மீமிகை அழகியே
அத்தியாயம்-12
மலர் ஹாஸ்பிட்டல்ல இருந்து வெளியே வரவும்…பார்பி என்று பின்பக்கமிருந்து தர்ஷித் அழைக்கவும்…ஒரு நொடி அப்படியே தர்ஷித் இங்க வந்திருக்காங்களா? என்று சந்தோஷத்தில் திரும்பி பார்த்தவள், ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றுவிட்டுவிட்டாள்,சட்டென்று தன்னை திடபடுத்திக்கொண்டு…மெதுவாக தன் தாயைப் பிடித்து நடந்தாள்.
அதைப்பார்த்த செழியனோ நான் பஞ்சாயத்துல பிராது குடுத்துட்டேன்மா;
அந்த மாமியார் கிழவியோட பேரனாம் இவன்…அதான் உங்கம்மாவோட அண்ணன் மவனாம், அவன் அங்க ஒரு வெள்ளைக்காரிய வச்சிருந்தனாம் அதுல பொறந்த பையனாம்.
அந்த பய வந்தப்பிறகுதானே தெரியுது
எல்லாம் என் பிள்ளையே மயக்கி ஏமாற்றி படிக்க விடாம பண்றதுக்குனு அவங்க போட்ட ட்ராமானு… அதான் பஞ்சாயத்தில் போய் பிராது குடுத்துட்டு வாந்துட்டேன்.
நான் ஏதோ உங்க அம்மாவா கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணின மாதிரி என்ன பஞ்சாயத்தில் வச்சு என்ன பாடு படுத்தினான் அவன்…
அதான் அவன் பிள்ளைய நான் கேவலப்படுத்தலனா பாரு என்று தன் மீசையை தடவிக்கொண்டார்.
சிறிது தூரம் சென்றதும் பின்னாக நின்றிருந்த தர்ஷித்தை மலர் திரும்பி பாரக்க, பார்த்த அவளின் கண்களில் என்ன இருந்ததோ அதைப் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன் தலையை பிய்த்துக்கொண்டான்.
ஐயோ என்ன சொல்லவர்றானுத் தெரியலையே என்று.
அடுத்த நாள் காலையில் பஞ்சாயத்து கூடியது.
செழியன், பார்த்திபன், வாணி அவளது அருகில் மலர் என்று ஒரு பகக்மாக நின்றிருந்தனர்
அவர்களுக்கு எதிரில் சீதாலெட்சுமி தர்ஷித், பாலச்சந்தர் மதியழகி, மற்றும் வீணா நின்றிருந்தனர்.
பாஞ்சாயத்து தலைவர் செழியனை அழைத்து என்னப்பா நீதான பிராது கொடுத்தது. பிராது என்னனு ஊர் மக்கள் எல்லோருக்கும் கேட்கும்படி தெளிவா சொல்லுப்பா என்னு சொல்லவும்.
செழியன் தன் மகளோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே என்று வருத்தத்துடன் இருந்தவர்,அவயிடம் இப்போது பழி உணர்ச்சியும் தலைதூக்கியிருந்தது.
அதனால் மலரின் மனதினை உணராமல் இப்படி கொண்டுவந்துவிட்டுவிட்டார்.
என் பொண்ணு படிக்கப்போன இடத்துல இந்தப் பையன் என்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிறேனு காதலிச்சு ஏமாத்திட்டான்.இப்போ என் பிள்ளை அதை புரிஞ்சுகிட்டு இங்க வத்திட்டா…பின்னாடியே வந்து தொல்லை பண்றாங்க.
பையன் யாருனு விசாரிக்கும்போதுதான் தெரிஞ்சது அவன் வடக்குவீடு பாலசந்தரோட பையனு…
அதுதாங்க என்னனு கேட்டு விசாரிச்சுட்டு…அதுக்குப்பிறகு போலிஸ்ல கம்பளைண்ட் கொடுக்கணும்..நீங்களே விசாரிங்க என்றதும்.
மலருக்கு அழுகையை
அடக்கமுடியவில்லை, நம்ம நிலமை இப்படியாகிட்டுதே என்றும்;நம்ம எல்லாத்துலயும் நிதானமா இருந்திருக்கலாமோ என்றும் நினைத்து அழுதாள்.
அவள் அழுகையை அந்த பஞ்சாயத்தார் பார்த்து.செழியன் சொல்றதுதான் உண்மை போல பொம்பளை பிள்ளை இப்படி அழுதே என்று மனம் நெகிழ்ந்தனர்.
