மோக காய்ச்சல் கூடுதடி
9. காய்ச்சல்…
“இவ்வளவு நேரம் என் கூட தானே இருந்த. இப்போ மட்டும் என்ன அம்மா”
“அம்மா… அம்மா” குழந்தையும் அவரும் சமையலறை வருவது தெரிந்தது…
“பா… அம்மா” இங்கு தான் அம்மா இருக்கிறாள் அப்பா என்று அவரிடம் சொன்னது..
“உன்னை மட்டும் தெளிவா அம்மானு சொல்லுறா பாரேன்”
“பா.. மம் ம்ம்…” குழந்தைக்கு பசி…
“பசிக்குதா பாப்பாக்கு” இருவரும் அருகில் வந்தாச்சு… அவளுக்கு திரும்ப முடியவில்லை…
காரணம் வேறு ஒன்றுமில்லை நேற்று பேசிய தாக்கம் இன்னும் மிச்சம் இருக்கிறதே..
“நீ எப்போ எழுந்த?”
“சமைச்சுட்டீயா? எங்களுக்கு பசிக்குது”
“நீ காலைல சாப்பிடலையே” எதுக்கும் பதிலும் வரவில்லை திரும்பவும் இல்லை…
அவள் உடல் குலுங்கவும் “ஏய் எதுக்கு இப்போ அழுகுற” குழந்தை அவரது இடது கையில் இருந்தாள்.. வலது கையால் அவளை திருப்பவும் அவள் நிமிரவில்லை.. அவள் தோள் வளைவிலே முகத்தை புதைத்து கொண்டாள்…
“பா… அம்மா… ஊஊஊஊ” அம்மா அழுகிறது என்றது குழந்தை தந்தைக்கு தெரியாது அல்லவா அதனால் அழகாக சொல்லியது.. குழந்தையின் முகமும் சோகமாக தான் இருந்தது.. எதுக்காக அம்மா அழுகிறாள் என்று…
இதற்கு முன் கட்டி பிடித்து இருப்பார்களா?? அந்த சுவடு கூட கிடையாது.. மனைவி தோளில் புதைந்து அழுகவும் வலது கையால் அவளது தோளை பிடித்து கொண்டார்..
அவர் ரதியின் மேல் கையை போடவும் குழந்தையும் அவள் மேல் கையை போட்டது..
சிறிது நேரம் அழ விட்டவர் “குழந்தை பயபடுறா பாரு.. நிமிர்ந்து பாரேன்” அவளது முதுகை மெல்ல தடவி கொடுத்தார்…
அவளும் சிறிது நேரத்தில் நிதானித்து மெல்ல நிமிர்ந்து குழந்தையை பார்க்கவும் “அம்மா” உடனே அவளிடம் தாவியது…
“தங்கம். அம்மாவை தேடுனீங்களா?”
“ம்..ம்” என்ன புரிந்ததோ தலையை ஆட்டியது…
“பாப்பாக்கு மம் மம் வேணுமா?” அங்கு நின்றே குழந்தையிடம் பேசினாள்..
கணவனை இன்னும் பார்க்கவில்லை..
ஆனால் அவர் அவர்கள் இருவரையும் தான் பார்த்தார்…
அவர்கள் உலகத்தில் இருந்தவர்களை “அம்மாவும் மகளும் சேரவும் நான் வேண்டாமா?” அவர் குழந்தையை பார்த்து வேண்டாமா என தலையை ஆட்டி கேட்கவும், சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை போன்று அதுவும் வேண்டாம் என்றது…
“அப்போ நான் போறேன்” அவர் செல்லமாக தான் திரும்பி நடந்தார்..
ஆனால் நகரமுடியவில்லையே..
இழுத்தது குழந்தையாக இருந்தால் இவ்வளவு திடம் இருக்காதே… அப்போ அவருக்கு தன் சட்டையை பின்னே இழுத்து நிற்பது தன் மனைவி எனும் போது நிம்மதியோடு ஒரு சந்தோஷம் பரவுவதை தடுக்க முடியவில்லை..
அவர் அப்படியே தான் நின்றாள் திரும்பவில்லை.. அவள் என்ன தான் செய்கிறாள் என்ற ஆர்வம்..
ஆனால் இழுத்த பிடி விடவும் இல்லை..
இவர் நகரவும் முடியாது ஆனால் திரும்பவும் இல்லை.. எவ்வளவு நேரம் நிற்பது அவர் திரும்பலாம் என்ற போது அவர் முதுகில் அவளது உடல்…
அப்போது இறுக்கி பிடித்த சட்டையை விடவில்லை.. அவளது இடது பக்க இடுப்பில் இருந்த குழந்தை அவரது இடது பக்கமாக குனிந்து “பா” தனது இரண்டு பச்சரிசி பல்லை காட்டியது…
மனைவியின் செய்கை ஒரு அதிர்ச்சி என்றால் குழந்தையின் அழைப்பும் சிரிப்பும் ஒரு நிம்மதி…
குழந்தையையும் வாங்க வாகு இல்லாமல் நின்றார்.. நேரம் ஆக ஆக அவளது உடலின் அழுத்தம் கூடி தான் போனது…
மெல்ல திரும்ப முயற்சி செய்தார்..
அவள் விடவில்லை… “லெஷ்மி” ம்ஹீம் பதில் இல்லை.. பிடியும் விடவில்லை..
“ரதி” அப்போதும் தண்ணீரில் போட்ட கல் தான் இருந்தாள்..
“அடியே பாப்பா பார்க்குறா பாரு” சற்று சிரிப்போடு தான் சொன்னார்..
பிடி இளகியது ஆனால் விடுபடவில்லை..
அப்படியே மெல்ல திரும்பினார்..
குழந்தையை தன்னிடம் இழுத்தவர் மனைவியையும் தன் வசம் தான் வைத்து இருந்தார்..
“நீயும் காலைல இருந்து சாப்பிடலடி. குழந்தைக்கும் பசிக்கும்” பேசியபடி அவர்கள் சாப்பிடும் இடத்துக்கு வந்தார்…
“அவ சேட்டை பண்ணுவா. நான் ஊட்டி விடுறேன். நீங்க சாப்பிடுங்க” முகம் பார்க்காமல் பேசிய மனைவியை,
“இந்த வயசுல கூட வெட்கம் அழகானது தான் டி” ஏற்கனவே கணவன் பேசியது, தான் அவர் தோளில் சாய்ந்து அழுதது,
பின் இவளாக கணவன் கோபித்து கொண்டு செல்கிறானோ என்ற பயத்தில்
சட்டை இறுக்கியதும் இல்லாமல் அவர் மேல் சாய்ந்தது என்று நெளிந்து கொண்டு இருந்தவளுக்கு இப்போ கணவன் சொன்னதும் அந்த வெட்கம் கூடியதே தவிர குறையவில்லை….
“அவ மேல் உட்கார்ந்து சாப்பிட மாட்டா?”
“சரி எல்லாரும் ஒன்னா கீழே உட்கார்ந்து சாப்பிடலாம்”
“காலைல இருந்து வீட்டுக்குள்ளே இருக்கிறாளே”
“ஆமா நல்லா தூங்கினா”
“வெளியே வைச்சு கொடுத்தால் கொஞ்சம் சாப்பிடுவா”
“ம் சரி” என்றவருக்கு சாப்பிட அனைத்தும் எடுத்து வைத்தவள் குழந்தைக்கு எடுத்து கொண்டு வெளியே சென்றாள்…
அங்கு செடிகள் நாலு மரங்கள் இருக்கவும் வெயிலும் இல்லாததால் அங்கே வைத்து ஊட்டி விட்டாள்…
கணவன் இந்நேரம் சாப்பிட்டு இருப்பார் என்று நினைத்தபடியே ஊட்டியவளுக்கு அவளது இடுப்பில் உட்கார்ந்து “பா.. வா…வா” என்றாள் தர்ஷிதா…
“அப்பாவா” அவள் திரும்பி பார்த்தாள் வாசலில் ஒருபக்கமா சாய்ந்து நின்றவரை தான்…
“சாப்பிடலையா”
“நீயும் வா”
“லேட் ஆகும்”
“பரவாயில்லை” நின்றவர் உட்கார்ந்து கொண்டார்..
இவளும் அவருக்கு பசிக்குமே என குழந்தைக்கு விரைவில் ஊட்டியவள் அவருடனே சாப்பிட வந்தாள்..
இருவரையும் சாப்பிட விடவில்லை..
“சும்மா இரு பாப்பா. ரொம்ப சேட்டை” இப்படி பேசியபடி அன்றைய பொழுது போனது..
அந்த குழந்தையின் தாயும் அன்று விரைவில் வந்து குழந்தையை வாங்கி கொண்டு சென்றாள்…
மாலை பொழுது அவளது அறைக்கு சென்றார்…
அப்போது தான் குளித்து தலையை வாறியவள் அவர் வரவும் “என்ன” என்பது போல் பார்த்தாள்..
அவர் எதுவும் பேசாமல் அங்கு கீழேயே உட்கார்ந்து மனைவியை பார்த்து “வேலை முடிந்தது தானே”
“ம் முடிந்தது”
“இங்கு வந்து உட்கார்” பக்கத்தில் கையை வைத்து காட்டினார்…
அவள் எந்த பிகுவும் செய்யவில்லை…
வாழ்க்கையை வாழாமல் நிறைய இழந்தவர்கள் தான் இப்போது அதை சரி செய்ய பார்க்கிறார்கள்…
யார் தான் தவறு செய்யவில்லை..
அப்படி செய்தவர்கள் திருந்த கூடாதா??
அந்த இடத்தில் தான் இந்த இருவரும்..
தன் தவறை பெரும்பாலான மக்கள் ஒத்து கொள்ளவே மாட்டார்கள்..
ஆனால் இவர்கள் ஒத்து கொண்டனர்..
அதை சரி செய்ய இயலுமா தெரியவில்லை ஆனால் திரும்ப செய்ய கூடாதுனு முடிவில் தான் இந்த பேச்சுகள் கூட…
“குளிச்சீயா” மனைவியின் முகம் இப்போது தெளிந்து இருக்கவும் கேட்டார்..
“இப்போ தான்”
“நான் நேற்று பேசியதை வைத்து எதுவும் நினைக்காத. உன்னை குற்றம் சொல்லனும்னு எதுவும் நினைத்து சொல்லவில்லை..”
“நீங்க சொன்னது சரிதாங்க. எனக்கு இப்போ தான் எல்லாமே புரிந்தது”
“இப்போதாவது நாம உணர்ந்தோம்னு நினைச்சுக்கோ”
“பிள்ளைகளை பார்க்க போகலாமா”
“லீவு நாளில் போவோம்”
“ம் சரிங்க. நான் வேணும்னு உங்க கூட பேசாமல் இல்லை. அன்னைக்கு உங்க அறைக்கு வந்து ஒரு வாரம் இருந்தேன் ல”
“ஆமா அதுக்கு என்ன. என் ரூம்க்கு தானே வந்த. நீ வராமல் யார் வருவா”
“என் மகனை மயக்க இது தான் வழியா” தன் மாமியார் அன்று சொன்னதை இன்று தான் சொல்கிறாள்..
“ச்சீ ச்சீ” அவருக்கே ஒரு மாதிரி ஆனது..
“என் புருஷனை தானே மயக்குனேனு கேட்க வேண்டியது தானே”
“அந்த தைரியம் இருந்து இருந்தால் எப்படியோ இருந்து இருக்கலாம்”
“இப்போ அந்த தைரியம் வந்ததா” அவர் கேட்டார்…
“அது மாதிரி கேட்க ஆள் இல்லையே”
அவளுக்கு சிரிப்பு.. இருவரும் முகம் பார்த்து பேசினர்…
அவருக்கு பாதி நரைந்த முடி தான்..
அவளுக்கு அதிலும் பாதி நரைத்தது தான்..
“கேட்டாலும் பதில் சொல்லனும்”
“எப்படி”
“என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்”
“பாட்டு பாடனுமா” அவர் சொன்ன விதம் இவளை மேலும் பேச தூண்டியது..
“உன் புருஷன் தானே.. ம்.சொல்லு”
“ரொம்ப சீக்கரமா கேட்டுட்டீங்க?”
“இனி எல்லாமே கேட்கிறேன்” அவளை தோளில் கை போட்டு தன்னோடு இழுத்து நெற்றியில் முத்தமிட்டார்…
முதல் முத்தம்…
நெற்றி முத்தம்…
மென்மை முத்தம்…
உரிமை முத்தம்…
“போன வாழ்க்கை போகட்டும் டி. இனி உள்ள வாழ்க்கையை சந்தோஷமா வாழுவோம் டி” அந்த குரலில் இருந்தது தான் என்ன….
“ம்.. ம்” அவளுக்கு இந்த அணைப்பே போதுமானது..
ஆசையா??
காதலா???
ஏக்கமா??
வருத்தமா???
சந்தோஷமா??
நெகிழ்ச்சியா??
இன்பமா???
இன்னது என்று கண்டறிய முடியாமல் இருந்தது..
ஆனால் அவளுக்கு அந்த முத்தம் கூட தேவையில்லை.. அந்த அணைப்பு தேவைப்பட்டது.. அவர் முத்தத்தோடு விலகியவரை விடவில்லை சாய்ந்து கொண்டாள்…
எனக்கு எல்லாம் நீயே…
எல்லாமும் நீயே…
அந்த வாரம் முழுவதும் ஒரு வித மோனநிலையில் தான் இருந்தனர்…
இருவருக்கும் இடையே கண்ணுக்கு புலப்படாமல் சிலந்தி வலை ஒன்று இருந்தது… அந்த வலை ஊதினாலே அறுந்து விடும்… இவர்கள் கூடினாலே விலகி விடும்…
அந்த வலையை சிமெண்ட் கொண்டு இறுக்கி விட தான் வந்தாள் சுந்தரி…
(டார்லிங் ஸ் நாளைக்கு தீடிரென்று ஊருக்கு போகிற மாதிரி சூழல் வருது. அப்போ மட்டும் யூடி கொடுக்க முடியாது. முடிந்த அளவுக்கு எழுதியதை போடுவேன். ஊருக்கு போவேனா இல்லையான்னு என் முகப்பு பக்கத்தில் சொல்லி விடுகிறேன்.
