை நம்பிகிட்டு இருக்க மாட்டேனே.. உனக்கு வெள்ளிகிழமை நெய் விளக்கு ஏத்தினேனே இப்படி பண்ணிட்டியே தாயே.. பசியில்லாத கஞ்சி குடிச்சோமே? ” என்றெல்லாம் வசனம் வைத்து சோகம் பாட எத்தனிக்க..
ப்ச்.. புலம்பரதை நிறுத்திட்டு ஆகற வேலை பாருங்க.. என்ன செய்ய?
சம்பளம் குறைவு ன்னா எவ்ளோ குறைப்பாங்க?
“தெரில.. நாம இங்கேயே இருக்கோம் என்று சம்மதித்து பதில் அனுப்பினா அவங்க அவங்க ஆபர் வைப்பாங்க ம்மா”
“வேற வேலை கிடைக்குமா? இதே சம்பளத்தில்?”
“வாய்ப்பு இல்லம்மா.. இவங்க இத்தனை நாள் இவ்ளோ சம்பளம் கொடுத்ததே பெரிய விஷயம் தான்.. இனொன்னு இங்கேயே இருக்க போறோம் ன்னு அசால்டா இருந்துட்டேன்.. இனி தான் வேறு கம்பனி பற்றிலாம் விவரம் தேடி அப்ளிகேஷன் தயார் பண்ணனும்மா”
அப்போ என்ன செய்யலாம் சுந்தரி?
குறைஞ்சது 30 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் வாங்கிட்டே வேலை தேடனும்.. சம்பளம் எங்கு அதிகம் கிடைக்குமென்று..”
வட்டிக்கு கூட போதாதே.. வீட்டுக்கு..
அப்பா கடையில் வருமானம் பெருக்க சொல்லுங்க ..
அவரா? நல்லா சொன்னே போ.. பகலில் நாலு மணிநேரம் தூங்குறார் கடையை பூட்டிட்டு வந்து.. சின்னவனை கடைக்கு வர சொல்லுறார் இவன் அவருக்கு உதவிக்கு கூட போக மாட்டுறான்..
தம்பி படிக்கட்டும் .. நீங்க இடையில் உதவிக்கு போங்களேன் ம்மா கிட்டே தானே இருக்கு கடை..
ஒரு ஜாமான் இல்ல வெறுமனே அசிங்கமா ஈ ஓட்ட சொல்லுரியா.. அங்கேதான் மொத்த குடிகார பயலுகளும் அங்கேதான் பட்டறைய போட்டு உக்கார்ந்திருகானுங்க.. போ … போ
கடன் கஷ்டம் ன்னா அவர் சரியில்ல சரியில்ல சொல்லிட்டு ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ன்னு ஊதிட்டு இருப்பதை விட.. நடக்கிறது நடக்கட்டும் என்று கடையில் தான் கவனம் வைக்கணும் ம்மா..
5 மாசம் சம்பளம் கொடுத்ததும் பெரிய ஆளுன்னு பேசாதே.. எங்களுக்கு எல்லாம் தெரியும்.. போ போ.. முடியிற வரை தள்ளுவேன்.. முடியாதப்ப விஷத்தை வாங்கி குடிச்சுட்டு படுத்துருவேன்.. சின்னவளாச்சும் மனசில் எதுவும் வைக்க மாட்டா .. நீ இருக்கியே அந்தரங்கம் பிடிச்சவ..” இன்னும் பல வசைகள்.. உருவகங்கள் வார்தையிலேயே..
இதே வார்த்தைகள் இரண்டாவது முறை கேட்கிறேன்.. ஜெப்ரி சொன்னான்..
அம்மாக்கு விஷயம் சொல்லியாச்சு.. விட்டு பிடிப்போம்.. வீட்டு நினைப்பை விட்டு..
டீன் ஏஜ் பெண்ணாய் ஆசையா வாட்ஸாப் சேட் பாக்ஸ் திறக்க..
“ஏய்.. என்ன இது?” கோப முகம் காட்டி ஜெப்ரி மெசேஜ்..
ஓ.. கூல் மச்சான் எதுக்கு கோபிக்கிறார்? அன்பு செய்கிறேன் சொல்வது குத்தமா?
ஒரே செய்தியில் மெச்சுர்ட் பெர்சனை ஆப் பண்ணோம்ல.. தன் அறிவை மெச்சிக்கொண்டாள்..
வீட்டின் வளத்துக்கு பலது யோசித்து வைத்த சிவாவின் புது புத்தி பிரெஷ் யா இருக்க…
“லவ் பண்ணக்கூடாதா பாஸ்?”
“சிமி .. உனக்கு விளையாட கூட தெரியுமா?”
கண்டுபிடிச்சிட்டானோ?!!!
இன்னொரு இதயத்தில் கல்லெறிந்து சலனம் செய்கிறோம் அறியாதே..
இல்ல .. நிஜமாத்தான் சொல்றேன்..
பதிலுக்கு சிமி வெய்ட்டிங்.. உதடு கடிச்சு..
நாம நேரில் பார்க்கும் போது பேசிக்கலாம் .. இதெல்லாம் சாரியில்லாத பேச்சுக்கள் சிமி..
நான் லவ் பண்ணல ஜெப்ரி
ஏய் .. இதென்ன திரும்ப
எஸ் அது பொய் .. உங்கள் மன நிலையை மாற்ற.. காலை உங்களுக்கு பதில் போட எனக்கு எதுவும் தோணல.. விட்டுட்டேன் உங்க பீலிங்ஸ் பார்த்து சங்கடமா இருக்க.. ஐ லவ் யூ சொல்லி சாரி கேட்டேன் ஜெப்ரி.. குட் நைட் .. அடுத்து ஆபிசில் பார்ப்போம் சார்..
நீண்ட விளக்கம் கொடுத்து சிவா அந்த உரையாடலை நிறுத்த..
அந்த பக்கம்.. அமைதி..
ஹலோ.. ஜெப்ரி..
ஐ லவ் யூ சிமி .. குட் நைட் ..ஆப் லைன் போய்ட்டான் ஜெரி
மூச்சு விடுவதையும் மறந்தாள் எனலாம் அவள் நிலை..
பதிலுக்கு பதிலா? என் வயதுக்கு நான் விளையாடுவேன்.. அவன் வயசுக்கு விளையாட்டு வரக்கூடாதே!! இது நிஜமா இருந்தால்? ஏற்பியோ?
என்னை தான் லவ் பண்ண போறான் அவன்? அவன் நிறமென்ன? மணமென்ன? குணமென்ன? டீ விளம்பரமாய் ஜெரி வாயில் வந்த வார்த்தைகளை சந்தேக லிஸ்டில் வைத்தாள் சிவா..
நீண்ட நேரம் கழித்து வந்த கனவிலும் அவன் விரல்கள் அவளை மீட்ட.. உணர்வுகளின் கூட்டத்தில் சிக்கி தவித்தாள் பெண்ணவள்.. முதன் முதல் பருவ உணர்வுகள் தன் மொட்டுகளை மலர்வித்து பூத்து குலுங்க வைத்தது..
கனவுகள் கூடாரத்தில் தங்கினாலும் இதெல்லாம் பொய் பொய் பொய் மாயை என் கனவுக்கு யாரோ ஓர் ஆணின் உருவம் தேவை அதை ஜெரியாக நினைக்கிறேன்.. அவ்வுணர்வுகளோடு போராடிக்கொண்டிருந்தாள்..
இங்கு இரவு.. அங்கோ பகலில் நண்பர்களோடு உரையாடி பொழுதை கரைத்து கொண்டிருந்த ஜெரி க்கு.. முகத்தில் முதன் முதல் கவலையின் ரேகைகள் ..
ஏன் சொன்னேன் என் ஆசையை?
அவளும் எஸ் என்றாலும் குடும்பம் பண்ண நான் தகுதியா? அதெற்கெல்லாம் அடங்குவேனா?
மலர் விட்டு மலர் தாவும் தனக்கு சிமியும் ஒரு வகை மலர் தானோ? பலவாறு யோசனைகள்..
இன்னும் ரெண்டு நாள் இருக்கும் திட்டத்தோடு வந்தவன் .. இந்தியாவுக்கு கிளம்பும் ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தான்..
பேசணும் சிமியோடு.. பழகி பார்த்து அவளோடு நான் கொண்ட பால் மயக்கங்கள் தீர்க்கணும்.. தீர்மானம் கொண்டான்..
மறுநாளே வந்தாலும் யாருக்கும் சொல்லவில்லை .. ரெஸ்ட் எடுத்துட்டு..
அடுத்த நாள் சிமி அறையில் அவள் சீட்டிலேயே அவள் வரும் முன்னே வந்து காத்திருந்தான்..
சிமியின் சிரியா முகம் தரும் வர்ண ஜாலம் காண ஆசை..
தொழிற்கூடம் காதற்கூடமா மாறுமா?
சிமியெனும் தேவதையின் காடாட்சம் இந்த கள்ள பக்தனுக்கு கிடைக்குமா?
வந்தும் விட்டாள்.. காட்டன் சேலையில் பருத்திபூவாய்.. அவளின் பதிவேடுகளை புரட்டி கொண்டிருந்தவனின் அடர்கேசம் கவிழ்ந்திருக்க..
கதவை இயல்பாய் திறந்தவள்.. பாதி உள்ளே வந்தும் வாராதும் ஜெரியின்
வடிவம் கண்டவள்..
நிற்கட்டுமா? போகட்டுமா? இரு கூறு மன நிலையில்..
பதில் தரா காதல் கடன் இன்னும் நிலுவையில்.. இருவருக்கும் மத்தியில் ம்ம்ம்..
