வெண்டை சூப்

வெண்டைக்காய் சூப் 
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
வெண்டைக்காய் கால் கிலோ 
தக்காளி 1 
பெரிய வெங்காயம் 1 
மிளகு தூள் 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் 3 
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
இலவங்கம் 1 
பட்டை 1
உப்பு தேவைக்கேற்ப 
வெண்ணெய் தேவைக்கேற்ப 
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
துவரம் பருப்பு 50 கிராம் 
செய்முறை :
  பச்சை மிளகாயை கீறி வைக்கவும். வெங்காயத்தை பொடியாகவும், வெண்டைக்காயை நீள வாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.
  வாணலியில் எண்ணெய் ஊற்றி இலவங்கம், பட்டை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
  பிறகு வெண்டைக்காய் போட்டு வதக்கவும். வதங்கியதும் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து கலவையை நன்றாக கொதிக்க விடவும். வெண்டைக்காய் வெந்ததும், வேக வைத்து மசித்த பருப்பை இக்கலவையுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *