மெய் தீண்டும் ஓவியம் நீ
5
மெய் தீண்டும் ஓவியம் நீ!!
யாருக்கும் தெரியாமல் சாணக்யனும் பாண்டியும் தினமும் ஒரு நாள் கரண்ட் மின் கம்பம் ,ஒரு நாள் கேபிள் டிவி கனெக்ஷன் என்று மாற்றி மாற்றி பிடுங்கிவிட ஆரம்பித்தனர்.. வெளியே சாணக்யன் திருவிளையாடல் செய்ய..இரவானால் அவன் சகபத்தினி அவனோடு திருவிளையாடல் செய்வாள்.. மல்லிகைப் பந்தலே கண்ணீர் விடும் அளவிற்கு இருவரும் கொஞ்சி தங்கள் ஜொள் கொண்டு மல்லிகைக்கு தண்ணீர் ஊற்றுவர்..
கடைசி இரவில் உச்சா போக எழும்பிய பாண்டி கண்ணை மூடிக்கொண்டே பின்னால் வந்தவன் மல்லிகை பந்தலை தாண்டி பாத்ரூம் செல்லும் வழியில் … பந்தல் அடியில் கேட்ட சத்தத்தில் அப்படியே பந்தலை பிடித்துக் கொண்டு நின்றான்.
ஐயோ வலிக்குது புருஷா, வேகமா பிடிக்கிறீங்க ரத்தம் வந்துட போகுது, கடிக்காதீங்க..
ஏய் உன் கன்னத்தைப் பார்த்தா அப்படியே கடிச்சு ரத்தம் குடிக்கணும் போல வெறி வருதுடி…உன் இரத்தம் வாசமா இருக்குமா?… விரலைக் கொண்டா கடிச்சு பார்த்து சொல்றேன்… மோகத்தில் என்ன பேசுகிறோமென தெரியாமல் சாணக்கியன் பேசிக்கொண்டிருக்க.. அவளும் குறையாத மோகத்தில்..
நான் உங்க உதட்டை கடிக்கட்டுமா?.. அது எப்படி டேஸ்ட்டா இருக்குன்னு பார்க்கணும்… ஐயோ மேல விழாதீங்க புருஷா? என் உடம்பெல்லாம் வலிக்குது.. எலும்பெல்லாம் உடையது…
புருஷன் வேணும்னா இதெல்லாம் தாங்குடி, எலும்பு உடைஞ்சா கட்டு போட்டுலாம் என சாந்தினியை கீழே தள்ளி மேலே படர்ந்து… இச்சு இச்சு முத்தம் பக்கத்தில் ஒருவன் நிற்பதையே தெரியாமல் அந்த இருட்டுக்குள் இருவரும் சல்லாபத்தில் சகட்டுமேனிக்கு முத்தம் கொடுக்க….
ஏற்கனவே பேய்க்குப் பயந்த பாண்டி, இவர்கள் சொன்ன ரத்தம் எலும்பு சதைகளில் ஆடி போனான்..
எங்கம்மா அப்பவே சொல்லிச்சு, ஊர் புல்லா பேய் நடமாடுது வெளிய போகாதேன்னு ,இதுக்குப் பயந்துதான் நான் கண்ண மூடிக்கிட்டு ராத்திரி நடமாடுவேன்..இப்போ பேய்கள் கூட்டமா இருக்கிற இடத்துல வந்து மாட்டிக்கிட்டேன் போலையே? யாராவது என்ன காப்பாற்றிக் கொண்டு வீட்ல விடுங்கடா? அய்யய்யோ!! கைகாலெல்லாம் வெடவெடன்னு நடுங்குதே? பேய்கள் கூட ரொமான்ஸ் பண்ணும்ன்னு இப்ப தான்டா கேள்விப்படுறேன்…
மச்சான் மச்சான் !!எங்கடா போய் தொலைஞ்ச.? வாடா உன் நண்பன் இரத்தம் கக்கி சாக போறேன் போலடா… டேய் சாணக்யா…அய்யய்யோ!! எங்க போனான்?…அடியேய் குட்டி குஷ்பு ,குட்டி குஷ்பு என இங்கிருந்து கத்த ஆரம்பித்தான்… வந்து கூட்டிட்டு போடி பயமா இருக்கு … இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா என்னோட ரத்தத்தை இந்தப் பேய்கள் குடிச்சு பசி ஆறிடும்.. வாடி!! அவன் சத்தம் சிற்பாவுக்கு கேட்டதோ?என்னவோ? தண்ணீர் குடிக்க வந்தவள்.. இவன் அலறல் சத்தம் கேட்டு பின்னால் வர….
