13-என் மழை மேகமாய் நீ ஆகினாய்
13-என் மழை மேகமாய் நீ ஆகினாய்..
தனியே அழைத்துச் சென்ற தாத்தா கரிகாலனை நினைத்து பாவப்பட்டவாறு,” தம்பி நாங்களா பொண்ணு பாத்து கட்டி வச்சிருந்தாக்க கொஞ்சம் சூதுவாது தெரிஞ்ச பொண்ணா பார்த்து கட்டி வைத்திருப்போம்..
ஆனா உன் விஷயம் அப்படியில்லை இது நீயும் கட்டிட்டு வரல நாங்களும் கட்டி வைக்கல, ஆனால் தொல்லை உனக்கு வாழ்க்கை முழுக்க உண்டு, அத்தனை வெள்ளந்தியான பொண்ணுப்பா..
இத்தனை நாளா அந்த புள்ளைய கண்டபடி கடித்துக்கொண்டிருந்த உன் பாட்டி, இப்ப அந்த புள்ளபக்கம் மாறிவிட்டாள்..
இந்த காலத்துலெல்லாம் பிஞ்சிலேயே பழுத்து நிக்குதுங்க, இந்த புள்ள பாரு இன்னும் எவ்வளவு கட்டுக்கோப்பாக இருக்குது நம்ம குடும்பத்துக்கு ஏத்த மகராசி இதுதான் என்று முத்திரையும் குத்தி விட்டாள்…
இப்ப உன் மேல தான் அத்தனை பேருக்கும் கோபம்…, ஏன் தம்பி அந்த பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு முதல்ல தெரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் அந்த பொண்ணு கிட்ட நெருங்கி பேசி பழக ஆரம்பிக்கலாம் இல்ல?? ரொம்ப அவசரப் படுறீங்களோ??
(எது அவசரமா நானா?? இது உலகத்திற்கே அடுக்காது தாத்தா, நீங்க பஸ்ட் நைட் வெச்சு ரெண்டு வாரத்துக்கு மேல் ஆச்சு, அந்த லூசுக்கு நான் இதுவரைக்கும் முத்தம்தான் கொடுத்திருக்கேன், இதுக்கே உரண்டை இழுத்து பஞ்சாயத்தை கூட்டி வச்சிருக்கா, பேசாம காவி கட்டிடிட்டு போயிடலாமா, தனி தீவிலே ஜாலியா இருக்கலாம்னு நினைக்க வெச்சுருவா போல)
அந்த பொண்ணுக்கு காய்ச்சல் வந்ததுக்கு காரணமே நீதான் என்று சொல்லுது பா, இன்னும் ஏதேதோ காரணங்கள்… என்னால் அதை எல்லாம் கூற முடியாது தம்பி ஆனால் சற்று சூதானமாக நடந்துகொள்..
உங்கள் இருவர் விஷயம் உங்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது பார்த்து நடந்துகொள்” என்றவாறு அவன் தோளை தட்டி கூறி விட்டு நகர்ந்தார்…
அடக் கடவுளே என்று தலையில் கைவைத்தபடி சற்று சங்கடமாக உணர்ந்தான் கரிகாலன்..
இவள் ஓட்டைவாய் என்று தெரியும் ஆனால் அதுக்காக இப்படியா?? இவளை எப்ப நான் கரெக்ட் பண்ணி…. எப்ப இவள் என்னை லவ் பண்ணி… எப்ப குடும்பம் நடத்தி……. ம்ம்ம்.,..கடவுளுக்குத்தான் வெளிச்சம்..
ஏழேழு ஜென்ம பந்தம் இது.. என்று பலரும் சொல்வது சும்மா கதையோ என நினைச்சேன், இப்பத்தான் புரியுது இவள் எத்தனையாவது ஜென்மத்தில் என்னோடு சேர்ந்து வாழப் போகிறாளோ?? என்பதைதான் சுருக்கமா சொல்லி குறிப்பு குடுத்துருக்காங்க என்று,
இது எதுவும் எனக்கு தெரியாமல் இருக்க, என் வாழ்க்கையை இந்த அரிசி மூட்டை இங்கு கும்மி அடித்துக் கொண்டு இருக்குது..
இவ கிட்ட பேசறதுக்கு ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கு, அப்புறம் எங்க மத்ததுக்கெல்லாம் நேரம்…. என்று பெருமூச்சு விட்டபடி யோசித்தான் கரிகாலன்..
அமைதியாய் தன் அறைக்குச் சென்று கொண்டிருந்தவனை ஐந்து வயதேயான 2 வது தங்கையின் மகள் வந்து, “மாமா நான் உன் மேல கோபமா இருக்கேன்” என்றது…
“ஏன்டா குட்டி?? மாமா மேல உங்களுக்கு அப்படி என்ன கோபம்”??..
“நீ புது அத்தைய இரண்டு கை நடுவிலநிக்க வச்சு பயமுறுத்தினியாமே?? என்கிட்டயும் அப்படித்தான் பயமுறுத்துவியா?? நீ ரொம்ப மோசம் மாமா.. போ நான் உன் கூட டூ”…
கூறி சென்ற சில் வண்டை பார்த்தவன் இதெல்லாம் என் கிட்ட வந்து சிலுப்பிக் கொண்டு போகும் லெவலில் என்னை கொண்டு வந்து விட்டாளே என் எருமை சாரி அருமை பொண்டாட்டி…
வாடி உனக்கு இன்னைக்கு வெச்சிருக்கேன் கச்சேரி என்று நினைத்த வண்ணம் ரூமில் சென்று அடைந்து கொண்டான்..
“எத்தனை படிமானமா இந்த புள்ள வளர்ந்து இருக்குது பாரு??பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் புருஷனைத் தவிர வேறு எந்த ஆம்பளையும் மனசுல கூட நினைக்காத பத்தினி தங்கம் என் பேத்தி….
இனிமே உனக்கு என்ன வேணும் என்றாலும் என்கிட்ட கேளுடா கண்ணு, உனக்கு நான் இருக்கேன்… உனக்கு எல்லாம் நான் செஞ்சு தரேன்”.. என்று வியாவை கொஞ்சிய பாட்டி இப்படி தடாலென்று அவள் பக்கம் சாய்வார் என்று கரிகாலன் கனவா கண்டான்???..
எல்லாம் என்னுடைய நேரக்கொடுமை காலக்கொடுமை…, சும்மா இருந்த சிங்கத்தை சொரிஞ்சு விட்டு விட்டாய் நீ….
இனி பாரு டி,எதையும் நீ வெளியில் சொல்லவே முடியாது ஆனால் என் வழிக்கு வந்தே ஆகவேண்டும்…
அப்படி பக்காவா ப்ளான் பண்றேன் உன்னை என் மனைவியாக்கி காட்டுகிறேன் இல்லேன்னா என் ஒரு பக்க மீசையை எடுத்துக்கரேண்டி..
மனதில் வெறித்தனமான சபதம் எடுத்தான் கரிகாலன்…
இரவு சோபன அறையில்,தன் முதல் திட்டத்தை அமல் படுத்தினான் kk..
“காய்ச்சல் பரவாயில்லையா உனக்கு”???
” காலையிலேயே சரியாயிடுச்சு சீனியர், பாட்டி பக்குவமா இன்னிக்கு எனக்கு சாப்பாடு செஞ்சு கொடுத்தாங்க நல்லா இருந்துச்சு சீனியர்”…
(ஏன் நல்லா இருக்காமலா இருக்கும்?? என்னை பத்தி போட்டுக்கொடுத்து நீ நல்ல பெயர் வாங்கி எல்லோரையும் உன் கைக்குள் போட்டுக்கொள்ள பார்க்கிறாய், அது நடக்காது டி மகளே….)
“ஆமாம் என்னை பற்றி எல்லோரிடமும் என்ன சொன்னாய்”??
“ஏன் சீனியர் ஒன்னும் சொல்லலையே.. நேற்று இங்கே என்ன நடந்துச்சோ அதைத்தான் சொன்னேன், தப்புத் தப்பா எதுவும் சொல்லலியே”…
(சொன்னதே முதல் தப்பு,அதுவும் என்னை வில்லன் மாதிரி திரிச்சது அதைவிட தப்பு, இதில் தப்பா ஏதும் சொல்லைன்னு சொல்றது மஹா தப்பு… தப்பை பற்றி இவ பேசுறா)..
யாராவது திட்டினார்களா?? இல்லை அடிச்சாங்களா?? சீனியர் என்ன பண்ணினாங்க??
(ஓ எனக்கு அடி வாங்கி தரவும் பிளான் பண்ணி வெச்சுருக்கியா, அடிப்பாவி)…
“நீ என்ன சொன்னேன்னு மட்டும் சொல்லு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்”…
“நேத்து நீங்க என்னை நிக்க வச்சு பேசினீங்க இல்ல, அது எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சுல்ல, அதனால எனக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல, அதுதான் சொன்னேன், ஏன் சொல்லக் கூடாதா??
தள்ளி நின்னு பேச மாட்டேங்கிறீங்க, அதுமட்டுமில்லாம ஒரு மாதிரி பேசுறீங்க உங்களுக்கு வேப்பிலை கூட அடிக்க சொல்லி பாட்டி கிட்ட சொன்னேன்…
எனக்கு நேற்று பயமாயிடுச்சு, உங்களுக்கு ஏதோ முனி பிடித்துவிட்டதோ என கொஞ்சம் பயந்து போனேன், அந்த பயத்தில் தான் எனக்கு காய்ச்சல் வந்தது”…
“அப்படியா”??
“ஆமா சீனியர் நேத்து நீங்க வேற மாதிரி இருந்தீங்க”…
“சரி இப்ப நான் நார்மலாக இருக்கிறேனா”??
“கொஞ்சம் அப்படித்தான் தெரியுது சீனியர்”
“சரி இங்க வா உட்கார்”
“இப்போ உன்கிட்டே பேசலாமா?”
“தாராளமா பேசுங்க சீனியர்”…
“எங்க தாத்தா பாட்டி, அப்பா அம்மா, எல்லாரும் திருமணமானவர்கள் தானே”??
“ஆமாம் சீனியர்”..
“எங்க அப்பா எங்க அம்மாவ தொட்டு பேசுகிறார்களா?? பாட்டி தாத்தா தொட்டு பேசுகிறார்களா”??
“ஆமாம் சீனியர்”..
“நமக்கும் கல்யாணம் ஆகிவிட்டது தானே”??
“ஆமாம் சீனியர்”
“அப்ப நான் மட்டும் ஏன் உன்னை தொட்டுப் பேசக்கூடாது??”
“ஆமாம் இல்ல… கரெக்டாதான் கேக்குறீங்க…எனக்கு இது தோணலியே…
சரி சீனியர் நீங்க என்னை இனிமேல் தொட்டு பேசுங்க…
நான் தான் புரியாம எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன், கை குடுங்க நாம் கைக்குலுக்கி பிரச்சனையை முடிச்சுவைப்போம்,
என் தோள்மேல கை வச்சுக்கோங்க இப்போ ஓகேவா சீனியர்,உங்களுக்கு அசவுகரியம் எதுவும் இல்லையே…
இனிமேல் நீங்க என்ன தொட்டு பேசுங்க சரியா?? இப்படி புரிகின்ற மாதிரி விளக்கமா எடுத்து சொன்னீங்கன்னா எனக்கும் ஈஸியா புரியும், அப்போ நானே அதற்கு சரின்னு சொல்லபோறேன், உங்களுக்கு எதையும் விளக்கமா எடுத்துச் சொல்ல தெரியல சீனியர்”
(ஆமாண்டி இந்த தம்மாத்துண்டு விஷயத்துக்கு உனக்கு உப்பு புளி போட்டு விளக்குவாங்க எல்லாம் என்னோட நேரம்.. உனக்கு அரிச்சுவடில இருந்து பாடம் எடுக்க வேண்டியது இருக்கு..)
“சரி அடுத்து, அவங்க எல்லாம் ஒருவருக்கு ஒருவர் பக்கத்துல உட்கார்ந்து தானே பேசுறாங்க”
“ஆமா சீனியர்”
“அப்ப இனிமேல் நீயும் நானும் பக்கத்தில் ஒட்டி உரசிக்கொண்டு அமர்ந்து தான் பேச வேண்டும்”..
“ஆமாம்… இதுவும் கரெக்டு தான்… சரி சீனியர் வாங்க கிட்ட வந்து உட்காருங்க”
நெருங்கி அமர்ந்து,
“என்னோட 3 வது தங்கச்சிக்கு இப்பதான் கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சு”..
“ஆமா சீனியர் சொன்னாங்க”..
“அவளும் அவள் கணவரும் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை பார்த்தாயா”??
“ஆமாம் பல தடவை பார்த்திருக்கேன்…ஒற்றுமை என்றால் நல்லா ஃப்ரெண்ட்ஷிப்போடு இருக்கிறதா சீனியர்?? சரி நாமளும் இனிமேல் ப்ரண்டா இருப்போம் சீனியர் எனக்கு டீல் ஓகே”..
“இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்குது”
“என்ன பிரச்சனை சீனியர்”
“அப்படி கேளு, ஒற்றுமையாக இருப்பது என்பது நபருக்கு நபர் வேறுபடும், நமக்குள் இருக்கவேண்டிய ஒற்றுமை சற்று வித்தியாசமானது”…
“அப்படி என்ன வித்தியாசம் சீனியர்”…
“நீ பார்க்ல லவ்வர்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்கன்னு பார்த்திருக்கியா”??..
“ஓ பல தடவ பாத்துருக்கேன், கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம தப்பு தப்பா நடந்துக்கிட்டு இருப்பாங்க”…
“கரெக்ட் அதே மாதிரிதான் இவங்களும் இருப்பாங்க கவனிச்சுப் பாரு”..
“ஆமாம் இல்ல… எனக்கும் இப்பதான் ஞாபகம் வருது, அன்னிக்கு பாட்டி வாழைப்பூ வடை சுட்டப்போ அவங்களுக்கு கொடுத்துட்டு வர சொன்னாங்கன்னு நான் போனேன்….
கதவு சும்மா சாத்தியிருந்துச்சு அதனால் அதை தட்டாமல் நான் பாட்டுக்கு உள்ளே போனேன், பார்த்தா ரெண்டு பேரும் கட்டிப் பிடித்துக்கொண்டு ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தாங்க எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு, கண்ணை மூடிட்டு ஓடி வந்துட்டேன்”…
(ரெண்டு பேரும் தனியாக இருந்தபோது போய் அவர்களைத் தொந்தரவு செய்ததோடல்லாமல் அவர்களையும் சங்கோஜம் அடைய வைத்திருப்பதைக் கூட இவ்வளவு பெருமையாக யாராலும் கூற முடியாது டி…. ஏன் அவங்க ரெண்டே நாளில் அவசர அவசரமாகக் கிளம்பிப் போய்விட்டார்கள் என்று இப்போ எனக்கு புரியுது)…
“கரெக்ட் புருஷன் பொண்டாட்டி என்றால் அவங்க பிரண்ட்ஷிப் இந்த மாதிரித்தான் இருக்கனும், அப்பதான் யாரும் நம்மை தவறாக பேச மாட்டார்கள்…
அது மட்டும் இல்லாமல் அன்னைக்கு என் அத்தை பொண்ணுங்க வந்து உன்னை துரத்திட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சாங்க இல்லையா?? அதுமாதிரி வேறு யாரும் நினைக்கவும் மாட்டார்கள்”…
” ஓ….இதில் இவ்வளவு விஷயம் இருக்கா”??
“ஆமாம் அதுக்கு முதலில் நம்ம பிரண்ட்ஷிப்பை ஸ்ட்ராங் பண்ண வேண்டும்”..
“ஆமா ஆமா சீனியர் கண்டிப்பா பண்ணனும்”..
(எல்லாத்துக்கும் ஆமாம் மட்டும் போடு, ஆனா ஒன்னும் செயலில் காமித்துவிடாதே மண்டு..)
“அதனாலே நாம கொஞ்சம் அன்னியோன்னியமாக பழகலாமா”??
“ஓகே சீனியர், ஆனா நீங்க அங்க உக்காந்து பழகுங்க, நான் இங்க உட்கார்ந்து பழகுறேன்”..
(அடிங்கொய்யால, விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிந்ததும் சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்ன கதையால்ல இருக்கு, இவ்வளவு நேரம் மாங்கு மாங்குன்னு பேசுனதுக்கு நல்லா கொடுத்த டி டீட்டைலு)…
“இப்படி தூரத்தில உட்காந்தா எப்படி பழகுவது?? இதே மாதிரி தானே வெளியிலேயும் இருப்பாய், அப்ப மத்தவங்களுக்கு நம்ம பிரெண்ட்ஷிப் மேல சந்தேகம் வரும் தானே”??
“வரும் தான் ஆனா இதெல்லாம் தப்பு இல்லையா சீனியர்”…
“நம்முடைய வாழ்க்கையை நெறிப் படுத்துவதற்காக, எப்படி வாழவேண்டும் என்று சொல்வதற்காக, திருமணத்திற்கு முன்னர் இது தப்பு என்று பெரியவர்கள் கூறுவார்கள்..
திருமணத்திற்குப் பின்னர் கணவனுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உன்னதமான உறவு இது..
வேண்டுமென்றால் நீ பாட்டியிடமும் அம்மாவிடமும் திருமண பந்தம் என்றால் என்ன?? என்று கேள், அவர்கள் உனக்கு மிக விளக்கமாக கூறுவார்கள்…
நம் இருவரை பொறுத்தவரை தொட்டு பேசுவதும் தவறு கிடையாது, வேறு எதுவுமே தவறு கிடையாது… அதை முதலில் மனதில் பதித்துக் கொள்”..
“என்னென்னமோ சொல்றீங்க சீனியர் எனக்கு ஒன்னும் புரியல, ஒன்னே ஒன்னு மட்டும் புரியுது நீங்க என்ன தொட்டு பேசுறது தப்பு இல்லை என்பது மட்டும் லேசா புரியுது”..
(இந்தளவுக்கு புரிஞ்சுதா அடேங்கப்பா??)
“சரி அப்படியெனில் எனக்கு ஒரு முத்தம் கொடு” என்று அவளுக்கு மிக மிக அருகில் வந்து அவள் மெத்தென்ற கொழு கொழு இடையில் அவன் இரு கைகளையும் வைத்து சற்று மெலிதாக பிடித்த படி, அவள் கண் பார்த்துக்கேட்டான்….
அவனது இந்த செயலில் வியா சற்று நெளிந்தாள்..இது ஒரு வித புது அனுபவமாய் அவளுக்கு இருந்தது…
கரிகாலனின் ஊடல் சூட்டினை அவன் உள்ளங்கையின் மூலம் இவளின் உடலுக்குள் பாய்ச்சியது போல ஒரு பிரமை வியாவிற்கு…
நீ குழந்தை அல்ல, வாளைக்குமரி நீயடி என் சகியே.. என்று அவன் தொடுகை அவளுக்கு உணர்த்தியது…
இவன் தொடுவது என்னவோ என் இடையில் தான்,ஆனால் என் உள்ளம் ஏனோ குழைகிறதே..என்ன விந்தை இது?…
என் உணர்வுகள் எல்லாம் என் கட்டுப்பாட்டை மீறி ஏதேதோ எண்ணம் கொண்டு அலைகிறதே எதனால்??
இவன் பால் என் மனம் சாய துடிக்கிறதே ஏன்??இவன் தோள் சாய என் மனம் விளைகிறதே எதனால்??
எந்த கேள்விக்கும் இவளிடம் பதில் இல்லை, இருப்பினும் தான் தானே பெர்மிஷன் கொடுத்தோம் என்ற நினைப்பில் அவனது தொடுகையை ஏற்று, “இதிலேயே நில்லுங்க சீனியர் நீங்க”, என சலித்துக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..
இந்த முத்தத்தில் மென்மையும் ஈரமும் இருந்தது…
அதை உணர்ந்தவனோ பேருவகை கொண்டு “இந்தக் கன்னத்திலும் கொடு” என கேட்க, இருவர் முகமும் மிக மிக அருகில் இருக்க, மறுபக்கம் அவன் முகத்தை திருப்ப அவள் முயன்ற போது உணர்ந்து செய்தாளோ இல்லை உணராமல் செய்தாளோ இருவரின் உதடுகளும் லேசாக உராய்ந்து சென்றது..
இருவருக்குமே பல வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு…
திடீரென்று இவள் நடுங்க ஆரம்பிக்க, கைத்தாங்கலாக இவளை அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தினான் கரிகாலன்…
மீண்டும் அனல் அடிக்க ஆரம்பித்து விட்டது அவளுக்கு…….
