சில்லென்ற குளிர் காற்று கொத்தாய் முகத்தில் பட்ட சில் ஐஸ் உணர்வு சிமிக்கு..
சர்ப்ரைஸ் என்றால் இதுதான் !!! சபாஷ் .. ம்ம்
மலரா உதடுகள் தன் தவம் கலைத்து மலரத்துடித்து இவளின் அதீத பிரயத்தனத்தால் லாகான் பிடிச்சு இழுக்கபட்டு எப்பவும் அணியும் நாடக ஓவிய முகத்தோடே..
“குட் மார்னிங் சார்..”
சடங்கு வார்த்தைகளை மொழிந்து எளிதில் தன்னை மீட்டுக்கொண்டாள் இளையவள்..
நிமிர்ந்தவனின் புது பார்வை வீச்சு அடுத்த போர் யுக்தியாக தன் கண் நோக்கி பாய லேசாய் நடுங்கி பெருவிரல் ஊணி சமாளித்தாள் முகமூடி பாவை
அம்மம்மா!! அடிவயிற்றுக்குள் இங்கும் அங்கும் திக்கின்றி ஓடிய மின்னல்கள் வலிகள் கொடுக்க அம்மாடி !!இதென்ன புது சுகம் !! வாய்விட்டு அனத்த தோன்றிற்று சிமிக்கு..
மூன்றாம் போர் முறை மாற்றினான் எதிராளி மனம் கொல்லும் சிரிப்பு.. நீயும் பதிலுக்கு சிரித்து தான் ஆகணும்டி என்ற திமிர் அதில் இருக்க..
முகமானாய் குனிந்து தலையசைத்து .. அவன் எதிர் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து .. எச்சரிக்கையாய் அவன் பரந்த நெற்றியை மட்டுமே பார்த்து..
“யாரும் சொல்லவே இல்லை நீங்க ஆபீஸ்க்கு வந்திருக்கீங்க என்று ஜி எம் சார் எனக்கு சர்ப்ரைஸ்”
“இப்ப தான் வந்தேன் சிமி.. ஜஸ்ட் டெய்லி டயரி செக் பண்ணிட்டு போகலாம் என்று உன் கேபின் வந்தேன்.. தப்பா எடுத்துக்காதே..”
“நோ நோ.. நான் லீவில் இருந்தாலும் இதான் நடைமுறையே.. நினைக்க ஒன்னுமில்ல..”
வெளியில் இருவர் நாக்குகளும் மனதின் அசைவுகளுக்கு ஒவ்வாது ஏதோ பேசி.. பின் மவுனம் காக்க..
உள்ளே அதன் ஓசை கூச்சல்கள் இட.. சிமிக்கு மூச்சிரைத்தது.. இவ் வினோத அவஸ்தையை விட .. வாய்விட்டே “லவ் யூ” விளையாட்டு ஒன்லி சொல்லிடலாம்..
“சார்..” சிமி சொல்ல முனையும் முன் ஜெரியே முந்திக்கொண்டு..
“சிமி.. எதுவும் பேச வேண்டாம்.. நார்மல் ஓகே.. “
“சார் அன்று லவ் யூ சும்மா தான் சொன்னேன்..
சாரி..”
அவனும் அவளும் ஒருவரை ஒருவர் தாண்டும் பொழுது சிமி மென் குரலில் வேண்ட..
“நானும் அதை சீரிசா எடுத்துக்கல.. உன்னை போல அறிவான இளம் பெண்ணின் சாய்ஸ் நானாக இருக்க மாட்டேன் தெரியும்.. ஆனால் ஈவ்னிங் இரு உன் கிட்டே பேசணும் சிமி ப்ளீஸ்..”
ஜெரியும் முகம் பார்க்காது நகர..
அறிவு மட்டும் சொல்றான்?!! அழகில்லையா??!!
இது அவனின் நார்மல் உற்சாக குரல் அல்ல .. உணர்ந்து கொண்ட உம் முகத்துக்காரி இன்னும் குடையாய் உதட்டை சுருக்கி அமர..