சாணக்யன் சாந்தினியும் பந்தலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர் சத்தம் வராமல்….
டேய் லொடுக் பாண்டி !!என்னடா உலகமகா அதிசயமா இருக்கு ?இருட்டுக்குள்ள தனியா நிக்கிற
வந்துட்டியா, என்ன பெத்த ஆத்தா!! என்ன கொண்டு போய் உள்ள விடு இங்க கிரக நிலை சரியில்லை..
என்ன பாண்டி பேய் பார்த்த மாதிரி பயந்து போய் நிற்கிற..
அதுதான் தெரியுதுல்ல.. பின்ன எதுக்குடி அதையே கேட்டுகிட்டு இருக்க.. கையை கொடுடி ..
டேய் லொடுக்கு பாண்டி, நம்மள தேடி பேய் வந்திருக்கு… வீடு தேடி வந்தவங்களை போங்கன்னு விரட்டலாமா? கூட்டிட்டு வா நாலு பிஸ்கட்டும் கொஞ்சம் பூஸ்டும் கொடுத்து அனுப்பலாம்..
என்னடி விளையாடுறியா? அதுகளுக்கு டீயும் பிஸ்கட்டும் வேண்டாமாம் ,ரத்தமும் சதையும் வேணுமாம் கொடுக்கிறியா?…
நீ சும்மா வெட்டியா தண்டமாதான இருக்க உன்ன பேயிக்கு படையல் போட்டிடுறேன்…
ஆனாலும் உனக்கு இவ்வளவு ஆகக்கூடாதுடி கூட்டிட்டு போடி, பயத்துல கண்ணு தெரியலை..
ம்ம் ஓகே கூட்டிட்டு போனா? நான் கேட்டதை வாங்கித் தரணும்.. வாங்கி தருவியா ?என சிற்பா கமிஷன் பேச
சனியனே!! ஏற்கனவே ஒரு பைசா பாக்கெட்ல வைக்க விட மாட்டியே..பின்ன என்ன?…
பச் அது வேற ,இது வேற, வாங்கி தருவீயா?
வாங்கி தரேன்டி கூட்டிட்டு போ என்றான் அவள் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொண்டு..
சிற்பாவோ நெற்றியில் வைக்கும் பொட்டுலிருந்து காலில் போடும் செருப்பு வரை பட்டியல் போட்டு, இதையெல்லாம் வாங்கித் தந்தா உன்னைக் கொண்டு போய் உள்ள விடுறேன்.. இல்லன்னு வை நானே..மிஸ்டர் பேய் சார் வந்து இவன் கழுத்துல ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு ஊறிஞ்சி குடிங்கன்னு சொல்லி புடிச்சுக் கொடுத்துடுவேன்..
நான் பேய்க்கு பயப்படுவேன்னு என்ன வச்சு செய்றல்லடி.. என்னைக்காவது மாட்டுவடி? இதே மாதிரி செய்றேன் குட்டி குஷ்பு..
ரொம்ப திட்டுனா இங்கேயே நிக்க வேண்டியதுதான் பாண்டி யோசிச்சுக்க?
வாயே திறக்கலடி, கூட்டிட்டு போய் கட்டில்ல படுக்க மட்டும் வச்சிடு.. உனக்கு புண்ணியமா போகும் என அவள் கையை பிடித்துக் கொண்டே கட்டிலில் படுத்து போர்வையை முகம் வரை மூடிக் கொண்டவன்.. அதன் பிறகு, நகரவே இல்லை …
அடுத்த நாள் காலை கை கால் எல்லாம் பயத்தில் நடுங்கி காய்ச்சலில் கிடந்தான் பாண்டி.. சிவகாமி அவன் நெற்றிக்கு பத்து போட்டுக் கொண்டிருக்க சிற்பா அவன் காலிற்கு தைலம் தடவி கொண்டிருக்க..
குட்டி குஷ்பு சூடு பறக்க தேய்டி…
அத்தை அந்த தோசை கல்ல எடுத்துட்டு வாங்க சூடா இருக்கும் …
சரி சரி கோவப்படாத உள்ளங்கால்ல தேய் என அவள் மடியில கால்வைக்க .. பாவம் பார்த்து தடவி விட்டாள்…
சாணக்யன் கடைக்கு போய்விட்டு, ஒற்றைக் கையில் மல்லிகை பூவும், இன்னொரு கையில் காய்கறிப் பையும் கொண்டு வந்தவன், உள்ளே எல்லோரும் பாண்டியிடம் கவனமாயிருக்க.. தனது காதலியை கண்ணால் பக்கத்தில் அழைத்தவன்.. அவள் கை மறைவில் தான் கொண்டு வந்த மல்லிகைப்பூவை கொடுக்க.. சாந்தினி வெட்கப்பட்டுக்கொண்டே வாங்கிக் கொண்டாள் ..
யாருக்கும் தெரியாமல் சிறிய குரலில் “இப்போ கொஞ்சம் வச்சிக்கோ.. நைட்டு அங்க வரும்போது நிறைய வச்சுக்கோ.. நீ பூ வெச்சா என் மனசு புல்லா உன் கிட்டயே தான் சுத்தி வரும்” என்று அவள் பின்புறத்தில் தன் கையை வைத்து தட்ட..(கடைசில அவ உன் காதுல வச்சிறாம பூ..வூ)
“போ புருஷா” என்று கிளிக்கி சிரித்துக்கொண்டு ஓட சாணக்யன் தலையை கோதிக்கொண்டே வந்தவன் கட்டிலில் நடுநடுங்கி கிடந்த பாண்டியை பார்த்து
“என்னடா ஆச்சி குளிர்காய்ச்சல் வந்துடுச்சா? ஒழுங்கா குளிக்கலைனாலும் காய்ச்சல் தான் வரும் ஒரு வாரமா குளிக்கல.. தெருவே இந்த வீட்டு பக்கம் வர அலறுவது, அவ்வளவு நாத்தம்.. அடிக்கடி தயவு செஞ்சி பல் தேய்ச்சி குளி உனக்கு நல்லதுடா”..
“இந்த குளிர்ல குளிச்சி ஜன்னி வந்து சாகுறதவிட.. குளிக்காம குளிர் காய்ச்சல்லையே போகட்டும்”..
“அதுசரி போற உயிர் எதுல போனா என்ன?”
“டேய் வெறும் காய்ச்சல்தான் அதுக்குள்ள நீ பாடை தாரை தப்பட்டைக்கெல்லாம் ஆர்டர் கொடுத்திடுவ போல”..(குழி விட்டுட்ட)
“அப்ப நல்லாதான இருக்க எழும்பி வா, இன்னைக்கு நம்ம தெருவுக்கு நந்தினி அப்பா கட்சி ஆட்கள் மீட்டிங் நடத்த வருதுங்க..வர்றவன் எவன் கண்ணிலாவது இவ பட கூடாது”..
“அதுக்கு நான் என்னடா பண்ணணும் அவளை எனக்கு பின்னாடி ஒளிச்சிவைக்கணுமா??”..
“அடேய் கேணை மாதிரி பேசாத… பொட்ட பிள்ளைங்க இருக்குன்னு பார்க்க மாட்டேன் அசிங்கமா பேசிருவேன்.. அவன்களை இங்க மீட்டிங் வர விடக் கூடாது”..
“ஹிஹி பேசாம அவன்க எல்லாரையும் ஏதாவது வீட்ல அடச்சி வச்சி ஷகிலா படம் பார்க்க வைப்போமா?” என்று தன் காலை சிற்பா தோளில் வைக்க.. அவள் கிள்ளியதில் அலறி காலை நகட்டி சாணக்யனைப் பார்க்க..
“தூ மூதேவி!! புத்தி போகுது பாரு இதனாலதான்டா ஒரு பொண்ணு உன்ன திரும்பி பார்க்க மாட்டைக்கிது.. இன்னும் ஷகிலாவிலையே சுத்திகிட்டிருக்க”..
“ஹிஹி யார் வந்தாலும் ஷகிலா அதுக்கு வராதுடா” என்று கண்ணடிக்க..
சிவகாமி தலையிலடிக்க.. சிற்பா “சாவுகிராக்கி திருந்த மாட்டான் “என்று எழும்பி கையிலிருந்த மருந்தை மொத்தமாக அவன் காலில் கொட்டிவிட்டு உள்ளே செல்ல..
“டேய் பாப்பா முன்னாடி என்ன கருமத்தடா பேசுற.. வா முதல்ல போயி நம்ம ஊருக்கு கார் வர்ற பாலத்தில தண்ணீயை திறந்து விடுவோம் .. ஏற்கனவே நிரம்பியிருக்கு சோ ஒரு கார் உள்ள வர முடியாது.. அவன்க அந்த தண்ணீரை நீந்தி கண்டிப்பா உள்ள வரமாட்டான்க.. மீட்டிங் கேன்சலாகிடும்”..
“போடா எனக்கு ஏற்கனவே காய்ச்சல் நான் வரலை குட்டி குஷ்புவை கூட்டிட்டு போ” என்று திரும்பி படுக்க உள்ளேயிருந்து ஒரு டம்ளர் அவன் மண்டையை பதம் பார்க்க..
“ஆகமொத்தத்தில அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என் உயிர் வேணும் அதான பக்கிகளா.. டேய் சாணக்யா ஏதாவது பேசு”..என்றான் சம்மந்தமே இல்லாமல்..
சாணக்யன் இவன் என்ன லூசா?? என்பது போல் பார்க்க..
“பேசுடா அம்மா அப்பா அனைத்தும் வந்துவிட்டது இப்படி ஏதாவது பேசு” என்று பாண்டி கேட்க..
“நான் அடிக்கிற அடியில உனக்குதான் உன் அம்மா அப்பா அனைத்தும் மறக்க போவுது பாரு மச்சி” என்று சாணக்யன் அவனை அடிக்க போக..
போர்வையிலிருந்து மெதுவாக தலையை எட்டி பார்த்த பாண்டி “அம்மா நான் சொன்னேல்ல அந்த பேயோட சவுண்ட் கூட நம்ம சாணக்யன் சவுண்ட் மாதிரிதான் கேட்டுதுன்னு’.. என்று சிவகாமியிடம் அவன் புகார் வாசிக்க..
சாணக்யன் “என்னடா பேய் குரல் புரியிற மாதிரி சொல்லி தொலை” என்றதும்..
” டேய் நேத்து ராத்திரி நான் உச்சா போக பின்பக்கம் வந்தேன்.. அப்போ மல்லிகைப் பந்தலுக்கு அடியிலிருந்து யாரோ முனங்கிற சவுண்டு வந்துடுச்சுடா.. அதோட மட்டுமில்லாம வாடி வாடி நீ வரலன்னா விடமாட்டேன் அப்படியெல்லாம் ஒரு ஆம்பள பேய் கத்த, பொம்பளை பேயி மெதுவாடா அழுத்தாதடா செத்துடுவேன் அப்படின்னு அதுபாட்டுக்கு கத்த ஓடி வந்துட்டேன்.. அதுக்கு பிறகு அங்கு நிற்க நான் என்ன பேய் கூட்ட தலைவனா?” என்று சொல்ல ..(எந்த பேய்டா இப்படி கத்தும் பேய் என்ன பஸ்ட் நைட்டா கொண்டாடுது)
சாணக்யன் எட்டி சாந்தினியை பார்த்தான், அவள் சிரித்துக்கொண்டே குனிய .. அவனுக்கே வெட்கமாக போய்விட்டது..
“ஆமாடா பாண்டி நான் கூட பார்தேன்டா.. உனக்கு குரல் மட்டும் தானே கேட்டுச்சு.. எனக்கு உருவம்கூட தெரிஞ்சுச்சி படு டேஞ்சரான பேய் இனிமே நீ அந்தப் பக்கம் போகாத”..(ஆமா போகாத நீ சின்ன பையன் பார்க்ககூடாத பாம்பு ஏதையும் பார்த்திருவ)
“அப்போ உச்சா வந்தா என்னடா செய்றது?” என்று அவன் பாவமாக சாணக்யனிடம் கேட்க.. (எல்லாரும் எப்படி போவாங்களோ அப்படிதான் போகணும் மூதேவி)
“அதுக்கா வழியில்லை ..ஒரு பாட்டில் கையோட வச்சுக்க” என்று சிரிக்க
“சிரிக்காதடா !! நான் கூட அதை தான் பண்ணனும்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்?.. இந்த ஐடியா தான் நல்ல ஐடியா.. ஒரு நாலு காலி பாட்டிலை எடுத்து பக்கத்துல வச்சிக்கிடணும்,குட்டி குஷ்பு ஜூஸ் குடிச்ச பாட்டில் எல்லாத்தையும் சேர்த்து வைடி” என்று சொல்லிவிட்டு போர்வையை முகத்திற்கு மூடி படுக்க போக.. (நன்னாரி பய நாத்தம் பிடிச்சவன்)
சாணக்யன் அவன் போர்வையை முகத்திலிருந்து நீக்கி “வேலைய முடிச்சுட்டு வந்து படுத்து ரெஸ்ட் எடு” என்று அவனை குண்டுகட்டாக தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நீரைத் திறந்துவிட பாலம் நோக்கி சென்றுவிட்டார்கள்..
அங்கேயே சிறிது நேரம் நோட்டம் விட்டு ஆள் அரவம் சென்றபிறகு பாலத்தில் நீர் நிரம்பும் மட்டத்தில் வைத்திருந்தரி மண் மூட்டைகள் ஒவ்வொன்றாக இருவரும் வேகமாக அகற்றி தண்ணீரில் பாலம் மூடுமாறு செய்தவர்கள் போனதும் தெரியாமல் வந்ததும் தெரியாமல் வேலையை முடித்துவிட்டு ஓடி வந்து விட்டனர்..
ஊர் மக்களுக்கு இந்த விஷயம் பரப்பப்பட ஆளாளுக்கு ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்துவிட்டனர்..” ஒருநாள் கேபிள் வரமாட்டேங்குது, ஒருநாள் கரண்ட் கம்பம் அத்து விழுது , இப்போது நீரால பாலம் உடைஞ்சி போச்சி நம் ஊருக்கு தெய்வக் குற்றம் ஆகி விட்டது எனவே சீக்கிரமாக எல்லா சாதியினரும் சேர்ந்து ஒரு திருவிழா நடத்த வேண்டும்…அப்படியென்றால் தான் சாமி கோபத்திற்கு ஆளாகாமல்.. நம் ஊரை காக்க முடியும்” என்று அவர்களாக ஒரு முடிவு எடுத்து பஞ்சாயத்து வைக்க.. அனைவரும் இதற்கு ஒருமனதாக ஒத்துக்கொள்ள.. இன்னும் ஐந்து நாட்களில் திருவிழா என்று முடிவெடுக்கப்பட்டது..
பக்கத்து வீட்டு கனகா எதர்ச்சியாக திருவிழா பற்றி பேச வீட்டிற்கு வர .. சிவகாமி வாசலிலிருந்து இப்போதெல்லாம் யாரையும் அனுப்பிவிடுவார் ஏனென்றால் உள்ளே வந்து இந்த பெண் யார்? என்ன என்று குடைவார்கள் என்று நினைக்க..
சிவகாமி அசந்த நேரமாக உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள் கனகா.. சிவகாமி சிவகாமி என்று குரல் கொடுக்க சிவகாமி பதறியடித்து ஓடிவந்தார்
” எப்படி உள்ள வந்தா தெரியலையே?.. பூனை கண்ணை வச்சி யாரு இருக்கான்னு பார்த்து ஊருக்கே தகவல் சொல்லிடுவாளா டேப்ரிக்கார்டர்” என்று பதறிக் கொண்டே ஓடிவந்து சாந்தினி அறையை மறைத்தார் போல் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார் .
“என்ன திடீர்னு வந்திருக்க.. எதுவும் விஷயமா சாயங்காலம் வர்றியா.. இப்போ நாங்க எல்லாரும் வெளியே போக போறோம்” என்று அவளை விரட்டும் சாக்கில் சொல்ல..
“எங்க வெளியே போக போற அதான் பாலம் உடைஞ்சி கிடைக்கே எப்படி போக முடியும் “என்று கேட்க..
அறையிலிருந்த பாண்டி உள்ளிருந்தே “ஏரோபிளேன் புடிச்சு போவோம் போவியா” என்று கத்த..
” உன் மகனுக்கு இந்த வாய் மட்டும் இல்லன்னா நாய்க கவ்விட்டு போய் நடுத்தெருவில போட்டிடும் கொஞ்சமாவது பெரியவங்கன்னு மரியாதை இருக்குதா.. எப்பதான் திருந்த போறான் “என்று கேட்க..
” நான் என்ன நாயகன் கமலா.. அவனை திருந்த சொல்லு நான் திருந்திரேன்னு டயலாகெல்லாம் விடுறதுக்கு.. அதெல்லாம் நாங்க ஒழுங்கா தான் இருக்கோம்.. உன் வேலையை பாத்துக்கிட்டு போ அடுத்த வீட்டில எவனுக்கு என்னன்னு பார்க்க வந்துட்டா ஆட்டிகிட்டு”.. என்று சுத்தமா மரியாதை கொடுக்காமல் பேச..
அப்படியும் கனகா போகாமல் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டேயிருந்தார் வீடு முழுவதும் மாறியிருந்தது.. சாந்தினி வந்த காரணத்தினால் ஒவ்வொன்றாக அவளுக்காக பார்த்து பார்த்து சாணக்யன் செய்தான்.. வசதியாக வாழ்ந்த பெண் தன் வீட்டில் கஷ்டப்படக்கூடாது மேலும் தன் காதலி துன்பப்பட்டால் தன்னால் தாங்க முடியாது என்று நினைத்து அவளுக்காக அவள் கேட்காமலேயே ஏசி பிரிட்ஜ் என்று அத்தியாவசியத் தேவைகளை செய்து வைத்திருக்க..
அது சாதாரணமான கனகாவுக்கு கண்ணை உறுத்த ஏதோ இந்த வீட்டில் வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதற்காக
சிவகாமி எனக்கு ஒரு கிளாஸ் காபி கொண்டு வாயேன் என்றதும்..
அவரும் ஏற்கனவே போட்டு வைத்திருந்த காபியை அவசரமாக கொண்டு வந்து அவள் கையில் கொடுக்க..
“குடிக்க காபி மட்டும்தானா கடிக்க எதுவும் இல்லையா” என்று மீண்டும் கனகா அவளை உள்ளே அனுப்ப பார்க்க
உள்ளேயிருந்த பாண்டி வேகமாக தலையை வெளியே நீட்டி “எங்க வீட்டில கடிக்க நாய் தான் இருக்கு திறந்து விடட்டுமா கடிச்சி 1 கிலோ சதையை எடுத்திடும்” என்று சொல்ல..
நாய் என்று சொன்னதும் பயந்து காபியை கீழே போட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டார்
சிவகாமி பாண்டியிடம் “ஏன்டா இப்படி பெரியவங்களுக்கு மரியாதை இல்லாம பேசுற”..
” நீ உட்கார்ந்து பேசியிருந்தா அவ எழும்பி போய் இருப்பான்னா நினைக்கிற.. இங்கேயே தேச்சி சோபாவில ஓட்ட விழ வச்சிருப்பா.. இப்படிப் பேசினாதான் தெறிச்சி ஓடுவா.. அடுத்த வீட்டில என்ன நடக்குதுன்னு பார்க்கிறாளே.. அவ புருஷன் வேலைக்காரி கூட பின் பக்கம் ஒதுங்குறான்.. . அத முதல்ல பார்க்க சொல்லு.. வந்துட்டா பெருசா பேச”.. என்று முனங்கி கொண்டு வெளியே சென்றான்.. (இவள் இங்க வேலை பார்த்தா அவ புருஷன் அங்கதான வேலை பார்க்க முடியும்)
இப்படித்தான் பலர் வாழ்க்கையும் இருக்கிறது தன் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது கிடையாது..தன் கண்ணில் உள்ள தூசியை விட்டுவிட்டு.. பிறரிடமிருக்கும் தூசியை துடைத்து விடுகிறேன் என்று பாவ்லா காட்டுவது.. அவங்கவங்க வேலையை பார்த்தாலே யோதும் இந்த சமூகம் முன்னேற.. பாதி தவறுகள் குறையும்..
இரவு சாணக்யன் மடியில் படுத்துகிடந்த சாந்தினி..”புருஷா நான் யாரா இருந்தாலும் என்ன ஏத்துக்குவீயா?”..
“நீ எம்பி பொண்ணுன்னு தெரிஞ்சிதானே லவ் பண்ணினேன்.. அதெல்லாம் எப்படியாவது உன்ன கட்டிக்குவேன்” என்று குனிந்து அவள் உதடு கடிக்க..
“புருஷா உனக்கு இந்த உலகத்தில பிடிக்காதது யாரு?”
“இதில யோசிக்க எதுவுமே இல்லை.. எங்க அப்பாவை ஏமாற்றி என் தாய் தகப்பன் சாவுக்கு காரணமானவன்” என்று கோவ தணல் மினுங்க கூற..
“ஓ.. அவர மட்டும்தான் பிடிக்காதா?”..
“அந்த நாய் சம்மந்தப்பட்ட யாரையும் பிடிக்காது ஏன் கேட்கிற நந்தினி?”..
“ஒன்னும் இல்லை புருஷா” என்றவள்.. அவனுக்கு தெரியாமல் தன் கண்ணீரைத் துடைத்தாள்..
யாரிவள்?
