மகுடம் சூடவா மாதவா

This entry is part 8 of 8 in the series மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா-3

மகுடம் சூடவா மாதவா-3

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா-7


 

ஓடி ஆடி களைத்தவர்கள்
இன்னும் அவர்கள் கலவரத்தை முற்றுபெறச்செய்யாமல் இருக்க இறுதியில் மாதவ் தான் இருவரையும்
அதட்ட வேண்டியதாகிற்று.

 

“சுனோ என்ன இது சின்னபிள்ளை
மாதிரி அவனை கூட சண்டைக்கு
நிக்குற” என அவன் கண்டிக்கும்
குரலில் வினவ

 

அவன் கூறியதை கேட்டவளோ
அவள் கிளிமூக்கினை
சுருக்கி கொண்டு

 

“அவன் எப்படியெல்லாம் பேசுறான்
பாருங்க பாஸ்” என சிலிர்த்தெழ

 

“அப்படித்தாண்டி பேசுவேன்“
என சிவாவும்
பழிப்பு காட்டி அவள் கோபத்துக்கு
தூபமிட இவர்கள் அடுத்த கலவரத்தை
துவக்கும் முன்னே

 

“இப்போ இரண்டு பேரும் நிறுத்த போறீங்களா இல்லையா”
என கண்டிக்கும்
குரலில் மாதவ் கத்த இருவரும்
கப் சிப் வாய்க்கும் சேர்த்து
பெரிய ஜிப்.

 

அவர்கள் இருவரும் நொடியில்
அமைதியானதை கண்டு மாதவனுக்கு சிரிப்பாக
தான் வந்தது,இருவருமே அவனுக்கு
வளர்ந்த சிறுபிள்ளைகளாக தான் தெரிந்தார்கள்.

 

அதிலும் சிவா தன் அக்காவோடு சண்டையிட்ட
போதும் அவளை பிரிந்திருக்க முடியாமல்
இங்கேயே அவளை தேடி வந்ததில்
அவன் மீது இவனுக்கும் பாசம் ஊற்றெடுத்தது.

 

“டேய் காலைல என்னடா சாப்பிட்ட“
என நொடியில்
அவள் சகஜமாக தம்பியிடம் வினவ

 

அவனோ “இன்னும் எதுவுமே சாப்பிடல அக்கா எனக்கு ஆன்லைன்ல
ஏதாவது ஆர்டர் பண்ணுக்கா, பிளீஸ்”
என அவள் தாடையை பிடித்து
கொஞ்ச

 

அவன் கொஞ்சலிலே அழகிய முறுவல் பூத்தவள்
மாதவிடமும் என்ன வேண்டும் என கேட்டு உணவு ஆர்டர் செய்தாள்.

 

மாதவ் தான் பேஜராகிட்டான்,என்னடா இதுக இரண்டும்
அடிச்சிக்கிட்டு கிடந்துச்சுக
இப்போ இப்படி டக்குனு மாறிட்டுச்சுங்கனு.

 

இது குடும்பங்களில் இயல்பாய்
நடந்தேறும் இனிய நிகழ்வு,எவ்வளவு சண்டைகளும் கோபங்களும்
உள்ள போதும் இரண்டே நிமிடத்தில்
அனைத்தையும் மறந்து மீண்டும் ஒன்று கூடிக்கொள்வது.

மாதவிற்க்கு இது புதிதாக இருந்தபோதும் மிகவும் பிடித்தும் இருந்தது,அவர்களின் ஒவ்வொரு செய்கைகளையும் ரசித்தவனுக்கு நேற்றைய கவலைகள் எல்லாம் கானல் நீராய் ஆனது போல ஓர் எண்ணம்.

 

ஆர்டர் செய்த உணவும் வந்துவிட மூவரும் அமர்ந்து உண்ணப்போக
மாதவிற்க்கு வலது கரத்தில் தான் அடிபட்டிருந்தது.

அவன் உணவுண்ண சிரப்படுவான் என உணர்ந்த சிவாவோ தான் சென்று கைகளை கழுவி வந்தவன்
அவனுக்கு ஊட்டுவதற்க்கு கை நீட்ட மாதவனுக்கோ ஒற்றைநீர்த்துளி அவன் தூய பாசத்தினால்
பிறந்தது
, இதழ்களில் தவழும் புன்னகையோடு சிவா உணவூட்ட அவன் ஒரு ஆண் தேவதையாகவே தெரிந்தான்
மாதவிற்க்கு
.

