மயங்குறேன் மனமோஹனா
20
மயங்குறேன் மனமோஹனா…
ஜியா ஜானவி ❤️
ஜெயந்தனுக்கு அவன் செல்லும் இடங்களில் எல்லாம் தன் மனைவியையும் கூட அழைத்து செல்ல விருப்பம் இல்லை. அதே நேரம் அவளுக்கு பாதுகாப்புக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கை உடையவனாகம் இருப்பது இரண்டே பேர்!! ஒன்று ஸ்ரீதரன்! மற்றொன்று தேவராஜ்!!
ஸ்ரீதரால் இவர்கள் அருகில் வெகு நாள் இருக்க முடியாது. ஆனால் இதே தேவராஜ் என்றால் ஜூனியர் என்ற பெயரில் இவனோடு வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் தான் ராஜ்-ஐ இவர்களோடு இருக்க பணித்தான் ஜெயந்தன்.
அவ்வப்போது இந்த கேஸ் பற்றிய செய்திகளையும் இரவில் அவனோடு உரையாடுவான். நம் நாயகி தான் கேஸ் என்றாலோ.. நோட்ஸ் என்றாலோ.. தெறித்து ஓடுவாளே! பின்னே எங்கே இருந்து இதில் நாட்டம் கொள்வது.
இப்பொழுது ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் தேவராஸ்க்கும் இந்த கேஸ் பற்றி தெரியும். ஆனால் ஒன்றை தவிர.. அது வாரிசு!!
நிகாவிடமும் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்தான் ராஜை. சில சமயம் நிகாவோடும் துணைக்கு அனுப்பி வைத்தான். கூடவே இவர்கள் யாரும் அறியாமல் நிகாவுக்கும் சதுர்ஷனாவுக்கும் அவனது வழக்கமான சீக்ரெட் ஏஜென்ட் மூலம் ஷேடோ ஒன்றை போட்டான். அவ்வப்போது மனைவியோடு நிகாவின் வீட்டுக்கு சென்று வத்சலா பாட்டியையும் பார்த்து வந்தான்.
இவனை பின் தொடர்ந்தவர்கள் குழம்பித்தான் போனார்கள். கேஸில் மிகத்தீவிரமாக இருக்கிறான் என்று நினைத்தால் மனைவியோடு ஊர் சுற்றுவான். இல்லையென்றால் நிகா வீட்டுக்கு சென்று விடுவான். இரவில் மட்டுமே அவனது கேஸ்களை பார்த்து அனைத்தையும் முகேஷூக்கும் பாலாவுக்கும் இமெயிலில் அனுப்பி விடுவான்.
முதல் சிறிது நாட்கள் இவன் என்ன திட்டம் போடுகிறானே என்று யோசித்து யோசித்து குழம்பிப்போனது அருணாச்சலம் அண்ட் கோ. “இனி அவன் என்ன திட்டம் தீட்டுவான் அதற்கு என்ன நம்ம பதிலடி கொடுப்போம் என்பதை நிறுத்திவிட்டு.. நாமே முதலடியை எடுத்து வைப்பதுதான் நல்லது!” என்று அருணாச்சலம் கோடு போட அதனை ரோடாக்க முயன்றனர் அவனது இரு மகன்களும்.
“கண்டிப்பா ஜெயந்தன் மேலோ அவன் சம்பந்தப்பட்டவர்கள் மேலோ நாம் கையை வைத்தால், அது வேற பிரச்சினையை இழுத்து விடும். ஆனால் இங்கே நிகர்ணிகா மேல் நாம் கை வைத்தால் என்ன?” என்று அருணாச்சலம் கேட்க..
“சூப்பர் பா..”
“கரெக்ட்.. அவளை டார்கெட் பண்ணுவோம்!”
“ஆனா.. கடத்துறது எல்லாம் பழைய ஸ்டைல். இவ்வளவு நாள் என் அண்ணன் பேத்தினு விட்டு வைச்சது தப்பா போச்சு” என்றார் கோபத்துடன் அருணாசலம்.
“அப்பா.. அவளுக்கு கட்டாய தாலி கட்டுனா?” என்று ஒரு அறிவாளி கேட்க..
“டேய்.. அவ கூட இருக்கிறது வக்கீல்! நீ கட்டாய தாலி கட்டுனா போடானு சொல்லி அறுத்து எறிஞ்சிட்டு, ஏழு வருஷம் உன்னை உள்ள தள்ளிடுவான்” என்று மகனை மிரட்டினார் அருணாச்சலம்.
“இல்லனா அவள என்னை தவிர வேறு யாரும் கல்யாணம் பண்ணிக்க முடியாதப்படி செய்தால் என்ன?” என்று ஒரு அசிங்க சிரிப்புடன் தந்தையிடம் கேட்டான் மற்றொரு அறிவு வாளி..
“ஆமாம் டா.. இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ அப்படின்னு நினைச்சு உன் கூட வாழ வருவான்னு பாக்குறியா? உன்னை கண்டதுண்டமாக வெட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பா.. அடுத்த கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருப்பா! எங்க இருந்துடா இப்படி நாராசமான ஐடியோ எல்லாம் கொடுக்குறீங்க? எனக்குன்னு வந்து பொறந்திங்க பாரு!” என்று தலையிலடித்துக் கொண்டார் அருணாச்சலம்.
“எமோஷனல் பிளாக்மெயில் பண்ணனும்.. அதுல மட்டும்தான் பொண்ணுங்க விழுவாங்க! பொண்ணுங்கள அறிவு சார்ந்து அடிப்பதை விட மனம் சார்ந்து அடிக்கனும். அது தான் அவங்களோட வீக்னஸ்!”
என்று கண்கள் குரோதத்துடன் மின்ன மகன்களிடம் தனது திட்டத்தை விவரித்தார் அருணாச்சலம்.
“இது ஒர்க் அவுட் ஆகுமா?” என்று ஒருத்தன் சந்தேகத்தோடு கேட்க..
“கண்டிப்பா ஆகும்!! நான் தான் சொன்னேனே எமோஷனல் நல்லாவே வேலை பார்க்கும்னு” என்று அவர் நக்கலாக கூற.
“அப்ப சரி! இந்த வேலையை நான் பார்த்துக்குறேன்!” என்ற அவரின் இரண்டாவது மகன், ஜெயந்தன் அருணாசலத்தின் சதுரங்க ஆட்டத்தில் முதல் காயான நிகாவை வீழ்த்த சென்றான்.
விழித்திடுவானா? அல்லது அவனை வீழ்த்த விடுவானா? ஜெயந்தன்! காலத்தின் கையில்!!
அன்றிரவு நிஷாவின் மொபைலுக்கு ஒரு ஆடியோ வர. அதை பெரிசாக எல்லாம் எடுத்துக் கொள்ளாமல் அழித்துவிட்டு அவள் தன் வேலையை பார்க்க சென்றாள். அடுத்து அரை மணி நேரத்தில் அவள் கேட்ட ஆடியோ வீடியோவாக உருமாறி அவளது மொபைலில் சிரித்துக் கொண்டிருந்தது.
அதை பார்த்து சற்று ஆடித்தான் போனாள் பெண்! வேர்வை துளிகள் முத்து முத்தாக உடலெல்லாம் பூத்திருக்க.. அறையில் இருந்து ஏசி கூட அதை குறைக்க முடியவில்லை. கையில் போனை போனை வைத்து வெறித்தவாறு தொப்பென்று தரையில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அதன்பிறகுதான் இதை ஜெயந்தன் இடம் கூறவேண்டும் என்று மூளை அறிவுறுத்த, அவசரமாக அவனுக்கு அழைக்க முனைய அதற்குள் பிரைவேட் நம்பர் என்று எண்ணில்லா அழைப்பு ஒன்று வந்தது.
அந்த எண்ணைப் பார்த்தவுடன் நெற்றி சுருங்க.. விழிகள் கலங்க.. தொண்டை வரள.. அட்டென்ட் செய்வோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டாள். இது மாதிரி ஒரு ஆடியோ அடுத்தது ஒரு வீடியோ அதற்கு பின் ஒரு போன்கால் என்றால் யூகிக்க முடியாத என்ன பெண் அவளால்?
வேறு வழி இல்லை என்று மெதுவாக அட்டென்ட் செய்து காதில் வைக்க..
இவள் ஹலோ என்று கூறும் முன்னே, ரோபோட்டிக் வாய்ஸில் கேட்டது அந்த புறம்.
நிபந்தனைகளைக் கூறி ஒன்று மீறினால் கூட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நடமாடும் என்று கோர சிரிப்புடன் அந்த அழைப்பு நின்றது.
அந்த வீடியோவில் இருப்பது ஃபேக் என்று அவளது மனம் அடித்துச் சொன்னாலும் அது பரவி.. அனைவரும் பார்த்து.. பேக் என்று இவள் உறுதிப்படுத்தும் முன், அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முன்.. என்னென்னவோ நடந்து விடக் கூடும். அதில் முதலாவதாக அவர்களின் பங்குகள் சரியக்கூடும். ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் இப்போதுள்ள பிரச்சினையிலேயே முணுமுணுத்து கொண்டு இருக்கின்றனர். இந்த விஷயம் வெளியே தெரிந்து, பங்குகள் சரிவு தொடங்கினால்?? இன்னும் நிலைமை மோசமாகும்! யார் வேணாலும் இவர்களின் பங்குகளை வாங்கலாம்!!
அவள் தாத்தா போதித்த அறிவு அவளுக்கு எப்படி தான் சொன்னது! இப்போதைக்கு அந்த கண் தெரியாத மனிதனுக்கு அடங்கிப் போவதை விட வேறு வழி இல்லை. இதை ஜெயந்தன் இடம் கொண்டு சென்றால் அவன் ஏதேனும் அதிரடியாக எடுக்கலாம் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீலாகவும் கூறலாம். இது ரெண்டுமே இப்போதைய நிலைமைக்கு ஆபத்தே!! என்று அன்றிரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து அவர்களின் கைப்பாவையாக ஆட முடிவு எடுத்தாள் நிகா!!
சதுரங்க ஆட்டம்!! இருவரில் யார் முதல் காய் நகர்த்துகிறார்களோ மற்றவர்களால் அது வீழ்த்தப்படும்! அல்லது மேற்கொண்டு முன்னேற முடியாமல் தடுக்கப்படும்!!
விழு அல்லது வீழ்த்து!! இதுதான் அதன் தாரக மந்திரம்!!
அந்த முதல் காய்க்கு தான் அருணாச்சலத்தின் எதிர்ப்புறம் இருக்கும் ஜெயந்தனும் காத்துக் கொண்டிருக்கிறான். தன் புறம் சகல விதமான முன்னேற்பாடுகளையும் தயார்படுத்திக் கொண்டு காத்திருக்கிறான். ஆனால் இதுவரை அவர்களின் பக்கம் எதுவும் மூவ் இல்லாமல் இவனும் வாரிசை நிரூப்பிப்பதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்துவிட்டான்.
அப்புறம் ஏன் இந்த அமைதி? உடனே இருக்கிற ஆதாரங்களைக் காட்டி வாரிசை நிரூபித்து ஷேர்ஸை அவருக்குக் கொடுத்து நிகாவின் பக்கத்தில் வலிமை சேர்க்கலாம் தானே? என்ற கேள்வி அனைவருக்கும் வரும்!!
ஆனால் இந்த அமைதிக்கு பின் தான் அவனின் வக்கீல் மூளையே!!
ஆம்!! அருணாச்சலம் அண்ட் கோ-வை ஒரேடியாக இந்த குழுமத்தில் இருந்து நீக்கம் செய்வதை தான் அவன் விரும்பியது. என்னதான் அவர்களை இப்போது அடக்கி ஒடுக்கி உட்கார வைத்தாலும், வெட்ட வெட்ட துளிர்த்து கொண்டேதான் இருப்பார்கள். அல்லது ஏதாவது பிரச்சனையை கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அருணாச்சலம் என்ற பெயர் இருக்கவே கூடாது வேதா குழுமத்திலும் குடும்பத்திலும். அது தான் அவனது டார்கெட்!!
அதுமட்டுமல்ல எப்பொழுதும் ஒரு குடும்பம் என்றால் 10 பேர் நல்லவர்களுக்கு ஆதரவு தரும் போது இரண்டு பேர் கெட்டவர்களுக்கு ஆதரவு தர தான் செய்வார்கள். அதுபோல குடும்பத்திலும் சில பேர் உண்டு. இப்பொழுது அமைதியாக இருந்தாலும் காலப்போக்கில் அவை காரணம் காட்டி முறை பசங்களுக்கு கல்யாணம் கொடுத்தால் தான் ஷேர்சட் வெளியில் போகாது என்றும் நிகாவுக்கு பாதுகாப்பு என்றும் ஏதேதோ காரணங்களை கூறி மற்றவர்களையும் குழப்பும் நவீன சகுனிகள் தான் அவர்கள்!!
அவர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக களையெடுக்க இந்த அமைதி!!
ருத்ரேஷின் ருத்ர தாண்டவம் முன் உள்ள பேரமைதி!!
என்றும் இல்லாத அதிசயமாக அன்று சீக்கிரமே விழித்த சதுர்ஷனா குளித்துவிட்டு வந்தவள், கண்ணாடி முன்னாடி நின்று ஈரக்கூந்தலை துவட்ட.. அவள் மனவானில் நேற்றைய கொஞ்சல்கள் கெஞ்சல்கள் என்று வரிசையாக வந்த போக நாணம் மேவிட, உதடுகள் கடித்து சிரித்துக் கொண்டாள். ஓர கண்ணால் துயில் கொண்டிருக்கும் தன் மாய கண்ணனை தான் பார்த்தாள்.
படுக்கையில் வெற்று மார்போடு இடது பக்கம் சரிந்து படுத்திருந்த கணவனை மெதுவாக நெருங்கினாள் மனையாட்டி!!
கேசங்கள் கலைந்து ஒரு ஒழுங்கு இல்லாமல் இருக்க.. கண்கள் இரண்டும் தூக்கமதில்.. பரந்து விரிந்த நெஞ்சோ ஆழ் துயிலில் ஏறியிறங்கி கொண்டிருக்க.. நேற்று அவள் முகம் தேடி தேடி முத்துக் குளித்த உதடுகளோ அழுத்தமாக மூடி இருக்க.. அவனது வனப்பான கைகள் இரண்டில் ஒன்று அவனது இடையிலும் மற்றொன்று தலையணையிலும் விஸ்தாரமாய் கிடந்தது.
அருகில் அமர்ந்து இஞ்ச் பை இஞ்சாக தன் மன்னவனின் அழகைத்தான் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை!!
அழகன் டா நீ!!
என் மனமோஹனன் டா நீ!!
செல்லக்குட்டி டா நீ!!
என் ஜெய் கண்ணா!!
என்று ஒவ்வொரு கொஞ்சலுக்கும் அவனது கன்னத்தை வழித்து எடுத்து தின்று கொண்டிருந்தாள் மாது!!
அவனது நெற்றியோடு நெற்றி முட்டி
“லவ் யூ டா மாமு!!” என்று அவள் கூறிட, அவளது ஈர நுதலோடு அவனின் சூடு சேர சிலிர்த்து பெண்ணுக்கு.
அவள் இதழ்கள் மெல்ல மெல்ல அவனது நுதலில் இருந்து இடம் பெயர்ந்தது. மூடி இருந்த அவளது விழிகளில் இவளது இதழ்கள் சற்று இளைபாற.. அந்த இதழ்களின் ஈர ஸ்பரிசத்தில் மன்னவனுக்குள் மன்மத அம்புகள்!!
பெண் அவளின் சேட்டை குறும்பு என்று அனைத்தையும் அவள் அறியாமல் ரசிப்பான் இந்த வக்கீல்!! வேலைக்கு சேர்க்கும் முன் அவளைப் பற்றிய புள்ளி விவரங்கள் அனைத்தும் அறிந்த தானே சேர்த்தான். ஆனாலும்.. இந்த தொடுதல் அதுவும் இத்தனை நாட்களில் முதல் முறையாக உரிமை கொண்டு அவளாக தீண்டும் தீண்டல்!! கண்கள் மூடி அந்த சுகமான ஸ்பரிசத்தில் திளைத்திருந்தான் இந்த கேடி வக்கீல்!! அவள் குளித்து உடை மாற்றும் போதே விழித்துவிட்டான். ஆனாலும் அவளது செய்கையை ரசித்துக் கொண்டிருந்தான்.
அடுத்து மெதுவாக அவளது கூர்மையான மூக்கிற்கு இறங்கிய அவளது மெல்லிய இதழ்கள் அங்கே முத்தத்திற்கு பதிலாக செல்லமாக கடித்தது.
கூர் மூக்கா!!
கோபக்காரா!!
என்று பாராட்டுப் பத்திரங்கள் வேறு!!
அதன்பின் கற்றை மீசையில் கவிபாடிய அவளது இதழ்கள்.. இதழ்கள் அருகே குனிய, இதழ்கள் இரண்டும் நெருங்கி விட்டாலும் ஏதோ ஒரு சின்ன வெட்கம்!!
பின் இதழ்களை ஒரு விரல் அளவுக்கு நகர்த்தி இருவருக்கிடையே விரலை நுழைத்து அப்போது முத்தம் வைத்தாள்.
அவளின் இந்த விளையாட்டை எல்லாம் சிரிக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் அந்த புண்ணியவான்!!
பின் இதழ்களை மெல்ல நகர்த்தி விரல்கள் கொண்டு அவனது தாடை கன்னங்கள் என்று வருடியவள் மெல்ல மெல்ல கழுத்துக்கு கீழே விரல்களால் கோடிட்டு வர… தொண்டை குழியில் மென்மையாக இறங்கியது அவளது தளிர் விரல், அவனோ அவளது செயலில் எச்சில் விழுங்க.. அவனது அசைவை கண்டு கள்ள புன்னகை பெண்ணவளிடத்தில்!!
மீண்டும் பயணம் செய்த ஆள்காட்டி விரல் அவனது நெஞ்சு ரோமங்களில் அலைய.. சிலிர்த்து போனான் காதலன். இதெல்லாம் இதுவரை அவள் அனுபவித்திராத புதுவகை உணர்வு.
காதல் கொண்டு மோகத்தில் முக்குளிக்கும் போது கூட இவனின் செயலே அபரிமிதமாக இருக்கும் அவளிடத்தில்!!
இன்று அவளின் சிறு தொடுகை கூட கூச்சமும் ஒருவித சிலிர்ப்பும் ஆணவனிடத்தில்!!
மங்கையவள் அவனின் நிலையை அறிந்தும் அறியாதது போலவே மன்னவன் மார்பினில் கோலங்கள் போட்டிட.. சிலிர்த்து அடங்கியது அவனது தேகம்.
உடல் விரைக்க..
மூச்சுகள் இறைக்க..
உச்ச பரவச நிலை!!
சட்டென்று அவளது கையை பற்றி தன் மீது போட்டு கொண்டவன், அவளை இடையோடு இறுக்கி அணைத்து கொண்டான்.
“என்னடி காலையிலேயே டெம்ட் பண்ணுற?” மூக்கை உரசியவாறு கேட்டவனை..
“ப்ராடு!! ப்ராடு!! தூங்கலையா நீங்க?” என்று சிணுங்கினாள்.
“குளிச்சிட்டு பக்கத்துல இப்படி கும்னு உட்கார்ந்து இருக்க.. மனஷன் அப்புறம் எப்படி துவங்குவான்? சும்மா உட்கார்ந்து இருந்தாலே எனக்கு தாங்காது இதுல கையால.. லிப்ஸால விளையாட்டு வேற.. சாதாரண மனுஷன் டி நானு” என்றவன் அவள் அடுத்த பேசும்முன் அவள் இதழ்களை கொய்த்திருந்தான்.
இதழ்களை வெகு நேரம் சென்றே விடுவித்தான். சது அவனின் மார்பில் தனது முகத்தை புரட்டி இதழ்களால் கோலமிட.. அவன் உடம்பு முழுவதும் ஒரு சுகமான மின்னதிர்வு ஓட.. ஒரு நொடி தன் முகத்தை அண்ணார்ந்து.. தலையைப் பின்னால் சரித்தபடி கண்களை மூடி கிறங்கினான்.
“ஷனா!! ஷனா!! ஷனா பேபி!!” என்ற முணுமுணுப்பு மட்டுமே அவனிடத்தில்!!
முகம் சிவந்து கனிய வெட்கப் புன்னகை காட்டியவளை தன் மீது இருந்து புரட்டி படர்ந்தான் அவன்.
வேறென்ன எப்பொழுதும் போல அவர்களது தெரபி தான் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது இளம் காலையில்!!
இந்த தெரப்பிக்கு பெயர் ரெப்ரெஷ்மெண்ட் தெரபி!!
மீண்டும் ஒரு குளியல் எடுத்து ஹாலுக்கு வர அங்கே ராஜ் காபி அருந்தி கொண்டே காலையில் கேஸ் கட்டுகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனருகில் அமர்ந்தவள் “டேய் ஐஞ்சு ரூபாய்க்கு நடிடானா. ஐயாயிரம் ரூபாய்க்கு நடிக்கிற?” என்று வியந்தாள்.
“உனக்கு எல்லாத்திலேயும் விளையாட்டுதான் தேவா! எவ்வளவு முக்கியமான கேஸ் தெரியுமா? நேற்றிலிருந்து என் மண்டை காயுது இந்த கேஸால! காலையிலேயே சீக்கிரமா கிளம்பி இதைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன். இதோட மூணு டீ உள்ள போனது தான் மிச்சம்!!” என்று நொந்து கொண்டே சொன்னான் அவன்.
அந்த கேஸ்கட்டை அவள் புறம் தள்ளி “நீ பாரு!!” என்று அவன் கொடுக்க..
“ஐயையோ என்னையும் உன் லிஸ்டில் சேர்க்காத!” என்று டீ குடிப்பதில் மும்மரமாக இருக்க..
“ஏய் ஏய் தேவா.. நேத்து உன் கூட நான் ஷாப்பிங் வந்தேன் தானே.. என் வேலை எல்லாம் ஒதுக்கி வைச்சு, இப்போ உன்னுடைய நேரம் நீ எனக்கு உதவி செய்! ஒழுங்கா பார்க்கலைன்னா சீனியர் கூடவே நான் கிளம்பிடுவேன். நீ மட்டும் இந்த பேய் பங்களாவில் தனியா இருக்கணும். எப்படி வசதி?” என்று அவள் மிரட்ட..
“எந்த பேய்க்கும் இந்த பேய் பயப்படாது!! போ! போ! உன்னுடைய ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானது நண்பா!!” என்று அவள் சொல்லி சிரிக்க..
“தேவா.. ப்ளீஸ் டி.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடி!!” என்று அவன் கெஞ்ச..
“சரி சரி கொடு பார்க்கலாம்!” என்று அவனது பைலை வாங்கிப் பார்த்தாள்.
அது ஒரு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான சொத்துப் பிரச்சினை.
இருவரும் சுற்றி இருக்கும் வீட்டையும் அதை சுற்றியுள்ள நிலங்களையும் சமமாக பிரித்து எடுக்க சொல்லி அவரது தந்தை உயில் எழுதி வைத்திருக்க..
வீட்டை நான் எடுத்துக்கிறேன் விளையாத நிலங்களை நீ எடுத்துக்கொள் என்று அண்ணன் தம்பியிடம் சொல்ல..
தம்பியும் அண்ணனிடம் அதையே தான் சொல்லுகிறான். “அவுட் ஆஃப் தி கோர்ட் முடிக்க என்ன செய்யலாம்?” என்று கேட்டான் ராஜ்.
“வீடு அடமானத்தில் இருப்பதாக சொல்லு இருவரிடமும். இந்த ஒரு வருசத்தில் இருக்கும் நிலங்களை இருவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து, விவசாயம் செய்து மகசூல் அதிகம் செய்து காட்டி விளைநிலங்களில் வரும் பணத்தைக் கொண்டு வீட்டை மீட்க சொல்லு” என்றாள்.
“இதனால் தாங்கள் கூற வருவது என்னவோ?” என்று ராஜு கேட்க..
அவங்க கேஸ் ஹிஸ்டரில இருந்தே தெரியுது ரெண்டு பேரும் முழுக்க முழுக்க சோம்பேறிங்க!! யாரும் நிலத்துல கை வைக்காமல் சொகுசாக வாழ்வதற்கு அந்த வீட்டை தான் பார்க்கிறாங்க.. ஒன்ஸ் அவங்க லாபம் பார்க்க ஆரம்பிச்சா அதிலிருந்து மக்கள் கண்டு தட்ட நிலங்களை ரெண்டு பேருமே விட்டுத்தர மாட்டாங்க, அதுக்கப்புறம் அவங்கவங்க வச்சிருக்கிற நிலத்தை அவங்களுக்கு கொடுத்துடு” என்று அவள் கூற..
“அப்போ வீடு?”
“அவனுங்களே நாங்க ஒரே வீட்டுல தனித்தனியாக இருந்திருக்கிறோம்னு சொல்லுவானுங்க டா” என்றாள்.
“எப்படி டி?” என்று அவன் அதிசயிக்க..
“ஏன்னா வீட்டை சுத்தி தான் நிலங்கள் இருக்கு. அதனால ரெண்டு பேருக்குமே அனுகூலமா தான் அவங்க முடிவு எடுப்பாங்க. எப்படி?” என்றவள் காலரை தூக்க.. “ஹாசம் டி!!” என்று புகழ்ந்தான் நண்பியை..
“எல்லாம் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்!” என்று குரல் கொடுத்தபடியே அங்கு வந்து சேர்ந்தான் ஜெயந்தன்.
“குட்மார்னிங் சீனியர்!!”
“குட் மார்னிங் ராஜ்!!”
“சார் இந்த கேஸ்..” என்று அவன் இழுக்க..
“ஷனா சொன்னபடி தான் நடந்தது. இதெல்லாம் ஒரிஜினல் கேஸ் கிடையாது இந்த கேஸ் மாதிரி தான். உங்களை ட்ரைன் பண்றதுக்கு” என்றான்.
“அதெல்லாம் ஓகே சார்! இவ எப்படி கரெக்டா பதில் சொன்னா? அதுதான் எனக்கு புரியல!” என்று நம்பி அவன் வார.. அவள் பாய்ந்து தன்னை தாக்க வரும் முன், ஜெயந்தன் பின்னால் போய் நின்று கொண்டான்.
“அவளுக்கு லாவை விட சைகாலஜி தான் நல்லா வருது ராஜ். இதையே கோர்ட் ஆர்கியூ பண்ண சொல்லு. இபிகோ செஷஸனு முழிச்சுடுவா! கோர்ட்ல போய் செக்ஸன்ஸ்ஸ் எல்லாம் பேச சொல்லுங்க திக்கி திணரும் அம்மணிக்கு!!” என்று அவனும் சேர்ந்து வார..
“உங்க இரண்டு பேரையும்…” என்று அந்த வீட்டுக்குள்ளேயே இருவரையும் விரட்டி விரட்டி துரத்தினாள் சதுர்ஷனா!!
மறுநாள் தேவராஜை நிகாவின் அலுவலகத்தில் விட்டுவிட்டு மனைவியோடு இவன் டெல்லியின் பிரபலமான கோவில் செல்ல..
அந்த மர்ம மனிதனின் முதல் கோரிக்கைப்படி ஆட ஆரம்பித்திருந்த நிகாவும் தேவராஜை அவர்களிடம் ஒப்படைத்தாள்.
மயக்க வருவான்..
