ரமணிVsரமணி
அத்தியாயம் 16
சம்பத்! இருபது வருசத்துக்கு முன் எப்படியோ மயிரிழையில் தப்பித்து விட்டாய்.இப்போது உன்னால் தப்பிக்க முடியாது.உன் அண்ணன் துரையோட பையன் ரமணி இப்போது எங்களிடம்.அவன் உயிரோடு வேண்டுமென்றால் நீ நேரில் வந்தாகனும்! என்றான் அடியாட்களில் ஒருவன்.
பண்ட மாற்றுக்கு நான் தயார்.இன்னொரு விசயத்தை நான் சொல்ல மறந்துட்டேன்.மீதி ஐந்து பாக்கெட் என்னிடம்தான் இருக்கிறது! நாகுவை நேர்ல பாக்கனும்.ஏற்பாடு செய்.அதோட முக்கியத்துவம் என்னன்னு நாகுவுக்கு தெரியும்! சம்பத்தின் குரல் அமைதியாகி இணைப்பு அறுந்தது.
அவன் போனை அணைத்து விட்டு எல்லோரையும் திரும்பி பார்த்தான்.
எல்லோரும் நடங்க! நாகுவோட ரகசிய இடத்துக்கு போலாம்! என்றான்.
அங்கிருந்த எல்லோரையும் அள்ளி போட்டு கொண்டு வண்டிகள் கிளம்பின.
என்ன பாய் நடக்குது இங்கே? என்றான் ரமணி.
உஷ்! என்று வாயில் விரலை வைத்து அடக்கினான் ஆசிப்.
ரகசிய இடம்னு சொல்லிட்டு கண்ணை கட்டாம கூட்டிட்டு போறீங்க? என்றான் டெல்லி.
திரும்ப வந்தாத்தானே? நீங்கதான் சாக போறீங்களே? என்று வந்த பதிலில் அரண்டு அமைதியானான்.
அவர்கள் ரகசிய இடத்தில் செலுத்தப்பட்டு இருளில் நகர்த்தப்பட்டு எங்கெங்கோ போய் கடைசியில் ஒரு இடத்தில் நின்றார்கள்.
இருளான அந்த இடத்தில் வெளிச்சம் திடிரென உற்பத்தியானது.வெளிச்சத்தின் நடுநாயகமாக அவன் நின்றான்.இவருதான் நாகுவா? என்றான் ரமணி.!
எஸ்! நான்தான்! என்று நடந்து வந்தவன் ரமணியை நெருங்கி உற்று பார்த்தான்.இருபது வருசத்துக்கு முன்னாடி உன்னை கொன்ருக்கனும்.ஜஸ்ட் மிஸ்.காலம் கடந்த வேலையை இப்ப செய்ய போறேன்.!
நான் கன்னி கழியாத பையனுங்க!
அப்ப சொர்க்கத்துல நாட் அலவ்டு.கண்டிப்பா நரகம்தான்.நாம அங்கே மீட் பண்ணலாம்.!
நான் இன்னும் எதையுமே அனுபவிக்கவே இல்லையே?
அது உன்னோட தப்பு! என்றவன் ஆசிப்பை பார்த்து என்ன பாய்? டபுள் கேம் ஆடுறீங்களா? பொருள் எப்படி உங்ககிட்ட வந்துச்சு? சம்பத் எப்படி உயிரோட இருக்கான்? என்னோட ஆளுகளை எல்லாம் யார் எதுக்காக கொன்னாங்க?
எத்தனை கேள்வி? என்றான் ஆசிப்.
ஒன்னுக்கு கூட விடையில்லை! முதல் கேள்விக்கு பதில் இப்ப வேணும்.எங்களிடமிருந்த சரக்கை யார் திருடி உங்ககிட்ட கொடுத்தது.?
நாகு தன்னுடைய பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து சேப்டி வால்வை ரிலிஸ் செய்தான்.மூணு எண்ணுவேன்.அதுக்குள்ள பதில் வரனும்!
ஒன்னு!
இரண்டு!
மூ
ரமணி! என்றான் ஆசிப்.!
ரமணிVsரமணி
அத்தியாயம்17
பொய்! பாய்தான் பொருளை எங்கிட்டே கொடுத்தாரு.அதுக்கு டெல்லிதான் சாட்சி.!என்றான் ரமணி தன்னை நோக்கி நீண்ட துப்பாக்கியை பார்த்து.!
ஆமா! பாய் பொய் சொல்றாரு.!அந்த பொருளை தொலைச்சிட்டு நாங்க தேடிட்டு இருக்கோம்.!என்றான்டெல்லி.
நல்ல கதை! எங்கிட்டருந்து திருடி பாய்கிட்ட பொருள் போயிருக்கு.அவன் உங்ககிட்ட கொடுத்திருக்கான்.நீங்க அதை தொலைச்சிட்டிங்க! இதென்ன இடியாப்ப சிக்கல்? என்றான் நாகு.
சம்பத்துதான் அதை கண்டு பிடிச்சு கொடுக்கிறான்! என்றான் ஆட்களில் ஒருவன்.
இதுல பாதிதான் இருக்கு.மீதி எங்கே? என்றான் நாகு.
வீட்ல பத்திரமா ஒளிச்சு வைச்சிருக்கோம்.இன்னும் 5 பாக்கெட் வேணும்! என்றான் ரமணி.
அதுவும் சம்பத்கிட்டத்தான் இருக்கனும்.!என்றவன் அவனுக்கு போனை போட்டு வரச் சொல்! என்றான்.
ஆட்களில் ஒருவன் சம்பத்திற்கு போன் செய்து தகவல் சொல்லி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்தான்.
வரட்டும்! மொத்தமா சோலிய முடிச்சிருவோம்! என்றான் நாகு.
ஒரு இழவும் புரியலை.யாராவது தெளிவா கதையை சொன்னா பரவாயில்லை! என்றான் டெல்லி.!
கொல்றதுக்கு முன்னாடி கண்டிப்பா கதையை சொல்லிட்டுத்தான் கொல்லுவேன்.!என்றான் நாகு.
இருளிலிருந்து யாரோ உள்ளே வரும் அரவம் கேட்டது.சம்பத் இருட்டில் குத்து மதிப்பாக துப்பாக்கியை நீட்டினான்.யாரு? சம்பத்தா? வெளிச்சத்துக்கு வா! என்றான்.
வெளிச்சத்திற்கு வந்த உருவம் ஜீன்ஸ் பேண்டும் டீ சர்டும் அணிந்து தலையில் தொப்பி அணிந்திருந்தது.
நீ சம்பத் இல்லையே? யார் நீ? என்றான் நாகு.
அவன் தொப்பியை கழற்றியதும் கூந்தல் சரிந்து விழுந்தது.
பொண்ணா? என்றான் நாகு.
ப்ரியா! என்றான் ரமணி.
ரமணிVs ரமணி
அத்தியாயம் 18
ப்ரியாவின் எதிர்பாராத வருகையால் திடுக்கென்று அனைவரும் நின்ற போதுதான் இருளில் ஒரு குரல் ஒலித்தது.எல்லோரும் தரையில படுங்க!
ப்ரியாவை சுடுவதா வேண்டாமாவென்று நாகு யோசித்த போது இருளிலிருந்து அவர்கள் வெளிப்பட்டார்கள்.விபரீதத்தை உணர்ந்த டெல்லி தரையில் படுத்தான்.ஆசிப்பும் ரமணியும் அவனை டிட்டோ செய்தனர்.அவர்களின் கைகளில் துப்பாக்கி இருந்தது.அவை வெடித்தன.!நாகுவிற்கு பின்னிருந்த நால்வர் சுவரில் தூக்கி வீசப்பட்டனர்.ப்ரியாவின் கையில் திடிரென முளைத்திருந்த துப்பாக்கி நாகுவின் துப்பாக்கி ஏந்திய கையில் வெடித்தது.காதுகளை பொத்தியபடி கீழே படுத்திருந்த மூவரும் மெல்ல கண் விழித்தனர்.
நெற்றி பொட்டில் துப்பாக்கி வைத்து நிறுத்தப்பட்டிருந்த நாகு தன் துப்பாக்கியை இழந்திருந்தான்.இப்போது இருட்டிலிருந்து அவன் வெளிப்பட்டான்.சம்பத் என்றான் நாகு அதிர்ச்சியுடன்.!
பழைய கணக்கை நேர் செய்வோமா? என்றான் சம்பத்.
நீ சாகலை? என்றான் நாகு.
நானும் சாகலை.துரையோட வாரிசும் சாகலை! அன்னைக்கு எங்கண்ணனை நீ போட்டாய்.இன்று என் முறை! என்ற சம்பத் துப்பாக்கியின் விசையை இழுத்தான்.வெடித்த தோட்டாவில் நாகுவின் மூச்சு அடங்கியது.போலாம் என்றான் சம்பத்!
அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.
ப்ரியா! நீ எப்படி இங்கே? என்றான் ரமணி.
சொல்றேன்! என்றவள் துப்பாக்கியை அலட்சியமாக இடுப்பில் சொருகினாள்.இது புது ப்ரியா! ரமணி பார்க்காத ப்ரியா.
கார்கள் ஒரு பங்களா முன்பு நிற்க சம்பத் இறங்கினான்.
இப்பவாவது கதையை சொல்லுவீங்களா? என்றான் ரமணி.
உள்ளே வா! சொல்றேன்! என்றான் சம்பத்.மற்றவர்கள் வெளியே நிற்க இவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.பங்களா முகப்பில் ஆளுயற போட்டோ ஒன்று ப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருக்க அதிலிருந்தவன் எங்கோ பார்த்து வசீகரமாக புன்னகைத்து கொண்டிருந்தான்.
யாருங்க இவரு? என்றான் ரமணி.!
இவருதான் உங்கப்பா.!என்னோட அண்ணன் துரைசிங்கம்.மாபியா லீடர்! என்றான் சம்பத்.
ரமணிVsரமணி
அத்தியாயம்19
இதை என்னால நம்ப முடியலை! என்றான் ரமணி.
உங்கப்பா மாபியா லீடர்னு நீ சொல்லவே இல்லையே? என்றான் டெல்லி.
எனக்கே இப்பத்தான் தெரியும்.அடுத்த செகண்டுல வாழ்க்கை எத்தனை திருப்பத்தை ஒளிச்சு வைச்சிருக்கு! அப்ப குப்புசாமி?
வளர்த்தவர்.இப்ப நீ கேட்ட கதையை சொல்லப் போறேன்.கவனமா கேளு! என்றான் சம்பத்.
சொல்லுங்க! என்றான் ரமணி.
எங்கண்ணன் துரைசிங்கம் பெரிய மாபியா டான்.ஆயுத கடத்தலிலிருந்து போதை மருந்து சப்ளைவரை நாங்க செய்யாத தொழில் கிடையாது.ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கும்.எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்தது.அப்பத்தான் நாகு எங்க லைன்ல குறுக்கே வந்தான்.எங்க ஆளுக ஒவ்வொருத்தரையா போட்டான்.அவன் யார் எங்கிருந்து வருகிறான்னு ஒன்னுமே தெரியலை.அதனால நாங்க காற்றோடு மோதி கொண்டிருப்பதை உணர்ந்த போது எங்க சாம்ராஜ்ஜியம்ஆட்டம் காண ஆரம்பிச்சுது.அப்பத்தான் என்னோட அண்ணிக்கு டெலிவரியாச்சு.துரைக்கு ஆண்குழந்தைன்னா ரொம்ப இஷ்டம்.அவனோட ஆசை நிறைவேறிருச்சு.ஆனா துரதிர்ஷ்டவசமாக நாகுவோட மோதுனதுல அவன் இறந்துட்டான்.நாகு என்னையும் குழந்தையையும் தேடி திரிய ஆரம்பிச்சான்.நான் குழந்தையை குப்புசாமிகிட்ட கொடுத்துட்டு துரையோட அப்பார்ட்மெண்ட் வாடகையை வாங்கிக்க சொல்லிட்டு தப்பித்து ஓடினேன்.நாகு என்னை துரத்த ஆரம்பிச்சான்.அந்த மோதல்ல அவனோட ஆளுக என்னை குத்துயிரும் குலையுயிருமா ஆக்கிட்டாங்க.நான் எப்படியோ தப்பிச்சேன்.அப்ப என்னை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்தது ஆசிப்.
நான் இங்கிருந்தா உயிருக்கு ஆபத்துன்னு மலேசியாவுக்கு போனேன்.அங்கே என்னோட பிஸ்னஸை விஸ்தரிச்சு நாகுவை சாய்க்க சரியான நேரத்துக்கு காத்திருந்தேன்.அப்பத்தான் நாகுவுக்கு கொலாம்பியாவிலிருந்து ஒரு டீல் கிடைச்சது.அதுல நயம் சரக்குஒரு கிலோ சாம்பிளா நாகுவுக்கு கிடைச்சது.
அந்த டீல் நாகுவுக்கு கிடைச்சா அவனோட வளர்ச்சி துரிதமாகி அவனை பிடிக்கவே முடியாது.மேலும் அவன் எங்கிருந்து வருகிறான்னு யாருக்கும் தெரியலை.அவனை வெளியே வர வைக்க ஒரே வழி சரக்கை திருடுவது.அதை திருடினேன்.அவனைப் போலவே ஒரு மாயாவியை சிருஷ்டி செய்தோம்.அதுதான் நீ! உன்னை அவனால கண்டு பிடிக்க முடியலை.உன்னோட பேரை யூஸ் பண்ணி நாகுவோட ஆளுகளை காலி செய்தோம்.ராம்லால் சேட் உட்பட எல்லாரும் நாங்க மருந்தை திருடியதால் அணி மாற ரெடியானாங்க.நாகுவோட ஆளுகளை போட்டு தள்ளிட்டு அந்த புட்டேஜோட தமிழ் நேசன் உன்னை வைச்சு எடுத்த மாண்டேஜ் ஷாட்டுகளை மிங்கிள் பண்ணி நீதான் கொலை செய்த மாதிரி எடிட் செய்தோம்! நாங்க எதிர்பார்த்த மாதிரியே நாகு ரகசிய இடத்துல வெளிப்பட்டான்.அப்புறம் நடந்தது உங்களுக்கே தெரியும்.
அப்ப பேக்கரில ரமணி சுட்டு கொன்ன ஒருத்தன் உயிரோடு இருந்தானே?
அவன் செத்தவனோட டுவின்ஸ்!
அப்ப கதையில வர்ர ஒரே டுவின்ஸ் அவன்தான் போல!
எங்க ரூம்ல இருந்த பேக்கை எடுத்தது?
ப்ரியா! உன்னோட ரூம் சாவியை டூப்ளிகேட் பண்ணி இன்னொரு சாவி செய்து அவதான் பேக்கை எடுத்து கயிறு வழியா பில்டிங் பின்னாடி இறக்கி ஹேல்ப் பண்ணினாள்.அவ என்னோட ஆளு.!
அந்த வாட்ஸ் அப் குரூப்?
நாகுவோட கண்ட்ரோல்ல இருந்த என்னோட பழைய ஆளுகளை வைச்சு ஆசிப் உருவாக்கியது.இப்போ நாகு இல்லை.இனி மாபியா டான் ரமணிதான்!
நான் டானா? என்றான் ரமணி.
எஸ்! ஒரே கண்டிசன்.நீ ப்ரியாவை கல்யாணம் பண்ணிக்கனும்.!
ஒகே! டன்! என்றான் ரமணி.
இப்ப மூணு பேரும் கிளம்புங்க! என்றான் சம்பத்.
காரில் ரமணியும்