 

மொழிகளற்ற மௌனங்கள் கூட சில நேரம் அழகு தான்,மறுப்பு ஏதுமின்றி உணவினை வாங்கி கொண்ட
மாதவை பார்த்தவனுக்கு அவன் கண்களின் ஈரம் அனைத்தையும் உணர்த்தி விட்டது அவன் ஏக்கங்களை
எல்லாம்
.

அவனை திசை திருப்ப “ஏய் சுனோ அந்த டிவி ஆன் பண்ணு அந்த காட்டேரி என்னாச்சுனு பார்ப்போம் “ எனக்கூற

 

“யாரு சிவா காட்டேரி “ என அப்பாவியாய் மாதவ் வினவ

 

“வேற யாரு நீங்க கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்தீங்களே அந்த பிசாசு தான்” என ஏற்ற இறக்கமாக கூறியவனின் குரலில்
சிரித்தவன்

 

சட்டென சிவா விழுந்து விழுந்து சிரிக்கவும்

 

“டேய் எருமை எதுக்குடா இப்படி சிரிக்கிற சொல்லிட்டு சிரிடா” என சுனோ கேட்க

 

“அதில்லை சுனோ அந்த காட்டேரிய மட்டும் இவர் கல்யாணம் பண்ணிருந்தார்னா ,இவர் எதிர் காலம் எப்படி இருந்திருக்கும்னு
தொலைநோக்கு பார்வையில பார்த்தேனா
, அதான் எனக்கு சிப்பு சிப்பா வருது” என ராகத்தோடு சொல்லி வயிற்றை பிடித்துக்கொண்டு
சிரிக்க ஆரம்பிக்க

 

இதை கேட்ட மாதவனும் கூட ஒரு நிமிடம் தொலைநோக்கு பார்வைக்கு சென்று வந்தவன் அடுத்த
நொடியே மண்டையை உலுக்கி
  கொண்டு ஐயோ எவ்ளோ மோசமா இருக்கு என
எண்ணிக்கொண்டான்
.

 

அவனேயே பார்த்துக்கொண்டிருந்த சுனோவோ

 

“பாஸ் இப்போ நீங்க சிவா சொன்னத கற்பனை தான பண்ணி பார்த்தீங்க “ என கேட்க

 

அவன் நாக்கை கடித்து அசடு வழிந்ததிலே தெரிந்தது அவன் அதை தான் எண்ணியிருப்பான்
என
.

 

சுனோவோ தன் தம்பியின் அருகில் வந்து அவனுக்கு ஊட்ட துவங்க அவனும் மாதவிற்க்கு ஊட்டிக்கொண்டே
இவளிடம் உணவினை வாங்கிக்கொண்டான்
.

 

 

மூவரும் கேலியும் கிண்டலுமாக உணவினை முடிக்க மாதவிற்க்கு எவ்வளவு உயர்தரமான உணவுகளையும்
உண்ட பொழுது இல்லாத நிறைவு இப்பொழுது இருந்தது
.

 

என்னதான் காரணம் என தேடியபோது தேவதைகளாய் அவன் வாழ்வில் இவர்கள் இருவரும் வந்தது
தான் காரணம் என தோன்றியது
.

 

யாருமே இல்லை தனக்காக என எண்ணியவனோ தானாய் வந்த இந்த இரு சொந்தங்களும் தன் வாழ்வின்
இருண்ட பக்களை நிச்சயம் தங்கள் அன்பென்ற ஒளியினால் அகற்றிவிடும் என்று உணர்ந்தான்
.

 

“சுற்றமும் முற்றமும்
யாருமே இன்றி

வாழ்ந்திடும் வீட்டினில்
தெய்வம் இல்லை

பாசங்கள் நேசங்கள்
ஏதுமே இன்றி

வாழ்ந்திடும் வாழ்க்கையோ
வாழ்க்கையில்லை”

 

தொலைக்காட்சியில் ஓடிய பாடல் கூட அவன் மனதிற்க்கு இதமாகவும்  சூழலுக்கு
ஏதுவாகவும் அமைய இறக்கையில்லா பறவையாய்
சந்தோச வானில் பறந்தான்.

 

நியூஸ் சேனலை மாற்ற அதில் நந்திதாவின்
முகத்திரை கிழிக்கப்பட்டு அவளை கைது செய்ததும்
ஓடிக்கொண்டிருக்க இவர்கள் மூவருக்கும் எல்லையில்லா
மகிழ்ச்சி.

 

திமிராய் திரியும் நந்திதா யாரையும் கண்ணசைவிலே
அலட்சியாமாய் தூர நிறுத்தி கெத்தாய்
சுற்றுபவள் இன்று கைது போலீஸால்
செய்யும் பொழுது அவமானத்தில் முகமெல்லாம்
சிவந்து கோபத்தில்
சிவந்த கண்களோடு
பார்க்கவே சகித்தாத
ஒரு நிலையில்
இருந்தாள்.

 

“சுனோ கிளம்பு,இப்போ நந்திதாவ
நாம போய் கண்டிப்பா பார்க்கனும் “ என்று கூறியனின் குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

 

“வேணாம் பாஸ் ,நீங்க சரியானதும்
போகலாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பாஸ் பிளீஸ்,”
என இவள் கெஞ்ச

 

அவள் கெஞ்சல்களையெல்லாம் புறம்தள்ளியவன்

 

“டேய் சிவா உனக்கு கார் ஓட்ட தெரியுமா
டா” என கேட்க

 

அவன் சந்தோசமாகவே “ஓ தெரியுமே சார் அக்கா தான் கத்துக்க சொல்லி சொன்னா” என கூற்

 

“பரவாயில்லடா உங்கக்காக்கும் அப்பப்போ
மூளை வேலை செய்யுது “ எனக்கூறியவன்

 

“இருடா என்னோட கார் ஏதாவது இங்க கொண்டு வரச்சொல்றேன்,நாம போய் அந்த காட்டேரிய பார்ப்போம் “ என சிரித்துக்கொண்டே கூற

 

“ஐய்யா ஜாலி“ என இவனும் குதுகலிக்க இவர்களை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் சுனோ.

 

பழகிய பலமணித்துளிகளிலேயே இருவரும்
சேர்ந்து செய்யும்
அட்டாகாசங்களை தாங்க முடியாமல்

 

“என்ன சுனோ நீயும் வர்றியா,இல்லை நாங்க மட்டும் போகவா”
என ஒற்றைபுருவத்தை ஏற்றி இறக்கி மாதவ் கேட்ட தோரணையில்

 

இறந்திடவும் நீ அழைத்தால்
வருவேனாடா என சொல்ல துண்டிய மனதினை அடக்கி

 

“போகலாம் பாஸ் ,அதான் நீங்க இரண்டு பேரும் முடிவு பண்ணிட்டீங்களே” போகலாம் என நொடித்துக்கொண்டே அவர்களோடு
சென்றாள்.

 

அங்கே சிறையில் கூண்டுபுலியாய் சுற்றிக்கொண்டிருந்தாள் நந்திதா மனதிலெல்லாம் கோபக்கனல்கள்
கொழுந்துவிட்டு எரிய அந்த தீயில் எவ்வாறு மாதவை பஸ்பமாக்குவது என்ற யோசனையே சுழன்று கொண்டிருந்தது.

 

இதெல்லாம் எவ்ளோ பட்டாலும்
திருந்தாது என கடவுளே கைவிட்டுவிட்டார்.அவரும் தான் என்ன செய்வார் பாவம்.

 ஆண்டவன் சந்நதியில் அனைவரும்
சமம் ,ஆனால் அதை எவரும் உணருவதில்லையே. அவரவர் கோணத்தில் செய்யும்
அனைத்து செயல்களும்
சரியே, ஆனால் நியாய அநியாத்தின்படிதானே அனைத்திற்க்கும் மேலோகத்தில்
தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதை உணர்ந்துகொண்டால்

சொர்க்கத்தில் நம் உல்லாசம்,
மறந்துவிட்டால் நரகத்தில்
நாம் நாசம் அவ்ளோதான்.

 

ஜெயிலில் நந்திதாவை சந்திக்க
வந்தவர்கள்

 

“என்ன நந்திதா எல்லா வசதியும்
இருக்கா,இல்லனா நான் வேணும்னா
உனக்கு திகார் ஜெயில் ரெடி பண்ண சொல்லவா?”
என நக்கல் வழிய மாதவ் கேட்க

பற்களை கடித்துக்கொண்டு

 

“டேய் ரொம்ப ஆடாதடா,இன்னைக்கு
நான் வெளிய வந்திடுவேன் எங்கப்பா
என்னை வெளிய எடுத்துருவாரு, அப்பறம் உன்னை என்னை பண்ணுறேனு மட்டும் பாருடா“ என பெண் வேங்கையாய்
உறும

 

“ஆமாமா உங்கப்பா
எவ்ளோ பெரிய ஆளு, அவன் ஒரு பொறுக்கி
நீ ஒரு மோசக்காரி இதுல ஏதோ கட்டுக்கோப்பான குடும்பத்துல
பிறந்த மாதிரி சவுண்ட பாரு” என இவன் அலட்சியமாக சொல்ல

 

“ஏய்“ என அவள் ஒரு விரல் நீட்டி மிரட்ட

 

“என்ன சார் ஜெயில்ல எல்லாரும்
கம்பி எண்ணி ஒன்னு ரெண்டு மூணுனு தான் படிப்பாங்க, இந்தம்மா
மட்டும் வித்தியாசமா
ஏ பி சி டி படிக்குதே என்ன காரணமா இருக்கும்”
என சிவா கலாய்க்க

 

அவன் சொல்லியதில் மாதவும் சுனோவும் சிரிக்க

 

மாதவ் சிரித்துக்கொண்டே

“அதுவா சிவா ,பொண்ணா பிறந்தும்  அடக்கமா இல்லாம இவ மட்டும் வித்தியாசமா
பஜாரி மாதிரி இருக்காள்ல அது மாதிரி தான் எல்லா விசயத்துலயும் இவ வித்தியாசமா இருப்பா சிவா” என இழுத்து இழுத்து கூற

 

அவன் கூறியதை கேட்டு மற்ற இருவரும்
சிரிக்க நந்திதா மட்டும் வாட்ஸப் கோப இமோஞ்சி போல மூஞ்சியை
வைத்திருந்தாள்.

 

“டேய் அடக்க ஒடுக்கமா பொண்ணு வேணும்னா இந்தா உன் பக்கத்துல
ஒன்னுமே தெரியாத மாதிரி நிக்கிறாளே
ஊமைகொட்டான் இவள கல்யாணம் பண்ணுடா காலம் பூரா உனக்கு கால் அமுக்கிவிட்டு சேவை பண்ணுவா” என நக்கலாக நந்திதா சுனந்தாவை கை காட்டி கூற

 

“ஆனா இப்போவும் சொல்றேன் மாதவ் நீ ஒரு அநாதை தான் உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போடலாம்னு
நினைச்சேன்
,ஆனா நீ உதறிட்டு போய்ட்ட இப்போ மட்டுமில்ல இனி இந்த ஜென்மம் முழுக்க அநாதை தாண்டா,நீ செத்தா கூட உன்னை சுத்தி அழ யாரும்
இருக்க மாட்டாங்கடா
” என இதழோரம் கோணல் சிரிப்போடு அவன் நெஞ்சில் நெருஞ்சியாய் தைக்கும்
வார்த்தைகளை இவள் உதிர்க்க

 

எங்கிருந்து தான் சுனோவுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ,அவள் ஏய் என்று கன்னத்தில் அறைவதற்க்கு
கை ஓங்கினாள்
,இடையிலே கம்பி மட்டும் இல்லையெனில் அவள் கன்னம் பழுத்திருக்கும்..

 

“யாரை பார்த்து என்னை வார்த்தைடி சொன்ன,அவருக்கு நீ வாழ்க்கை பிச்சை போட்டீயா,நீயே இத்தனை நாளா அவரை கால பிடிச்சி 
எச்ச சோறு தின்ன நாயா தான இருந்த உனக்கு மறந்து போச்சோ” என குரலில் ஏகத்தும் கோபத்தை தேக்கி
கேட்க

 

“ஏய் என்னடி ஓவரா பேசுற” என நந்திதாவும் வார்த்தையாட

 

“ஆமாடி,அப்படித்தாண்டி பேசுவேன்,நானே கல்யாணம் பண்ணுவேண்டி இவரை,யாரை அநாதைனு சொன்ன,நானும் என் தம்பியும் இருக்கிற வரைக்கும்
இவரு அநாதையே கிடையாது
,பத்து பிள்ளை பெத்துப்போம்டி,இதோ இருக்கானே என் தம்பி அவனுக்கு கல்யாணம்
ஆகி குழந்தை பிறந்ததும் அவன் பிள்ளைகளுக்கு எங்க பிள்ளைகள கட்டிக்கொடுப்போம்
”

இவள் கூறுவதை கேட்ட மாதவும்,சிவாவும் வாய்க்குள் ஈ போகும் அளவிற்க்கு ஆ வென்று பார்த்தனர்.சிவா ஒரு படி மேலே போய் ஐய்யோ பத்து
பிள்ளைக்கு நான் எப்படிடா சீர் செய்யபோறேனு கவலை கொண்டான்
.

 

மாதவிற்க்கு இப்போது தான் சிறு ஆசை துளிர்விட்டது,பத்து பிள்ளைங்க அதோட நம்மகூட இவங்க
இரண்டு பேரும் இருந்தா நம்ம வீடு எவ்ளோ நிறைவ இருக்கும்னு கண்கள் ஆசையில் மின்னியது
.கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.

 

எனக்காக தான உரிமையா இப்படி சண்டை போடுறானு நினைத்த வேளையில் அவளின் மீதும் காதலா?பாசமா என இனம்பிரிக்க முடியாத அன்பு
ஒன்று அடிவயிற்றில் இருந்து எழுந்தது
.

 

நந்திதா மீண்டும் கோபமாய் ஏதோ பேசவர

 

கைநீட்டி போதும் என சைகை செய்தவன்.

 

“நந்திதா அவர்களே நீங்க என்னவேணும்னாலும் பேசுறதுக்கு
அவங்க யாரோ இல்லை,என்னோட வருங்கால மனைவி மாதவ் குரூப் ஆப் கம்பெனியோட
எஜமானியம்மா,அதுனால இப்போ நீம்மா வாய மூடும்மா”

 

“நாங்க கிளம்புறோம்
கூடிய சீக்கிறம்
எங்க கல்யாண பத்திரிக்கையோட வர்றோம்,நீ கண்டிப்பா
கல்யாணாத்துக்கு வரணும்,ஏன்னா நீ சொன்ன வார்த்தையெல்லாம் அன்னைக்கு
காத்துல கரையிறத நீ பார்க்க வேணாம்”  என குரலில் ஒரு வித கர்வத்தோடு கூறியவன்
தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சுனோவையும்
சிவாவையும் இருகரங்களிலும் பிடித்துக்கொண்டு வெளியேறினான்.

 

அதையும் பார்க்கிறேன் மாதவ் எப்படி உன் கல்யாணம் நடக்குதுனு
மனதோடு கருவிக்கொண்டாள் நந்திதா.

 

சுனோ ஏதோ உணர்ச்சி
பெருக்கில் பேசிவிட்டாளே
ஒழிய மாதவ் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வானோ என்று பயந்து கொண்டே வந்தாள்.

அதோடு நிகழ்ந்த உரையாடலை
கண்டு சிவாவும்
குழம்பிருக்க அவன் முகமும் தெளிவின்றி
இருக்க

 

“ஏன் இரண்டு பேரும் ஒரு மாதிரி வர்றீங்க,ஏதாவது பேசுங்க”
என மாதவ் கூற

 

“அது வந்து,வந்து” என சிவா இழுக்க

 

“என்னடா தயங்காம சொல்லுடா”என மேலும் இவன் உந்த

 

அதற்குள் அங்கிருந்த ஒருவர் அவனிடம் வந்து ஒரு பெண் இதை கொடுக்க சொன்னதாக சொல்லி ஒரு கடிதத்தை
கொடுத்தாள்.

 

அதை பூவின் இதழ் போல மெல்ல அவன் பிரித்து
பார்த்தான்.

 

“அன்பே

அன்னையாய் நானிருக்க

அநாதையாய் நீ எப்பொழுதடா

ஆவாய்?

உன் நிழலாய் நானிருக்க

நிம்மதியாய் நீ இருடா”
என எழுதியிருக்க
இவனோ அவ்வார்த்தைகள் தந்த பூரிப்பில் எங்காவது
அவள் தென்பட்டு
விட மாட்டாளா?
என சுற்றும்
முற்றும் தேடினான்,
உடன் சுனந்தாவும்
சிவாவும் இருப்பதை
கூட மறந்து.

 

“யாரடி நீ

என் கண்மணி

ஒற்றை வார்த்தையில்

உயிர் வரை தொடுகிறாயா” என மனதோடு கேட்டுக்கொண்டான்.

 

கேள்விக்கு விடை சொல்லுபவள்
எங்கே இருக்கிறாள்????????????????

 

காத்திருங்கள் கனியின் வருகைக்காக…………………..

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *