பீர்க்கங்காய் தெக்கு
தேவையான பொருள்:
பீர்க்கங்காய் -1
வெங்காயம்-1
வரமிளகாய்-4
தக்காளி -2
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
துறுவிய தேங்காய் சிறிதளவு
செய்முறை :
1 ) வாணலியில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் மற்றும் சோம்பு இரண்டையும் சேர்த்து தாளிக்கவும்.
2 ) பிறகு வரமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
3 ) பீர்க்கங்காயை சேர்த்து நன்றாக மிதமான தீயில் வேகவைக்கவும்.
4 ) தக்காளியை சேர்த்து வதக்கவும்.அது வதங்கிய உடன் அடுப்பை அணைக்கவும்.
5 ) வதக்கிய கலவையை ஆறவைத்து உப்பு மற்றும் துறுவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
