முகிழ்த்தேனே நின் முத்தத்தால்
முத்தம் 1!!
ஜியா ஜானவி ❤️
முத்தம்!!
இது இதயத்தின் மௌனமொழி!!
உணர்ச்சிகளின் பெரும் குரல்!!
பெங்களூரின் காலை நேர டிராஃபிக்கில் செல்வதே தனித்திறமை தான்!!
அதிலும் ஜன்னல் ஓரசீட்டில் மெல்லிய குளிரோடு இளையராஜாவின் சுகமான கீதங்களை ஹெட் போனில் கேட்டுக்கொண்டே பயணிப்பது அலாதியான சுகம் தான்!!
அக்கொடுப்பினை எத்தனை பேருக்கு கிடைக்குமோ? அவளுக்கு கிடைத்தது!! அவள்ன்னா.. ?? நம் நாயகி!!
நம் நாயகிக்கு அந்தக் காலை நேர பயணத்தின் பாடல்கள் மட்டுமே மனதிற்கும் புத்திக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய நேரங்கள்!!
கேபில் அமர்ந்தவாறு கண்களை மூடி.. பாடலில் லயித்து… குளிர் துளைத்த மூக்கு நுனி சிவக்க.. கார்கூந்தல் காதுக்கு காவலாய் இருக்க.. இருக்கையில் தலை சாய்த்து அமர்ந்திருந்தவளின் அழகு எங்கோ நாம் கடந்து வந்த அழகிய ஓவியத்தை ஞாபகப்படுத்தியது!!
சுண்டினால் சிவக்கும் எலுமிச்சை நிறமல்ல தேன்கலந்த வனப்பு.. அழுத்தமான நேர் நாசி… வில்லென வளைந்த சற்று அடர்த்தியான அபூர்வமாய் நடுவில் ஒன்றுக்கொன்று முடிச்சிட்டு இணைந்த புருவங்கள்… காஜல் இடாமலே சுண்டி இழுக்கும் காந்த கயல் விழிகள்... இயற்கையிலே மிளிரும் மெல்லிய பன்னீர் ரோஜாநிற உதடுகள்… அவள் சிரிக்கும் போது அழகை கூட்டி காட்டும் முன் வரிசையில் தப்பிய குட்டி தெத்து பல்… இளமை கொழுவீற்றிருக்கும் பெண்மையின் பொக்கிஷங்கள் இல்லையோ சொல்லும் இடை தாண்டி வாழை தண்டு கால்கள்… மொத்த அழகை சுமந்து நிற்கும் பல்லவனின் உளி செதுக்கியது போன்ற சிலையழகு பெண்!! பின் இருபதா முன் இருபதா என்று வயதை கணிக்க முடியாத அழகி!!
சட்டென்று கேப் நின்றதும் தன் இசை உலகத்திலிருந்து நிகழ் உலகத்திற்கு வந்தவள், கைகளை தேய்த்து குளிரை விரட்டி.. தனது பையை எடுத்துக் கொண்டு மற்ற ஊழியர்களுடன் சிரித்தபடி அந்த லிப்டுக்குள் நுழைந்தாள். ஆறாவது ப்ளோர் முழுக்க முழுக்க அவர்களது ராஜ்ஜியம்!!
அது ரெயின்போ எஃப்எம்!!
அவள் ஆர்ஜே நேத்ரா ஜெயராமன்!!
“ஹாய் என்ஜே!!” என்ற இரண்டெழுத்தே அவளது அடை மொழியாய் போக.. எதிர்பட்டவர்கள் எல்லாம் ஹாய் ஹலோ என்று அழைத்தார்கள். அவள் மட்டுமல்ல அங்கு வேலை செய்பவர்கள் முக்கால்வாசி பேரின் அடைமொழியே அந்த இரண்டு எழுத்து தான்!!
“ஹாய் கேகே!!” என்றப்படி அங்கு இருந்தவனை ஆச்சரியமாக பார்த்தப்படி, “என்ன இவ்வளவு காலையிலேயே? நைட்டு தானே உன் ப்ரோகிராம்?” என்று ஆச்சரியத்தை கண்களில் மட்டும் காட்டி!!
அவளை திரும்பிப் பார்த்து சிரித்தவன் “பிப்ரவரி 14 வருது இல்லையா? அதுக்கு ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம்!! அதற்காகத்தான் மார்னிங் விசிட் இங்க!” என்றவனின் சிரிப்பு அவளையும் தொற்ற..
“ஏதோ ஒரு சாமியார் லவ்வர் ஜோடியை சேர்த்து வைத்தார்னு வெளிநாட்டுக்காரனுங்க கொண்டாடுறாங்க.. சரி!! ஆனால் நம் ஊர் காரர்கள் இந்த வேலன்டைன்ஸ் டேவ ஏதோ விழா போல் கொண்டாடுவது தான் ஜஸ்ட் இரிட்டேட்டிங்!! டிஸ்கஸ்டிங்!!” என்றவள் அன்றைய தனது நிகழ்ச்சி நிரல்களை பற்றி பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அவனோ சுவாரசியமாக கைகளை கட்டியபடி அவளை பார்த்திருந்தான்.
“தீபாவளி போல.. பொங்கல் போல இந்த வேலன்டைன்ஸ் டேக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிரீட்டிங் கார்ட்ஸ் என்ன? கிப்ட் என்ன? கலர் பேப்பர் என்ன? ரிசார்ட் ரெஸ்டாரன்ட்ல டேபிள் புக்கிங் என்ன? பார்ட்டி என்ன?” என்ன என்ன என்று கலியுக ஔவை போல இவள் கேட்டுக் கொண்டே போக.. அதை பார்த்து சிரித்தான் கேகே..
“சிரிக்காத கேகே!! இட்ஸ் ஆல் மார்க்கெட்டிங் ட்ரெண்ட்!! அவனவன் இதை வைத்து சம்பாதிக்கிறான். நம்ம மக்களும் ஏதோ அரிய பெரிய விழாவை போல இதை கொண்டாடுவதை நினைத்தால் ஒரே எரிச்சலா இருக்கு!!” என்றாள்.
“இதனால நாலு பேர் சம்பாதிச்சிட்டு போனா நல்லது தானே!” என்றவன்
அவளை கூர்ந்து பார்த்து, “உனக்கு லவ் ஃபீலிங்ஸ் இல்லன்னா.. மத்தவங்களுக்கும் இருக்கக்கூடாதா என்ஜே? இது என்ன அநியாயம் டா! உண்மைய சொல்லு.. உனக்கு லவ் பெயிலியரா?” என்று கேட்டான்.
“அது… அது…!” என்று சற்று தடுமாறியவள் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை!! இவனுங்க வியாபார தந்திரத்தை எளிய மக்களிடம் காட்டுகிற போது.. அதுதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடேன். நேத்தி ஒரு ரிசார்ட்ல காதலர் தின கொண்டாட்டம்னு எனக்கு ஒரு மார்க்கெட்டிங் மெயில்!! என்னன்னு பார்த்தா ‘ஜஸ்ட் 49999 ஒன்லி.. ஃபார் சிங்கிள் நைட் வித் யுவர் கப்புள்!’ அப்படின்னு வருது.. அடேய்.. என் ஒரு மாச சம்பளமே அவ்வளவு தானடானு நொந்திக்கிட்டேன். இவனுங்க என்னடா ஒரு நாள் பார்ட்டிக்காக இவ்வளவு கேட்கிறானுங்களேனு எனக்கு பக்குனு ஆயிடுச்சு தெரியுமா?” என்றவளின் வருத்தத்தைக் கண்டு இப்பொழுது வெடித்து சிரித்தான் கேகே.
தன் கையில் வைத்திருந்த பேப்பரை சுருட்டி அவனை அடித்தவள் “சிரிக்காத கேகே!! ஆனாலும் இதையெல்லாம் துச்சமாக எண்ணி செலவு செய்பவர்களும் இருக்க தானே செய்கிறார்கள்?”
“அதுக்கு என்ன செய்ய முடியும் என்ஜே? அவன் லவ் அவ்வளவு காஸ்ட்லியா இருக்கு! நமக்கெல்லாம் தமாத்துண்டு கேக் ஒன்னு ஒரு டின்னர் அவ்வளவுதான்!” என்றபடி அவன் முன் இருந்த கோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“ஆமா.. ரொம்ப நேரமா அந்த பைலை உத்து உத்து பாக்குறியே? அப்படி என்ன கான்செப்ட் பண்ண போற? நீ எப்பொழுதும் கொஞ்சம் டிஃபரண்டா செய்வியே… சொல்லு சொல்லு” என்று அவனது கையில் இருந்த கோப்பை பிடுங்க முயல..
அதே மறைத்தவன் “அது சஸ்பென்ஸ்!!” என்றதும் அவளது முகம் வாட.. தோழியின் வருத்தத்தை கண்டவன், “சரி சரி ரொம்ப மூஞ்சிய தூக்கி வைக்காதே! உனக்கு மட்டும் சொல்றேன். என்னோட தீம் என்னென்னா “தவுஷண்ட்ஸ் கிஸ்ஸஸ் இன் லவ் கார்டன்!!” என்றான் கண்களை சிமிட்டி!!
“வாட் கிஸ்?” என்று அவள் முகம் சுளிக்க..
“எஸ் கிஸ்!!” என்றான் அவன் புன்னகைத்து..
“வேற டாப்பிகே கிடைக்கலையா உனக்கு?”
“பூவும் தேனும் போல…
கடலும் அலையும் போல..
வானும் நிலவும் போல தான்
லவ்வர்ஸூம் கிஸ்ஸூம்!!”
என்றான் கவிதையாய்!!
“காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை!! நாம நம் துணையின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாங்கிக்கொடுக்கும் விலை மிகுந்த பரிசுப் பொருள்களைவிட, அவளை நெஞ்சமெல்லாம் நேசத்தோடு.. கண்களெல்லாம் காதலோடு.. அணைத்துத் தரும் ஒரு முத்தம் உணர்த்திவிடும் நம் எல்லையற்ற காதலை!!” என்று மனைவியின் நினைவில் கண்களில் காதல் மின்ன சொன்னவனை ஆதூரமாக பார்த்தாள் நேத்ரா!!
“அடேய்!! ஹா ஹா…” என்று சிரித்தவள், “உனக்கு கல்யாணம் ஆனாலும் ஆனது.. டோட்டலி யு சேஞ்ச்டு கேகே!” என்று சிரித்தாள்.
“ஏன் உனக்கும் கல்யாணம் ஆனதும் தான் நீயும் மாறிட்ட..” என்று அவன் அவளை கூர்ந்து நோக்க.. அவளோ அவனது பார்வையை தவிர்த்தவள்,
“ஆமா உன் ப்ரோக்ராம் எப்ப ஸ்டார்ட் ஆகுது?” என்று வேறு கேட்டாள். அந்தப் பேச்சினை தவிர்த்து.. அவனும் அதனை புரிந்து கொண்டான்.
“வேலடைன்ஸ் டே ஒன் வீக் முன்னாலேயே டெலிட் நைட் நைன் டு டென்!!”
“சூப்பர் கேகே!! நீ இப்படி காலையில ஆபீஸ்.. நைட்டு எஃப்எம்னு இதையே கட்டிக்கிட்டு சுத்து.. பொண்டாட்டிய சுத்துறது விட்டுட்டு!! அப்புறம் பெல்லு உன்ன பெல்லாலேயே அடிச்சு வெளுக்க போறா!” சிரித்தாள் நேத்ரா!!
“அதுக்கெல்லாம் என்கிட்ட வைத்தியம் இருக்கு தெரியுமா? அவளை ஆங்கிரி பேர்டில் இருந்து லவ் பேர்டா மாற்ற..!” என்று அவன் சிரிக்க… அவள் முறைக்க..
“நிஜமா!! அதைவிட நம்ம ரைட்டர் அப்படி எல்லாம் என்னை கைவிட்டு விட மாட்டாங்க… ஒக்கே ஒக்க கிஸ்!! கூடவே ஒரு கவிதை..
‘உன் கையால் அடிப்பதை விட இதழ்களால் அடித்துக் கொள் கண்ணம்மா!’ அப்படினு சொன்னா என் பெல் ஃப்ளாட்!” என்றவன் “பை.. பை.. எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு!” என்று ஓடியவனை பார்த்தவள், வாழ்க்கை தனக்கு மட்டும் வஞ்சித்து விட்டதோ? என்று நண்பனை பார்த்து சிறு பொறாமை கூட அவளுக்கு!!
ஆனால் யாருக்கும் உடனே எதுவும் எளிதில் கிடைத்து விடாது அல்லவா?? கஷ்டங்கள் எல்லாம் நம்மை செதுக்கும் படிக்கட்டுகள்!! வெற்றி என்னும் நிலையை அடைய.. அது வாழ்க்கையாகட்டும் போட்டியாகட்டும்!!
வழக்கம்போல காலையில் இவளது “குட் மார்னிங் என்ஜே!” என்று நிகழ்ச்சியை அவள் தொகுத்து வழங்க… “ஹாய் பேப்ஸ்.. இட்ஸ் யுவர் என்ஜே” என்ற அவள் தொடங்க…முற்றிலும் மாறி போனது அவளது குரலும் அதில் தெறித்த குதூகளமும்!!
காலையில் இரண்டு மணி நேரம், அதற்குப்பின் மதியம் சமையலறை குறிப்புகளோடு கன்னடத்தில் இல்லத்தரசிகளோடு மீண்டும் இரண்டு மணி நேரம் உரையாடல் பாட்டு என்று அமர்க்களமாக செல்லும்!!
மாலை போல் மற்ற வேலைகள் இழுத்துக் கொள்ள ஆறு மணிக்கு எல்லாம் டான் என்று வீட்டுக்குள் இருந்திடுவாள் நேத்ரா!!
அது அவளது குட்டி இளவரசியின் கட்டளை!! எங்கணம் மீற???
வழக்கம்போல ஐந்து மணிக்கு செல்லும் கேப்பில் இடம் பிடிக்க அவள் லிப்டை நோக்கி செல்லும் நேரத்தில்… “ஹேய் என்ஜே… டீம் லீடர் கால் யூ..” என்றப்படி கடந்து சென்றான் உச்சி குடுமியுடன் ஒருத்தன்!!
“ஓ காட்!! இவனுங்களோட இதே தொல்லை!” என்றபடி அவள் பெயருக்கு டிம் லீடரின் கதவை தட்டிவிட்டு “ஹாய் தீபன்!” என்று முன்னால் அமர..
“வா.. வா..! என்ஜே.. இந்தா இதில் உள்ள புரோடகால்ஸ் எல்லாம் படிச்சுக்கோ!! நீயும் வேலண்டைன்ஸ் டே ப்ரோக்ராமுக்கு ரெடியாகிவிடு” என்றான் ஆங்கிலத்தில்..
சரி என்று அதை பிரித்து படித்தவள் “என்னால் முடியாது தீபன்! உனக்கு தெரியும் தானே 6 மணிக்கு மேல.. நீ டபுள் பேமென்ட் கொடுத்தாலும் என்னால ஒர்க் பண்ண முடியாது!” என்றாள் அதிலிருந்த நேரத்தை பார்த்துவிட்டு…
“என்ன என்ஜே.. நீயே இப்படி சொன்னா எப்படி? இங்கே பலதரப்பட்ட மொழிகள் இருந்தாலும் தமிழுக்கு என்று நீ மட்டும் தான் இருக்க.. உன் மொழியை நீ தானே காப்பாற்ற வேண்டும்!” என்று அவள் மொழிப்பற்றை இவன் கை வைக்க..
அது உண்மையும் கூட..
வானவில் எஃப்எம் ஹெட் ஆபீஸ் பெங்களூர்!!
ரேடியோ அலைவரிசையில் மட்டுமல்லாது ஆப் மூலமாக ஆன்லைனிலும் இவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். அதில் பெங்களூரில் தமிழுக்கு என்று இருக்கும் டீமில் நேத்ராவும் ஒருத்தி!!
ஆனால் குழந்தையை நினைத்து அதையெல்லாம் தூக்கி போட.. “நோ நோ தீபன்!! என்னை நீ கன்வின்ஸ் பண்ண பார்க்காதே!! ஆறு மணிக்கு மேல் ஒரு நிமிஷம் தாமதிச்சாலும் என் பேபிய சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்! ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்!” என்று இவள் கெஞ்ச.. அவனோ இவளுக்கு மேல் கெஞ்சினான். எல்லாம் கார்ப்பரேட் பணம் படுத்தும் பாடு!!
“ஒன்லி ஒன் வீக் மட்டும்!! அதுக்கு மேல எக்ஸ்டெண்ட் பண்ணவே மாட்டேன். நீ உன் பேபிய இங்க கூட்டிட்டு வந்திடேன். எப்படியும் நீ பேபி சிட்டர் வைத்து தானே பார்த்துக்கொள்கிற.. இங்க வந்தா ரெண்டு மணி நேரம் நம்ம ஸ்டாஃபே மாத்தி மாத்தி வச்சுக்குவாங்க! உன் பேபி அவ்வளவு க்யூட்!!” என்று எப்படி பேசினால் அவள் மடிவாள் என்று அவனுக்கு தெரியும்!! டீம் லீடர் ஆச்சே!!
“ப்ளீஸ் கன்சிடர் பண்ணு!! மத்த லாங்குவேஜஸ்க்கு எல்லாம் ஓகே. எனக்கு தமிழுக்கு நீ மட்டும் தான் வேண்டும்!” என்று தமிழை கொலை செய்தவனை கடுப்போடு பார்த்தவள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டாள். அதுவும் சில பல கண்டிஷன்களோடு!!
“அப்போ கேகே?”
“அவருக்கு தமிழ் மட்டுமல்ல.. ஹந்தி.. கன்னடா எல்லாம் தெரியும் இல்லையா? அதனால அந்த ப்ரோக்ராம் லாங்குவேஜ் மல்டி லாங்குவேஜ் ப்ரோக்ராமா மாறுது!” என்றான் தீபன்.
“வேலன்டைன்ஸ் டே!! என்ன பெரிய லவ்வர்ஸ் டே.. இவனுங்க லவ் எல்லாம் எதுக்குனு தெரியாதா? உடம்பு ஒன்று இல்லையென்றால் இவர்கள் காதலும் காற்றில் எழுதி வெச்ச எழுத்தைப் போலத்தான்! லவ்வாம் லவ்வு வெறும் லஸ்ட்!!” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தவளகன் மனக்கண்ணில் ஒருத்தன் முகம் மின்னி மறைய.. ஒற்றை புருவம் தூக்கி “அப்படியா?” என்றான் அவன்!!
வீடு வந்து சேர்ந்ததும் “மீ..!!” என்று கத்திக் கொண்டு ஓடி வந்தாள் அவளது இளவரசி ஸ்மிரிதி!!
“ஓ மை டாலி!!” என்று அவள் மகளை தூக்கி ஒரு சுற்று சுற்றி விட்டு “இரு அம்மா ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துறேன்” என்று வேகமாக தன்னை சுத்தப்படுத்தி வந்து சோபாவில் அமர்ந்தவள் மேல் அமர்ந்தால் நான்கு வயது ஸ்மிரிதி!! அடுத்த அரை மணி நேரம் அருகில் என்ன நடந்தாலும் அம்மாவுக்கு மகளுக்கும் தெரியாது. அன்று நடந்ததை எல்லாம் குட்டி கண்கள் விரிய.. குண்டு கன்னங்கள் அசைய.. சிப்பி இதழ்களை விரித்து கிள்ளை மொழியில் பேசும் பிள்ளையை அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா!!
முக்கால்வாசி ஸ்மிரிதி பேசுவது யாருக்கும் புரியாது. ஆனால் நேத்ராவுக்கு புரியும்!! அம்மாவுக்கு புரியாத பிள்ளையின் பாஷையா என்ன?
“தீதி.. உங்களுக்கு லெட்டர்” என்றபடி வந்து நின்றாள் ஷப்னா!!
“யார் அனுப்பியிருக்கா?” என்று பிரித்தவளின் கண்கள் அனுப்புநர் பெயர் இல்லாமல் இருப்பதை நெற்றி முடிச்சிட பார்த்தவள், உள்ளே இருந்த விஷயத்தில் சிலையென சமைந்து அமர்ந்திருந்தாள்.
பிள்ளையின் உரிமையை கோரி.. அப்பாவின் உரிமையை நிலை நாட்ட.. சஞ்சய்யின் செய்தியை கோர்ட் மூலம் தாங்கி வந்த கடிதம் அது!!
“இத்தனை நாள் இல்லாத பிள்ளையின் பாசம் எப்பொழுது என்ன?” என்று கோபப்பட்டாலும் இதை எப்படி சந்திக்க போறோம் என்று மனம் பயத்தில் நடுங்கியது!!
சரி வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் மற்றவர்களிடம் காட்டாமல் அமைதியாக அந்த இரவை கழித்தாலும் பொங்கும் அலையென ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது உள்ளுக்குள் மனம்!!
மறுநாள் காலையிலேயே வந்து இறங்கி இருந்தான் சஞ்சய்!!
தன் மகளை கேட்டு!!
இச்சுகள் தொடரும்…
முத்தம் 2!!
ஜியா ஜானவி ❤️
இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் மனம் அலைகழித்துக் கொண்டிருந்தது நேத்ராவுக்கு!!
ஆனாலும் காலையில் எழுந்து ஓட வேண்டும்.. வாழ்கையின் அடிப்படை தேவைகளுக்கு பணம் வேண்டும்.. அதற்கு சம்பாதிக்க வேலை வேண்டும்!!
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று யாரோ சொல்லலாம்!! ஆனால் வாழ்க்கையின் ஆதாரம் அந்த பணத்தை சுற்றி தான்.. பற்றி தான்!!
அது தான் நிதர்சனம்!!
‘இவனுக்குத் தெரியக்கூடாது என்று தானே இவ்வளவு தூரம் ஓடி ஒளிந்து யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!! அப்படியும் கண்டுபிடித்து வந்து விட்டானே? எப்படி தெரிந்தது? யார் சொல்லி இருப்பார்கள்? சொல்லக்கூடிய யாரும் இப்போது உயிருடனே இல்லையே.. பின் எப்படி கண்டுபிடித்தான்?’ என்று தலை வலித்தது அவளுக்கு. இரு கைகளாலும் தலையை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். ஆனாலும் நடந்து விட்டது. கண்டுபிடித்து விட்டான்! இனி அவனை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற நிதர்சனம் உணர்த்த.. மனம் கனத்து போனது நேத்ராவுக்கு!!
இங்கே பெங்களூருக்கு வந்த புதிதில் எத்தனை எத்தனை சோதனைகள்.. எத்தனை எத்தனை ரணங்கள்… அனைத்தையும் தாண்டி மகளைப் பாதுகாக்க, அதைவிட தன்னை சுற்றி வரும் கழுகு கண்களில் இருந்தும், அவலை தேடும் வாய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள எத்தனை எத்தனை பாடுபட்டு இருப்பாள்!! இன்று அனைத்தும் வீணானதே!!
காலையில் தன் போல இவள் எண்ணங்களில் உழண்டுக் கொண்டே சமைத்துக் கொண்டு இருக்க ஷப்னா “தீதி.. என்ன ஆச்சு? அப்படி என்ன இருந்தது அந்த லெட்டர்ல? ஏன் உங்க முகம் இப்படி மாறி போயிடுச்சு?” என்று கவலையாக கேட்டாள்.
ஷப்னா இவளிடம் பேபி சிட்டராக வேலைக்கு சேர்ந்து ஒன்றரை வருடங்கள் ஓடிப் போய்விட்டது. தன்னைப் போலவே அடிபட்டு ரணப்பட்டு வந்தவளை அரவணைத்துக் கொண்டாள் நேத்ரா!!
இந்த ஒன்றரை வருடங்களில் மும்பையை சேர்ந்த ஷப்னாவின் வார்த்தைகளில் தமிழ் தாண்டவம் ஆட காரணம் ஸ்மிரிதியும் அவள் பார்க்கும் கார்டூன்களும்!! காலையில் சுட்டி டிவியில் டோராவை ஆராம்பித்தால்… போகோவில் பீம்.. நிக்கில் சின்சான்.. கார்டூன் நெட்வொர்க்கில் டார்டன்ஸ் என்று அது போகும் ரயில் பெட்டிகளை போல.. பின் கற்றுக்கொள்ளாமல் இருந்தால்தானே அதிசயம்!!
ஸ்மிரிதியோடு அவளும் தமிழ் பேச கற்றுக் கொண்டாள்.
“அது.. அது…” என்று தடுமாறிய நேத்ரா ஷப்னாவுக்கு புதுசு.
“என்கிட்ட சொல்ல முடியாத காரணமா இருந்த பரவால்ல தீதி?” என்று அவள் கூற..
பெருமூச்சு ஒன்றை விடுத்த நேத்ராவும் “டாலியோட அப்பா கிட்ட இருந்து லெட்டர்.. அவளுக்கான உரிமையை கூறி வந்திருக்கு..”
“அது எப்படி தீதி.. பாப்பாவ நாம அவங்க கிட்ட கொடுக்க முடியும்? சிமி பாப்பா பெண் குழந்தை அஞ்சு வயசு வரைக்கும் உங்க கிட்ட இருந்து பிரிக்க முடியாது!! நீங்க கவலைப்படாதீங்க… அதுவும் இல்லாம பெண் குழந்தைகளின் பொறுப்பு அம்மாவுக்கு தான் அதிகம்!!” என்று அவள் பாய்ண்ட் பாய்ண்டாக அள்ளி அள்ளி கூற.. நேத்ரா பெரிய விழி விரித்து பார்க்க.. “ஆல் டிவி சீரியல் உபயம்!” என்று அவள் சிரிக்க.. “உன்னை..!!” என்று அவள் முதுகில் லேசாக தட்டி சிரித்தாள் நேத்ரா!!
“ஹான் தீதி!! இப்படியே எப்பவும் சிரிச்ச முகமா இருங்க.. எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா?” என்று அவள் பஞ்ச் டயலாக் அடிக்க.. “உன்னை டிவி பார்க்க விடுறது ரொம்ப தப்புனு இப்பதான் எனக்கு புரியுது!! டாலி தூங்குற நேரம் நீ ஒரு சீரியல் படம் விடாமல் பார்த்துட்டு இருக்கே!! என்ன..?” என்றதும் லேசாக தலையை சொரிந்து அவளைப் பார்த்தாள் ஷப்னா!!
இப்படியாக பெண்கள் இருவரும் காலை சமையலையும் மதியத்துக்கு சேர்த்து சமைத்து வைக்க… பின் நேத்ரா குளித்து வந்து தயாரானாள். அந்த நேத்தில் ஸ்மிரிதி எழுந்து வர அவளிடம் கொஞ்சி கெஞ்சி பேசி அவளுக்கு உணவு ஊட்டி விட்டு தானும் உண்டு அருகே ஷப்னாவை அமர வைத்து அவளையும் சாப்பிட வைத்தே நேத்ரா கிளம்பினாள். எப்பவும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஷப்னாவை பார்க்கிறேன் என்று வாய்மொழியாக இல்லாமல் இப்படி செயல் வழியாகவும் காட்டுவாள் நேத்ரா!! யாருமில்லாமல் வந்தவளுக்கு இங்கே அக்காவாக.. அன்னையாக.. நேத்ராவின் அன்பும் அரவணைப்பும் கூடவே பாசமும் கிடைக்க.. அவளும் அன்போடு இந்த கூட்டில் ஒட்டிக் கொண்டாள்!!
வழக்கம்போல இளையராஜாவின் கீதங்களோ.. பெங்களூரின் குளிரோ மனதில் இருந்த அலைகழிப்பை கொஞ்சமும் அடக்கவில்லை!! வெம்மையை தீர்க்கவில்லை!! நேத்ராவின் நேத்திரங்கள் சஞ்சலத்துடனே சுற்றிக் கொண்டிருந்தது.
வேலையில் வழக்கம் போல உற்சாகத்துடன் பேசினாலும் மனதில் ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்க.. மதியத்திற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியாமல், தீபனிடம் கூறிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.
இப்படி இடையில் செல்ல வேண்டும் என்றால் கம்பெனி கேப்பில் செல்ல முடியாது. அதனால் இவளே வெளியில் இருந்து ஓலோ மூலம் புக் செய்து அவள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்க்கு வர.. வெளியே பார்க்கில் பிள்ளைகளோடு விளையாடி கொண்டிருந்தார்கள் ஸ்மிரிதியும் ஷப்னாவும்!!
“வயசு 22 ஆவது… ஆனா பாரு நாலு வயசு புள்ளையோட சேர்ந்து விளையாடுறா!!” என்று ஷப்னாவை திட்டியபடி அந்த பார்க்கில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்தாள் நேத்ரா.
பிள்ளைகளின் விளையாட்டு கூச்சலும் கும்மாளமும் மனதை சற்று அமைதியாக்க.. காலையிலிருந்த இறுக்கம் குறைந்து இலகுவாக மாறியது நெஞ்சம்!!
சட்டென்று ஒரு கார் வந்து நிற்க அதன் பின்னர் இரண்டு ஜாக்குவார் வரச்.. அதன் சீற்றத்தில் அங்கிருந்த அனைவரும் அதரிப்பதறி ஓடி நின்று ஒதுங்கி நிற்க.. அனைவரையும் ஒரு நிமிடம் கதறடித்து.. விளையாண்ட பிள்ளைகளை சிதறடித்து.. அவர்களின் கவனத்தை அந்த பக்கம் ஈர்த்து இருந்தது அந்த ஆடி கார்!!
அனைவரும் போலவே நேத்ராவின் கவனமும் அங்கே குவிய.. அதுவரை இருந்த இலகுவான மனம் இப்பொழுது இடி இடித்தது போல இருந்தது. கை கால்கள் உதற மெல்ல எழுந்தவள் கண்கள் பிள்ளை எங்கே என்று தேடியது. அதற்குள் பிள்ளையை இரு கரங்கள் வாரிக் கொண்டது தன்னோடு. புதிய கரங்களின் முரட்டுத்தனத்தில் சற்றே பயந்த குழந்தை மீ.. மீ.. என்று அலறியது.
“டாலி..!” என்று இவள் பிள்ளையை நோக்கி ஓட.. தீதி என்று நேத்ராவோடு இணைந்து கொண்டாள் ஷப்னாவும்.
கொஞ்சமும் தனது முரட்டுத்தனத்தை முகத்தில் காட்டாமல் அமைதி இழையோட.. ஹைபை லுக்கில் இருந்தான் சஞ்சய். பார்த்தவர்கள் எல்லாம் பார்த்தபடி இருக்க.. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அருகில் நெருங்கிவள் “குழந்தையை கொடுங்க!!” என்றாள் அடிக்குரலில்..
“ஏன்.. ஏன் உனக்கு தரணும் என் குழந்தைய? தூக்கி வைத்து கொஞ்ச.. எனக்கு உரிமை இல்லையா?” என்றான் அதில் அன்பு இருந்ததோ இல்லையோ என் பொருள் என்ற உரிமை இருந்தது.
“ஓ இதுதான் ஸ்ருதியோட அப்பாவா?”
“ஏன் இத்தனை நாளும் பிரிந்து இருந்தாங்க?”
“ஏன் குழந்தையை அப்பாகிட்ட கூட தராம இவ போய் கேட்கிறா?”
“என்ன இப்படி அடி ஆட்களோட அதிரடியா வந்து இருக்காரு?”
“ஒருவேளை ரவுடியா இருப்பாரோ?
“பார்த்தா அப்படி தெரியலையே.. ஹைபையா தானே தெரியுறாரு!!”
என்று பலதரப்பட்ட விவாதங்கள் இவர்களைப் பற்றி இவர்களை சுற்றி இருந்தவர்கள் பேசிக் கொண்டிருக்க… அனைத்தும் காதில் விழுந்தாலும் அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் குழந்தையை வாங்குவதிலேயே முனைப்பாக இருந்தாள் நேத்ரா.
“நேத்திக்கு அந்த லெட்டர் கிடைச்சப்பவே இங்கிருந்து சென்று இருக்க வேண்டுமோ? பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டு தைரியத்தில் இருந்து விட்டோமோ? இவன் வந்திருக்கிற தோரணையே சரியில்லையே!!” என்று நெஞ்சில் கலக்கம் மிக… அரவணைப்பு பாதுகாப்பு தேடியது அவளது நெஞ்சு மட்டும் அல்ல உடம்பும் தஞ்சம் கொள்ள நாடியது!!
மெல்ல அவளை நெருங்கியவன் “குழந்தை மட்டுமல்ல நீயும் இனி என் ப்ராப்பர்ட்டி தான்!” என்றதும் அவள் கண்களில் தீப்பொறி பறக்க அவனைப் பார்த்தாள்.
“இந்த சஞ்சய் ஒன்ன முடிவு பண்ணிட்டானா.. அதனை மாத்த எந்த கொம்பனாலும் முடியாது!! அப்புறம் எதுக்கு கோர்ட் மூலமா நோட்டீஸ் கொடுத்தேன்னு கேட்கிறாயா? அது சும்மா ஃபார்மாலிட்டிக்கு!! ஒரு சாட்சி வேணாமா நான் முறையா நடக்குறேங்குறத்துக்காக.. என் குழந்தை தான் இவனு தெரியனும்ங்குறதுக்காக.. மத்தபடி நீ இருக்குற இடம் தெரிஞ்ச உடனே உன்னை தூக்கிட்டு வர எனக்கு இப்படி விரல் சொடுக்குற நேரம் போதும்!!” என்று அகங்காரத்தோடு கூறியவனை அடித்து நொறுக்க வேகம் பிறந்தாலும் அமைதியாக நிற்கும் தன் நிலையை வெறுத்து முகத்தை திருப்பிக் கொண்டாள் நேத்ரா!!
குழந்தை என்று உரிமை கொண்டாடி வந்தவனின் கண்கள் எதிரில் நின்றவளைத்தான் தாபத்தோடு பார்த்தது. உச்சாதி பாதம் முதல் அவளை அணு அணுவாக அவனது கண்கள் புசித்து தின்றது. “முன்ன விட இப்போ உன்னோட திமிரு மட்டுமல்ல அழகும் மெருகேறி இருக்கு டி!!” என்றான் சிரித்துக் கொண்டே… பார்ப்பவர்களுக்கு அவன் ஏதோ சிரித்து பேசுவதாகவும் நேத்ரா முறைத்துக் கொண்டு முகம் திருப்புவதுமாக தெரியும்!! ஆனால் நடப்பது வேறல்லவா!!
“ஆண்டவா!! இத்தனை வருடங்களாக கட்டிக் காத்த என் மரியாதையை.. என் ஒழுக்கத்தை.. இவன் மழுங்கடித்து விடுவான் போலவே??” என்று பயம் கொண்ட மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவள் கண்களை இறுக்க மூட.. அதில் மின்னி மறைந்த ஒருத்தனை நினைக்கையில்.. மனதில் ஓரம் ஒரு தைரியம் பிறக்க… இப்போது கண்களை திறந்தவளின் கண்களில் அத்தனை தெளிவு!! துணிவு!!
“இது உன் குழந்தை இல்லைன்னு நீ ஏற்கனவே சொல்லித்தானே எங்கள வெளியில அனுப்பின.. இப்ப மட்டும் என்ன குழந்தை மீது பாசம் பொத்துக்கிட்டு வருது? ஒழுங்கா குழந்தையை கொடுத்துட்டு போயிடு!! இல்ல…” என்று அவள் எச்சரிக்க…
“என்ன எச்சரிக்கிற அளவுக்கு நீ வளர்ந்துட்ட!! குட்..” என்று அவளை மேலும் கீழும் பார்த்தவன் குழந்தையை தூக்கிக் கொண்டு அவளை ஒரு முறை சுற்றி வந்து “சும்மா நச்சுன்னு தாண்டி இருக்க!!” என்றான் அவளது முன்னழகை பின்னழகை கண்களால் மேய்ந்து கொண்டே கூற.. அருவருப்பாக இருந்தது நேத்ராவுக்கு!!
“கோர்ட்டுக்கு போய் ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் போதும்!! அப்புறம் உன் பப்பு எல்லாம் எங்கும் வேகாது. இந்த சஞ்சயோட பேச்சு மட்டும் தான் எங்கும் கேட்கும்!! ஒழுங்கா இப்பவே பொட்டி படுக்கை எல்லாம் கட்டிட்டு என் கூட கிளம்புனேனா சேதாரம் கம்மி!!” என்றவன் இவளுக்கு பின்னே நின்றிருந்த ஷப்னாவை எட்டிப் பார்த்து “ஓ இலவச இணைப்பு கூட இருக்கு போல!! பரவால்ல… ஆத்திரத்துக்கு உதவவில்லைனாலும் அவசரத்துக்கு உதவும்!!” என்று ஷப்னாவை அவன் பார்த்த பார்வை நிச்சயமாக துச்சாதனனின் பார்வை தான்!!
தன்னை மட்டுமல்லாமல் ஷப்னாவையும் அவன் பார்வை துகில் இருப்பதை கண்டவளுக்கு உடம்பெல்லாம் கூச.. தீயாய் எரிய.. “நீ போ ஷப்னா!!” என்று அவள் கூறும் முன் ஷப்னாவுக்கு பின்னே இரண்டு அடியாட்கள் வந்து நின்றனர்.
எந்தப் பக்கம் அவள் சென்றாலும் அங்கே வந்து முட்டி மறைத்து நின்றவர்களை கண்டவளுக்கு பயம் கொள்ள “தீதி..!!” என்று நேத்ராவின் கைகளை இறுக்க பற்றி கொண்டாள்.
“சஞ்சய்… நீ மறுபடி மறுபடி தப்பு பண்ற!! இதெல்லாம் நல்லதுக்கு இல்ல… ஒழுங்கா போயிடு!! உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி எழுதி கொடுத்திருக்க நீனு… ஆனாலும் இப்ப ஏன் துரத்தி வந்து எங்க உயிரை எடுக்கிற.. ஏன் எங்க நிம்மதியை கெடுக்கிற.. எங்கள வாழ விடு!” என்று அவள் கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க அவன் ஒற்றை விரலால் காதை குடைந்துக் கொண்டு “ஏய்.. டிவி சீரியல் ஹீரோயின் மாதிரி டயலாக் எல்லாம் அடிக்காத!! அதுல தான்.. அதுல மட்டும் தான் குழந்தையை வைத்துக்கொண்டு தனியே வாழ்ந்து சாதிக்குறது நடக்கும்!! நிஜத்தில் எல்லாம் நடக்காது… கிளம்பு! கிளம்பு!!” என்றனிடம் மறுத்து அவன் பிடியிலிருந்து குழந்தையை பிடுங்க எத்தனித்தாள்.
அவனோ அவளையும் சேர்த்து அணைக்க வர… அவளோ அரண்டு இரண்டடி பின்னால் செல்ல… “ஓஹோ… நான் தொட்டா உன் பத்தினி தன்ம போய்டுமோ??? அப்போ… உன்னை அங்குலம் அங்குலமா ரசிச்சு ருசிச்சு…” என்று முடிக்கும் முன் அவன் கன்னம் எரிய… கையை உதறி கொண்டு நின்றாள் நேத்ரா!!
“பொறுக்கி நாயே!!” என்று!!
“யாரு… நானா?? நானா? என்னையா அடிச்ச?” என்று உறுமியவன், அவள் முடியை பிடித்து இழுத்து அவளை அடிக்க கை ஓங்க… “நோ… மீ… நோ!!” என்று ஸ்மிரிதி அவனை தன் பிஞ்சு கைகளால் அடித்து.. அவன் முடியை பிடித்து இழுத்து.. அவன் முகத்தை பிராண்ட…
“ஏய்.. ஏய்… பிசாசே… விடு.. விடு…” என்று பிள்ளையை தடுக்க முயன்று.. சமாளிக்க முடியாமல் தோற்றவன், “ச்சீ நாயே… சாவு!!” என்று இரக்கமற்று தூக்கி எறிந்தான் குழந்தை என்றும் பாராமல்.
“அய்யய்யோ… டாலி…” என்று நேத்ரா பதறி ஓட…
“ஹரே பகவான்… சிமி பாப்பா…” என்று ஷப்னாவும் கதறி ஓட…
“மீ… மீ…!!” என்று பயத்தில் அலறிய குழந்தை, பின் “ப்பாஆஆஆ” என்று
ஆனந்தத்தில் கத்த…
“ரிது மா….” என்று அக்கறை அன்பு பாசம் அரவணைப்பு அனைத்தும் கலந்த குரல் அதற்கு இணையாக கேட்க…
அந்த குரல்… அது.. அவன்.. அவனில்லை…
அவன்.. நம் நாயகன்!!
‘அவன் பேரா… அச்சச்சோ நான் சொல்ல மாட்டேன்பா! சொன்னா என்ன நடக்கும்னு நீங்களே பாருங்க! அட.. நானும் தானுங்கோ!!’
“அப்புக்குட்டி…” என்று ஸ்மிரிதியை விழாமல் பிடித்தவன் இறுக்க அணைத்துக் கொண்டான்.
“என்னது? அப்பாவா?” என்று அனைவரும் அதிர்ந்தனர்!! அதில் நேத்ராவும் ஒருத்தி!!
“ப்பா… ப்பா…” என்று ஸ்மிரிதி அவன் முகம் முழுவதும் முத்தமிட… அவனோ அதில் திளைத்தில் கண்கள் மூடி சுகித்திருந்தான்!!
“யாருடி அவன்? அவன வச்சி இருக்கியா?” என்று நேத்ராவை அடிக்க கை ஓங்க… இரண்டே எட்டில் சஞ்சய்யை நெருங்கியன் பொளீர் என்று பொறடியில் அடிக்க.. கண்கள் என்ன ஐம்புலன்களும் பொறி கலங்க.. பூகம்பத்தில் ஆட்டம் காண்பவன் போல ஒரு ஆட்டம் ஆடி நின்றான் சஞ்சய்!!
“அடிங்க நாராப்பயலே… யாரு யார வைச்சிருக்கா? கொன்றுவேன் பாத்துக்க!!” என்று நாக்கை துருத்தி கண்களை உருட்டி மிரட்டியவனை அப்போது தான் உற்று பார்த்தான் சஞ்சய்!!
ஆறடி இரண்டு அங்குல உயரத்தில்..
ஒரு வார தாடியில்…
முறுக்கிய மீசையில்..
முறுக்கேறிய உடல் வாகில்..
கோபத்தில் திமிறும் வேங்கையாய்…
வீர தினவெடுத்த வேந்தனாய்…
வெள்ளை வேட்டி சட்டையில்..
அலை கேசத்தை ஒற்றை அசைப்பில் பின்னால் தள்ளியப்படி..
அழுத்தமான நடையுடன் கூர் பார்வையுடன் சஞ்சயை நெருங்கினான் அவன்!
“யாருடா… நீ… எதுக்குடா என் குடும்ப விஷயத்துல தலையிடுற?இரு உன்னை…” என்று சஞ்சய் குதிக்க…
“என்னது அண்ணாத்தைய தெரியாதா?
என்னா மெதப்பு உனக்கு?
எங்க அண்ணாத்த பேரு தாண்டவம்.. ஊர்தாண்டவம்!!” என்று அவன் முடிக்கு முன் அவன் கன்னத்தில் ஓங்கி விழுந்தது ஒரு அறை சும்மா நச்சுன்னு!!
//இச்சு மட்டுமல்ல எங்க ஆள் அடியும் நச்சுன்னு தான் விழும்!
அப்பாடி நான் தப்பித்தேன்!! இப்போ தெரியுதா நான் ஏன் பேர் சொல்லவில்லை என்று!!//
“ஏலே சன்னாசி.. எம் பேர நான் மாத்தி வருசம் மூணாவுது! இன்னும் அதே பேர சொல்லுற! வகுந்துடுவேன்” என்று அவனிடம் உறுமியவன், கண்களில் பயத்தோடு உடல் வழியில் பதட்டத்துடன் நின்றிருந்த சஞ்சய் அருகே சென்று “ஐ அம் சோழன்.. ராஜராஜ சோழன்!!” என்றான் அவன்!! தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்ட பெயரோடு!!
“ஆமா அப்போ என்ன சொன்ன.. உன் குடும்பமா? யாரு இவ உன் பொண்டாட்டியா?” என்று கேட்க.. சஞ்சய் விழிக்க..
“உம்முனு சொல்லி தலைய மட்டும் ஆட்டியிருந்த.. சொன்ன நாக்க ஆட்டுன்ன தலைய இங்கேயே வெட்டி போட்டு இருப்பேன்!! அவ என் பொண்டாட்டி!! இந்த ராஜராஜ சோழனின் அரசி டா அவ!! இன்னொரு முறை அவ பக்கத்துல உன்னை பார்த்தேன் அவ்வளவுதான்!!” என்று நாக்கை மடித்து ஒற்றை வரலை நீட்டி நெஞ்சை நிமிர்த்தி அவன் பேசிய தோரணையில் உள்ளுக்குள் ஆட்டம் கண்டது சஞ்சய்க்கு.
“இல்ல நீ பொய் சொல்ற? அவ அப்படி எல்லாம் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா.. அதுவும் என் குழந்தையை வச்சுக்கிட்டு” என்றதும்,
“அப்போ உனக்கு சந்தேகமா இருக்கு அப்படித்தானே?” என்றவன்..
“ஏய்..!! இவ பேரு நம்ம வாய்க்குள்ள வந்து வேற தொலைய மாட்டேங்குதே..” என்று அவன் புலம்ப அவன் தோளில் வாகாக அமர்ந்திருந்த சின்ன குட்டி சிரிக்க..
“கண்ணம்மா இங்கே வா!” என்றதும் அவளும் கண்களில் ஒரு முறைப்போடு தான் அவன் அருகே வந்தாள். அது சஞ்சய் வந்த போது இருந்த வெறுப்பான முறைப்பு அல்ல விருப்பான முறைப்பு!!
அட!! முறைப்புல கூட வெறுப்பு விருப்பு என்று இருக்குதா என்ன?
இருக்குதே!! நமக்கு பிடிக்காதவர்களிடம் காட்டும் முறைப்பு வெறுப்பான முறைப்பு!! நமக்கு பிடித்தவர்களிடம் கொஞ்சலாக காட்டும் கோபம் கலந்த முறைப்பு விருப்பான முறைப்பு!!
“ரிதி குட்டிமா.. கண்ண மூடு” என்றதும் ஏன் எதற்கு என்று மறு பேச்சு கேட்காமல் தந்தை சொன்னதை அழகாக செய்தது அந்த நான்கு வயது அவன் இளவரசி!!
அருகில் நின்றவளின் முடியை பின்னால் எட்டிப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன்.. சுற்றியுள்ளவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அவள் இதழ்களில் இசை பாடினான் அவனது ஸ்டைலில் நச்சென்று இச் ஒன்றை!!
அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் அனைவரும் ஆவென்று வாயை பிளக்க… சஞ்சய் அதிர்ந்து பார்க்க..
இதழ்களில் இருந்து இதழ்களை பிரிக்காமல் அவனை ஒற்றை விரல் கொண்டு போ என்று சைகை செய்ய..
தாண்டவன் கூட வந்திருந்த படை சஞ்சய்யும் அவனது ஆட்களையும் அழகாக பேக் செய்து.. அழகுக்கு ரிப்பன் கட்டி.. ஊர் எல்லையில் விட்டு விட்டு வந்தது!!
“விடு.. விடுங்க…” என்றவள் அவன் பிடியில் இருந்து விலக.. “அட இருடி!! நானே இரண்டு வருஷம் கழிச்சு இப்ப தான் ஒரு கிஸ் பண்றேன்.. அதையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு!” என்றவன், சன்னாசியிடம் கண்களை காட்ட.. அடுத்த நிமிடம் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அப்பிட்டானார்கள்!! குழந்தையோடு ஷப்னாவும்!! தாண்டவனின் படைகளும்!!
விரல்களால் அவள் தாடையை மெதுவாக நெருங்க.. தன்னை நெருங்கும் அந்த விரல்களை அவள் மிரட்சியோடு பார்க்க.. அவனோ விரல்களால் இறுக்கி அவள் தாடையை தன்னை நோக்கி இழுத்தான்.
மிரட்சியோடு நோக்கிய மான் விழிகளை அவனின் விழிகள் கவ்வி விழுங்கிக் கொண்டது.
தாடையில் அழுத்தம் கூட கூட.. அவள் கண்களில் இப்பொழுது பய ரேகை.. அதை ரசித்து பார்த்தான் அவன்.
மெல்ல அவனது பார்வை அவளது பிறை நெற்றியை அளந்து..
காண்டீபனின் வில்லென வளைந்து நின்ற புருவங்களை தாண்டி.. மருளும் மான்விழிகளை உள்வாங்கி.. கனிந்த கன்னங்களை கடிக்கும் எண்ணங்கொண்டு.. துளி வைரத்தில் மினுக்கும் மூக்குத்தி அணிந்த மூக்கை சீண்டி.. மீன் குஞ்சு வாயென ஓவென திறந்திருந்த அவளின் இதழ்களில் வந்து நின்றது அவன் அந்த பார்வை.. பொல்லா ரசிக்கும் பார்வை!!
அதுவும் இவன் தாடை பிடித்த அழுத்தத்தில் இன்னும் இதழ்களை பிளக்க.. அந்த பிளந்த இதழ்களுக்கு இடையே கனக்கச்சிதமாக அவனது முரட்டு இதழ்களை கொண்டு வந்து நிறுத்தி இருந்தான்.. அழுத்தமாக!!
கேகே சொன்ன அந்த ஒற்றை முத்தத்தின் அர்த்தம் நேத்ராவுக்கு புரிவதாய்!!
இச்சுக்கள் தொடரும்….
