மைவிழி மணிமொழி
மைவிழி மணிமொழி 4
தாயில்லை
தாலாட்டும் கேட்டதில்லை
அவள் மடிசாயவில்லை
அள்ளி அணைக்கவோ
கன்னம் கிள்ளவோ
யாருமில்லை
பாலைவனத்தில்
பட்ட மரமானேன்…
காதலாய்
கவிதையாய்
தாங்கிடும் தாய்மடியாய்
நீ வந்தாய்
அடையாளமில்லாத
அஞ்சலாய் நான்
அணைத்துக் கொண்டாய்
ஆருயிரே நீ…..
மைவிழி மணிமொழி
உன் மடியினில் நான்
சேய்யினி….
சின்னதாய் விழுந்த தூறல் நின்று போக…
வா நவீன் பேசிக் கொண்டே நடப்போம்….
உனக்கு ஏதேனும் வேலையிருக்கிறதா மணி…
அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றவள் அவள் கண்களைப் பார்க்க
கலங்கியிருந்தது…
மணிமொழி நெகிழ்வாய் பார்த்தாள்
“நான் வளர்ந்து பெரியவனாக ஆனாலும் அந்த காயம் ஆறவில்லை மணி”
ம்ம்ம் … அமைதியாய் நடந்து வந்தாள்
வெகுதூரம் நடந்தார்கள் பயணக்களைப்பில்லை
“மணி நான் உன் கைய பிடிச்சிக்கலாமா ” நவீன் கேட்டான்…
டக்கென்று அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்…
அவன் கை நடுங்கி அதன் அதிர்வலைகள் மணிமொழி உடம்பிலும் எதிரொலித்தது.
பாலைவனத்தில் பெய்யும் முதல் மழை துளிபோல
அவன் உள்ளத்து ஏக்கங்கள் வருடக்கணக்காய் ஏங்கி கிடந்தது அத்துனையும் அவளால் உணர முடிந்தது
அன்பான ஸ்பரிசத்தால் பாலைவனத்தில் தென்றலாய்
அவள் அன்பில் நனைய துவங்கினான்.
கைகோர்த்து இருவரும் நடந்தனர்
அலை சத்தங்கள் ஆர்ப்பரித்தன
இவர்களை பார்த்து
படகின் அருகே நிழலுக்காக ஒதுங்கி நின்றனர் மணிமொழி அமர்ந்து கொண்டாள் .
“உட்கார்டா ” மணிமொழி சொன்னாள்
அவனும் அருகே உட்கார்ந்தான்.
உன் ஆசைகள் என்னடா …எதற்காக இத்தனை வருடங்களாய் காத்து இருக்கிறாய்..?
பார்க்காத பேசாத தாயை நான் மீண்டும் பார்க்கனும் பேசனும் மணி…
எல்லாத்துக்கும் நானிருக்கேன்டா….
நாம சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் நல்ல குடும்பத்த தலைவனா இருக்கனும் அதிகபட்சம் நாம இருக்கிற தெருவுலயாவது பணக்காரன இருக்கனும்
இதெல்லாம் லட்சியமாடா
வேற ஒண்ணுமில்ல அவ்வளவு தான்.
நவீன் இங்க வாடா மணிமொழி அழைக்க
“என்ன மணிமொழி…”
என் மடில படுத்துக்கோ கொஞ்ச நேரம்
என்ன பார்க்கிற …?பரவாயில்ல படுத்துக்கோ.
படுத்துக்கொண்டான்
முதுகில் கைவிரலால் தடவி கொடுத்த மணிமொழி உடல் குலுங்குவதை உணர்ந்து நவீன் முகத்தை பார்க்க அவன் கண்களில் நீர்..
கல் போன்ற உடம்பில் பூ போன்ற மனதா யோசிக்க யோசிக்க வியப்பாய் இருந்தது
என்னாச்சி … என மணிமொழி கேட்க பதிலில்லை
ஏன்டா அழுகிறா..? அழாதடா எனக்கும் அழுகை வருது
மணிமொழி என்னை விட்டுட்டு போயிடாத நவீன் நாக்கு குழறினான்
“நான் என்னை விட்டுட்டு எங்க போயிட முடியும் சொல்லு”
இதழ்களை குவித்து அவன் நெற்றில்
ஈர முத்தம் தந்தாள்…
இதுவரை காதலிக்கவோ.. இல்லை, காதலிப்போம் என்றோ நினைத்தே பார்க்காத மணிமொழி நவீன் அழுவதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது எனக் கூறியது அவளுக்கே ஆச்சரியம் தான் அன்பு தான் எத்தனை அழகானது என நினைத்துக் கொண்டாள் ….
வெகுநேரம் பேசினார்கள் நவீனும் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புநிலைக்குத் திரும்பினான்
மணி நாளை ஏதாவது கோவிலுக்கு போகலாமா…
போகலாம் … எந்த கோவில்…
வடபழனி முருகன் கோவிலுக்கு போகலாம்…
சரி போகலாம் இந்த வாரமே நான் ஊருக்குப் போயி அம்மா அப்பாவைப் பார்த்து பேசிவிட்டு வருகிறேன்…
சரி மணி ..
மறுநாள் மாலை வடபழனி கோவிலில் இருவரும் கண்களை மூடி நின்றிருந்தார்கள்….
இருவரின் எண்ணமும் ஒன்றாக இருந்தது…
வேண்டுதல் முடிந்து வெளியே வந்தார்கள்
அம்மா பூ என்ன விலைம்மா
முழம் முப்பது ரூபாம்மா…
இரண்டு ழுழம் கொடும்மா ..வாங்கித் தலையில் வைத்துக் கொண்டாள்…
என்ன பாக்குற பூவுக்கு காசு கொடு நவீன்
சந்தோசமாக பணத்தைக் கொடுத்தான்….
மணி ..
என்ன நவீன்…
மோதிரம் உனக்காக வாங்கினேன் …
தன் பாக்கெட்டிலிருந்து சின்ன வெல்லட் டப்பாவை எடுத்துப் பிரித்தான் வைரமோதிரம்
அவள் விரலைப்பற்றி அணிவித்தான் அவர்கள் வாழ்நாளில் இத்தனை மகிழ்வாய் இருவருமே இருந்ததில்லை மனம் நிறைவாய் உணர்ந்தார்கள்
விதி சிரித்துக்கொண்டிருந்தது.
