மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

மோகமந்திரம் சொல்லுடி ரதியே

24. மோக மந்திரம் சொல்லடி‌ ரதியே…

போட்டி தான் ஆம் கடும் போட்டியே!…

ரதிக்கு இரு நாட்களாக சந்தேகம் தான்.
ஆனால் அதை எப்படி சொல்லுவது என ஒரு வெட்கம், தயக்கம். கதிரின் ரதிக்கானா அங்கீகாரம் அல்லவா. கதிரின் மனைவிக்கு கிடைத்த பெரும் புதையல் அல்லவா!!.

இருந்தாலும் அது தானா என அவளுக்கு உறுதியாக தெரியாத போது அவள் என்னவென்று பிறருக்கு சொல்லுவாள்.
பல யோசனைகளுடனே கண் விழுத்தும் எழ முடியாமல் படுத்து இருந்தாள்.

கதிருக்கு இன்னும் மனைவி எழாமல் படுத்து இருக்கவும் அவளிடம் வம்பு செய்ய எண்ணி அவளை பிடித்து வேகமாக தன் பக்கம் இழுத்து திருப்பினான். அவனின் செயலில் அவளுக்கு தூக்கி போடவும் தன் கணவனை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ஏய் விடுடி இப்போ என்ன செஞ்சேனு இந்த அடி அடிக்கிற?

“இப்படியா பிடித்து இழுப்பாங்க?”

“ஏண்டி எப்பவும் நான் செய்யிறது தானே?”

“எல்லா நேரமும் அப்படி செய்ய முடியுமா?”

“ஏன் இப்போ இந்த நேரத்துக்கு என்னவாம்?”

“இந்த நேரம் ரொம்ப முக்கியமான நேரம் தான்”

“முக்கியமான நேரமா? என்னவா இருக்கும்?”

“ஏங்க நாம அப்பா வீட்டுக்கு போவோமா?”
என கதிரை தடவி கொண்டே கொஞ்சி கேட்டாள்.

ரதி கெஞ்சி கேட்டாலே தாங்காது கதிருக்கு. இதில் அவள் கொஞ்சவும் அவனுக்குமே அங்கு போய் பல நாட்கள் ஆகவும் கிளம்பி விட்டான் அவளையும் அழைத்து கொண்டு தன் அந்தரங்கத்திற்கு.

அவன் அங்கு சென்றாலே அவனுடைய செயல்களை நினைத்தாலே இவளுக்கு வெட்கமாகி போகும். அவன் இவளிடம் ஒவ்வொரு செயலிலும் அடம் பிடிப்பதும், அவளை குழந்தை போல தாங்குவதும் என பல சேட்டைகளை செய்வான்.

இன்றும் வந்தவுடனே அவனுக்கு குஷியாகவும் உடனே அவளை அவள் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்தது அவளை இம்சித்தான். அவளுக்குமே இப்போது அவனிடம் மிகவும் ஒன்றவே ஆசை ஆனால் ஒரு பயமும் கூட எதாவது நடந்து விடுமோ?என.

அவனிடம் சென்று மடியில் அமர்ந்து நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள். அவளுக்கு தன் தந்தையின் நினைப்பு போல என எண்ணி அவனும் அவளை சுகமாக அமர வைத்து தட்டி தடவி கொடுத்தான். அப்படி தடவும் போது அவன் கை அவள் வயிற்றில் இரு முறை வரவும் அமைதியாக இருந்தவள் மூன்றாவது முறை வரும் போது அவளும் தன் கை கொண்டு கணவனின் கையும் மெல்ல அழுத்தினாள். அவளின் அழுத்துவது புரியாமல் அவன் கையை மேற்கொண்டு நகர்த்த முற்படும் போது இவள் நகரவிடாமல் செய்யவும் அவன் அவளையும் அவள் கை உணர்த்திய செயலையும் எண்ணி புரிந்தபோது அவனுக்கு சந்தோஷம். அவளை இன்னும் வாகாக படுக்க வைத்து அவளை பூவை போல தாங்கி, மெதுவாக கேட்டான் “அம்மா அப்பா வா நாம்”.

“ம் நீங்க அப்பாவே தான். எனக்கு கிடைத்தது போல் என் பிள்ளைக்கு கிடைத்த நல்ல அப்பா” அவளுக்கு இந்நிலையில் தன் தந்தையை நினைக்காமல் இருக்க முடியாதே.

“ஆமா நல்ல அப்பாவாக இருக்க வேண்டும்”

“நீங்க நல்ல மகனாவும், தம்பியாகவும், கணவனாகவும் இருக்கும் போது கண்டிப்பாக நல்ல அப்பாவாகவும் இருப்பீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு” என அவனின் கண்ணத்தை பிடித்து ஆட்டி கொண்டு இருந்தாள்.

“கண்டிப்பாக இருக்கனும், இருப்பேன் என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக! ரதிம்மா எப்போடா தெரியும் உனக்கு?”

“இல்லை நாள் தள்ளி போய் இருக்கு. இருந்தாலும் எனக்கு தெரியுது”.

“ஆஸ்பத்திரி போவோமா இப்போ?”

“இல்லைங்க வீட்டில் சொல்லாமல் போக கூடாது. பெரியவர்கள் கிட்ட சொல்லிட்டு போகலாம்” என மனைவி சொல்லவும் தான் அவனுக்கும் அது சரியென பட்டது.

இருந்தாலும் உடனே கிளம்பாமல் அவனுடைய தனிமையை சிறிது கொண்டாடி விட்டு, அவளுக்கு எந்த சிரமமும் தராமல் பார்த்து கொண்டு அவளை மறுபடியும் அழைத்து சென்று விட்டான்.

அவனும் வீட்டிற்கு சென்றவுடன் தன் குடும்பத்தில் இதை சொல்ல ஒரு வெட்கம் வந்தது. அவள் “நீங்க சொல்லிடுங்க” என முடித்து விட்டாள்.

வந்ததிலிருந்து தன் மகனின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், தன் மருமகளின் தோற்ற பொலிவும் மாமியாரான அவருக்கு விசயம் புரிந்தது. இருவரும் வந்ததிலிருந்து கண்களால் ஏதோ சொல்ல முற்படவுமே அவரே “ரதி எதுவும் விசேசமா” என கேட்டு விட்டார்.

அவர் கேட்கவும் அவள் ஆமாம் என விதமாக தலையை ஆட்டவும் தன் தலைமுறை செழிக்க குருத்து வந்த விட்ட மகிழ்ச்சியில் அன்னமாவிடம் இனிப்பை கொண்டு வர சொன்னார்.

இனிப்புகளை கொண்டு வரவும், பண்னையையும், ரகு, பத்மாவையும் அழைத்து விசயத்தை கூறி மகிழ்ந்து இனிப்பை எடுத்து பண்ணைக்கு அவரே ஊட்டியும் விட்டார்.

இந்திராம்பாளின் சந்தோசத்தை பார்த்து மற்ற ஆண்களுக்கு அப்படி ஒரு சந்தோசம். பாட்டி ஆக போகிற சந்தோசத்தில் வயதையும் கால் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் ஆடிய ஆட்டத்தில் சிரிப்பே வந்து விட்டது.

இப்போது பத்மாவிற்கு பொறாமை எதுவும் இல்லை. ஒரு ஏக்கம் மட்டுமே. அதுவும் இல்லை என்றால் அவள் மனுஷியாகவே இருக்க முடியாது.

“ஏண்டி எங்களுக்கு ஸ்வீட் கொடுத்த மருமகளுக்கு எதுவும் கொடுக்கல” என பண்ணை கேட்டவுடன் “அதாங்க மறந்துட்டேன் பாருங்க இதோ கொடுக்கிறேன்” என ரதிக்கு ஒரு வாய் கொடுத்து விட்டு உடனே தன் கையில் அணிந்து வளையல்களில் இரண்டை கழட்டி உடனே போட்டு விட்டார். உடனே பத்மாவிடமும் சென்று “நீயும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுவ. இந்தா வாங்கிக்க என அவளுக்கு இனிப்பை கொடுத்து இரண்டு வளையல்களை அவளுக்கும் அணிவித்தார்.

அவரின் இந்த செயலே அவரின் குணத்தை விளக்கியது. ஒரு தாயாக அவர் எந்த இடத்திலும் தடம் மாறாமல், குடும்ப தலைவியாக அனைத்தையும் பார்த்து, மாமியாராக இருவருக்கும் நடுநிலையாக இந்திராம்பாள் ஜெயித்து விட்டார். பாட்டியாகவும் பேரன் பேத்திக்களுக்கு பாசத்தையும் காட்டி வளர்த்து விடுவார். அதில் எவ்வித சந்தேகமே வேண்டாம்.

“டேய் கதிர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகனும் நாளைக்கு நல்ல நாள். அவளை கூட்டிட்டு நல்ல ஆஸ்பஸ்திரியா பார்த்து காட்டிட்டு வந்திடு” என கூறவும்,
“அம்மா நீங்களும் வாங்க” என்று மகன் அழைக்கவும் “சரிடா போவோம்” என்றார்.

சாந்திக்கு இப்போது எல்லாம் அப்படி ஒரு கோபம் வருகிறது. பிள்ளைகள் எதாவது தெரியாமல் தவறு செய்தால் கூட அவர்களை பிடித்து திட்டி விடுகிறார். பிள்ளைகளும் பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு நாள் தன் அப்பாவிடம் கூறிவிட்டனர்.

செல்லுவுக்கும் சாந்தியின் செயல்களை முதலில் கண்டுகொள்ளவில்லை. தன் பிள்ளைகள் கூறவும் அவரை கண்காணிக்க தொடங்கவும் சாந்தியின் கோபங்கள் புரிந்தது ஆனால் எதனால் என்று தான் தெரியவில்லை.

அவரும் சாந்தியை பிள்ளைகள் இல்லாத நேரம் பார்த்து அவளிடம் பொறுமையாக கேட்டார். “ஏன் கோபம் படுற பிள்ளைகள் கிட்ட, ஏதாவது தவறு செஞ்சால் அவுங்களுக்கு சொன்னாலே புருஞ்சுப்பாங்கடி நீ எதுக்கு இப்போ எல்லாம் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகுற” செல்லு கேட்கவும், அவளுக்கு தெரிந்தால் தானே சொல்லுவாள். அவளுக்கும் அவளுடைய நிலைகள் புரியவில்லை.

சிறு வயதிலேயே திருமணம், குழந்தைகள் பிறப்பு. முதல் குழந்தை உண்டான போது வயிற்று பிழைப்புக்காக உழைத்தாள். இரண்டாம் பிள்ளை உண்டான போது வாழ்க்கையை காப்பாற்றவே அவள் பெரும் பாடாக இருக்கவும் அவளுக்கு அந்த சந்தோச மனநிலையை அறியாமலே போனாள்.

ஆனால் இப்போது அவர்களுக்கென செல்லு இருக்கவும், அவளுக்கும் உரிய வயதில் அந்த ஹார்மோன்களின் மாற்றத்திலும் ஒரு வித கோபம், எரிச்சல் வந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

இவளுக்கே இந்த நிலைமை என்றால் செல்லுவுக்கு சொல்லவா வேண்டும். அவருக்கு என்ன தெரியும் பிள்ளை தாங்கி இருக்கும் பெண்களின் மனநிலையும், அதனால் ஏற்படும் மாற்றங்களும். அதுவே தெரியாத போது மனைவியின் சூல் கொண்ட நிலை மட்டும் புரிந்து விடுமா என்ன?..

இப்படி இருவருமே தான் தாய் தந்தை ஆகி இருப்போம் என தெரியாமலே இருந்தனர். சாந்தி அதை நினைக்கவும் இல்லை. செல்லு அதை எதிர்பார்க்கவும் இல்லை. இது தான் உண்மை நிலை.

சரி இவளை நாளை ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் பார்ப்போம் என எண்ணி கொண்டார்.

மறுநாள் கதிருக்கும் ரதிக்கும் திருநீறு பூசி விட்டு கிளம்பினார்கள். முதலில் உறுதி படுத்தி கொண்டு மற்றவர்களுக்கு சொல்லலாம் என எண்ணி.

செல்லுவும் பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு சாந்தியை அழைத்து கொண்டு சென்றார். மனைவியின் மாற்றத்திற்கு காரணத்தை அறிய.

இவர்கள் செல்லும் முன்னே அங்கு கதிர் தம்பதிகள் பெயரை கொடுத்துட்டு அமர்ந்து வர போகுது பிள்ளையை பற்றி பேசி கொண்டு இருந்தனர். இந்திராம்பாள் சற்று தள்ளி அமர்ந்திருந்தார். கதிர் ஏதோ காதில் சொல்லவும் அதற்கு ரதி ஏதோ வெட்கபட்டும் அந்த இளம் ஜோடிகள் தங்கள் உலகில் இருந்தனர்.

“என்னடா தம்பி விசேசமா? சொல்லல எங்க கிட்ட? ஓஓ உறுதி படுத்திட்டு சொல்லலாம்னு இருந்தீயா?” என இந்திராம்பாள் தன் எட்டு கட்டை குரலில் வினவவும் அந்த அமைதியாக இருந்த இடத்தில் அந்த கேள்வியை கேட்டு கதிர் தம்பதிகள் திரும்பினார்கள் என்றால் செல்லு தம்பதிகளுக்கு அப்படியும் இருக்குமோ? என பேராவல். இருக்காதா பின்ன? ஏதோ என்று இருந்தவர்களுக்கு புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்.

அவர்களின் முகபாவனையை வைத்தே அவர்கள் வந்ததே தெரியாமல் தான் என புரிந்தது. கதிரும் ரதியும் எழுந்து இவர்களிடம் வரவும் இந்திராம்பாள் சாந்தியை பிடித்து கொண்டு “நல்ல விசேசமா தான் இருக்கும். கவலைபடாதே” என்றார். அவளுக்குமே அது ஆசை தானே. தன் வயிற்றில் மறுபடியும் பிள்ளை உதித்து, அதை தாங்குவதற்கு இத்தனை சொந்தம் கிடைத்து, அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்தால் எவ்வளவு பேரானந்தம்.

செல்லுவுக்கோ சொல்ல முடியாத பரவச நிலை. அவர் இதை முற்றிலும் எதிர்பாராதது. அவருக்கு தன் மனநிலையை எண்ணி வெட்கம் கூட வந்தது. பிறகு தான் கதிரும் வந்ததை பார்த்து என்னவோ? ஏதோ என நினைத்து “நீ என்ன மாப்பிள்ளை இங்க” என்றார். அவர் தன் அக்காக்கு தான் ஏதோ மருத்துவ பரிசோதனை என நினைத்தார்.

கதிர் அவர் கேட்ட கேள்வியிலும், தன் அம்மா சொன்ன சேதியிலும், பெண்கள் மூவரும் தனியாக பேசி கொண்டு இருப்பதில் உறுதி செய்து கொண்டு “இன்னும் எத்தனை விஷயத்துக்கு தான் நீ போட்டிக்கு வரவ மாமா. சரி தாய்மாமனாச்சே அதுவும் நம்மை விட கொஞ்சம் வயது கூடவா இருந்தாலும் பரவாயில்லைனு உன்னை என் கூட சேர்த்ததுக்கு எல்லாத்திலும் போட்டியா வந்தா எப்படி? என அவன் கேட்ட விதத்தில் ஒன்னுமே புரியல செல்லுவுக்கு.

புரிந்த போது அவனை தனியாக தள்ளி கொண்டு சென்று “விடுடா மாப்பிள்ளை. மாமா மாப்பிளை உறவுனா அப்படி தான். ஆனா பாருடா மாப்பிள்ளை உனக்கு நான் எப்படி துணையா இருந்தேனோ? அதே மாதிரி உன் பையனுக்கும் என் பையன் தான் துணையா இருப்பான்” என சொல்லி பெருங்குரல் எடுத்து சிரித்தார்.

இப்படி தன் மாமனும் மாப்பிள்ளையும் தங்களுக்கு வரும் புது வரவை எண்ணி மகிழ்ந்தனர். 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *