மெய் தீண்டும் ஓவியம் நீ
6
மெய் தீண்டும் ஓவியம் நீ!!
தாலி இல்லாமல் மணமேடை ஏறாமல் இருவரும் கணவன் மனைவியாக வலம்வர ஆரம்பித்தனர்… யார் கண்ணும் உறுத்தாமல், சாந்தினி அவனுக்கு தேவையானதை செய்ய ஆரம்பித்தாள்.. தூணி துவைக்கும் போது தன் தூணிகளோடு போட்டு துவைக்க வித்தியாசமாக பார்த்த பாண்டியை…சிற்பா நிறுத்தி,
ஏன்டா லொடுக்கு அப்படி பார்க்கிற?
இல்லடி அந்த பொண்ணு பண்றது வித்யாசமா இல்லை…
ஏதுடா?..
இல்லை,மச்சான் துணியை துவைக்குது,அவனுக்கு சாப்பாடு வைக்கிது… கட்டில்ல போர்வை விரிச்சி வைக்கிறது, காலையில காஃபி கொடுத்து எழுப்பி விடுது கூடவே சுத்துது…நானும் பார்த்துட்டே இருக்கேன் , என் கண்ணுல தப்பு தப்பா விழுது..
உன் நொள்ள கண்ணுல ஷகிலா தவிர எதுதான் சரியா விழுந்திருக்கு பன்னி?.. பெரிய டுபுக்கு மாதிரி பேசுற? நான் நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து,உன் துணியை நான்தான் துவைக்கிறேன்.. எருமை, அதுகூட பரவாயில்லை, உனக்கு முதுகு கூட தேய்ச்சி விட்டிருக்கேன் அப்ப இந்த கண்ணு எங்க போச்சி?…
ப்ச் இவ ஒன்னு, அது வேறடி ,
நீ மூடு! எல்லாம் ஒன்னுதான்..பாவம் பாபி ,பணக்கார பொண்ணா இருந்தா கூட, நம்ம குடும்ப பொண்ணு மாதிரி மாறி பொறுப்பா செய்றாங்க.. உனக்கு அது முட்டை கண்ண உறுத்துது போல? போ போயி ,எனக்கு திருவிழாவுக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை, கலர்ல தாவணி எடுத்துட்டு வா… அப்படியே ஜாக்கெட் தைக்க கொடுத்தேன் அளவு சரியா பார்த்து வாங்கிட்டு வா…(சாமி ஆட போறாளா?)
ஹீக்கும் !!முதல்ல சொல்லும் போது கேட்காத? பிறகு அண்ணனும் தங்கச்சியும் முட்ட போறீங்க? எனக்கு என்ன வந்தது?..என் வாய இனி இந்த வீட்டுல சாப்பிட மட்டும் தான் யூஸ் பண்ண போறேன்..
ரொம்ப நல்லது பாண்டி… இத அப்படியே மெயிண்டெய்ன் பண்ணு…
ம்ம் போறேன்..ஆமா போனவாட்டி ஜாக்கெட் லூசா தைக்க சொன்னேன் சொன்னீயா?…
இல்லடா மறந்துட்டேன்…
நீ எதத்தான் நியாபகம் வச்சிருக்க… லூசா போடுடி ஏற்கனவே குண்டு பூசணி.. அத வேற டைட்டா போட்டுக்கிட்டு …
ஏன் நான் அப்படி போட கூடாதா?…
இங்க பாரு சிற்பா, இந்த மாதிரி விஷயத்துல, என்ன எதிர்த்து பேசாத, அடிச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பேன்… வாங்கி கொண்டு வந்து தர்றேன் இரண்டு தையல் பிரிச்சி போடு….அப்படியே போட்ட கையில கிழிச்சி தந்திடுவேன் ஜாக்கிரதை…
போ போ சொன்னபடி செய்றேன்..இரண்டு தடவை பட்டது தெரியும்.. போன வருடம் கோவில் திருவிழாவுக்கு பின்னால் இறக்கி முடிச்சி வைத்து சட்டை தைத்திருக்க,பாண்டி கண்கள் சிவக்க கத்தி சண்டையிட்டு மாற்ற வைத்து, கிழித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தான்…
இவள் அழுது கொண்டு சாணக்யனிடம் சொல்ல ,அவன் சொன்னா சரியாதான் இருக்கும் ,அவன் சொல்லறபடி செய்ன்னு சொல்லிட்டு போய்விட்டான்…
நீ எதுக்கு என்ன மட்டுமே இதுல குறை கண்டுபிடிக்கிற?..என்ன விட குண்டு பொண்ணுங்க எல்லாம் மாடலா போடதான செய்யுது..
எவளையும் பத்தி எனக்கு கவலை கிடையாது, போடட்டும் போடாம அவுத்து போட்டுட்டு போகட்டும்…ஆனா நீ இப்படிதான் போடணும்…
அதான் ஏன்?…
பதில் சொல்ல முடியாது போடி.. போய் வேலையை பாரு.. என கிளம்பி விட்டான்…
ச்சை இவன் தொல்லை எப்பதான் தீருமோ?… சரியான பட்டிக்காட்டான் என திட்டியபடி திருவிழாவுக்கு பல கனவுகள் காண ஆரம்பித்தாள்…
ஊரே திருவிழாவிற்கு தயாராகியது.. ஐந்து நாட்கள் திருவிழா… ஐந்து நாட்களும் வீட்டில் உள்ள நோய்வாய்ப்பட்டவர்கள் , முதியவர்களை மாதவிலக்கு உள்ளவர்களைத் தவிர, அனைவருக்கும் கோவிலிலேயே தங்குவதற்கு குடில் அமைத்துக் கொடுத்துவிடுவார்கள்.. அங்கேயே தங்கி பொங்கி சாப்பிட்டு 5 நாட்களும் விரதமிருந்து, சாமியின் கோபத்தை தீர்க்க வேண்டும்.. இதுதான் இந்த திருவிழாவின் நோக்கம்.. அப்படியென்றால்தான் சாமி மனமிரங்கி ஊருக்கு வரும் சாபக்கேட்டை நீக்குவார் என்பது ஐதீகம்..
பல வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி திருவிழாக்கள் நடைபெற்றது.. அதன் பிறகு வழி வழியாக அது மறைந்து போய் விட, இப்பொழுது தொடர்ச்சியாக ஊருக்கு வரும் நன்மைகள் அதாவது கரண்டு ,தண்ணீர் .பாலம் என்று ஒவ்வொன்றாக சிக்கலாகுவதால் இந்த திருவிழாவை நடத்த முடிவு செய்திருந்தனர்..( இந்த இரண்டு திருட்டு நாய்கள, வெட்டி முக்கினா, எல்லா பிரச்சனையும் தீரும்.. அதுக்கு ஏன்டா கடவுளை தொல்லை பண்றீங்க?)
பாண்டி வீட்டிலேயும் எல்லாரும் தடபுடலாக கிளம்பினார்கள்.. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை? வீட்டில் தனியாக சாந்தினியை மட்டும் எப்படி வைத்து விட்டுப் போவது.. அவளை தங்களோடு கூட்டிக் கொண்டு செல்ல முடியாது.. அது
ஆபத்தாக தான் முடியும் என்று அனைவரும் யோசிக்க..(வச்சிட்டு போனாதான் ஆப்பா முடியும்)
சாந்தினியையும் சிற்பாவையும் வைத்து விட்டு சென்றால் இருவரும் பெண் பிள்ளைகள், இது தெரிந்து எந்த காவாலி பசங்களாவது உள்ளே புகுந்து விடக் கூடாது.. அது வேறு பயமாயிருக்க சிவகாமி வேறு சாமிக்கு நேர்த்திக்கடன் வைத்திருக்க அவராலும் இருக்கமுடியாது..
என்ன செய்ய? என்று அனைவரும் திகைக்க, பாண்டிதான் நான் வேண்டுமானால் சிஸ்டருக்கு துணைக்கு இருக்கிறேன் என்று கூற
சாந்தினி பக்கத்திலிருந்த சாணக்யனை தன் நுனி விரல் கொண்டு தீண்டியவள் யாருக்கும் கேட்காத குரலில் “புருஷா உன்ன பார்க்காம அஞ்சு நாள் என்னால இருக்க முடியாது என்கூட நீ எப்படியாவது இரேன் இவுங்கள சமாளியேன்” என்று ஏங்கும் குரலில் கேட்க..
“எனக்கும் ஆசைதான்டி யாரும் இல்லாம அஞ்சு நாளும் உன் மடியிலேயே படுத்து கொஞ்ச.. இப்போ ஆளாப் பறந்து போய்க் கேட்டா ?என்ன சந்தேகமா எல்லாரும் பார்ப்பாங்க.. இந்த பாண்டி பார்வை வேற ஒரு மார்க்கமா இருக்கு ,ராத்திரி என் பக்கம் படுக்குற.. கொஞ்ச நேரத்தில எங்கடா போற? இந்த பொண்ணு ஏன் உன்ன இப்படி பார்க்குது? மாட்டிக்காத சாணக்யான்னு பல தடவை சந்தேகமா கேட்டுட்டான் ..நான்தான் எதையோ சொல்லி இப்போதைக்கு சமாளிச்சி வச்சிருக்கேன்… இப்போ கேட்டா உடனே கிளியர் பண்ணிடுவான்.. அதனால சந்தேகமே வராம இத நமக்கு சாதகமா மாத்துறேன்டி ஓகேவா” என்று கேட்க சரி என்று ஆர்வமாக தலையாட்டினாள் சாந்தினி..
“ஆமாடா நீயே இருந்து பார்த்துக்க பாண்டி….ஆனா ராத்திரி பின்பக்கம் மட்டும் போகாத.. இப்படிதான் போன வாரம் கிழக்கு தெரு கோபாலு தாத்தா பின்னாடி உச்சா அடிக்க போக ..பேயி அவர அடிக்க கடைசியா மனுஷன் மூக்கில ரத்தம் வந்து ஓரேயடியா போயிட்டாரு.. ம்ம் என்னத்த சொல்ல? இப்பெல்லாம் பேயிக்கு கிழவன் ரத்தத்தை விட இளம் ரத்தம்தான் பிடிச்சிருக்காம் ஒரு ஆராய்ச்சி சொல்லுது.. நமக்கேன் வம்பு?”.. என்று சிரிக்காமல் சொல்ல..(பேய வச்சி ஆராய்ச்சியா?உச்சாகூட போக விட மாட்டைக்கிறான்க)
“டேய் அந்த கோவாலு பேதி வந்துதானடா செத்தாரு, ஏன்டா புதுசுபுதுசா பீதியை கிளப்புற??…அதுவும் ஆம்பள உச்சா போற இடத்துல பொம்பள பேயிக்கு என்னடா வேலை?
ஹாங் !!அதுவும் அதுக்கு ஒதுங்கியிருக்கும் யாரு கண்டா?
அப்ப பேய்தானடா பயந்திருக்கும் தாத்தா___கண்டு
டேய் சாவுகிராக்கி நடுவீட்டில, அடிவாங்கி சாகாத ..இது உண்மைதான் வேணும்னா சிற்பாகிட்ட கேளு..
ஏட்டி சிற்பா ?உங்க அண்ணன இப்ப நம்ப முடியலை, இது உண்மையா?..
ஆமா பாண்டி மேல்வீட்டு மருக்கொழுந்து பண்ணையார் கூட ,போன வாரம் பேய் அடிச்சிதான் செத்து போனார், ஏதோ அவர் செத்து போன வப்பாட்டி கோவம் வந்து பேயா மாறி அடிச்சதா கேள்வி?
எதுக்கு கோவம் குட்டி?
ஹாங் பின்ன வராதா?அது தங்கச்சியதான இப்போ வச்சிருக்கார்… இவ புருஷன பண்ணையார் பொண்டாட்டி வச்சிருக்கு கோவம் வரும்ல…
தூஊஊஊ நாறக் குடும்பம், ஆமா இந்த கதையெல்லாம் எப்படி உனக்கு தெரியுது?.
ஹிஹி பண்ணையார் மக என் கிளாஸ் மேட்தான்…
இருடி, இனி வீட்ல உன்ன அடச்சி போடுறேன் ..காலேஜுக்கு போன்னு அனுப்பி விட்டா.. எவன் எவள வச்சிருந்தான்னு புள்ளி விவரமா சொல்ற..
நீ கேட்ட நான் சொன்னேன்.. இதுல என்ன குற்றம் சொல்லாத? நீ அனுப்பலைன்னா என்ன? எங்க அண்ணன் அனுப்புவார்…
டேய் மச்சான் என்ன தாண்டி அவள அனுப்புவியா?…
நீ என்ன சொல்றீயோ? அதுதான் மாப்பிள்ள, வேணடாம்னா விடு,நாளைக்கே நிப்பாட்டிடலாம்..
அண்ணா…
ஸ்ஸ்ஸ் அவன் சொன்னா உன் நல்லதுக்காதான் இருக்கும்…
போண்ணா!! இதுல மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணவே மாட்டேக்கிற..
அது அப்படிதான், சரி பாண்டி இவளுக்கு துணைக்கு யார் இருக்கா?…என்னால இருக்க முடியாது..நீயே பேய விரட்டி விட்டுட்டு காவல் காத்துட்டு இரு…
சும்மா பயம்காட்டாத மச்சான்..
ஏன் பயம்காட்ட போறேன்…நான் என்னவோ? இந்த நந்தினிகூட தங்க, உன்ன விரட்ட பொய் கதை சொல்ற மாதிரி சொல்ற.. நேத்துதான் கோபால் தாத்தா என் கனவுல வந்து சொன்னாரு.. அடுத்து அந்த பேயி ஆறடி உயரத்தில சுருட்டமுடியுள்ள பான்னு பேர் தொடங்கிற ஆளதான் குறி வச்சிருக்காம்.. யாராயிருக்கும் பாண்டி” .. (உன் காதலுக்கு நண்பனை காவு வாங்க பார்க்கிறியே)
பாண்டி வேகமாக ஓடி போய் கண்ணாடியில் பார்க்க.. தன் முடி முழுவதும் சுருள் முடி ,ஆறடி உயரம் பாவென்று தொடங்கும் பெயர் நாமேதான்? என்று பீதியடைந்தவன்..
“அப்பாடேய்!! எனக்கு கோவாலு படுத்து கிடக்கிற இடத்து பக்கத்தில இடம் வேண்டாம் சாமி, ஆள விடுங்க.. நான் கோவில்லையே படுத்து சுண்டல் சாப்பிட்டுக்கிறேன்.. கொஞ்சம் அசந்தா பேய்கூட டூயட் பாட விட்டிருவாங்க போல.. ஏய் குட்டி குஷ்பு அங்க என்னடி வேடிக்கை பார்த்துக்கிட்டு? .. போடி போயி என் துணியை எடுத்து ஐயர்ன் பண்ணி வை.. கரகாட்டக்காரி சோக்குசுந்தரி வருவா? அவளையாவது அங்க போயி சைட் அடிப்போம்” என்று கிளம்ப தயாரானான்..
“ஹாஹா நான் பொய் சொன்னேன்டா ,பேயெல்லாம் இல்லை மச்சி.. நீயே உன் தங்கச்சி காவலுக்கு இரு.. இவ மூஞ்சியெல்லாம் அஞ்சு நாலு பார்த்துகிட்டு என்னால இருக்க முடியாது.. எனக்கு சோக்கு சுந்தரி கரகாட்டத்தை பார்க்கணும்.. அவ நடை என்ன? உடை என்ன? அழகு என்ன ? அப்படியே இடுப்ப குலுக்கி ஆடினா மனசு அந்த இடுப்பு குழிக்குள்ள சிக்கிக்கும்டா” என்றான் சாணக்யன் சாந்தினியை பார்த்துக்கொண்டே.. சாந்தினிக்கு மூக்கு நுனி சிவந்து கோபம் இப்போதோ எப்போதோ என்பதுபோலிருக்க..(இனிதான் புயல் கரைய கடக்க போவுது)
“ஆமா இல்லடா !!போன வருஷம் வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் தானே.. அவ ஆட்டத்தை ரசிச்சி அவளுக்கு 2000 ரூபாய் நோட்டு குத்தினோம்.. இந்த வருஷமும் ரெண்டாயிரம் ரூபாய் நான்தான் முதல்ல குத்துவேன் “என்று பாண்டி குதிக்க..
பின்னாடியிருந்து வந்த சிற்பா “நான் உன் மூக்குல குத்துவேன்.. வழியில மூதேவி மாதிரி நின்னுக்கிட்டு” என்று அவனை இடித்து தள்ளி விட்டு செல்ல ..
“இவளுக்கு சோக்குசுந்தரி மேல பொறாமை.. அவ அழகைப் பார்த்து வயித்தெரிச்சல்.. போன வருஷமும் இப்படிதான் பண்ணினா?.. அவ அழகுக்கு பக்கத்தில இவ வரமாட்டால்ல அந்த காந்தள்” என்று சிற்பாவை கிண்டலடிக்க..
” லொடுக்கு பாண்டி நீ இன்னும் போகலையா? அயர்ன் பாக்ஸ் சூடாதான் இருக்கு அப்படியே வாயில வச்சு தேச்சிடுவேன் பார்த்துக்கோ “என்று சிற்பா உள்ளிருந்து குரல் கொடுக்க..
” இவளுக்கு என் உதட்டிலேயே ,எப்ப பார்த்தாலும் எதையாவது வச்சி சூடு வச்சிடுவேன்னு சொல்றதே வேலையா போச்சு.. முதல்ல என் உதட்டுக்கு ஒரு வேலி போடணும்” என்று புலம்பிக்கொண்டே வெளியே சென்றான்.. (நீ வாயிக்கு பூட்டு போடு முதல்ல)..
ஒருவழியாக எல்லோரும் கிளம்பி தயாராக சாணக்யன் சாந்தினியிடம் கண்ணை காட்டி விட்டு அவர்களை கோவில் வரை கொண்டு போய் பத்திரமாக தங்கையை பாண்டியிடம் ஒப்படைத்தான்..
“பார்த்துடா அவ வீட்டில மட்டும்தான் சுட்டி பாப்பா, வெளில வாய தொறக்க மாட்டா.. உன்ன நம்பி தான் விட்டுட்டு போறேன்.. பார்த்துக்க”..( சின்ன பாப்பான்னா இடுப்புல வச்சி கொஞ்சு)
” இத வேற எனக்கு தனியா சொல்லணுமா நீ?.. உனக்கு அவ தங்கச்சின்னா.. அவ எனக்கு உயிர் டா உனக்கு தெரியாதா?” என்று கண்ணில் காதல் மிகுந்து சொல்ல..(என்னது உயி…ரா?)
“ஹாஹா அது தெரியும்டா பத்து வருஷமா காதலிக்கிற? ஆனா ஒருநாள்கூட அவள காதலா பார்த்து நான் பார்த்ததே இல்லைடா.. எப்படிடா உன்னால இப்படி கண்ட்ரோலா இருக்க முடியுது?” என்று சாணக்யன் பாண்டி தோளில் கைபோட..(அதானே இவன் முதல் நாளே பாதி முடிச்சிட்டானே)
“என்ன நம்பி வீட்டுக்கு வந்தீங்க.. உனக்கு துரோகம் செய்ய என் மனசு இடம் கொடுக்கலைடா”..(ஹிஹி அவ இடம் கொடுக்கலை சொல்லு)
சிற்பா சடங்காகி பள்ளிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பிக்க ,பாண்டியின் பார்வை அவள் மீது காதலாய் விழ ஆரம்பித்தது.. ஏதோ நண்பனின் தங்கை என்பதையும் தாண்டி, அவள் பாண்டி மனதில் தூசியாய் உறுத்த ஆரம்பித்தாள்.. அவளை பார்க்க ஆசை வந்தது.. அப்போது இவர்கள் இருவரும் காலேஜ் படித்துக் கொண்டிருந்தனர்..
தன்னை நம்பி தன் வீட்டிற்கு வந்த நண்பனுக்கு துரோகம் செய்ய மனதில்லாமல்.. தன் மனதில் தோன்றிய மாற்றத்தை தன் நண்பன் அடித்தாலும் பரவாயில்லை, என்று நினைத்து அவனிடமே உன் தங்கையின் மீது எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது, என்று உடைத்து சொல்லிவிட..
தான் நிற்கதியாக நிற்கும் பொழுது தாங்கிக் கொண்டவன்.. தான் செய்வது நல்லதா? தீமையா? என்று தெரியாமல் தனக்கு தோள் கொடுத்த நண்பன்.. தன் தங்கையை மட்டும் விட்டுவிடுவானா? இவனை தவிர வேறொருவன் என் தங்கையை நல்ல மனைவியாக பார்ப்பானா? என்று சந்தோஷப் பட்டவன்.. உனக்கில்லாததா மச்சி!! என்று சம்மதம் சொல்ல..(நீங்களா பத்து வயசிலேயே சம்மந்தம் பேசி முடிச்சாச்சி)
அப்பொழுது கூட பாண்டி தன் காதலை சிற்பாவிடம் சொல்லவில்லை.. அவள் படிப்பு அவளுடைய வளர்ச்சி , இதில் தான் குறுக்கீடாக இருக்கக்கூடாது, என்று தன் காதலை தனக்குள்ளாக பொத்தி வைத்து கொண்டான்.. அவளுக்கு சந்தேகம் வரும் மாதிரி கூட அவளை பார்வையால் சீண்ட மாட்டான்.. ஆனால் அவள் எங்கு போனாலும்?? இவனுடைய கண்காணிப்பு இல்லாமல் இருக்காது..அவனுக்கு பேயென்றால் மட்டும் பயம்,சிறுவயதில் அவன் தந்தை வயலில் ராத்திரி காவலுக்கு செல்லும் போது கரெண்டடித்து செத்துவிட்டார்.. அதை எல்லோரும் பேயடித்து இறந்து விட்டதாக சொல்ல.. அன்றிலிருந்து இருட்டு, பேயென்றால் பயம் பாண்டிக்கு..
சிற்பாவிடம் அடி வாங்கிக் கொண்டு அலைவதால்,பேயிக்கு பயப்படுவதால் அவன் தைரியசாலியில்லை என்று கிடையாது.. பிரபல குத்துச்சண்டை வீரன் தென்தமிழகம் சார்பாக விளையாடிக் கொண்டிருக்கிறான்..(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ)
அவள் கை தொட்டு அடிக்கும் உணர்ச்சிக்காகவே ஏதாவது கிறுக்குத்தனம் செய்து அவளிடம் மாட்டிக் கொள்வான்..குண்டாக அதீத வளர்ச்சியில் கனியாத கொங்கைகள் அவன் கண்ணை எப்போதும் கவரும்..அது தன் மனதில் சலனம் தோன்றிவிடும், வரம்பு மீற தோணும் என நினைத்து அவள் ஆடை விஷயத்தில் கொஞ்சம் அதிகமாக முக்கியத்துவம் எடுப்பான்… எங்கே போனாலும் அவன் சாப்பிடுவானோ இல்லையோ? சிற்பாவுக்கு பிடித்ததை தேடி தேடி வாங்கி கொண்டு வந்து குவிப்பான்… தனக்கு அவள் மேல் காதல் இருப்பது போல்? அவளுக்கும் இருக்கும் என நம்பினான்.. அதுதான் அவன் செய்த மிகப்பெரிய தவறு…
பாண்டிக்கு சிற்பா மீது காதல்… சிற்பாவுக்கு யார் மீது காதலோ?
இலவு காத்த கிளியாக மாறிவிடுமா இவன் காதல்?
