ரமணி Vs ரமணி
அத்தியாயம் 13
டெல்லி போனின் சிம்கார்டை தூக்கி எரிந்து விட்டு அருகே ஓடிய சாக்கடையில் போனை தூக்கி எரிந்தான்.
இப்ப நாம எங்கே போகிறோம்? என்றான் ரமணி.
பாயை பார்க்க! தமிழ் நேசன் போனை ஆப் பண்ணி வைச்சுட்டான்.அவனை தேட முடியாது.இருக்கிற ஒரே சோர்ஸ் நம்ம பாய்தான்.!
பாய்தான் இதையெல்லாம் பண்ணினாருன்னா பொருள் குறைவா இருப்பது தெரிஞ்சிருக்குமே? இப்ப கொடுத்த பேக்குல பத்து பாக்கெட்தானே இருக்கு.பேன்ல இருப்பதையும் சேர்த்தா 15 பாக்கெட் ஆச்சு.இன்னும் 5 பாக்கெட் வேணும்.!
இதுதான் டிராப்.இதை பாய் கேட்டா பாய்தான் இதையெல்லாம் செஞ்சாருன்னு அர்த்தம்.கேக்கலைன்னா பாய்க்கு எதுவுமே தெரியாதுன்னு அர்த்தம்!
சரி செஞ்சு பார்ப்போம்.!என்ற ரமணி ராஜ்தூத்தை கிளப்பினான்.இருவரும் பாய் வீட்டை நெருங்கி கொண்டிருந்த போது ரமணியின் போன் அடித்தது. ராஜ் தூத்தை நியூட்ரலில் போட்ட ரமணிஅவன்தான்! என்று போனை எடுத்து கோபத்துடன் என்னய்யா விளையாடுறியா? நீ சொல்ற இடத்துக்கு போனா கூல்டிரிங்ஸ் கொடுக்கிறானுக.இல்லைன்னா தலையில ஓட்டை போட துப்பாக்கியை நெத்தில வைக்கிறானுக.!என்றான்.
கூல்டிரிங்ஸ் கொடுத்தா குடி.துப்பாக்கியை நெத்தில வைச்சா உன்னோட துப்பாக்கிய என்ன செய்யறதுக்குக்காக கொண்டு போனாய்? உன் பொருள் வேணும்னா நான் சொல்றதை நீ செஞ்சுதான் தீரணும்!
என்னை கொலைகாரனாக்காம விட மாட்டே போலிருக்கே?
நீ தப்பா புரிஞ்சுகிட்ட!நான் உன்னை காப்பாத்தியிருக்கேன்.இப்ப நீ எங்கிருக்க?
வீட்டுக்கு போக போறேன்.
போகாதே! உன்னை நாகராஜோட ஆளுக தேடிட்டு இருக்கானுக.!அவங்கிட்ட சிக்கினா உன் கதை கந்தல்!
யாரு அந்த நாகராஜ்?
நாகுன்னு சொல்லி டெல்லிக்கிட்ட கேளு.!அவன் சொல்லுவான்.நான் அப்புறம் கூப்பிடுறேன்.
போனை வைத்த ரமணி டெல்லியிடம் டெல்லி! நாகுன்னு யாரையாவது உனக்கு தெரியுமா? என்றான்.
நாகுவா? அவனை ஏன் நீ கேட்கிறாய்?
அவன் நம்மை தேடிட்டு இருக்கானாம்?
அவன் தேடுறான்னா எமனே நம்மை தேடுற மாதிரி.!தப்பிக்க வழியே இல்லை!
யார்ரா அந்த நாகு?
நாகு ஊர்லயே பெரிய தாதா! அவனை இதுவரை யாரும் பார்த்ததில்லை.!ஆனா அவன் பேரை சொல்லி வேலை நடக்கும்.எங்கிருக்கிறான்? எப்படி இருப்பான்? எதுவும் யாருக்கும் தெரியாது.வெவ்வேற நம்பர்ல பேசுற அவனோட குரல் மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும்.!
கால்ல விழுந்துரலாம்னா ஆளே கிடைக்க மாட்டான்னு சொல்ற? இப்ப என்ன பண்ணுறது?
சாவ தயாராக வேண்டியதுதான்.வேற வழியில்லை!
இப்பத்தான் லவ் பண்ணலாமான்னு நினைச்சேன்.அதுக்குள்ள சாவா? என்றான் ரமணி.