அதற்குள்ளாக தர்ஷித் எதோ பேச வர, யாரு ப்பா இந்த பையன் நம்ம ஊருக்குப் புதுசா இருக்கு, நம்ம ஊருல பார்த்தமாதிரி இல்லையே? என்று கேள்விகேட்கவும்.
பாலசந்தர் முன்னாக வந்து, அது என்னோட மூத்தபையன் தர்ஷித் ரேயான் லோரண்ட்.
எனக்கும் என் மூத்த பொண்டாட்டியான பிரன்ஸ் நாட்டை சேர்ந்த டெல்ஃபினா லோரண்ட்டுக்கும் பிறந்த மகன்,இது அந்தநாட்டு முறைப்படி கல்யாணம் நடந்து பிறந்த பிள்ளை.
ஊரில் உள்ள அத்தனை பேரும் வாயில் கை வைத்தனர் அதிர்ச்சியில். சத்தியமூர்த்தி ஐயா பையனா இப்படி என்று…
உடனே ஓஓஓஓ…அப்படியா சங்கதி உடனே மதியழகியை அழைத்து,உனக்கு உன் வீட்டுக்காரருக்கு ஏற்கனவே பொஞ்சாதியும் பிள்ளையும் இருக்கறது தெரியுமா?
அவரோ ஆமா என்று தலையாட்டவும்..
அப்புறம் ஏன் இந்த விசயத்துக்காக பிரது கொடுக்கலை…உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்காங்க,அதுக்காக நீ ஏன்மா பஞ்சாயத்துல பிராது கொடுக்கலை? என்று கேட்க.
அது முடிஞ்சுப்போன விசயம் அதுவுமில்லாம நான்தான் இரண்டாவது பொண்டாட்டி…நியாயமா பார்த்தால் இவங்க மூத்த பொண்டாட்டிதான் இங்க வந்து பிரது கொடுத்திருக்கணும் தேடி வந்து.
அவங்க நல்ல மனசோ என்னவோ அதை செய்யலை…அவங்க இரண்டுபேருக்கும் இடையில போன நான் எதுக்கு பிராது குடுத்து எல்லார் வாழ்க்கையையும் சிக்காலாக்கிக்கணும் அதான் கொடுக்கலை…
அதைவிட இப்போ முக்கியமானது எங்க பிள்ளையோட வாழ்க்கைத்தான்.அதனால அத என்னனு பார்த்துவிடுங்க…
நம்ம ஊரு அதனாலதான மதிச்சு இங்க வந்து நிக்கிறோம் நீங்களா பார்த்து பேசி இரண்டுபேருக்கும் கல்யாணத்தை முடிச்சுவிடுங்க. அவங்க வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் என்று பேசிவிட்டு அமைதியாக தன் மாமியாரோடு வந்து ஒட்டி நின்றுக்கொண்டார்.
இந்தப் பேச்சை தர்ஷித்தும் எதிர்பார்க்கவில்லை,பாலச்சந்திரன் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பேசுவாளா என்று பாலச்சந்தர் தன் மனதிற்குள் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
மதியழகி பேசியதும் வாசவம்தானேப்பா முடிந்துபோன விஷயம் முடிந்து போனதாக இருக்கட்டும். இப்போது செழியன் கொடுத்த பிராதுவை மட்டும் விசாரிப்போம் என்றவர்கள்.
ஏய்..பிள்ளை முன்னாடி வா என்று மலரை முன்பாக வரச்சொல்லி அழைக்கவும் சென்றவளிடம்”அந்தப்பையன்தான் உன்னை காதலிச்சு ஏமாத்தினவனா?
மலரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் தர்ஷித்தின் முகத்தினைப் பார்த்து ஆமாம் என்றாள்.
உடனே தர்ஷித்தை பார்த்து அந்த பிள்ளை சொல்றதெல்லாம் உண்மையா?எனக் கேட்கவும்.
“இல்லை”என்றான்.
நல்லபாம்பு படமெடுத்ததுபோல விறுட்டென்று தன் தலையை நிமிர்த்தி பார்த்தாள் மலர்.
பெரியவர்களும் என்ன இது புது குழப்பம்னு யோசிக்க…
என்னப்பா சொல்ற,அந்தப்பொண்ணு நீதானு சொல்லுது நீ இல்லைனு சொல்ற, யாரு சொல்றது நாங்க நம்புறது?
அவளது கண்களையே பார்த்திருந்தவன்”அவளை காதலிச்சு ஏமத்தலை அவளை இப்பவும் காதலிக்குறேன், அதைவிட நாங்க கதாலிக்க மட்டும் செய்யலை, எங்க ஊரு முறைப்படி கல்யாணம் செய்துட்டு ஒன்னா வாழ்ந்தோம்…அவங்கப்பா அனுப்பின கௌதம் என்ற பையன் வந்திட்டுப்போன பிறகு,அவ தீடீர்னு சண்டைப்போட்டு இங்க வந்துட்டா, என் மனைவிய திருப்பி என்கூட அழைச்சிட்டு போக வந்திருக்கேன்,அவளை சமாதானப்படுத்தி என்கூட அனுப்பி வைங்க என்று அழுத்தம் திருத்தமாக தன் முடிவை சொல்லவும்.
மலருக்கோ அதிர்ச்சி அதைவிட செழியனுக்கும்… என்னடா இது நம்ம ஒரு ரூட் போட்டா இந்தப் பைய வேற ரூட் போடுறான் என்று கோபத்தில் கொந்தளிக்க.
பெரியவர்கள் அதெப்படிப்பா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழந்தீங்கனு நாங்க நம்புறது என்று சூசகமாக கேள்விகள் கேட்க…
அசருவானா நம்ம தர்ஷித்து…இந்தியா வந்தப்பிறகு மலருதான் என் உசுருனு பாடுறளவுக்கு ஞானோதயம் வந்திட்டுதான…அப்புறம் நாங்க கட்டம் கட்டிருவோம்ல என்ற ரீதியில் நின்றிருந்தவன் ஆதாரமா வேணும்…காண்பிக்குறேன் என்று தனது மொபைலை எடுத்து காண்பிக்க.
அதில் அன்று பாரீஸ் கதீட்ரல் டோம் ஆலயத்தில் வேண்டிக்ககொண்டாளே மலரு ,அங்க வச்சு தர்ஷித்கூட எடுத்த போட்டக்களும்…அவளது கையைப் பிடித்தவாறு எடுத்துக்கொண்ட போட்டக்களும் இருந்தன.
அந்த சர்சில் வேற ஒன்னுமில்லை வேண்டிக்கொண்டு எழுந்த மலரின் கை வேகமாக அங்குள்ள பெஞ்சில் பட வேதனையில் துடித்தவளின் விரலைப் பிடித்து தடவிக்கொண்டிருந்தான். அப்போது அவளது கையில் உள்ள மோதிரத்தை கழட்டி தடவிவிட்டு அதைப்போடும்போது எடுத்த போட்டோதான் அது,அதுவிட இருவரும் ரொம்ப நெருக்கமா எடுத்த போட்டோக்களும் இருந்தன…உபயம் டார்சன் மஹாராசாதான்.
“எப்பா செழியா…புள்ளை ஆதாரதத்தோடத்தான வந்திருக்கான்.அதுல வேற அத்தை மக உறவுதான.அந்த பிள்ளை ஏமாத்தலைப்பா…நம்ம பிள்ளைதான் சண்டைப்போட்டுட்டு வந்திருக்கு, அதனால இவ்வளவு தூரம் ஆகிட்டதுனால பேசாம நம்ம ஊரு முறைப்படி அவங்க இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவோம் என்ன சொல்ற என்றதும்…அவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
அதற்குள் தர்ஷித் நான் அவளை உங்க ஊரு முறைப்படி என்றவன் இல்லை இல்லை… மறுபடியும் திருத்தி, நம்ம ஊரு முறைப்படி தாலிக்கட்டி கல்யாணம் பண்ணிக்கறேன். நான் தாலி எல்லாம் தயாரா கொண்டு வந்திருக்கேன் என்று அதை வெளியே எடுத்துக் காண்பித்தான்.
அதைப்பார்த்த பஞ்சாயத்து பெரியதலைகள் சிரித்தனர். கூடியிருந்தவர்களும் பயபுள்ளை படு வேகமாக இருக்குய்யா…சீக்கிரம் தாலிக்கட்டி கல்யாணத்தை முடிச்சி விடுங்க இல்லைனா…ரொம்ப சிரமமாயிடும்பா என்று தங்களுக்குள் பேசி சிரித்தனர்.
அதற்குள் பார்த்திபனோ தனது மாமன் மகளான வீணவை வைத்தக் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஹப்பா தக்காளி மாதிரி தளதளனு வந்து இறங்கியிருக்காளே.ஸ்ஸ்ப்பா என்ன அழகா இருக்கா…ஆனாலும் கொஞ்சம் குந்தானிதான் பரவயில்லை அதுவும் அழகாகத்தான் இருக்கு.
மலரு இவனைக் கல்யாணம் பண்ணிகிட்டானா பேசாம, மாமாகிட்ட நம்மளே தைரியாமா பொண்ணுக்கேட்டு போயிடணும்,கோவைப்பழம் மாதிரி இருக்கா எவனாவது கொத்திட்டுப்போறதுக்குள்ள நம்ம வேலி போட்டு வைக்கணுமே.
ஐயோ…வாத்தியாரு உன் மனசு ஏன்டா இப்படிப்போகுது…கண்ணை அங்கயிருந்து விலக்கு விலக்கு என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு முகத்தை திருப்பி தன் தங்கையைப் பார்க்க..தங்கையோ யாரையோ முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
யார இப்படி முறைக்குறா என்று பார்க்க,நம்ம தர்ஷித்தைதான்…ஆனால் அவனோ அவளை ஆர்வமாக காதல் பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பஞ்சாயத்தார் ஒரு முடிவுக்கு வந்து” நீ கொடுத்த இந்த பிராது செல்லாது…அந்த பையன் உன் பிள்ளைய கல்யாணம் பண்ணிருக்கான். நியாயபப்டி அவன்தான் உங்கமேல பிராது கொடுத்திருக்கணும்.
அதனால பஞ்சாயத்து முடிவு என்னனா…தர்ஷித்து நம்ம ஊரு முறைப்படி மலருக்கு தாலிகட்டா தன் மனைவியா இங்க இருந்து கூட்டிட்டுப்போகலாம் என்று தீர்ப்பு சொல்றோம் என்றதும்.
வேறு வழியின்றி எல்லோரும் அமைதியாக இருக்கவும் தர்ஷித்தை தாலி கட்ட சொன்னார்கள்.
சீதாலெட்சுமிக்கு சந்தோஷம் தன் பேரனின் வாழ்க்கை ஒருவழியாக நல்லமுடிவுக்கு வந்தது என்று…அது சிறிது நேரங்கூட நிலைக்கவில்லை.
தர்ஷித் தாலிகட்ட அருகில் செல்லும்போது அதை பிடுங்கி எறிந்தவள்” இங்க வந்த அடுத்த நாளே உயிரோட இருக்கக்கூடாதுனு முடிவோடத்தான் அரளிக்காய் சாப்பிட்டேன்.அப்போ நான் செத்துப் போயிருந்தா,இந்தப் பத்து நாளுல
என்னைப் புதைச்ச இடத்துல புல்லுக்கூட
முளைச்சிருக்கும் தெரியுமா…அப்போ யாருக்கு வந்து தாலிக்கட்டிருப்ப.
என் பிணத்துக்கா? இல்லை என் கல்லறைக்கா? இப்போ எப்படி வந்த.
உடனே அவளது கையைப் பிடித்து அப்படி சொல்லாத பார்பி. உண்மையா உன் காதலை உணர்ந்து; என் காதல் நீ மட்டும்தானு தெரிந்து வந்திருக்கேன்…பார்பி நீ இல்லைனா நானும் இல்லைடா என்று இப்போது அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தவும் அவளது உடலில் அவனது தொடுகையினால் வந்த நெகிழ்ச்சியை கள்வனவன் உணர்ந்துக் கொண்டான்.
“பார்பி மை ஸ்வீட்டி யூ மீன் டு மை வேர்ல்டு.ஐ லவ் யு டியர்” என்றதும் கண்களில் கண்ணீர் வந்தது.
ஹைய்யோ சுற்றி இருந்த ஜனங்களுக்கு இது கண்கொள்ளா காட்சியாக இருக்க…
பார்த்திபனுக்கோ வீணவைப் பார்த்து நம்ம எப்படி அவகிட்ட இப்படி சொல்லப்போறோமோ என்று ஏங்கி பெருமூச்சு விட்டான்.
அப்படியே அவனது பேச்சிலும் செயலிலும் மயங்கியவள்..சட்டென்று மாயவலை அறுந்த உணர்வில் அவனைத் தள்ளிவிட்டு…
இப்போ வந்து இவ்வளவு சொல்ற நீங்க என்கூட வாழும்போது எந்த உணர்வும் இல்லாம என் உடம்பை, உடம்பை என்று விம்மியவள்…எப்படி தொட்டீங்க வலியவந்து கிடைக்குதேனுதான பயன்படுத்திகிட்டீங்க…
ஆனா நான் உங்ககூட வாழும்போது ஒவ்வொரு நாளும் நீங்கதான் எல்லாம் என் வாழ்க்கையிலனு நினைச்சு நினைச்சுத்தான் வாழ்ந்தேன் உங்களை என்னோட கணவனாகத்தான் நினைச்சேன்…இப்போ அதை நினைச்சா அறுவருப்பா இருக்குது.
எப்போ கல்யாணம் வேண்டாம் சேர்ந்து மட்டும் வாழ்வோமுனு சொன்னீங்களோ…அங்கயே என் காதலுக்கு இடமில்லாம போயிட்டுதான…
அப்போவே என் காதலும் செத்துப்போச்சு நானும் இப்போ செத்துப்போய்தான் இருக்கேன்…இப்போ இந்த உடம்பு உங்களுக்கு பயன்படாது…அதனால இந்த தாலிக்கட்டுறதுலயும் எந்த புண்ணியமும் இல்லை,நீங்க எனக்கு வேண்டாம் என்று சொன்னவள் அப்படியே முட்டிப்போட்டு அழுதாள்.
தர்ஷித்திற்கு புரிந்தது அவளது மனவேதனை அப்படியே அமர்ந்து இருந்தவளின் கழுத்தில் எதோ விழுவதுப்போல இருக்கவும் என்ன என்று நிமிர்ந்து பார்க்க.
தர்ஷித்தோ மலர் தூரமாக எறிந்த தாலியை எடுத்து வந்து அவளது கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவள் எழுந்து அவனது நெஞ்சில் அடித்தாள்,ஏன் இப்படி பண்ணின…நீ எனக்கு வேண்டாம்னுதானா சொன்னேன்..சீட்டர்.நீ தாலிக்கட்டினா உன்கூட வாழ்ந்திருவேனு நினைக்காத நீ எனக்கு வேண்டாம்னா வேண்டாம்தான் போ என் வாழ்க்கையில இருந்து…உன்னாலதான் என் படிப்பும் போச்சுது என் இலட்சியமும் போச்சுது போ போ என்று விரட்ட.
அவனோ அவளது கையைப் பிடித்துக்கொண்டவன்” உன்கூட சேர்ந்து வாழ்ந்தாலும் சரி வாழலைனாலும் சரி. நீ தான் என் மனைவி…நான் இங்கதான் கொஞ்சநாள் இருக்கப்போறேன் பார்த்துக்கலாம் என்றவன் அமைதியாக தன் க்ரானியின் அருகில் வந்து நின்றான்.
பஞ்சாயத்து பெருசுக தங்களது தலையைப் பிச்சுக்கிட்டனர்…என்னயா இது புதுசு புதுசா பிரச்சனையை கிளப்புறாங்க என்று. அதில் ஒருத்தர் உனக்குத் தெரியாதுடா இந்த இரண்டு குடும்பமும் இப்படித்தான்யா…இவனுங்க அப்பனுங்களும் இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இபப்டியேதான் பண்ணுனானுங்க…இப்பவும் இதேதான் தொடருது.
ஓஓ..எப்படா பஞ்சயத்தை முடிக்கப்போறீங்க சீக்கிரம் முடிங்கய்யா…இல்லைனா நம்ம ஜோலிய முடிச்சுருவங்கப்போல என்று நொந்தே போயினர்.
எம்மா மலரு நீ என்ன சொல்ற தாயி.அவன் தாலியே கட்டினாலும் உன் முடிவுதான்மா இறுதி முடிவு…அவன்கூட வாழப்போறதும் போகாததும் உன் விருப்பம் என்று கேட்கவும்
மலரோ “எனக்கு அவங்ககூட வாழ விருப்பமில்லை”
தர்ஷித்தின் இதயம் அப்படியே நொருங்கியது…
சரிம்மா உங்க இரண்டு பேருக்கும் ஒருவருஷம் தர்றோம் அதுக்குள்ள நீங்க சேர்ந்து வாழற வாய்ப்பு இருந்தா வாழலாம் இல்லைனா…பிரிச்சு விட்ருவோம் நம்ம ஊரு வழக்குப்படி…பஞ்சாயத்து முடிஞ்சுது இதுதான்பா இறுதி தீர்ப்பு என்று முடித்து கிளம்பிவிட்டனர்.
எல்லோரும் அவரவர் வீடு நோக்கி நடக்க…தர்ஷித் மலரை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.மலர் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
இங்கு பார்த்திபனோ வீணா என்ன செய்யுறா என்று ஒரு கண்ணும்,தன் தங்கயை தர்ஷித் அழைப்பானா என்று மறுகண்ணிலும் பார்த்துக்கொண்டிருந்தான்.
தொடரும்…