கண்ணாடி கதவை தாண்டியவனின் கண்கள் அவ்வாரஞ்சு சுளையனைய வரிகள் கொண்ட உதட்டில் பதிய.. டீன் வயதில் பெண்களை பார்த்தால் நாடி நரம்பெங்கும் காதல் ஹார்மோன்கள் களி நடம் புரிந்து, கிட்டுமா இக்கனி என்று ஆசையில் துள்ளும்.. அவ்வுணர்வு இப்பொழுதில் பிடிவாதமாய் பூட்டி கிடக்கும் அவ்வுதட்டை தன் நாவவால் துழாவி திறந்தே ஆகணும் என்ற மோக எண்ணம் பிறக்க.. தலையை அசைத்து விரட்டி மனதின் மாயா லீலையை கண்டித்தான்.. ஆனால் அதுக்கோ உரைக்கல.. நாலஞ்சு போதை மாத்திரையை போட்ட மாறி அதே நினைப்பை வச்சுக்கிட்டு லூசாக அன்று நாள் பூரா சுத்தியது..
மாலையும் வர.. மாலை பேசலாம் சொன்னோமே.. சிமி இருப்பாள் என்று அவன் அலட்சியமாக இருக்க.. அவளோ வழமையாக காரில் கிளம்பி வீட்டுக்கு போய்ட்டா..
சரியான முகரடி.. முகம் சுளித்துக்கூட பழக்கமில்லாதவன் அந்த சிரியா நங்கையை போலவே மாறிப்போனான்.. பழக்க தோஷம் ஒட்டிவிட்டது..
வீட்டுக்கு போய்.. குளித்து உடை மாற்றி இரவுக்கான உடற்பயிற்சி மனப்பயிற்சி செய்தாலும் அலைகடலென உள்ளம் நில்லாது ஆடிக்கொண்டே இருக்க.. அபிசியல் உறவு நிலையில் பெர்சனல் போட்டு குழப்பியது தானே என்று புரிந்து ..
இதுக்கெல்லாம் என் பேராசை தான் காரணம்.. இந்த சின்ன பெண் எத்தனை நாள் தாங்கும்? அலட்சியமாக முதன் முதலில் ஆபிசில் தான் எதிர்கொண்டதும்.. இத்தனை மாதங்கள் ஒரு கரும்புள்ளி கூட பெறாது அக்கிளையின் மான்ஸ்டரான தன்னையும் தன் மேலதிகாரத்தையும் தாங்கி திறமையை விட சகிப்பு தன்மையில் உன்னையும் விட நானே பெரிய ஆளு நிரூபித்த சிவாவின் மீது என்று ஆர்வம் வந்தது தெரில..
முழுக்க காட்டன் சேலையில் நேர்த்தியாக உடல் மூடி.. கொஞ்சமும் அகலாது பின் பண்ணி கலெக்டர் லுக்கில் வரும் பாந்தமா? அதிர்ந்தும் பேசாது எதிராளியை பேச விட்டு பின் மென் குரலில் சந்தேகமா? அல்லது குறிப்போ? சொல்லும் அழகோ? ரோல் மாடல் தமிழ் பொண்ணு சிமியை கண்டு ஒவ்வொரு விஷயத்திலேயும் மலைத்தான்.. அப்படி அதிசயமா பார்க்க துவங்கிய பின்.. அடிக்கடி அவள் அறியாது அவளை காண.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் சிமி இருக்க.. கண் வழி இதயம் பறிபோனது.. உடலுக்கு தான் எண்ணிக்கை வயசு என்ற அளவீடு உள்ளது…. மனதை அளக்க எந்த காலண்டரும் இல்லையே..
பார்க்க .. பார்க்க.. பார்க்க.. பிடித்துவிட்டது..
ஆனால் அதுக்கான எந்த சின்ட்ம்ஸ்யும் வெளியில் காட்டிக்கல.. அவள் ஏதோ சொல்ல தான் ஏதோ சொல்ல
சின்ன பொண்ணு பயந்துட்டா..
நீ வேணாம் போ.. நீ வேணவே வேணாம் போ மடியில் படுத்தாலும் கூட.. லேசா சிரிப்பு வந்தது ஜெரிக்கு.. என்ன ஒரு விபரீத யோசனை.. அப்பப்பா!! இந்த மன்சுக்குத்தான் எத்தனை சிறகுகள்.. புள்ளி கிடைத்தாலும் அங்கும் ஓர் அரசியல் பண்ணுது.. மனுசனுக்காவது பார்க்க சீரா உருவம் இருக்கு.. அறிவின் வடிவை வரைய சொன்னால் அது ஒழுங்கில்லாத ஒழுக்கமில்லாதாகத்தான் இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் .. வடிவு ஆராய்ச்சி வீண் தான்..
