தேன் முத்தங்கள் போதுமே
1 தேன் முத்தங்கள் போதுமே…!!!
படிப்பில் “கெட்டிக்காரி” என்று மெடல் வாங்கினாலும் முதல் முறை ஒரு பெயர்பெற்ற நிறுவனத்தில் எடுத்த எடுப்பில் பெரிய போஸ்டிங்.. அந்த கிளையின் மார்க்கெட்டிங் மானேஜராக பணியாற்ற வந்திருப்பது அடிவயிற்றில் நூதனமாய் வலிக்க வைத்து பய உருண்டைகள் உருண்டது சிவகாமசுந்தரி மட்டுமே அறிந்த இரகசியம்
இரண்டு டிகிரிகளும் இந்திய அரசின் உயர்தர நிறுவனத்தில் மெரிட்டில் படித்து பெற்றது.. இவ் நிறுவனம் இவளுக்கு கொடுத்து அழகு பார்க்கும் பதவியும் அதற்கு ஒரு விளம்பரம் மற்றும் பெருமை சார்ந்ததே..
எங்க கிட்டே டாப் ரேங்க் ஹோல்டர் இருக்காங்க என்பதுக்கு மட்டுமே..
சிமி இங்கு எந்த இந்திர தனுசையும் வளைக்கத் தேவையே இல்ல.. ஒன்லி கையெழுத்திடும் மதிப்பு மிக்க சேவை மட்டுமே..
உள் கம்பனி அரசியல் அவளுக்கு தெரியாதல்லவா? நிஜமாவே ஏதோ சாதிக்கத்தான் 5இலக்கங்களில் சம்பளம்/ இந்த போஸ்டிங் என்ற தீவிரத்தன்மையில் இருந்தாள். அதான் நடுக்கம்..
அப்பா பால்ராஜ் தன் டூ வீலரில் இவளை வாசலில் இறக்கி விட்டு யாரோ போல சென்றுவிட ..
“பார்த்து பத்திரம்” சொல்லியிருக்கலாம்.. பணத்துக்கு கூட பஞ்சம் எனலாம்.. வாயிலிருந்து வரும் இனிய வார்தைக்குக்கூடவா கஞ்சம்..ம்ம்ம்
எப்பவும் உள்ளது தானே!!! வீட்டின் தலை மூத்த பெண்ணாய் தன்னையே சரி செய்து கொண்டாள்..
23 வயது பூசினாற்போன்ற பருவம்.. மினுக்கும் தேன் கலர் தேகம் கொண்ட பார்க்க பார்க்க பிடிக்கக்கூடிய முக லட்சணமான பெண் சிவகாம சுந்தரி
லோவர் மிட்டில் கிளாஸ் வர்க்கம்.. படிப்பை உடும்பாய் பிடித்து முன்னேறும் வெறி.. சின்ன சின்ன ஆசைகளுக்கு வழி கொடுக்காது பெரிய இலக்கின் மீது குறி வைத்து அவளையே செதுக்கி கொண்ட இந்த தலைமுறை ..
ஸ்வாதி நட்சத்திரக்காரி பொறுமையில் எருமை போன்ற குணக்காரி வேறு.. பொறுக்கும் குணம் இருந்தாலே அனைத்தையும் ஆகர்சிக்குமே இவளுக்கும் நன்மைகளே தொடர்ந்து நடந்தது இயல்பாவே..
காட்டன் சேலை கட்டி குளோஸ் நெக் ஜாக்கெட் போட்டு கழுத்தில் மெல்லிய செயின், காதில் அடக்கமான தோடு, கையில் இரண்டு தங்க வளையல்கள்.. மிதவிலை செல் என்று அவளுக்கு தெரிந்த வகையில் நீட் லுக்கில் வந்திருக்க.. ஆண்களா நிறைந்து கிடந்த அலுவலகத்தில் முதல் பெண் உயரதிகாரி..
முழுக்க இவளை ஸ்கேன் செய்தே அறிமுகம் நடக்க..
சிரிக்க தெரியாதவளாகவே அனைத்தையும் ஏற்றாள் சிவா
தனக்கு என்று ஒதுக்கப்பட்ட கேபினில் அமர்ந்தவள்.. இன்னும் யாரேனும் ஆபிஸின் உள் கட்டமைப்பை பற்றி விளக்கி சொன்னால் நல்லாருக்குமே.. என நினைத்தாள்..
தானா ஏதாவது புரட்டலாம் என்று தேட..
அவள் அறையின் பைல்கள் கொண்ட கேபினட் பூட்டி கிடந்தது ஒன்றும் அனாவசியமாக வெளியில் இல்ல..
உதவியாளரை கூப்பிட்டு..
“இதன் சாவி யாரிடம் இருக்கும்?”
ஜி எம் சார் வரும் நேரம் தான் அவங்க கிட்டே தான் இருக்கும்..மேம்
Ok.. ஸ்டாக் செக்சன் பார்க்கலாமா?
சார் வரட்டுமே.. அவன் நெளிய..
எப்படியோ போங்கப்பா.. தன் லேப் டாப் திறந்து அமர்ந்து கொண்டாள்..
பாதி மறைத்த கண்ணாடி தடுப்பின் வழி அலுவலகம் ஏதோ ஒரு மாய சக்தியால் இயங்குவதை போன்று அது பாட்டுக்கு நடக்க.. 11 தாண்டியும் அந்த ஜி எம் வரவே இல்ல..
என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்..!! லேசா எரிச்சலும்
ஏமாற்றம் வர.. முகம் சுழித்தே திரை பார்க்க..
அனுமதி கோராது ஆரவாரமாக கதவை திறந்து…
“வணக்கம் வந்தனம் மிஸ் சிவகாமசுந்தரி ..என்ன சாப்பிடுறீங்க? ஹாட் ஆர் கோல்ட்? முருகன் இங்கே வாங்க..
கேன்டீன்ல வாங்கிட்டு வாங்க..
ரொம்ப தோழமையா பேசி எதிரில் நின்றவனின் உயரம்.. அம்மம்மா சொல்ல வைக்கும்.. வயசு 35 இருக்கலாம் என்று முகத்தின் மெச்சூரிட்டி சொன்னது.. கலர் சொன்னது இவனுக்கு வேலை பொழுதுபோக்குக்கு மட்டுமே என்று.. சிவந்த அதரங்கள் சொன்னது இவன் நல்லவன் என்று.. அகன்ற தோளும் ஒட்டிய வயிறும் சொன்னது இவன் எதிலும் பெர்பெக்ட் என்று..
பெண்ணுக்கு தாலி போல ஆணுக்கும் ஏதேனும் வேலி வைத்திருந்தால் திருமணமானவனா? அறிந்து ஆறுதலும் கொள்ளலாம்.. ஆணுக்கு ஆணே காமுறும் அழகன்.. அலங்காரன்..
இத்தனை ஆளுமை கொண்ட பெர்சனோடா வேலை பார்க்கணும் மலைத்தாள் அவ்விளம் கலைமான்..
“வேண்டாம் சார்.. ” லேசா சிவா நாணம் கொண்டு மறுக்க.. அதை சங்கடமா தவறா எடுத்துக்கொண்டவன்..
“இன்னைக்கு என் ட்ரீட் நாளைக்கெல்லாம் நீங்க தான் வாங்கிக்கணும் மேடம்”
“ரெண்டு பில்டர் காபி பெரிய கப் ல முருகன் ” அவரை அனுப்பிவிட்டு..
“என் பேர் ஜெஃப்ரி மிச்சேல்.. இந்த ப்ரான்ச் இன்சார்ஜ்.. 7 அல்லது எட்டு வருசமா இங்கே குப்பை கொட்டுறேன் நினைக்கிறேன்.. அவங்க டார்கெட் கொடுப்பாங்க நேரத்துக்கு முடிச்சி தந்துட்டா மேலிடம் எதுவுமே கேட்காமல் விட்ருவாங்க.. அதனால் பீல் பிரீயா இருங்க சிமி”
சிமியா??!! யாரும் இந்த விளியில் அழைத்தது இல்லை .. சிவா அனுபவமில்லா சிறுபெண் அல்லவா? கண்ணு வியப்பு காட்டி காட்டிக்கொடுக்க..
புரிந்த அந்த மாயவன் லேசாய் புன்னகைத்து..
“சோ இங்கு எந்த விவரம் வேணும்ன்னாலும் என் கிட்டே கேட்கலாம்… என் கார்ட் இதோ இருக்கு என் செல் நம்பர் பார்த்துகோங்க.. “
கையை ஸ்டைலா காட்டி பை சிம்பல் காட்டி எழ..
“ஓகே சார்.. பைல்ஸ்..” என்று இவள் வாய் திறக்கும் முன்..
ஐவிரல்களையும் சேர்த்து காட்டி பேச்சை நிறுத்தியவன்..
“ஒருவாரம் சும்மா வேடிக்கை மட்டும் பாரு சிமி.. மெல்ல மெல்ல கற்றுக்கொள்ளலாம்..”
புயல் போல வெளியே நடக்க.. வழியில் வந்த முருகனிடம் அவன் காபியை வாங்கிக்கொண்டு ஊழியர்களோடு கலந்துட்டான் ஜெப்ரி
இவளுக்கு இந்த டீல் பிடிக்கல.. ஆர்வத்தை தலை தட்டி விடுறான்..
இவன் நல்லவனா? கெட்டவனா?
அவள் காபியை சிப்பு சிப்பா குடித்துக்கொண்டே.. யோசனையில் ஆழ்ந்தாள் சிவா..
