விழி மொழி கொல்லுதடி

This entry is part 4 of 10 in the series விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

அத்தியாயம்-4
தீபக் இருப்பதைப் பார்த்த விபின் மெதுவாக உள்ளே சென்றதும்,அவனைப் பார்த்து  நமுத்துப்போன சிரிப்பொன்றைக் கொடுத்தாள் மஞ்சரி…
” உனக்கு இங்க என்ன வேலை…ஏன் இங்க வர்ற,லேபர் வார்டு உள்ளதான உனக்கு ட்யூட்டி போட்டிருக்கு,இதோட ஐஞ்சாவது தடவை மஞ்சரி ரூமுக்கு வர்ற..இங்க இருக்க  போஷன்ட் என்ன நினைப்பாங்க…சிசிடிவில பார்த்திட்டுத்தான் வந்திருக்கேன்”
விபின் பேச வாயெடுக்கவும்”உன் இத்துப்போன விளக்கமெல்லாம் எனக்குத் தேவையேயில்லை,எப்போ பாரு லேடி ஸ்டாஃப்கிட்ட வம்பிழுத்திட்டு,
அப்பாவுக்காகத்தான் பார்க்குறேன்  இல்லைனா எப்பவோ உன்னை வெளிய அனுப்பிருப்பேன் என்று சத்தமிடவும்…
விபினுக்கு கோபம் தலைக்கேறியது  இருந்தாலும் இதுதான் அவனது வேலையே கோவிச்சிகிட்டுப்போனாலும் வேறயிடத்துக்கு போகலாம்னா அதுக்கும் மனசுவரமாட்டுக்குது என்று பல்லைக் கடித்தவன் மஞ்சரியைப் பார்த்து”டாக்டர் காலையில டெலிவரி பார்த்தீங்கள்ள அந்த லேடிக்கு ஹெவி ஃபீவர்…
நூத்தியிரண்டியிருக்கு டெம்பரேச்சர், கொஞ்சம் அவசரம் என்று சொல்லிவிட்டு தீபக்கைப் பார்த்து அசராமல் நின்றான்.
இதை சொல்றதுக்கு நீ இங்க வரணும்னு அவசியமில்லையே போன் எக்ஸ்டென்ஷன் இருக்குதான…அதெல்லாம் பயன்படுத்தமாட்டீங்களா? எத்தனை வார்டுபாய் இருக்காங்க அவனுங்கள வரச்சொல்லவேண்டியதுதான என்று விபினை தீபக் கிடுக்குபிடிபோட்டு கேள்விக்கேட்க…
இவனுக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும் என்று அமைதியாக நின்றான்.
விபின் பதில் சொல்லமால் இருக்கவும் “அமைதியா நின்னா என்ன அர்த்தம்…ஹான்”இனி மஞ்சரி அறையிலப் பார்தேன் உன்னை…நேரடியா அப்பாகிட்ட சொல்லிடுவேன் அதுக்குப்பிறகு நீயாச்சு அவராச்சு என்று தன் அதிகாரத்தை காட்ட.
 விபினோ “நானும் அவர்கிட்ட சொல்லுவேன்”என்றதும்.
தீபக் ஒரு நொடி அதிர்ந்தவன்…அவனை எரிக்கும் பார்வை பார்த்தான்.
இவர்களைப்  பார்த்துக்கொண்டிருந்த மஞ்சரிக்கு நன்றாகப் புரிந்தது…தீபக்கின் எதோ ஒரு விசயம் விபினுக்கு தெரிஞ்சிருக்கு என்று,மெதுவாக எழும்பியவள் நான் லேபர்வார்டுக்கு ரவுண்ட்ஸ் போறேன் என்று சொன்னவள் விறுவிறுவென்று நடந்தாள்…
இங்க ஒருவன் இருப்பதை பொருட்படுத்தாத விபின் நேரடியாக மஞ்சரியின் பின் சென்றான்.
உண்மையாகவே அந்தப் பெண்ணுக்கு பிரச்சனைதான்…அதற்காகத்தான் வந்தேன் என்று அவன் பின்னாடியே பேசிக்கொண்டு வர,மஞ்சரியோ உள்ளே சென்றவள் சட்டென்று திரும்பவும் பின்னாக வந்த விபினின் மேல் அவள் மோதவும் சரியாக இருக்க.
அப்படியே அவளை தன் கரத்தால் சுற்றி பிடிக்க…
“கோபத்தில்  எப்போ பாரு கட்டிபிடிக்குற,இதுதான் உனக்கு நர்ஸிங்ல சொல்லித் தந்தாங்களா விடு”என்று கேட்க.
எப்படி விடுவான் அவளது முன்னழகு முழுவதும் அவனது நெஞ்சில் மோதி நிற்க,அவனோ இறுத்திப் பிடித்திருக்க…அவள் கோபத்தில் எகிறி எகிறி பேசிய அசைவில் அது அவனுக்கு உணர்வுகளை எங்கயோ கொண்டு செல்ல…
நெஞ்சோடு நெஞ்சுரசி மோகத்தீயை 
ஏற்றுகிறாளே பாதகத்தீ…
என்று தன் உணர்வுகளை எங்கோ தொலைத்து நின்றவனின் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள்பாரு மஞ்சரி…அப்போதுதான் நினைவுலகத்துக்கு வந்தவன்.தன் கன்னத்தில் கைவைத்து அப்படியே நின்றுவிட்டான்.
நானும் ஏதோ விளையாட்டுக்குப் பண்ணின நினைச்சா.ஒவ்வொருதடவையும் நீ வேணும்னுதான் பண்ற…நான் என்ன அவ்வளவு கேவலமானவளா என்ன? என்னப் பார்த்த உன்னோட சேட்டையை காண்பிக்குற என்றவளுக்கு கோபத்தையும் மீறி கண்களில் குளம்கட்டியது.
“சாரி” என்ற ஒற்றைவாரத்தையில் முடித்தவன்…உள்ளே செல்ல அவன் பின்னாடியே அவளும் சென்றாள்.
அந்தப்பெண்ணிற்கு காய்ச்சல் அவளது உடம்பு அவ்வளவு பெரிய வலியையும், அதுவேறுதையல் போட்டிருந்ததாலும் தாங்கமுடியாமல் காய்ச்சல் வந்துவிட்டது…உடனே அந்தப் பெண்ணை ஐ.சி.யூவிற்கு மாற்ற சொல்லியவள்,மருந்தும் தற்போதைய அவசரநிலைக்கு ஊசியும் போட சொல்ல…
விபின்தான் செய்தான் சிறிதுநேரம் அந்தயிடமே பரபரப்பாக இருந்தது, எல்லாம் முடிந்ததும்…அவர்களின் ட்யூட்டி நேரமும் முடிய அப்படியே இருவரும் கிளம்பி வெளியே வரும்போது விபினின் முகமே சரியில்லை.
அவனது முகத்தில் அந்த புன்னகை, மலர்ச்சி எல்லாமே மறைந்திருந்தது…
அவனையே பார்த்துக்கொண்டுவந்த மஞ்சரிக்கு அடிச்சிட்டமே என்று தோன்றினாலும்…அது சரிதான் என்று எண்ணமும் வர அதை மறந்து வீடுவந்தவளுக்கு ஹாஸ்பிட்டலின் மொத்த நியாபகம் மறந்தே போயிற்று…
மஞ்சரியின் பெற்றோரும் தங்கை , பெரியப்பா தாத்தா என மொத்தக்குடும்பமும் இங்க லேண்ட்டாகியாச்சுது.
அவளுக்கு விபினை அடிச்சதும் அவன் மனக்காயத்துடன் சென்றது என எதுவுமே நியாபகமில்லை.
இங்கு விபினின் மனதில் வலி…மஞ்சரி அடிப்பானு எதிர்பார்க்கவில்லை திட்டுவானு எதிர்பார்த்தான், அதுவும் அந்த மோதல் அவன் எதிர்பார்க்கமல் நடந்ததது அதனால்தான் ஐயா சோகமா போனாரு.
அடுத்த நாள் காலையில் அவளது முத்தச்சன்(தாத்தா) அவளை அழைத்து” இன்னைக்கு உனக்கு மூஹூர்த்த புடவை எடுக்கப்போறோம், அப்படியே தீபக்கிற்கும் துணி எடுத்துட்டு மொத்த குடும்பத்திற்கும் எடுத்திடுவோம், நீ ஹாஸ்பிட்டல் போகவேண்டாம், அவன்கிட்டயும் சொல்லிட்டேன்” என்று சொல்லவும்.
“சரி” என்று சொல்லியவள்…தனது தங்கை தீப்தியோடு பேசிக்கொண்டிருந்தாள்.
அவளது அண்ணன் ஸ்ரீகாந்த்,மற்றும் அவளது அக்கா,அக்கா பிள்ளைகள் என்று ஒரு பட்டாளம்.அடுத்து பெரியப்பா பெரியம்மா என பெரியவர்கள் ஒரு பட்டாளம்.தனித்தனியாக காரில் ஏற.மஞ்சரி,தீப்தி, அத்தை பார்வதி என தீபக்  ஒரு பட்டாளம் என மொத்தமாக காஞ்சிபுரம் கிளம்பி சென்றனர்.
என்னதான் இருந்தாலும் தனது கல்யாணத்திற்கு புடவை எடுக்கவரும்போது எல்லாப் பெண்களுக்குமிருக்கும் ஒரு நல்லமனநிலையில் இருந்தாள் மஞ்சரி தனது தங்கையுடன் அவ்வளவு பேசினாள்.
தனது தந்தையின் அருகிலயே இருந்தாள் புடவை எடுக்கும்போது தீபக்கிடமும் ஆலோசனைக்கேட்டு எடுத்தாள் ஒட்டுமொத்தக்குடும்பத்தின் சந்தோஷமல்லவா…
புடவையை அலசி ஆராய்ந்து பார்த்து முடித்து மொத்தக் குடும்பத்திற்கும் வாங்கிக்கொண்டு வரவே சாயங்காலம் ஆகிவிட்டது.
அப்படியே ஹோட்டலுக்கு சென்றவர்கள் ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கும்போது..தீபக்கின் போனிற்கு அழைப்புவர,கால் கட்செய்தான்.மீண்டும் அழைப்பு வரவும் எடுத்தவன் நான் காஞ்சிபுரத்துலயிருக்கேன் இப்போ வரமுடியாது புரிஞ்சிக்கோங்க என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
தூரத்திலிருந்து  மஞ்சரி கவனித்துக்கொண்டிருந்தாள்…
 
முத்தச்சன்” என்னடா ஹாஸ்பிட்டால்ல சொல்லிட்டுத்தான வந்த.அப்புறமெதுக்கு அழைக்கிறாங்க,உன் நிர்வாகம் அந்தறவுக்கா இருக்கு என்று கேட்டார்..
தீபக் பதில் சொல்லமுடியாது அமர்நதிருந்தான்.
சாப்பிட்டு முடித்து கிளம்பவும்  எல்லோருக்கும் சோர்வு வேறு அப்படியே அமைதியாக வரவும்,மஞ்சரி தீபக்கின் அருகில் இருந்தாள்…அவனது மொபைல் இப்போதும் தொடரந்து அடிக்கவும் அவன் எடுக்கும்போது பார்த்தாள்…நயனா என்றிருந்தது.
அந்த ஹாஸ்பிட்டல்ல அவ வேலைப் பார்க்குறானாலும் அவ எதுக்கு தீபக் சேட்டனுக்கு போன் பண்ணனும் என யோசித்தவளின் முகமாறுதலைக் கவனித்த  தீபக்.
“சொல்லுங்க சிஸ்டர்…இன்னைக்கு வரமுடியாது  அந்த ஆப்பரேஷனுக்குள்ள அப்பாயின்மெண்ட வேறொருநாள் மாத்தனும்…நான் வந்து டேட் சொல்றேன் சிஸ்டர்…அவங்கிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க..இன்னைக்கு ஹாஸ்பிட்டல் வரமுடியாது” என்று வைத்துவிட்டான்.
என்றுமில்லாமல் இன்று ஒரு அசட்டு சிரிப்பை மஞ்சிரியைப் பார்த்து சிரித்தவன்.அது ஒன்னுமில்லை ஹார்ட் ஆப்பரேஷனுக்கு  ஒருத்தங்ளுக்கு டேட் குடுத்தேன்…அதுதான் எமர்ஜென்சிக்கு நயனா நர்ஸ் கால் பண்ணிட்டாங்க என்று சொன்னதும்.
இப்போது உறதியாக நம்பினாள் மஞ்சரி.தீபக்கிற்கும் நயனாவிற்கும் கண்டிப்பா பழக்கமிருக்குமென்று…அது எந்தளவுக்கான பழக்கம் காதல்னா என்னை எதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்காங்க.அப்போ அது கள்ளத்தனமான பழக்கமா.அவளுக்கு தலைவெடிச்சிடும்போல இருந்தது.
இதைத்தான் முதல் நாளே விபின் சொன்னானோ என்று இப்போதுதான் விபின் நியபாகம் வந்தது அவளுக்கு. இருந்த மொத்த சந்தோஷமும் ஒரு நொடியில் மறைந்து காணாமல்போயிட்டுது.இப்போது தலைவலி வந்தது…நெற்றியைத் தேய்த்துக்கொண்டு அமர்ந்தாள். 
வீடு வந்து சேர்ந்ததும் தனது அம்மவிடம் சென்றவள் அவரின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.
அவரோ மகளின் தலையை வருடிக்கொடுத்துவிட”தீபக் சேட்டனை பத்தி விசாரிச்சீங்களாம்மா”
” என்னடா பேசுற…அவன் நம்ம பார்வதி அத்தைபையன் சின்ன வயசுலயிருந்தே அவனை நமக்குத் தெரியும்தான.
நல்லப்பையன் உனக்கு ஏத்தவன்.இதுல விசாரிக்க என்னடா இருக்கு”
இதுதான் எல்லா பெற்றோர்கள் செய்யும் தவறு…அதைத்தான் மஞ்சரியின் பெற்றோரும் செய்தனர்.
திருமணம் என்று வரும்போது பெண்ணைக்
கொடுக்கிறவர்கள் அது எவ்வளவு நெருங்கிய சொந்தமானாலும்..நம்ம பிள்ளையின் வாழ்க்கை என்று வரும்போது ஆயிரங்கண்கொண்டு கவனிக்கவேண்டும் அதை அவர்கள் செய்யவில்லை.
மெல்ல எழும்பியவள் கொஞ்சம் கல்யாணத்தையாவது தள்ளிவைங்களேன் அப்பாகிட்ட சொல்லி…ஒரு ஆறுமாசம் கழிச்சு ப்ளீஸ்மா.
“என்னடா பேசுற எல்லாம் முடிச்சாச்சு,அதுவுமில்லாமல் கொச்சில உனக்கு இருக்கற பிரச்சனைத் தெரியத்தான செய்யும் உனக்கு கல்யாணமாயிட்டுனா அவன் தானா அடங்கிடுவான்…புரியுதா.பார்வதி அத்தைவீட்டுக்குத்தான மருமகளா போற.இது எல்லாபெண்களுக்கும் வரும் பயம்தான்டா…ஒன்னுமில்லைடா நீ பயப்படாத” என்று அவளை சமாதனப்படுத்தினார்.
மஞ்சரிக்கு எப்படி இந்த திருமணத்தை நிறுத்தணும்னுத் தெரியலை.தீப்தியிடம் வந்து புலம்பினாள்” எதோ தப்பாயிருக்குடி தீபக் சேட்டன்ட…அது என்னனு சரியா தெரியலை.நம்மக் கையில எதுவும் தெளிவுமில்லை” என்று புலம்பினாள்.
தீப்தி”நீ ஏன் வருத்தப்படுற பேசாம நீ ஸ்பை வேலை பாரு, சரியா வந்துச்சுனா பாரு.இல்லைனா வேண்டாம்னு சொல்லு மனசு நெருடலோட செய்ற எதுவும் சரியாவராது”
” அதுதான் சரி பெரியவங்களையும் காயப்படுத்தமுடியாது யோசிச்சு எதாவது செய்யணும்” எனாற தீர்மானத்தோடு தூங்கச்சென்றாள்.
கட்டிலில் படுத்திருக்கும்போதுதான் விபினின் முகம் நியாபகம் வந்தது…அன்று அவனை அடித்ததும் அவனது முகம் காட்டிய பாவனையெல்லாம் நியாபகம் வர, நாளைக்குப் போய் அவன்கிட்ட ஒரு சாரி கேட்கணும் என்று நினைத்தவளுக்கு அவனின் முத்தங்கள் நியாபகத்திற்கு வரவும்,என்னதிது இன்னும் ஒருமாசத்துகுள்ள கல்யாணத்தை வச்சிட்டு
இவன் முத்தமிட்டதை ரசிக்குறோமென்று மனசாட்சி உறுத்த,கவிழ்ந்தப்படுத்தவள் எல்லாவற்றையும் மறக்க முயற்சித்தாள்.
அங்கு விபினுக்கும் மனமெல்லாம் மஞ்சரியின் நியாபகமே…இன்று ஹாஸ்பிட்டல் போனதும் அவனது கண்கள் அவனையறியாமலயே மஞ்சரியின் அறையைப் பார்க்க…
அங்கு வேறொரு டாக்டர் இருந்தார்.யோசனையோடு தனதிடத்திற்கு சென்றவன். அங்கிருந்த நர்ஸிடம்” இன்னைக்கு ஓபில துர்கா டாக்டர் இருக்காங்க மஞ்சரி வரலையா? என விசாரிக்க.
அதுவா அவங்களும் தீபக் சாரும் இன்னைக்கு லீவுண்ணா…அவங்க கல்யாண விசயமா போறதா நயனா சொல்லிட்டிருந்தா என்று அந்த நர்ஸ்.
“ஓஓஓ” என்று சொல்லும்போதே அவனது குரலில் சுருதி இறங்கியிருந்தது.அன்று முழுவதும் அவனிடம் ஒரு அமைதியிருந்தது.மனதும் வேறு வேறு சிந்திக்க தொடங்கியிருந்தது…
தனது சக்திக்கு மீறி யோசிக்குறமோ…எட்டாத உயரத்தில் இருக்கும் பழத்தைப் பார்த்து கொட்டாவி விடுறமோ என் நினைத்தவன்…எல்லாம் பார்த்து பெர்ஃபக்ட்டா இருந்தாதான் காதல் வரணுமா என்ன? எனக்கு அவமேலக் காதல் வந்துட்டு அதுக்கு நான் என்ன செய்யமுடியும்? ஒன்னும் செய்யவேண்டாம் அவக் கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைக் காதலிக்க வை என்று அவன்மனம் சொல்ல…அதுதான் சரி…அதுதான் கஷ்டமாயிருக்கே…நேத்து வேற என்ன அடிச்சிட்டாளே தக்காளி என்று தன் கன்னத்தை தடவிக்கொண்டான்.
என்ன செய்ய? என்ன செய்ய? என யோசித்தவன் அப்படியே தூங்கிப்போனான்.
காலையில் எழுந்தவன் இன்னைக்கு எப்படியாவது என்னோடக் காதலை சொல்லிடணும் என்று தீர்மானத்தோடு கிளம்பியவன்…ஆமா எப்படி சொல்றது பார்த்து நாலாவது நாளே காதலைச் சொன்னா தப்பாயிருக்காது என யோசிக்க.
ஆமா ராசா..பார்த்தவுடனே லிப் டு லிப் கிஸ் கொடுக்கலாம் தப்பில்லையாம்…காதல் சொல்றதுதான் தப்பு….நீ ரொம்ப நல்லாவருவ.
ஹாஸ்பிட்டல் வந்தவன் தனது பைக்கை நிறுத்திவிட்டு தன் அக்மார்க் புன்னகையுடன் உள்ளே சென்றவன்..மஞ்சரியை இருக்காளா என்று எட்டிப் பார்த்தவன்.
அப்படியே வைத்தக்கண் வாங்காமல் பார்த்து நின்றான்…மஞ்சரி நல்ல சிவப்புக்கலரில் சில்க் காட்டன் புடவையில் நிற்க…அவளது இடுப்புவெளி அப்படியே தந்தக்கலரில் தெரிய…இப்பவே அதைத்தொட அவன் கைநீண்டதும்…தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு நின்றவன்.
“குட்மார்னிங் தக்காளி”
அதைக் கேட்டதும் துள்ளித் திரும்பியவள்..
அவனைப் பார்த்து தக்காளினு கூப்பிட்ட கொன்றுவேன் ஓடிப்போடா என்று மிரட்டவும்…
போகலைனா என்ன பன்னுவ,இங்கதான் நின்னு உன்னை சைட்டடிப்பேன் என்று தன் கையைக் கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றான்.
மஞ்சரியோ” நர்ஸ் உங்க அன்பு அண்ணாவை போய் ட்யூட்டி பார்க்க சொல்லுங்க…இல்லைனா தொந்தரவு பண்றாங்கனு கம்ப்ளையின்ட் பண்ணிடுவேன்”
அந்த பெண்ணோ விபினின் அருகில் வந்தது…ப்ளீஸ்னா போங்க உங்களுக்கும் சைன் பண்ணனும்தான நேரமாகிட்டு என்று சொல்லவும்…
கிளம்பியவன் மறுபடியும் வந்து “தக்காளி இந்த புடவையில செம கிளாமரா இருக்க…சில்குக்கே டஃப் கொடுப்ப போல” என்று கண்ணடிக்க.
கையிலிருந்த நோட்பேடை அவன்மேல தூக்கி எறிந்தாள் மஞ்சரி…அது தன்ஸ் மேல் படாதவாறு சரிந்தவன்.கிரேட் எஸ்கேப்பு என்று சென்றான்.
மஞ்சரியோ” இவனை பெத்தாங்களா இல்லை ஸூல இருந்து எடுத்துட்டு வந்து வளர்க்குறாங்களா” எனக் கத்தியவள்.இந்த வட்டன் என்னைய வட்டாக்காம(வட்டன்- னா  பைத்தியக்காரனுங்கு… மலையாளத்தில்) விடாமாட்டான் போலவே என்று நோந்தேப்போனாள்.
தனது ஓபி முடிந்ததும் ரவுண்ட்ஸ் போகணும்னு வெளியே வந்தவள் ,ஒரு அறையின் வாசலில் வரவும் உள்ளேயிருந்து ஒருகரம் அவளது இடுப்போடு சேர்த்துபிடித்து உள்ளே இழுக்கவும் பயந்து சத்தம்போட போனவளை” ஷ்ஷ்ஷ் என்று தனது வாயில் விரலைவைத்து காண்பிக்க”அது விபின் என்று தெரிந்ததும் டென்சனாவள்… போத்து இப்படியா இழுப்பா உன்னை என்னப் பண்றேன் பாரு என்று மறுபடியும் அவனை அடிக்கப்போக…
கத்தாதடி தக்காளி இருடி என்னைப் பேசர்றேனு கேளுடி என்க…வாயைமூடுடா போத்தே…பொறுக்கி “என்றதும் ஓரு நொடிக்கூட தாமதிக்காமல் தனது வாயால் அவளது வாய்க்கு பூட்டுபோட்டவன் அப்படியே கார்ட்டனுக்கு மறைவாக அவளை தூக்கிச்சென்றான்.
மஞ்சரியோ திமிறி அவனது நெஞ்சில் அடிக்க…அப்படியே அவளது கரத்தினை தனது கரத்தோடு அழுத்திப்பிடித்துக்கொண்டான்.
அவளது தலயை ஒரு கரத்தால் பிடித்திருந்தான்.
அவளது கண்கள் விரிய அவனது கண்களையே பார்க்க…கண்ணை மூடு என்று சைகை செய்ய…அதற்குள் அந்த அறைக்குள் பேச்சு சத்தம் கேட்டது.
அந்த சத்தம் கேட்டதும் மஞ்சரியின் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தது…
அது தீபக்கின் குரல்…அடுத்து பேசியது ஒரு பெண்ணின் குரல்,இப்போது மெதுவாக மஞ்சரியை விடுவித்தவன்…சைகை செய்து பாரு என்று கண்களால் காண்பிக்க.
அப்படியே தன் வாயைப் பிளந்து நின்றிருந்தாள்…
நயானா” நேத்து எத்தனை தடவை கால் பண்றது…எடுத்துப் பேசவேயில்லை”
தீபக்” லூசா நீ எல்லோரும் என்கூட இருக்காங்க எப்படி பேசமுடியும்…அதுவும் கடைசியா பேசும்போது மஞ்சரி என்கூட இருந்தா…அவகிட்ட எதையோ சொல்லி சமாளிச்சிருக்கேன்”
“எத்தனை நாள் இப்படியே இருக்கமுடியும்,அவளை கல்யாணம் பண்ணிகிட்டா என்னோட கதி என்னாகும்.என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டீங்களா தீபக்”
“உன்னை எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்,மஞ்சரியத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்…நீ இப்போ எப்படியோ அப்படியே இரு, நீதான் எனக்கு அந்தவிசயத்துக்கு சரியா வருவ”என்றவன் அவளைப்பிடித்து இழுத்து கட்டிக்கொண்டு முத்தம்வைத்தவன், அவளது உடையை களைய ஆர்மபித்தான்.
மஞ்சரிதான் அதைபார்க்கமுடியாமல் கண்களை இறுகமூடவும்,அவளது முதுகை நீவிவிட்டு தன்னோடு அணைத்துக்கொண்டான்.இப்போது எந்தவித எதிர்ப்புமில்லாமல் அவனது நெஞ்சோடு ஒட்டிக்கொண்டாள் மஞ்சரி.
தொடரும்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *