மோக காய்ச்சல் கூடுதடி
7. மோக காய்ச்சல்…
“லெஷ்மி அக்கா… லெஷ்மி அக்கா” யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்கவும் தான் ஹால் ஷோபாவில் படுத்து இருந்த செல்வராஜனுக்கு முழிப்பு வந்தது..
முதலில் அவருக்கு எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை.. சூரியன் வரும் நேரத்தில் தான் இருவரும் உறங்கவே சென்றனர்…
அத்தனை வருட பேச்சுக்களை ஒரே இரவில் பேசினால் தீர கூடிய விசயமா???
மறுபடியும் கதவை தட்டும் ஓசை கேட்கவும் எழுந்தவர் கைலியை சரிசெய்து கொண்டே திறந்தார்..
அந்நேரத்தில் அவரை அங்கு எதிர்பார்க்காத அக்குழந்தையின் தாய் முழித்தார்…
அந்த குழந்தை இவரை பார்த்ததும் “பா” என்று அவரிடம் வர தன் தாயிடம் இருந்து கையை நீட்டியது…
அவரும் சிரித்த முகமாகவே குழந்தையை வாங்கி கொண்டார்..
“அக்கா இல்லையா?” அவளுக்கு வேலைக்கு போக வேண்டிய அவசரம் வேற..
அவள் கணவன் மின்சார துறையில் வேலை பார்த்தபோது இறந்துவிட்டான்..
அதனால் இவளுக்கு அந்த வேலை கிடைத்தது… பணத்திற்கு பஞ்சம் இல்லை என்றாலும் குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லாததால் மிகவும் கஷ்டபட்டவளிடம் ரதி தான் “நானே குழந்தையை பார்த்து கொள்கிறேன் நீ போய் வேலைய பார்த்துட்டு வா” என்று அனுப்பி விட்டாள்…
முதலில் குழந்தையை கொடுக்க அஞ்சியவள் தான் ஆனால் குழந்தை ரதியிடம் ஒன்றி போகவும் அவளும் நிம்மதியாக வேலைக்கு சென்று வந்தாள்..
ரதியின் வீடு அருகே நாலு வாடகை வீடு ஒரே மாதிரியாக கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார் பக்கத்து இடத்து காரர்..
அந்த நாலு வீட்டு வாசலும் இவளது வீட்டு காம்பவுண்டு சுவரை பார்த்தபடி இருந்ததால் இவள் அவர்களிடம் நட்பை வளர்த்தாள்.. அதுவும் சமீபத்தில் தான்..
அங்கு குடி வந்தவள் தான் இந்த தாயும் குழந்தையும்…
“அவ தூங்குறா மா”
“அப்படியா” அவளுக்கு வேலைக்கு போக வேண்டிய அவசரம்.. இவர் இப்படி சொல்லவும் பயம் வேற..
“நாங்க பார்த்துக்கிறோம்.. நீ கவலை படாத மா” அவளின் யோசனை முகத்தை பார்க்கவும் இவரே அந்த தாயை அனுப்பி வைத்தார்…
அவள் யோசித்தே நிற்கவும் “டாட்டா சொல்லு” செல்வராஜன் சொல்லவும் அது அழகாக கைகளை ஆட்டி சொல்லி விட்டு செல்வராஜனை கழுத்தோடு கட்டி அவர் தோளில் முகத்தை புதைத்து கொண்டது…
அவருக்கே சிரிப்பு வந்தது…
அந்த தாயும் இப்போது நிம்மதியாக வேலைக்கு ஓடினாள்…
அவரும் சிரிப்போடு பாப்பாவை தூக்கியபடி உள்ள வந்தார்…
“சமத்து பாப்பா வா நீ” அவர் குழந்தையை பார்த்து கேட்கவும் அது சிரித்தது..
“நேத்து உங்க அம்மா கொஞ்சிட்டு இருந்தா அப்படியா” அதற்கும் சிரிப்பு…
“அதே சமத்தோடு இருப்பீயா?? நான் இதோ வரேன்” குழந்தையை அவரது அறைக்குள் உட்கார வைத்தவர் பாத்ரூம் நுழைந்தார்…
சிறிது நேரத்தில் குழந்தை கதவை தட்டவும் “இதோ வந்துட்டேன்” கதவை திறக்கவும் “பா… பா” அதுக்கு யாருமே இல்லை என்கவும் பயத்தில் அவர் நுழைந்த பாத்ரூமை தட்டியது…
“நீ சமத்து இல்லையே” குழந்தையை தூக்கியபடி வரவும்..
அவரது முகத்தை தன் முகம் பார்க்கும் படி அந்த பிஞ்சு கரங்களால் திருப்பி “அம்மா” என்றது…
ரதியை காணாமல் இருக்கவும் அதை அவரிடமே கேட்டது… அவருக்கு அந்த குழந்தையின் செய்கையில் நேற்று இரவு தாங்கள் பேசியது எல்லாம் மறுபடியும் மனதில் பாரமாக ஏறியது…
“உங்க அம்மா தூங்குறா” அதுக்கு புரியவில்லை போல மறுபடியும் “அம்மா” என்றது…
வாயில் விரல் வைத்து அமைதியா இரு என்றபடி ரதியின் அறைக்கு கூட்டி சென்றார்…
நேற்று இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தவள் இப்போது தான் உறங்கினாள்.. எது நடந்தாலும் தனது வேலையில் பின் வாங்காதவள் தான் பாரம் குறைந்ததோ மனது லேசானதோ அமைதியாக உறங்கினாள்..
முகத்தை விட இமைகள் வீங்கி இருந்தது..
அவருக்கும் கவலை தான்..
காயம் ஆற வேண்டும் என்றால் கத்திய எடுக்க தான் வேண்டும்…
இது புரை ஓடிய காயம் என்பதால் கத்தி கொண்டு கிழத்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.. அதிலும் இது காலம் கடந்த புண் என்பதால் வலிகளும் வேதனைகளும் அதிகம் தான்…
“மா” தூங்குறானு குழந்தை சைகையில் சொல்லவும் “ஆமா தூங்குறா நாம கடைக்கு போகலாமா” எப்படியும் இன்னைக்கு அவளால் எழுந்துக்க முடியாது.. குழந்தைக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதால் குழந்தையை தூக்கி கொண்டு கடைக்கு கிளம்பிவிட்டார்…
இது போல் தாங்கள் பெற்ற பிள்ளைகள் பாசமா இருந்தார்களா?? இந்த கேள்வி வரும் போது “தாங்கள் இப்படி தூங்கினோமா” இந்த கேள்வி போட்டி போடும்.. இரு கேள்விகளுக்கு ஒரே பதில் “அவர்கள் பிள்ளைகளை அவர்களிடம் கொடுத்தார்களா” இது தான் பதில்…
ஆம் இரு பிள்ளைகளையும் கவனமாக மோகனாம்பாள் சுந்தரியும் தம்பி தம்பி மனைவியிடம் கொடுக்கவே இல்லை…
ரதியிடம் தான் பெற்ற மகனை தான் கொடுக்காமல் தடை போட்டார்…
ஆனால் ரதி பெற்ற பிள்ளைகளையும் கொடுக்காமலே அவர்கள் மனதில் தாயின் பாசம் என்பதை அறியவிடாமலே வளர்த்து விட்டார்…
இந்த பேச்சு தான் நேற்று இரவு முழுவதும் ஓடியது…
அதை நினைக்க விடாமல் இப்போது தோளில் கிடந்த குழந்தை “பா… பா… பா” என்றது மூச்சுக்கு முன்னூறு முறை…
அது கேட்கும் கேள்விகள் புரியவில்லை என்றாலும் இவர் அதுக்கு பதில் கொடுத்து கொண்டே இருந்தார்..
இவர்கள் கடையில் வாங்கி வீடு வந்தும் ரதி எழுந்து கொள்ளவே இல்லை…
இவரும் சாப்பிட்டு குழந்தைக்கும் ஊட்டி விட்டு ஹாலில் இருந்தால் குழந்தை சத்தம் அவளை உசுப்பி விடும் என்று தனது அறைக்குள் குழந்தையை வைத்து கொண்டு ஏசியை போட்டு விட்டு அதனோடு தான் இருந்தார்…
குழந்தை இரண்டாவது தூக்கத்துக்கு செல்லவும் தட்டி கொடுத்தே தூங்கியவர் மறுபடியும் மனைவியை சென்று பார்த்து வந்தார்…
“இன்னும் தூங்குறாளே” அவருக்கு பயம் வரவும் நேற்று அவ்வளவு அழுத போது கூட அருகில் வராதவர் இன்று அருகில் வந்து பார்த்தார்…
அப்போ கூட அவளை தொட தோணவில்லை தான்.. ஆமாம் மனைவி தான் தொட்டு தடவி ஆறுதல் கூறவில்லை.. தொட்டு உசுப்பி விடவும் இல்லை…
“இமை வீங்கி இருக்கு. அழுதுட்டே இருந்தாளே.. சரி தூங்கட்டும்” தனக்கு தானே பேசியபடியே அவரும் குழந்தையோடு படுத்தவர் தான் மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில்..
அவர்கள் தோதுக்கு குழந்தையும் அன்று நல்ல உறக்கத்தில்..முதலில் எழுந்தது இரதி தான்…
தலை கனத்தது..
இமைகள் திறக்கமுடியவில்லை..
மெல்ல கண்களை திறந்தவளுக்கு எழுந்து கொள்ள முடியவில்லையே…
மெல்ல எழுந்தவள் சுவற்றில் சாய்ந்து நிதானமானாள்…
மணி இரண்டை தொட்டது.. ஆனால் அது காலையா மாலையா என்று தெரியவில்லை…
அப்படியே எழுந்து ஹாலுக்கு வந்தாள்..
வெளிச்சம் தெரிவதை வைத்து பார்த்தால் அது பகல் என்று புரிந்தது…
“பாப்பா வரலையா?? அய்யோ அவ அம்மா எப்படி குழந்தையை வைச்சுட்டு போக முடியும்” குழந்தையை நினைத்து கவலை பட்டவள் கணவனை நினைக்கவில்லை அந்நேரத்தில் கூட..
சிறிது நேரம் ஜன்னல் அருகில் நின்றவள் தான் நேற்று விசயங்கள் ஞாபகம் வரவும் “அவர் எங்க. தாழ்ப்பாள் உள்ள போட்டு இருக்கு. சமைக்கலையே??
இன்னுமா தூங்குறார்?? அவருக்கும் முடியாமல் போயிச்சா?” பரவாயில்லை நேற்று பேசியதுக்கு பலனாக கணவனை நினைத்தாளே அந்த வகையில் வெற்றி தான்…
அவர் அறையை நோக்கி தான் போனாள்.. பயமெல்லாம் இல்லை ஆனால் தயக்கம்.. அதில் தவறும் இல்லை..
கணவனும் முதலில் செல்ல தயங்கியவர் தான் அதனால் இப்போது தயங்காமல் செல்கிறார்.. அந்த தயக்கம் தான் இவளுக்கும்..
கதவை தட்டலாமா யோசனை..
தூங்குபவரை எழுப்ப வேண்டாம் என்றது மனது.. இருந்தாலும் இந்நேரம் வரை தூங்கவும் பயமும் வந்தது..
கதவை திறந்து பார்ப்போம் என திறந்தால் அது திறந்து கொண்டது..
திறந்ததும் ஜில் என்று காற்று முகத்தில் அடித்தது…
கண் மூடி நின்றாள்.. அந்த காற்றில் தனது முகத்தை காட்டி இதத்தை உணர்ந்தாள்…
பிறகு தான் கண் திறந்தாள்..
திறந்தவளின் கண்கள் நிலைகுத்தியது…
கணவன் மேல் படுத்து உறங்கிய குழந்தை…
குழந்தை மேல் ஒரு கையை பாதுகாப்பாக வைத்து அரவணைத்து தூங்கிய கணவன்…
குளிருக்கு இதமாக போர்வையை போர்த்தி கொண்டு தூங்கிய கவிதையை தான் பார்த்தாள்..
மனது லேசானது இதை பார்த்து…
மனது கனமானது நேற்று அவர் சொன்ன
“நாம் இருவரும் கடமைகளிலிருந்து தப்பிக்க பார்த்து இருக்கிறோம்” எவ்வளவு பெரிய வார்த்தை இல்லையில்லை.. குற்றச்சாட்டு இருவர் மேலும் தான்…
இதில் நியாய தராசு தான் இருவருக்கும் இருவர் மேலும் உள்ள குற்றங்கள் சரி சமமாக தான் இருந்து இருக்கிறது..
தன் முதுகில் உள்ள அழுக்கை பாராதவர் தான் அடுத்தவரின் அழுக்கை பற்றி குறை கூறுவார்..
அது போல் ஆனது இரதியின் நினைப்பும் கணவன் மேல் தான் தவறும் என்று நினைத்த அவளின் எண்ணங்களுக்கு நேற்று கணவன் அடிக்கிய காரணங்கள்…
(ஹாய் டார்லிங் ஸ். Fb la இரதியின் டார்லிங் ஸ் ஒரு குருப் ஆரம்பித்து இருக்கோம். விருப்பம் உள்ளவர்கள் அந்த ஜோதியில் வந்து சேர்ந்துங்க டார்லிங்)