அப்படியே தன்னந்தனிமையில் பூட்டிய ஏசி அறையில் விடிவிளக்கை வெறித்து பார்த்து பலவிதமான யோசனையில் நாயகன் கிடக்க..
போனில் அழைப்பின் ஒலி..
யார் இந்த நேரத்தில்..??!!!
அவன் பெற்றோர் கூட இந்த நேரத்தில் அழைக்கமாட்டார்கள்.. எட்டி பார்க்க..
சிமி.. புருவம் தானா வளைந்தது ஜெரிக்கு..
லேசா கோபம் வந்தது.. இப்போ இன்னொரு முறை லவ் யூ சொல்ல போறாளா? சாரி ஜெரி சார் மறந்துட்டேன் நீங்க சொன்னதையே.. என்று சாயங்காலம் முகத்தில் கரி பூசி சென்றதை துடைக்க நாடகம் ஆடுவாளா? முதலில் சூடு பறந்தாலும்.. கடைசியில் பேச என்ன இருக்கு இனி .. எடுக்காது விட..
நாகரீகக்காரி ஒரு அழைப்போடு விட்டுவிட்டாள்.
அதுக்கும் வருத்தம்தான் .. அவ்ளோதானா தேடல்? சின்ன பெண் என் எண்ணத்தோடு ஒத்து வர மாட்டாள்.. எதுக்கு இத்தனை போராட்டம்? இது நீ இல்ல ஜெரி.. அவன் அறிவு மனம் கண்டிக்க.. செல் ஒளிர்ந்து அமர ஒளிர மாறி மாறி ஜாலம் காட்ட எடுத்தால் வாட்சப் மெஸேஜஸ் சிவாவிடமிருந்து..
இவன் எதிர் பார்த்த மாதிரியே .. முதலில் சாரி சொல்லி இருந்தாள்..
“தெரியுமே சிமி..” ம்ம்ம்
வேணும் என்றே கிளம்பி சென்றேன் கூறி அந்த வரிகளில் இவனை நிற்க வைத்தவள்..
“நமக்குள் எந்த உறவும் செட் ஆகாது சார்.. எதுக்கு வம்படியா பேசிக்கிட்டு.. சோ இயல்பா இருப்போம்.. ஆல் டெலிடட் .. குட் நைட் சார்..”
அவள் கடைசி வரி போடும் போதே.. இவன் கால் பண்ணிட்டான் என்ன ஆனாலும் சரி என்று..
அவளும் உடனே எடுக்க..
சிமி..
ம்ம்ம்..
சாரி பார் ஆல்
மறந்துட்டேன் சார்.. வச்சிடவா?
“உன் கிட்டே பேசணும் பழகனும்.. ஒரு பாய் பிரன்ட் ஆர் குருவா கூட பேசலாமே? ப்ளீஸ்”
“எனக்கு உங்களை போல உள்ளவங்க கிட்டே பழக தெரியாது பேசத்தெரியாது.. ப்ளீஸ் வேணாம்..”
“வெளியில் வேணாம் .. இப்படி சாட் ல ..”
“ஆண் பெண் என்றாலே கவர்ச்சிதான் இந்த கூடா நட்பு வேண்டவே வேண்டாம் பை சார்.. குட் நைட்..”
“தோற்றாலும் சிங்கத்துடன் என்றால் பெருமையே” மகிழ்ந்தாள் சிமி..
அவளிடம் நட்பு பாராட்ட முயலும் ஜெரி, இவளின் மரியாதைக்குரியவன்..
அவன் விரும்பும் அளவுக்கு ஏதோ என்னிடம் உள்ளது.. நன்றி இறைவனே..
சாரி ஜெரி.. உங்களுக்கு நான் பொருத்தம் இல்ல.. போதும் என்னிடமிருந்து தள்ளி இருங்க.. என் வறுமையின் சாயை உங்களிடம் விழ வேண்டாம்.. முதலில் நான் சரியா ஆகணும் அடுத்து தான் வெளியில் என் கவனங்கள்..
கல்யாணம் புருஷன் குழந்தை குடும்பம் எல்லாம் தொடுவானம் போல தூர தூர இருந்தாலும்.. உங்களை போல கணவன் வாய்த்தால் எனக்கு அது வரமே.. பட் அது வாங்கும் தகுதி இப்பொழுது இல்லை பார்போம்.. ஜெரியின் உறவுநிலையை தள்ளியே நிறுத்தியவள்..
தான் குடும்பத்தை சீர் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்ற பலவித வாய்ப்புகள் போட்டு பார்த்து லாஜிக், சரிவரும் விஷயம் மட்டும் எடுத்து அது எப்படி எதிரொலி கொடுக்கும் சாதகங்களை எண்ணி அப்படியே தூங்கியும் விட்டாள்..
ஏழையாக பிறந்தது என் குற்றம் இல்ல.. ஆனால் ஏழையாக இறந்தால் முழுக்க என் குற்றமே..
ஆழ்மனம் அவளையும் அறியாது சபதம் போட்டுக்கொண்டது..
ஆம் மனம் ஒரு பொக்கிஷக்குடம்.. எதை நினைத்து கையை உள்ளே விடுகிறோமோ அதுவே கிடைக்கும்.. இங்கு கைக்கும் குடத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.. மனம் மட்டுமே செயல்.. எதை பற்றுகிறாயோ அது உன்னை பற்றும்.. இது விதி
சோகம் வேணுமா? அள்ளி தரும்
பாசம் வேணுமா? தரும்
கோபம் வேணுமா? தரும்
சந்தோசம் மகிழ்ச்சி நன்றி அன்பு என்று பேராசையா கேட்டாலும் கொட்டி கொடுக்கும்.. உன்னில் நிறைந்திருக்கும் எண்ணங்களே பொக்கிஷ குடம்.. சோ நல்லதை சேர்த்து வச்சுக்கோங்க.. அள்ளிக்கோங்க
………
மறுநாள் அலுவலகம்.. முன்பு போல ஜெரி இவள் இருக்கும் பக்கமே திரும்பல.. பேசினாலும் அளவே தான்.. தன்னோடு பேசலாம்? பழகலாம்? அழைத்தவனா? சந்தேகப்பட வைத்தான்..
“இதென்ன பெரிய அநியாயமா இருக்கு.. அங்கு கொட்டி கிடக்கு.. நம்ம கிட்டே பிடுங்கி தான் அவனுக பணக்காரனாக திரிரானுக போல..”
அம்மாக்கு நல்லதுக்கு வாய் வருமோ என்னவோ? வளைச்சு கட்டி திட்ட நீளாம போய்ட்டு இருந்தது.. சட்டுனு நிறுத்தி..
“சுந்தரி .. சம்பளம் குறைகிகிறேன்னு சொல்லுதுகளே எவ்ளோ போடுறேன் சொல்லிடுச்சுகளா..”
“ம்ம்ம் பிடித்தம் லாம் போக 33 கிட்டே வரும் போல..”
“அடப்பாவிகளா..!!! மூணில் ஒரு பங்கா சம்பளம்?..” இன்னும் சாபங்கள் தொடர..
“இப்ப கூட சொல்லுங்க நின்னுடுறேன்.. ஒரு ஆறுமாசத்தில் வேற கம்பெனி கிடைக்கும் .. வீட்டிலேயே உக்கார்ந்து வேலை தேடுறேன்..”
“வேணாம் வேணாம்.. போ.. போ… இங்கே இருந்துட்டே சீக்கிரமே வேலை மாறிடு .. இந்த கடங்காரன் வேணாம் சுந்தரி”
“பொதுவாவே நாட்டுல தொழில்கள் மந்தமாத்தாம்மா போய்ட்டுருக்கு.. பணம் சுழன்று வரல.. முதலாளிகளுக்கு இலாபம் வந்தா தான் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியும்? எங்க ஆபிஸிலேயே பத்து பேரை காரணமே சொல்லாமல் எடுத்துட்டாங்க.. நான் படிச்சிருப்பதால் இருக்கியா? விலகிக்கிறியா? நாகரீகமாக கேட்டு இருக்காங்க.. வேற இடம் மாறிக்கலாம்மா வாய்ப்பு தேடிட்டே இருக்கேன்.. ஆபீசுக்கு நேரமாச்சும்மா.. கார் வந்துரும்
கார் வர சரியா இருக்க.. பதட்டம் குறைத்து அமர்த்தலா.. 1 2 3 4 5 என்று தான் ஆபிஸ் போகும் போது கொண்டு போகும் பொருள்களை வகைப்படுத்தி .. கிளம்பிட்டா
“இந்தா சுந்தரி.. தீபா செலவு பண்ணிட்டாளாம் இதில் 38 ரூபா தான் இருக்காம்.. ” பார்த்துக்கோ
அம்மா அந்த பேங்க் கார்ட் தர.. அடுத்த பொய்..
அம்மாவின் சிறுபிள்ளை தனம் நினைத்து சிரிப்பு வர பார்க்க அடக்கிக்கொண்டாள்..
அந்த300 ரூபாயும் எடுத்தாச்சா?..
” ம்ம்.. நான் பார்த்துகிறேன்ம்மா..” விடைபெற்றாள்..
இப்பொழுதெல்லாம் ஜெரியின் பாராமுகம் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கவே தினமும் ஆபிஸ் செல்வது மிகவும் பிரியமான செயலாக ஆகிவிட்டது சிமிக்கு..
ஆண்மை என்பது யாதெனில் விருப்பம் இல்லை என்று சொன்ன பின் திரும்பியும் பார்க்கக்கூடாது .. நிருபித்தான் ஜெரி..
அவன் விலக விலக இவளின் புள்ளி அவனிடம் சென்றது தான் வினோதம்..
சம்பளம் வந்ததும் பிரிச்சு போட்டாள்.. வீட்டுக்கு புது கணக்கில் அம்மாகிட்ட சொன்ன கணக்கு மிச்சம் நார்மல் சம்பள பேங்க் ல.. கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்தது.. படிக்க, வீட்டுக்கடன் மொத்தமா அடைக்க முடியும் தெம்பு கூடியது.. முத வேலையா ரெண்டாயிரம் எடுத்து அட்டெண்டர் முருகன் கையாலேயே ஜெரிக்கு கொடுத்து அனுப்பினாள் சிமி..
பணம் சார்ந்த இழுவைகள் பேர் கெடுக்கும் எனும் இந்த தலைமுறை பெண்ணாய் நேர்மையா.. பணம் உள்ள கார்ட்ய பத்திரமா தன் ஆபிஸ் ட்ராயரில் பத்திரமா வச்சு பூட்டியே விட்டாள்.. இப்போதைக்கு இதை உபயோகிக்கவே வேண்டாம் தேவை இருக்கும் போது பார்த்துக்கலாம்.. அதீத யோசனை..
புத்தகங்களை மனனம் செய்து சூத்திரங்களை கையாண்டு கணக்குகளை நேர் செய்த கல்வியறிவை விட.. மனிதர்களை அப்படியே கொண்டு தங்கள் வழிக்கு கொண்டு வருவது கண்ணை கட்டியது.. ஆனால் இதுதான் பட்டறிவு.. இதை யாரொருவர் கையாள கற்றுக்கொண்டார்கள் என்றால் வெற்றிகரமானவர்கள் என்று சான்றிதழ் தந்திடலாம் .. சிமி அதில் முதல் டாஸ்க் ல இருந்தாள்..
வீட்டுக்கு போனால் என்னென்ன சமாளிப்புகள் இருக்குமோ? பார்ப்போம் யோசனையிலேயே இவள் மாலை கிளம்ப..
எதிரில் வந்து நின்றான் ஜெரி..
“எதுக்கு பணம் தந்த சிமி?”
“அது தரணுமே என்று உறுத்திட்டே இருந்தது அதான் கொடுத்துட்டேன் சார்.. நன்றி சொல்லி இருக்கணும் ல.. சாரி சார்.. நன்றி நன்றி”
“தள்ளியே நிறுத்துர சிமி”
“அந்நியர்கள் அப்படித்தான் இருக்கணும் சார்”
“ஓ.. நைஸ்.. ஜஸ்ட் ஒரு காபி”
“ரெண்டு நாள் ஆகட்டும்.. என் செலவிலேயே வாங்கி தாரேன் சார்.. பை” பெண் அன்னமோ? கோல கலாப மயிலோ? அனைய அலாட்டது அசைந்து செல்லும் சித்திரை பாவையை தன் பிரமிப்பு குறையாது பார்த்துக்கொண்டே இருந்தான் ஜெரி.. ஒருவேளை பழகியிருந்தால் தெவிட்டி இருப்பாளோ? தான் ரொம்ப மெட்சூர்ட் நினைத்திருந்த கர்வத்தை இழந்தான்.. சிமியின் முன் அனைத்தும் முழந்தாளிட்டது.. ஏன்?