மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா

மோகத்தால் கொல்லாதே முத்தக்காரா!!!

நாயகன் : ருத்ர தேவ்

நாயகி     : கயல்விழி

அத்தியாயம் 1

 சார்…. ஒரு வாரம் டைம் கொடுங்க என் தலையை அடமானம் வைத்தாவது உங்கள் பணத்தை கொடுத்துவிடுகிறேன் எப்படியாவது தன் கடையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்ற பதட்டத்தில் கைகளை கூப்பி உடலை குறுக்கி தன் முன் அமர்ந்திருந்தவனிடம் வேண்ட…

அதனை கேட்க வேண்டியவனோ மொபைலில் முழ்கி முத்தெடுத்தவாரே சைன் இட் ஒருவித அழுத்தத்துடன் கூற சார்…. அது…. அவனது ஒற்றை கனல் வீசும் பரர்வையில் நெஞ்சில் நீர் வற்ற கையெழுத்திட்டு டாக்குமெண்டை நீட்ட அதனை அருகில் நின்றவன் வாங்கி சரிபார்த்து மிஸ்டர்…. நாளையில் இருந்து இந்த கடை எங்க பாஸுக்கு சொந்தம்…. சோ… நீங்க உங்கள் மலரும் நினைவுகளை கொண்டாடிவிட்டு காலி செய்துகொள்ளுங்கள் என்றவன் தன் பாஸின் பின்னால் செல்ல கடையை இழந்தவனோ தன் நிலையை நினைத்து நொந்து போனான். காலம் கடந்த ஞானயோதயம்.

காரில் குத்து பாட்டு ஒலிக்க விசலிடத்தபடிய பாடலை ரசித்தவன் காரை லாவகமாக ஓட்டிக்கொண்டிருந்தவன் இந்த மாத கலக்சன்ஸ் எல்லாம் முடிந்ததா? 

எஸ் பாஸ்…. இது மட்டும் தான் கொஞ்சம் இழுத்தது அதனால்தான் உங்களை வரச்சொன்னேன். ஓஓ…. என்றவன் மது பாட்டிலை எடுத்து சரிக்க பின்னால் அமர்ந்திருந்த விஷ்ணுவுக்குத்தான் தன் பாஸை நினைத்து கவலை வந்தது.

எடுத்து கூறினாலும் டோன்ட் இன்டர்பியர் மை பெர்சணல் ஸபேஸ் என கூறி விடுவான்.

பாஸ்… எனக்கு ஒரு டவுட்…. வாட்…. இது தப்பு இல்லையா? குடிக்குறதா? அதுவும் தான்…. அதை விட பெரிய தப்பு இந்த வட்டி…. தொழில்…. வெகுநாள் தன் மனதில் தோன்றியதை ஒருவாறு எச்சில் விழுங்கியவாறே கேட்டு விட்டு இன்னைக்கு செத்தான் சேகரு…. மனதில் கவுண்டர் கொடுத்தவாறே…. பயத்துடன் அவனை பார்க்க….

தவறுதான்…. என்ன… நம்ம பாஸ் நாம் கூறியதை ஒத்துக்கொண்டாரே ஒரு நிமிடம் இவர் அவர்தானா மனதில் சந்தேகம் எழ அவனது பதிலை வேண்டி முகத்தை பார்க்க தப்புதான்…. ஆனால்… அந்த தவறை செய்வதில்தான் கிக்கே இருக்கு…. இந்த ருத்ரா ஆல்வேஸ் பிரிப்பேர் சம்திங் திரில்லிங்….

அதுதானே எம்பிஏ படிச்சு பிசினஸ் பண்ணுவாங்க….. இவரு…. நீண்ட பெருமூச்சை விட…. இதுவும் பிசினஸ் தான்…. ருத்ரா பதிலடி கொடுக்க விஷ்ணுவுக்கு ஜற்கானது இவரெல்லாம் இமையமலைக்கே போனாலும் புத்தி வராது…

நீ சூப்பர் ஸ்டார் பேனா( fans) நாங்கள் எல்லாம் பவர்ஸ்டார்ரோட வெறித்தனமான ரசிகன்…. இப்ப ஏன் இந்த கேள்வி பாஸ் படத்துக்கு கூட்டிட்டு போகப்போறீங்களா? புது படமா பார்த்து கூட்டிட்டு போங்க ரொம்ப நாளாச்சு…. ஆர்வத்துடன் பேசிக்கொண்டே சென்றவனை….

ஜஸ்ட் ஷட் அப்… உன்னை இமயமலைக்கு பார்சல் பண்ணதான் கேட்டேன்…. ஆர் யூ ரெடி பேபி…. குறும்புடன் கேட்டவனை… பாஸ்… ஆளை விடுங்க… வாழ்க்கையில் நான் இன்னும் ஒண்ணுமே அனுபவிக்கவில்லை…. நீங்க இருக்கும் போது இனிமேல் எதையும் நினைக்க கூட மாட்டேன் என்றவாறே கையெடுத்து கும்பிட… மெல்லிய சிரிப்புடன் வாகனத்தை இரவு நேர விடுதிக்குள் நுழைந்தான்.

ருத்ர தேவ் ஆறடி உயரம் ஆளை மயக்கும் அழகும், கம்பீரமும் நிறைந்தவன். வாழைக்கையில் அவன் கற்ற மிகப்பெரிய பாடம் பணம் இருந்தால் எதுவும் சாதிக்கலாம். பணமே பிரதானம் என எண்ணுபவன். ஆசா பாசங்களுக்கு அவனிடத்தில் இடமில்லை. வட்டி தொழிலில் அதிக லாபம் வருவதால் அதனை செய்கிறான். இதில் பாவம், புண்ணியம் என்ற வார்த்தைகளுக்கு இங்கே இடமில்லை.

அவன் நேசித்த, நேசிக்கும் ஒரு ஜீவன் என்றால் அவனது அன்னை சாருலதாதான். தற்போது உயிரோடு இல்லை.அதனால் அன்னையின் மீது வருத்தமும் உண்டு தன்னையும் உடன் அழைத்து சொல்லவில்லையே என்று. 

உலகத்தில் அவன் மிகவும் வெறுக்கும் ஒரு மனிதன் என்றால் அவனது தந்தை கருணாகரன் தான். தாய் இறந்ததில் இருந்து அவரை அப்பா என்று அழைப்பதை நிறுத்தி விட்டான். மகன் வெறுத்தாலும் ஒவ்வொரு மாதமும் அவனை வந்து பார்த்துவிட்டே செல்கிறார்.

அன்போ, பாசமோ, அக்கறையோ கிடை க்கவேண்டிய வயதில், நேரத்தில் கிடைக்கவில்லை எனில் அதனால் உண்டான காயம் நெஞ்சில் புரையோடி வெறுப்பை உண்டாக்கும் அந்நிலையில் இன்று கருணாகரன்.

மேற்கத்திய இசை இசைக்க இருக்கையில் அமர்ந்தவன் விதவிதமான மதுபானங்களை வாயில் சரிக்க விஷுணுவோ பாஸ்… விஷ்ணு…. என்ற வார்த்தையில் எதுவும் கூறாதே என்ற செய்தி.இருக்க ஒரு வித கையாலாகாததனத்துடன் அமர்ந்தவன் நேரம் நள்ளிரவை தாண்ட பாஸ் போதும் கிளம்பலாம் என கைபிடித்து காரில் கிடத்தி வீட்டை நோக்கி அழைத்து சென்றான்.

கார்…. ஹாரன் சத்தம் கேட்டதும்… காவலாளி வேகமாக வந்து கேட்டை திறக்க அந்த விலை உயர்ந்த கார் மாளிகையில் நுழைந்தது. காரை நிறுத்திய விஷ்ணு கைதாங்களாக ருத்ராவை உள்ளே அழைத்து செல்ல சோபாவில் அமர்ந்திருந்த  ருத்ராவின் தந்தை கருணாகரன் விரைந்து வந்து ருத்ராவை தொட…. முயல….

மதுவின் போதையில் தன்னை மறந்த நிலையில் தள்ளாடத்துடன் இருந்தாலும் மங்கலாக தெரிந்த தந்தையை…. கண்டவன்…. தன் போதை தெளிய விஷ்ணு….. வீடே அதிர கர்ஜித்தவன்… இந்த ஆளை யார் வீட்டிற்குள் விட்டது…. வாட்ச்மேன்…. முதலாளி தன்னை அழைக்கவும் அடித்து பிடித்து ஓடி வந்த காவலாளி…. சார்… அச்சத்துடன் வந்து நிற்க இன்னும் டூ மினிட்ஸ்ல இந்த ஆள் இந்த இடத்தை காலி செய்யவில்லை ஐ வில் டிஸ்மிஸ் யூ…. இடியட்…. கோபத்துடன் தன் அறைக்கு சென்றவன் கதவை அறைந்து சாத்தியத்தில் இருந்தே அவனது கோபத்தின் வீரியம் புரிந்தது.

விஷ்ணு…. என அழைத்த கருணாகரனை தடுத்த விஷ்ணு ப்ளீஸ் அங்கிள் பாஸை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது சோ… நீங்க…

என்னை வெளியே போ என்கிறாய் சரி போகிறேன்… அவனை மட்டும் நல்லா பார்த்துக்கோ அவன் இப்படி குடிப்பதை பார்த்தால் மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கொஞ்சம் அவனுக்கு எடுத்துக்கூறு….நான் அடுத்த மாதம் வருவேன் என்றவர் அவீட்டை வீடு கிளம்பினார்.

ருத்ராவிற்கு தனிமை வேண்டும் என்று எண்ணிய விஷ்ணு கெஸ்ட் கவுஸை நோக்கி சென்றான் ஒருவித குழப்பமும் கவலையும் சுமந்த மனநிலையுடன்.

ருத்ரா தன் வீட்டில் தங்க கூறினாலும் ஏனோ விஷ்ணு  தன் நிலையை அறிந்து மறுத்து விட்டான்.

அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்த ருத்ராவோ… அந்த ஆளை யாரு இங்கே வரசொன்னது அப்பா… என்று அழைக்கக்கூட மனம் வெறுத்தவன் தன் ஆத்திரம் தீர மட்டும் சுவற்றில் ஓங்கி குத்தியவன் பிரிட்ஜில் இருந்த மதுவை எடுத்து தன்னை மறக்கும் அளவுக்கு குடித்தவன் தனக்கு எப்போதும் ஆறுதல் அளிக்கும் போட்டோவை எடுத்தவன் தன் ஆசை தீர பார்த்தவன் அதனை அணைத்தவாறே படுத்துவிட்டான். அவனது உதடுகளோ ஐ மிஸ் யூ மாம்…  ஏன் மாம் என்னை விட்டு போனீங்க? 

வீடெங்கும் சாம்பிராணி மனம் கமழ உதடுகளோ அபிராமி அந்தாதியை பாடியவாறே கடவுளை துதித்துக்கொண்டிருந்தாள் அந்த வீட்டின் செல்ல இளவரசி கயல்விழி.

டார்லிங் காபி…. வாக்கிங் முடித்து வந்த செல்வ நாயகம் டார்லிங் காபி…. என்றவாறே அடுக்களையில் தன் பார்வையை பதித்தவாறே இணையை தேட…. அவரின் முன்னால் நீட்டப்பட்ட டம்ளரை பார்த்தவர் முகத்தை அஷ்டகோணலாக்கி தன் மனைவியை பார்க்க சூரியனை கண்ட தாமரையாய் மலர்ந்த முகத்துடன் முன்னால் நிற்கும் மனைவியை கண்டு கண்களில் காதல் பெருக பார்த்தவர் சுற்றிலும் தன் பார்வையை செலுத்தியவர் மனைவியை அருகில் இழுத்து அவசர முத்தம் ஒன்றை கொடுக்க…. நான் பார்த்துட்டேன் என்றவாறே வந்து அமர்ந்தாள் அந்த வீட்டின் இளைய மகள் குறும்புக்காரி மித்ரஹாசினி.

சிவகாமிக்கு வெட்கம் பிடுங்கி தள்ள கணவனை முறைத்தவாறே உள்ளே சென்றவரை எவ்வாறு சமாதானம் செய்வது, இன்னும் ஒரு வாரத்திற்கு பக்கத்திலே விடமாட்டாளே மனதில் புலம்பியவாறே மனைவி வைத்துசென்ற அருகம்புல் சாறை மிடறு மிடராக குடிக்க என்னப்பா ஜூஸ் இனிக்குதா?

இனிக்குதா? கேள்வியுடன் பார்க்க அதான் உங்க மிசஸ் கிட்ட லஞ்சம் வாங்குநீங்களே மகள் கிண்டல் செய்ய செல்வநாயகம் முகம் செம்மையுற அதனை மறைத்தவர் குட்டிகழுதை வாய்… கூடிபோச்சு என்றவாறே முதுகில் செல்லமாக அடித்து அக்காவை பார் எத்தனை அமைதி…. 

அவள் அமைதி இல்லப்பா அமைதியோ அமைதி…. ஒருவேளை அக்கா வயிற்றில் இருக்கும்போது அம்மா மௌன விரதம் இருந்தங்களாப்பா அக்காவை கிண்டல் செய்ய தீபாராதனை தட்டுடன் ஹாலிற்கு வந்த கயல்விழி தங்கையின் காதை திருக்கியவாறே  தட்டை நீட்ட அக்கா…. வலிக்குது…. ப்ளீஸ்…. ப்ளீஸ்…. இனிமேல் உன்னை கிண்டல் செய்ய மாட்டேன் என்று கெஞ்சியவளின் காதை விட கடவுளே இந்த வீட்டில் ஒரு சின்ன பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லை நீதான் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா…. திருநீறை எடுத்து அக்காவிற்கும், தந்தைக்கும் பூசிவிட என்ன என்பது போல் பார்த்தவர்களிடம்….

என்ன பார்வை சின்ன பிள்ளை என்று சொன்னது உங்களைத்தான் நாங்கள் எல்லாம் எல்கேஜி படிக்கும்போதே எம்எம்பியஸ் ரேஞ்சுக்கு யோசிப்போம் எங்கிட்ட இருந்து உங்களை காப்பாத்த தான் இந்த வேண்டுதல் என்றவள் போங்க போங்க மித்துகுட்டிக்கு பிடிச்ச பூரியும் கிழங்கும் ரெடி பண்ணுங்க நான் போய் குளித்து விட்டு வருகிறேன்.

ஹலோ மிசஸ் செல்வநாயகம் ரொமான்ஸ் மூடில் இருந்து கொஞ்சம் ஒர்க்கிங் மூடிற்கு வாங்க அன்னையையும் கிண்டல் செய்ய தன் முன்னால் பூரி கட்டை வந்து விழ நொடியில் சுதாரித்து சோபாவில் காலை குத்திட்டு அமர்ந்தவள் ஜஸ்ட் மிஸ்…. என நெஞ்சில் கை வைத்து தன்னை நிலைப்படுத்தியவள் அப்பா…. அவங்க சிவகாமி… இல்லை ரவுடிசாமி… என்ன ஓரு த்ரோ என்ன அங்கே சத்தம்…. சமயலறையில் இருந்து குரல் வர நான்… குளிக்கபோறேன்…. நான்…. குளிக்கபோறேன்…. வடிவேலு பாணியில் கூறியவாறே தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

செல்வநாயகம்- சிவகாமி தம்பதியருக்கு இரு மகள்கள். மூத்தவள் கயல்விழி. மிகவும் அமைதி ஆனவள். பேச்சு ஒருவகை ஆயுதம் என்றால் மௌனமும் ஒருவகை சக்தி வாய்ந்த ஆயுதம் தான். கல்லூரி இறுதி ஆண்டு பயில்கிறாள். பள்ளி, கல்லூரி அனைத்தும் பெண்பாலருடன் பயின்றதால் தன் தந்தையை தவிர அந்நிய ஆடவர் வாடை அறியாதவள். பெயருக்குக்கேற்ப கயல் விழியாள். செதுக்கி எடுத்த வெண் சிலை போன்றவள்.

இளையவள் மித்ரஹாசினி. குறும்புக்காரி. குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவள். இந்த வீடு உயிர்ப்புடன் இருக்க காரணம் ஆனவள். பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அக்காவின் அறிவுருத்தலின் படி இருபாலர் பயிலும் பள்ளியில் சேர்க்க ஏண்டா சேர்த்தோம் என்று அவள் தந்தை குறை படாத நாள் இல்லை.

வாரத்திற்கு ஒருமுறையாவது அவளது பள்ளியில் இருந்து அழைப்பு வந்துவிடும் செல்லமாக வளர்த்த மகளை கண்டிக்கும் மனம் இல்லாவிட்டாலும் பின்நாளில் ஏதேனும் பெரிய பிரச்சனை இழுத்துகொண்டு வந்துவிடுவாளோ என அஞ்சி கண்டித்தால் அப்பா அந்த ப்ரின்சிபால் உங்களை சைட் அடிக்கிறாங்கன்னு நினைக்கிறேன் அதான் வாரா வாரம் உங்களை கூப்பிடாராங்க. 

நீங்க அடுத்த வாரம் வரும்போது மேத்ஸ் பீரியட் அப்ப வாங்க அட்லீஸ்ட் மொக்கையில் இருந்தாவது தப்பிக்கலாம் என தந்தைக்கு அறிவுரை கூறுபவளை சிவகாமிதான் அதட்டி மிரட்டி ஏன் சில நேரம் அடி கூட விழுந்துள்ளது.

அடித்துவிட்டு அவர் மனம் நொந்து அமர்ந்தாலும் அம்மா பன்னீர் பட்டர் மசாலா செய்தாயா? என கேட்கும் மகளை என்ன செய்தால் தகும் என்று முறைத்தாலும் நான் இப்படித்தான் என கடந்துவிடுவாள் இந்த மித்துக்குட்டி.

செல்வ நாயகம் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மத்திய நடுத்தர வர்க்க குடும்பம். கடையில் ஓரளவு வருமானம் வந்தாலும் இன்னும் கடையை விரிவு படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் பல கிளைகளை உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை என்பதை விட நெடுநாள் கனவு. 

பேங்கில் லோன் வாங்க வேண்டும் என்று மனம் எண்ணிலாலும் தன் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அமைதியாக உள்ளார். கடவுள் நிச்சயம் தனக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற அபார நம்பிக்கை.

மனிதனின் மனம் குரங்கு போன்றது. அதில் கடலளவு ஆசையும், மோகமும் உள்ளது. ஆசையை அடக்கி அறிவை பயன்படுத்தி செயல்படுபவன் முன்னேறுகிறான் எந்த வித பாதகமும் இன்றி, ஆசையை முன்னிறுத்தி அறிவை இழப்பவன் அதில் உள்ள சாதக பாதகங்களை அறிவதில்லை. செல்வநாயகம் எவ்வழியை தேர்ந்தெடுத்து முன்னேறுவார்?

                                                    முத்தம் தொடரும்…..

இந்த கதை வாரத்திற்கு ரெண்டு யூடி யாவது கொடுக்க ட்ரை பண்றேன் வீட்டில் உள்ள குட்டி பாப்பாவை சமாளிக்க வேண்டியுள்ளது.

ஹாய் டியர்ஸ் என்னுடைய முதல் கதை “நெஞ்சோடு கலந்து உறவாலே ” அமேசானில் போட்டு இருக்கிறேன். மறக்காமல் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

நன்றி


https://www.amazon.in/Nenjodu-kalanthidu-uravaale-Tamil-Mahanya-ebook/dp/B08HL3ZCVD/ref=mp_s_a_1_fkmr0_1?dchild=1&keywords=nenjodu+kanthidu+uravaale&qid=1599509724&sr=8-1-fkmr0

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *