20 & 21 மண்ணில் மறையும் மின்னல்

மண்ணில் மறையும் மின்னல்

மண்ணில் மறையும் மின்னல்

மண்ணில் மறையும் மின்னல்

மண்ணில் மறையும் மின்னல் 1 to 5

மண்ணில் மறையும் மின்னல் 1 to 5

மண்ணில் மறையும் மின்னல்

மண்ணில் மறையும் மின்னல்

6 to 10 மண்ணில் மறையும் மின்னல்

6 to 10 மண்ணில் மறையும் மின்னல்

11 to 15 மண்ணில் மறையும் மின்னல்

11 to 15 மண்ணில் மறையும் மின்னல்

16 to 19 மண்ணில் மறையும் மின்னல்

16 to 19 மண்ணில் மறையும் மின்னல்

16 to 19 மண்ணில் மறையும் மின்னல்

16 to 19 மண்ணில் மறையும் மின்னல்

20 & 21 மண்ணில் மறையும் மின்னல்

20 & 21 மண்ணில் மறையும் மின்னல்

22 & 24 மண்ணில் மறையும் மின்னல்

22 & 24 மண்ணில் மறையும் மின்னல்

24 / 25 மண்ணில் மறையும் மின்னல்

24 / 25 மண்ணில் மறையும் மின்னல்

26/ 27 மண்ணில் மறையும் மின்னல்

26/ 27 மண்ணில் மறையும் மின்னல்

26/ 27 மண்ணில் மறையும் மின்னல்

26/ 27 மண்ணில் மறையும் மின்னல்

28 /29மண்ணில் மறையும் மின்னல்

28 /29மண்ணில் மறையும் மின்னல்

30 மண்ணில் மறையும் மின்னல்

30 மண்ணில் மறையும் மின்னல்

33 / 34 மண்ணில் மறையும் மின்னல்

33 / 34 மண்ணில் மறையும் மின்னல்

மண்ணில் மறையும் மின்னல்

அத்தியாயம் 20

ஆபத்து ஆரம்பம்

தன்னுடைய விபரீத திட்டத்தை தன் கூட்டாளிகளிடம் விவரித்து விட்டு அதை மேற்கொள்ள போகும் வீரனை எதிர்பார்த்து அனைவரின் முகத்தையும் பார்த்தான் வீரகேசரி .

ரணதீரனை கொல்லும் முயற்சி தோல்வியடைந்து விட்டால் கொலையாளிக்கு தப்பி செல்ல எந்த மார்க்கமும் கிடையாது தற்கொலை செய்து கொள்வது மட்டுமே ஒரே வழி என்பதை தான் விளக்கியதும் தன் கூட்டாளிகள் உயிரை காப்பாற்றி கொள்ள பின் வாங்குவார்கள் என்று வீரகேசரி எதிர்பார்த்தான்.

அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக அவனது கூட்டாளிகள் அத்தனை பேருமே தங்கள் வலது கையை நீட்டி” தளபதி! இந்த முயற்சியில் என் உயிரையும் இழக்க நான் தயார் ” என்றனர் கோரசாக ஒரே குரலில்.

தன் எதிர்பார்ப்புக்கு மாறாக தன்ஆபத்து தவிபடை வீரர்கள் உயிரை கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற முன் வந்ததை பார்த்து மனம் நெகிழ்ந்தான் வீரகேசரி .தன் நண்பர்களை அருகே அழைத்து அணைத்து கொண்டவன்” ஆபத்து தவிகளின் பெருமை என்னால் கெட்டுவிட்டதென்று நினைத்தேன். இல்லை. அரசன் இல்லாவிட்டாலும் ஆபத்துதவிகள் தங்கள் இலக்கை அடைந்து விட்டார்கள் என்று நாளைய வரலாறு நம்புகழை பாடப் போகிறது. மிகவும் பெருமிதமாக உணர்கிறேன் நண்பர்களே! உங்களில் ரணதீரனின் உயிரை எடுக்கப் போகும் அதிர்ஷ்டசாலியை நாம் எப்படி தேர்ந்தெடுப்பது?”

“கவலை வேண்டாம் தளபதியாரே! அந்த வீரனை நாம் சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்தேடுப்போம்” என்றான் வீரர்களில் ஓருவன்.

” நல்லது. உங்களில் ஓருவனை நீங்களே தேர்ந்தெடுங்கள்” என்றான்வீரகேசரி .

விரைவிலேயே ஒரு பானைக்குள் அனைவரின் பெயரும் எழுதப்பட்ட ஓலை நறுக்கு போடப்பட்டது.

தன் குல தெய்வத்தை வேண்டி கொண்டபடி அதில் ஒரு ஓலை நறுக்கை எடுத்தான் வீரகேசரி .

அவன் உதடுகள்” சித்திரசேனன் ” என்ற பெயரை உச்சரித்தன.

வீரர்களில் ஓருவன் முன்னால் வந்து நின்றான்.” நான் தான் அது “

” அதிர்ஷ்டசாலி நீ! ஒரு நாட்டின் மன்னனை கொல்லும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது” என்று அவன் தோளை தட்டினான் வீரகேசரி .

” என் பெயரை தேர்ந்தெடுத்த உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான் சித்திரசேனன்.

” என் திட்டத்தின் முழு வெற்றியும் உன் கையில்தான் இருக்கிறது சித்திரசேனா! இது ஒரு திசை மாற்றும் யுக்தி. ரணதீரன் இறந்தாலும் குற்றுயிரோடு தப்பி விட்டாலும் நீ மரணத்தை சந்திப்பது உறுதி. அப்படி ஏதாவது நடந்தால் உள்நாட்டில் தான் எதிரிகளை தேடி கொண்டிருப்பார்கள். அதே நேரம் நம் ஆட்கள் தங்க மாபுரிபட்டிணத்தில் நமக்காக காத்து கொண்டிருக்கும் அமுதனோடு இணைந்து கொள்வார்கள். அங்கேயிருக்கும் அந்த மூன்று விரியன்களையும் நாம் பரலோகம் அனுப்பி வைப்போம். குலச் செல்வங்களை அழித்தொழிப்போம்.”

” நல்லது தளபதியா ரே! கோவிலின் மாடத்தில் ஓளிந்திருக்கும் எனக்கு அம்புகளையும் வில்லையும் யார் கொண்டு வந்து தரப்போவது?”

” என் அம்புலி அதை செய்யும். கவலை வேண்டாம்”

“கோவிலின் மாடத்திற்கு நான் எப்படி யாருக்கும் தெரியாமல் செல்வது?”

” கோயிலில் சிலரை நான் விலைக்கு வாங்கி விட்டேன். அவர்கள் சாமி சிலையையும் விற்கும் சக்தி படைத்தவர்கள். அவர்கள் உனக்கு உதவுவார்கள்! சரி நண்பர்களே! நீங்கள் தங்க மாபுரிபட்டிணத்திற்கு பயணமாகுங்கள். நான் சித்திர சேனனை கோவில் மாடத்தில் ஓளித்து வைத்து விட்டு அம்புலியின் மூலம் ஆயுதங்களை கையளித்துவிட்டு உங்களுடன் வந்து இணைந்து கொள்கிறேன். அதற்கு முன்பாக சித்திர சேனா! உன் குறிவைக்கும் திறமையை சோதித்து பார்த்து விடுவோமா?” என்றான் வீரகேசரி .

” உங்களின் சந்தேகம் நியாயமானதுதான். நான் இந்த திட்டத்திற்கு தகுதியானவன் என்பதை இப்போதே நிருபித்து காட்டுகிறேன்.” என்ற சித்திரசேனன் மரக்கிளையில் மாட்டப்பட்டிருந்த வில்லையும் அம்பையும் கையில் எடுத்து கொண்டான்.

“சொல்லுங்கள் தளபதியாரே இலக்கை! வீழ்த்தி காட்டுகிறேன் என் திறமையை “

அவனை பெருமிதத்துடன் பார்த்த வீரகேசரி தூரத்தில் தெரிந்தகொன்றை மரத்தின் ஓற்றை பூவை காட்டினான். அவனது விரல் கீழே இறங்கும் முன்பாக அந்த பூ அம்பால் துண்டிக்கப்பட்டு காற்றில் மிதந்து கீழே விழுந்தது.

“சபாஷ்! உன் திறமையை ஐயத்திற்கு இடமின்றி நிருபித்து விட்டாய். உன் போன்ற திறமைசாலியை இழக்கப் போவதை நினைத்தால் ?”

“கலங்காதீர்கள் தளபதியாரே! இதற்காக நான் வருந்தவில்லை. என்னுடைய இந்த திறமை நாளை பலி தமாகிவிட்டால் ரணதீரனின் கதை முடிந்துவிடும். அந்த ஒரு பெருமை போதும் எனக்கு ” என்றான் சித்திரசேனன்.

“உனக்காக பெருமைப்படுகிறேன் நண்பா! சரி நாம் கிளம்பலாம்.வீரர்களே! நீங்கள் தங்க மாமா பட்டிணத்திற்கான குறுக்கு பாதையில் எனக்காக காத்திருங்கள். மூன்றாம் சாமத்திற்குள் நான் அங்கு வந்து விடுவேன்”

ஆபத்து தவிகளின் சிறு கும்பல் இரு பிரிவாக பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்க தொடங்கியது.

\u2605\u2605\u2605\u2605\u2605\u2605\u2605\u2605\u2605\u2605

அத்தியாயம் 21

கிளம்பிய எமன்

அன்று இரவு பொற்காசுகளுக்கு விலை போன கோயிலில் உள்ள சிலரின் உதவியோடு சித்திரசேனன் கோவிலின் கோபுரமாடத்தில் பதுங்கி கொண்டான்.

அவனுக்கான வில்லையும் அம்பையும் தன் அம்புலி என்னும் ராஜாளி பறவையின் மூலம் கொடுத்தனுப்பிய வீரகேசரி கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் காலையில் நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமல் சூரியன் கிழக்கே உதித்து தன் பெற் கிரணங்களை வான் வீதியில் வீசி கொண்டிருந்தான். மாடத்தின் உள்ளே பதுங்கியிருந்த சித்திரசேனன் ரணதீரனின் வருகைக்காக காத்திருந்தான்.

கோவிலுக்கு சில காத தூரம் தள்ளிபலத்த பாதுகாப்புடன் படைவீரர்கள் சூழ குதிரையில் வந்து கொண்டிருந்தான் ரணதீரன். அவனுக்கு வெகு நெருக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கணபதி பட்டர்.

எப்போதும் முதுமையின் காரணமாக பல்லக்கில் பயணம் செய்யும் கணபதி பட்டர் இன்று வழக்கத்திற்கு மாறாக நடந்து வருவதை யோசனையோடு பார்த்தான் ரணதீரன். மேலும் மெய் காவல் படையினருக்கு உத்தரவுகளை பிறப்பிப்பதும் தன் கூரிய கண்களால் Uரபரப்பாக அனைவரையும் பார்ப்பதுமாக பர பரப்பாக காணப்பட்ட கணபதி பட்டர் வழக்கத்திற்கு மாறாக ரணதீரனின் கண்களுக்கு தெரிந்தார்.

தன் குதிரையிலிருந்து இறங்கி அதை நடத்தி சென்ற ரணதீரன்” பட்ட ரே! இங்கே என்னதான் நடக்கிறது?” என்றான்.

” எதிரிகளை கண்டுபிடிக்கும் சோதனை நடக்கிறது ரணதீரா!” என்றார்.

“அப்படியானால் நாம் சொக்கநாதரை தரசிக்க இங்கே வரவில்லையா?” என்றான் ரணதீரன்.

“அது ஒரு காரணம். அவ்வளவுதான். குல செல்வங்களை தேடி செல்லும் நம் நண்பர்களை எதிரிகள் பின் தொடர்வார்கள். அவர்களின் எண்ணிக்கையை குறைக்க என்னால் முடிந்த உத்தி இது “

” மீன்களை பிடிக்க மண் புழுவாக என்னை பயன்படுத்துகிறீர்? அப்படித்தானே?”

“ஆமாம்!எதிரிகளின் எண்ணிக்கை நமக்கு சரியாக தெரியாது. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் நம் நண்பர்கள் மீது பாய்வார்கள். அதை தடுக்கவே உன்னை இங்கே வரவழைத்தேன். எப்படியும் உன்னை கொல்ல அவர்கள் இரண்டு பிரிவாக பிரிவார்கள். உன்னை கொல்லும் சதியில் ஈடுபடுபவர்களை நாம் இனம் கண்டு அழித்து விடலாம். மற்றோரு பிரிவை நம் நண்பர்கள் கவனித்து கொள்வார்கள்.”

“நல்ல திட்டம் தான். இவ்வளவு பாதுகாப்பை மீறி என்னை கொல்ல அவர்களால் முடியுமா?”

” அவர்கள் கூலி கொலையாளிகள் அல்ல தீரா .! உயிரை துச்சமாக மதித்து அரசனை காப்பாற்ற அதை இழக்க துணிந்த ஆபத்து தவிகள் .குல செல்வத்தை விட உன்னை கொல்வது தான் அவர்களின் இலட்சியம் ஈடேற ஒரே வழி. நீயும் உன் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்து” என்றார் கணபதி பட்டர்.

ரணதீரனுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. மலர்கள் இருந்த மாலையை தடுத்தார் கணபதி பட்டர். மூங்கில் மரத்தில் இருக்கும் பூநாகம் என்ற புழு போன்ற விசநாகம் மலர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்க கூடுமென்பது கணபதி பட்டரின் அவதானிப்பு

கோயிலை நெருங்கி கொண்டிருந்த ரணதீரனின் மார்பை கோயில் மாடத்திலிருந்து குறிபார்த்து கொண்டிருந்தான் சித்திரனேன். “ஓழிந்து போ எதிரியே!” என்றவாறு தன் வில்லிலிருந்து அம்பை விடுவித்தான் சித்திரசேனன். சிறு மின்னல் கீற்றாகரணதீரனை நோக்கி விரைந்தது அம்பு.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *