விழி மொழி கொல்லுதடி

This entry is part 3 of 10 in the series விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

விழி மொழி கொல்லுதடி

அத்தியாயம்-3
மஞ்சரி தன் மொபைலை விசிறியடிக்க அது மோதி விழுந்ததும் அப்படியே தன் இருகரங்களாலும் தலையைப் பிடித்து  அமர்ந்துவிட்டாள்.
என்ன செய்யலாம் என்று யோசனை அவளுக்குள். அவளுக்கு அவளது குடும்பம்தான் எல்லாமே…அம்மா அப்பா தங்கை என இருந்துப் பழகியவள். அவளது வீட்டினர் அவர்களை  எல்லா விசயத்திலும் சுதந்திரமாக முடிவெடுக்கத்தான் பழக்கியிருந்தனர்.
அதுவுமில்லாமல் தாய் தகப்பன் பேச்சுக்கு கீழ்படியவும் பெரியவர்களுக்கு மரியாதைக்கொடுப்பதும் தானாக பாரம்பரியமாக வரும் பழக்கம்.அவர்கள் வீட்டில் யாருமே யாரையும் எதிர்த்து பேசி பழக்கமில்லை.
பெரியப்பா பேசினால் மற்றவர்கள் கீழ்படியும் வழக்கம் உண்டு.அவர்களின்  தாத்தா பேசினால் அப்படியே மொத்தக்குடும்பமும் அமைதியாகிவிடுவர்.
அப்படிபட்ட பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவளுக்கு தன் தந்தை அடுத்த மாதமே உனக்கும் தீபக்கிற்கும் திருமணம் என சொல்லும் போது எதிர்த்து பேசமுடியவில்லை…அந்த இயலாமையை தன்னுடயை போனில் காண்பித்தாள்.
அடுத்து அடுத்து  சூரஜ் தன் மகளுக்கு  அழைக்க; அது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று வரவும் அப்படியே தனது அக்காவுக்கு அழைத்து என்ன விசயம் என்று கேட்டார்.
பார்வதி அப்படியே போனை எடுத்துக்கொண்டு மாடியேறி மஞ்சரியின் அறைக்கே வந்துவிட்டார்.
அவர் உள்ளே வரும்போது அவளோ  தலையைப் பிடித்து அமர்ந்துக்கொண்டு, உடைந்த சுக்கலான தன் மொபைலைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
வந்தவர் அவள் அமர்ந்திருப்பதைப் பார்த்து என்னடா மஞ்சு இப்படி உட்கார்ந்திருக்க?என்னாச்சு என்று பதறிக் கேட்கவும்…போன் கைதவறி விழுந்திடுச்சு அத்தை என்று சொன்னவள்…அதை அப்படியே எடுத்து பொறுத்துவதுபோல பாவனைக் காட்ட…
பார்வதியோ விடுடா…வேற வாங்கிக்கலாம்.   இந்தா தம்பி லைன்லதான் இருக்கான் பேசு என்றதும் வேறுவழியின்றி வாங்கி காதில் வைக்க”மோளே” என்று  ஒரு விழிதான்…அவரது குரல் தழுதழுத்திருந்தது.
மஞ்சரிக்குத் தெரியும் அவளை  நினைத்துதான் வருந்துகிறார் என்று…ஒன்னமில்லைபா.உங்க விருப்பம் போல செய்யுங்கப்பா…எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றதும்தான் சூரஜ் சமாதானமானார்.
அவரிடம் பேசிவிட்டு படுத்தவளுக்கு மனது ஒருநிலையில்லை…
தீபக்கிடம் எதோ விபரீதமிருக்கு என்று மனசு அடித்து சொன்னது…இன்று பார்த்த அந்த நயனாவிடம் நமக்கு செட்டாகலேயே…என்னவோ எங்கயோ ராங்க் கனெக்ஷன்ல போகுதுப்போல என்று சிந்தனையிலயே படுத்துக்கொண்டவளுக்கு  எப்போது தூக்கம் வந்தது என்று தெரியாது…
கண்விழித்துப் பார்த்தாள்  காலை மணி பத்து ஐயோ இவ்வளவு நேரம் தூங்கியிருக்கோமே!என்று அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி வந்தவள் தன் அத்தையிடம் செல்ல.
அவர்தான் என்னடா நல்லத்தூக்கமா…நான் உன்னை எழுப்ப வந்தேனா, தீபக்தான் அவளுக்கு இரண்டாவது ஷிஃப்ட்தான்மா அதனால லேட்டா எழும்பட்டும்னு சொல்லிட்டான்.
பையனுக்கு இப்பவே உன் மேல எவ்வளவு கரிசனைப் பாரு என்று  சந்தோஷத்தில் சிரிக்க…அவளுக்கும் வேறு வழியின்றி தன் பல்லை காண்பிக்க உதட்டை விரித்தாள் அவ்வளவே.
சாப்பிட்டு முடித்தவள் அத்தை எனக்கு மொபைல் வாங்கணும் கடைக்குப் போகலாமா என்று கேட்கவும்…இருடா வர்றேன் என்று போனவர் திரும்பி வரும்போது ஒரு பார்சலை கொண்டு வந்து அவளது கையில் கொடுத்தார்.
“தம்பி நேத்து நைட்டே தீபக்குகிட்ட போன் பண்ணி சொல்லிட்டானாம், வாங்கிட்டு வந்திட்டான் என்று அவளிடம் நீட்ட…இதுவேறையா.இதை இப்போ வேண்டாம்னு சொல்லமுடியாது அதுக்கும் ஏன் எதுக்குனு கேள்வி வரும் என்று வாங்கிக்கொண்டவள். தனது சிம்கார்டைப் பொருத்தி வீட்டிற்குப் பேசியவள்…
ஹாஸ்பிட்டல் செல்ல ஆயத்தமானாள்.
இவள் ரெடியாகி வரும்போதே பார்வதி மஞ்சுமா கொச்சியிலிருந்து எல்லோரும் வர்றாங்களாம்…நாளைக்கு உனக்கு முஹூர்த்த புடவை எல்லாம் எடுக்க…இங் கவச்சே கல்யாணம் வைக்கிறதா பிளானு…ஊருல போய் ரிசப்ஷன் வைக்கலாம்னு எல்லாம் பேசி முடிச்சாச்சு என்றதும்…
ஓஓஓ..என்று சுரத்தையில்லாமல் கேட்டவள் அப்படியே ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினாள்.இந்த காரைவிட்டு இறங்கி இப்படியே எங்கயாவது ஓடிடலாமா?நம்ம கையிலப் படிப்பிருக்கு வேலைசெய்து பிழைச்சிக்கலாம்…எதுக்கு இந்த மனவுளைச்சல் என்று யோசிக்கவும்…பின் சிறிது தெளிந்தவள் யாரு என்ன சொன்னாலும் வாழப்போறது நம்மதான்; தைரியமா முடிவெடுக்கணும் என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டு மனதை திடப்டுத்தினாள்.
அங்கோ விபின் என்றைக்கும் இல்லாமல் இன்று தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்தவன்…என்னடா டீன் ஏஜ் பசங்கமாதிரி இப்படி கண்ணாடிய பார்க்குற என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டவன்…உனக்கென்னக் குறைச்சல் அழகன்டா நீ என்று கண்ணாடியைப் பார்த்து திருஷ்டி கழித்து முத்தம் வைத்து வெளியே வந்தவனைப் பார்த்த அவனது ஹவுஸ் ஓனர்” என்ன தம்பி  கல்யாணவீட்டுக்குப் போறீங்களா…அழாக போறீங்க “என்று கேட்கவும்.
அவனுக்கு சிரிப்பு வந்தாலும் இவருக்கு நம்ம அழகா இருக்குறதுல சந்தோஷமா? இல்லை பொறாமையா? என யோசித்து.எதுவா இருந்தா என்ன? மொத்தத்துல  நம்ம அழகா இருக்கேனு சொல்லிட்டாங்க அதுபேதுமே என்று தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அவன் வண்டி ஹாஸ்பிட்டலுக்குள் நுழையவும், மஞ்சரியின் காரும் அதே சமயத்தில் உள்ளே நுழைந்தது.
இருவரும் ஒன்றாக இறங்கி உள்ளே நுழைய விபினைப் பார்த்த அங்கியிருந்த ரிசப்ஸனிஸ்ட் முதல்கொண்டு கவுண்டரில் மொத்தபேரும் சிரித்து வணக்கம் சொல்லவும்…பின்னாக வந்த மஞ்சரிக்கு அப்படியொரு பொறாமை நான் ஒரு டாக்டர் எனக்குகூட இவ்வளவு இல்லை…அதைவிட நேத்து தீபக் சேட்டன் வரும்போதும் இவங்கெல்லாம் விஷ் பண்ணாங்கதான்….
ஆனா விபினளவுக்கு இல்லை.என்று யோசித்துக்கொண்டே லிப்டிற்குள் வரவும் அங்கு விபின் நின்றிருக்க…ஒரு நொடி யோசித்தவள்”நேத்து யதேச்சையா நடந்திட்டு…இன்னைக்கு அப்படி பண்ணமாட்டான் என்று தைரியமாக நிற்க.லிஃப்டின் கதவு முடியது.
ஒரு நொடிதான் அப்படியே அவளது இடுப்போடு கைக்கொடுத்து தன்பக்கமா திருப்பி தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு அவளது கண்களைப் பார்த்து…
யாரு சொன்னா இன்னைக்கும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கமாட்டேனு…
நீயா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பா. நாங்க சைக்கிள் கேப்லயே ஆட்டோ ஓட்டுவோம்.
இப்போ இவ்வளவு பெரிய இடம் விட்ருவோமா என்றவன்…அவளது இடுப்பிலிருந்த கையை அழுத்த…அவளோ தன் வயிற்றை எக்கிக்கொண்டு.
விடுறா நான் இந்த ஹாஸ்பிட்டல் டாக்டர்…என் ஹாஸ்பிட்டல்லயே வேலைப் பார்த்திட்டு என்கிட்டயவே அசிங்கமா நடந்துப்பியா என்று அவனது நெஞ்சில் அடிக்க…அது அவனுக்கு பூபோல இருந்ததுப்போல…
அப்படியே கண்ணைமூடி ரசித்தவன்”ஓய் தக்காளி இங்கப்பாரு இப்படி எகிறியடிக்காம என்னை ஃபீல் பண்ணு என்றதும்…
” பிராந்தா விடு…விடான் பறைஞ்சது, ஈஈஈ வட்டனுக்கு எந்துக்கொண்டு இளக்கமா,விடான் போத்தே” என்று தன் தாய்மொழியில் சத்தமிட.
சில நொடியில் அவளது சத்தம் விபினின் வாய்க்குள் இருந்தது.அவளோ இப்போது அரண்டு விழிக்க அவளது விழிகளின் மொழி புரிந்தாலும்…
அவன் அவளது வாய்க்குள்  வெண்ணெய் கடைந்துக்கொண்டிருந்தான் தன் நாவினால்,கைகளோ அவளது இடுப்பு சேலையின் உள்ளே பயனித்தது.இப்போது அவளது உடல் நடுங்க ஆரம்பிக்கவும் கண்களில் கண்ணீர் இறங்க…
மெல்ல விடுவித்தவனிடம் எதுவும் சொல்லாமல் அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டாள்.
அவளுக்கு ஒருமாதிரி இருந்தது கூனிகுறுகி அமர்ந்தவளைப் பார்த்தவன்…ஓவராதான் போயிட்டமோ என்று மெதுவாக அவளருகில் குனிந்து அவள் தலையை ஆதுரமாக தடவிக்கொடுக்க…தட்டிவிட்டவள் மெதுவாக எழுந்துப் பார்க்க லிஃப்ட அசையாமல் இருந்தது. 
தக்காளி இங்கப்பாரேன் என்றதும் கேரளத்து நீலி அவதாரம் எடுத்தவள் அவனது தலைமுடியை பிடித்து ஆட்டியவள்” இது எந்துட்ட சுகக்கேடுடா நினக்கு…ஸ்தீரியை கண்டால் நினக்கு  பிரந்தாவுமோ வட்டன்,பட்டியைப் போல மேல ஏறுந்நு”என்றதும்.
“நான் உனக்கு நாய் மாதிரி தெரியுறனாடி…என்று அவளது அருகில் வந்தவன் என்னைப் பார்த்தா பொம்பளை பின்னாடி அலையுற மாதிரி இருக்கா சொல்லு”
“அதே கண்டப்போ முதல் இங்கன பிஹேவ் செய்தால் அங்கனயே பறையாம்பற்றும்” என்று.
ஓஓ..அப்போ ஒரு பத்து நாள் கழிச்சு இதே மாதிரி செய்தா ஓகேவா தக்காளி என்று தலையை சாய்த்து கேட்க.
கோபம்தான் வந்தது அவளுக்கு ஆத்திரத்தில் தீபக் சேட்டன்ற நான் பறையாம் போவுந்நு என்று சொல்லவும்.
அந்த சீப்புக்கிட்டலாம் சொல்லாத…அவன் உன்னை பெருந்தன்மையா ஏத்துக்குறளவுக்கு பெரியு டேஷ் இல்லை சரியா.
உன்கிட்ட நடந்துகிட்டதுக்கு நீ அடி,இல்லைனா கடி என்று தன் கன்னத்தை காட்டி,உன் சேட்டன்கிட்டலாம் சொல்லாத…அவனெல்லாம் ஒரு மனுஷன் என்கவும்,இனி இவன்கிட்ட பேசிப்பிரயோஜனமில்லை என்றறிந்தவள்.
“நான் மாமன்றறிடத்தில் கம்ப்ளையிண்ட் செய்யாம் போவந்நு” என்று திரும்பி லிஃப்ட பட்னை பார்க்க எல்லாவற்றையும் மொத்தமாக ,உள்ளே வந்ததும் நிறுத்தியிருந்தான் விபின். அந்தளவுக்கு தீயா வேலைசெய்திருக்கான் நம்மாளு, அதை எங்கே அவள் கவனித்தாள்.
அவள் பட்டனை அழுத்தப்போக…அவளது கரத்தினைப் பற்றியவள்”உங்க மாமாகிட்டப் போய் தயவு செய்து சொல்லு..விபின் என்கிட்ட தப்பா நடந்துக்குறானு,
அப்படியாவது அவர் என்னை இங்கயிருந்து விரட்டிவிடட்டும்” என்றவன்.
ஆனா தக்காளி நீ எங்கப்போனாலும் அடியேனும் அங்கிருப்பேன் என்றவன்…இதுற்கு மேல் அவளை சோதிச்சால் அவ்வளவுதான்…
விட்டுப்பிடிப்போம் என்று நினைத்து லிஃப்டடை இயக்கினான்.
அவர்கள் மூன்றாவது தளத்திற்கு வரவும் மெதுவாக அவளருகில் நெருங்கி வந்தவன் கலைந்திருந்த அவளது முடியை ஒதுக்கியவன் இறங்கி போய்விட்டான்.
அவளுக்கு அவனை என்ன செய்ய என்று ஒன்றும் ஓடவில்லை…தீபக்கிட்ட சொல்லவேண்டாம்.இருவருக்கும் கல்யாணம் நடக்கயிருக்குற பட்ஷத்தில் இது சரிவராது என்ன செய்யலாம் என்று வந்தவள், தனது அறைக்குள் வரவும் நேரம்போவது தெரியவில்லை கர்ப்பினிகளை பார்ப்பதில் பிஸியாகிவிட்டாள்.
ஓ.பி முடிந்து இப்போது லேபர் வார்டுக்குப் போனவள் நார்மல் டெலிவரிக்காக காத்திருந்த ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கச் செல்ல…அங்கு வந்தான் விபின்.
இதற்கு முன் எத்தனையோ பிரசவ கேஸ் அட்டண்ட் செய்திருந்தாலும்,கூடவே பீடியாட்ரீஷன் ஆணோ பெண்ணோ நிற்பாங்க…ஆனால் இன்று  விபின் அவளுடன் இருக்கவும் அப்படியே மனதில் ஒரு சின்னத் தயக்கம் வந்தது…இதுவரை இல்லாத தயக்கம்.
அதற்குள் அந்த கர்ப்பினியோ…அய்யா  ஆம்பிளை நர்ஸ்ஸா என்று சத்தமாக கேட்க.
விபினின் கண்கள் அப்படியே சிவந்தது…அது மஞ்சரியைத்தான் பார்த்தது…ஏன் ஆண்பிளை டாக்டர் வேணும் ஆண்பிளை நர்ஸ் வேண்டாமா…
அவங்களை மாதிரித்தான நாங்களும் படிச்சு வந்திருக்கோம் எனக்கு இது தொழில், என் படிப்பு  நான் பிரசவத்துக்கு நிற்க கூடாதா என்ன? என்று சற்று காட்டமாகவே கேட்கவும்…
மஞ்சரி ஒன்றும் சொல்லாமல் அந்த கர்பினியை சமாதானப்படுத்தினாள்…
ஒன்னுமில்லைங்க அவங்களும் எங்கள்ல ஒருத்தர், அந்தப் பெண் தயங்கி தயங்கி பார்க்க…அதற்குள் அவளது பிள்ளை வயிற்றிலிருந்து வெளியே வரே தயாராகிவிட்டதுபோல…வலியில் துடித்தாள்.
அவரது அருகில் சென்றவன் தலையைபிடித்து தடவி,முதுகை நீவிவிடவும் அவனில் தாய்மையை உணர்ந்தாள் அந்தப்பெண்…
ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணிற்கு அழகான ஆண்குழந்தை. அதை முதலில் எடுத்த விபின் பிடித்துக்கொண்டு தொப்புளில் க்ளிப் மாட்ட, மஞ்சரி அந்த பிள்ளையின் தொப்புள் கொடியை வெட்டினாள்.
அப்படியே அந்த இரத்தக்கைகளோடே அதன் அம்மாவிற்கு அந்த பிள்ளையை காண்பிக்க…அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர் இவ்வளவு நேரம் பட்ட வலியெல்லாம மறந்து தன் மகவு பூமிக்கு நல்லபடியாக வந்துவிட்டது என்று நிம்மதியில் அப்படியே அரைமயக்கத்திற்கு சென்றாள்.
பின்பு எப்போதும்போல பிள்ளையை துடைத்து சுத்தப்படுத்தி தாயையும் சேயையும் பத்திரமாக அறைக்கு மாற்றிவிட்டு ,தங்களது இடத்திற்கு வந்து தங்களை சுத்தப்படுத்தி வேலையை பார்க்க ஆரம்பிக்க.
இதுவரை ஐந்துமுறை மஞ்சரி இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டு சென்றான்.
ஒரு முறை என்னோட ஸ்டெதஸ்ஸைக் காணும் நீங்க எடுத்துட்டு வநீதீங்களா? என்று மஞ்சரியிடம் வந்து கேட்க…அவளுக்கு உதவியாக இருந்த நர்ஸ் வாயை மூடி சிரிக்கவும்…மஞ்சரி முறைக்கவும் சென்றுவிட்டான்.
அடுத்த முறை வந்தவன் எனக்கு காய்ச்சல் அடிக்கறமாதிரி இருக்கு என்னனு செக் பண்ண முடியுமா? என்று வந்து அவள் முன்பு நிற்க, அது கர்பினிகளுக்கு மாத்திரம் செக் பண்ற இடம்  தெரியும்தான என்று ஆங்கிலத்தில் கேட்க…
அதனாலென்ன…எம் பி.பி.எஸ் முடிச்சுட்டுதான் அடுத்தது கைனீக் படிச்சீங்க. செக் பண்ணி மாத்திரை கொடுங்க என்று பிடிவாதம் பிடிக்க வேறு வழியின்றி…நர்ஸ் இவருக்கு ஒரு பராசிட்டமல் கொடுத்து அனுபுங்க என்றதும்…
அந்த நர்ஸ்  விபினைப் பார்த்து  விபின் அண்ணா  இதுசரியில்லை என்று சொன்னவள், அவனிடம் மருந்தைக் கொடுக்க,அங்கிருந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தனர்.அவன் அவன் என்னலாமோ செய்து கரெக்ட் பண்றான் நம்மளுக்கு இந்த பாரசிட்டமல்தான் கிடைச்சிதா…அதுவும் நல்லதுதான் சாக்கெலெட் தந்து அவ நியாபகமா பர்ஸ்ல வச்சிருந்த எறும்புதான் வரும்…இந்த பாரசிட்டமல் வச்சா எவனும் எடுக்கமாட்டான்…என்று கையில் அந்த பாரசிட்டமால் மாத்திரையை பத்திரமாக பொத்திவைத்துக்கொண்டு சென்றான்.
கொஞ்ச நேரங்கழித்து மூன்றாம் முறை வந்து நின்றான்…அங்க லேபர் வார்டுல இருந்து இருந்து குட்டீஸ் சத்தமா கேட்குதா…எனக்கு வந்தி மயக்கம் வருது என்று வந்து நின்றான் அவளது முன்னில்,அதைக் கேட்டதும் மஞ்சரி “அது உங்க மனைவிக்கு வரவேண்டிய சிம்டம்ஸ் ,உங்களுக்கு எப்படி வரும்” என்று கோபத்தில் கேட்க.
மனைவிதான் இல்லையே! அதுக்குத்தான் ட்ரை பண்ணிட்டிருக்கேன்…நீங்க ரெடினா அடுத்த மாசமே இந்த சிம்டம்ஸ் வரவைக்க நான் ரெடி என்று மெல்ல அவளது காதில் சொல்லவும்…
கண்ணை உருட்டி யட்க்ஷினியானால் மஞ்சரி…
அதைப் பார்த்தவன் “நீங்க நல்ல மூடுல இல்லைப் போல…அப்புறமா வர்றேன்” என்று மெதுவாக நடக்க.
அப்புறாம வேற வருவியா… வந்தா ஊசிப்போட்டு கொன்றுவேன்டா உன்னை…போத்தே என்று சாடினாள்.
திரும்பி வந்து ஊசி எங்கப்போடுவ…பின்னாடியா என்று கேட்டவனை தன் டேபிளிலிருந்த பிளவர் வாஷை தூக்கி அடிக்கப்போக…
மீ எஸ்கேப் என்று ஓடிவிட்டான்.
நான்காவது முறையாக வந்தவன் அமைதியாக அவளது முன்பில் அமர்ந்து அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க…
மஞ்சரியோ “எதுக்கு என் முன்னாடி அடிக்கடி வர்ற,எனக்கு உன்னைப் பார்க்க பிடிக்கலை,தயவு செய்து தொந்தரவு பண்ணாத” என்று சொல்லவும், நாலுபேரு முன்னாடி என்னை கேவலப்படுத்தாத…உனக்கும் எனக்கும் என்ன? நீ யாரோ? நானா யாரோ? நேத்துதான் என்னை முதல் தடவை பார்த்த. பார்த்ததுல இருந்து இப்பவரைக்கும் என்னை அவ்வளவு இரிட்டேட்டிங் பண்ற என்று டென்சனில் கத்தவும்.
ஓகே..ஓகே கூல் இனி வரமாட்டேன் தக்காளி டென்சனாகாத என்றவன் கதவைத் திறந்து வெளியே செல்லமுயன்றவன் தலையைமட்டும் உள்ளே நுழைத்து” தக்காளி என்று அழைக்கவும் அவள் நிமிர்ந்துப் பார்த்ததும் கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்துவிட்டு சென்றான்.
மஞ்சரியோ தன் நெற்றியில் கைவைத்து தட்டி முடியலை என்று தன் தலையை தடவிக்கொண்டாள்.
அடுத்து ஒரு அரைமணி நேரங்கழித்து மறுபடியும்  மஞ்சரியை பார்க்க விபினா உள்ளே வரவும்…
அங்க சீஃப் டாக்டர்…அவனைப் பொருத்தவரை சீப் டாக்டரான தீபக் அமர்ந்திருந்தான்.
தொடரும்…. 
 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *