பெரும்
சிவப்பு
கோவம்
வீதி எங்கும்
இசை
இறைச்சல்
மனம்
கடும்
சல சலப்பு
சேற்று
சகதியாய்
தோல்விகள்
சொல்ல
இயலா
வெறுப்புகள்
பச்சை
நீரும்
பற்றி எரியும்
நிராசைகள்
பாலைவன
சமவெளிகளில்
தாகத்திற்காய்
அலைபவனாய்
.. நான் …
நின்
இறுகிய
அணைப்புகளிலும்
உயிர்
வரை
குளிர்விக்கும்
நின்
இதழ்
முத்தங்களிலும்
என்னை
புதுப்பித்து
கொள்ளவே
முயல்கிறனேடி
என்னை
பொறுத்தவரை
முத்தங்கள்
காமத்தின்
அடிதளமல்லடி
காதலின்
வற்றாத
புண்ணிய
நதியடி
ராட்சஷியே
