மகுடம் சூடவா மாதவா

This entry is part 5 of 8 in the series மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா-3

மகுடம் சூடவா மாதவா-3

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா

மகுடம் சூடவா மாதவா-4

 

சூடிதந்த சுடர்கொடியினை ஒத்த காதலை உடைய சுனந்தாவின் நெஞ்சில்
சூறாவளியாய் வீசிக்கொண்டிருந்தது அவள் காதல் கொண்டவனின்
நினைவுகள்.

எப்போழுதும் போல காலை அலுவலகத்தில் கொண்டவனின்
நினைவுகளில் அணுப்பொழுதும் அவ்வப்பொழுது
வேலைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தாள்.

 

வேலைய விட காதல் பெருசு பாஸ்.

குறுநகை இதழில் தவழ எப்போதும் வலம் வருபவன் ஒரு வார காலமாக இஞ்சி தின்ற குரங்காய் எல்லோரிடமும்
எரிந்து விழுந்திட
அதில் இவள் மனமும் சிறிது சோர்ந்து வாடிட இவள் பார்க்கும்
காதல் பார்வையில்  சற்றே கடுப்பும்
கைகோர்த்து கொண்டது.

 

இருக்காத பின்னே கொஞ்சமாச்சு
ரோசம் வேணும் ப்ரோஸ்.ஆனால் அவன் சுனந்தா என அழைக்கும்
மறுநிமிடம் இந்த வெ மா ரோ எல்லாம் எங்கோ பறந்துடும்.கிளிக்கு
இறக்கை முளைச்சிங்.

 

தற்போதைய மாதவ் கார்பரேட்
நிறுவனத்தின் நிலை வாழ்வா?சாவா?

 

இவர்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய
பங்கு வகிக்கும்
ஒரு வெளிநாட்டு
நிறுவனம் தற்பொழுது
இவர்கள் அனுப்பிய
பொருட்கள் சரியில்லை
என்றும் அதற்குண்டான
நஷ்ட ஈடை கொடுத்துவிட்டு

ஒப்பந்தத்தையும் ரத்து செய்திட நச்சரிக்கின்றனர்.

 

அப்படியில்லையெனில் இவர்கள் நிறுவனத்தினை
பற்றி தரக்கட்டுபாட்டில் சட்டப்படி
வழக்கு பதிவு செய்திடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டு அவர்களுக்கு
உண்டான நஷ்ட ஈடையும் கொடுத்திட
மாதவ் முடிவெடுத்த
போதும் எங்கு எப்படி யாரால் தவறு நடந்தது என்பதே அவன் பெருத்த யோசனையாக
இருந்தது.

 

பணம் இன்று போய் நாளை வரும்.உன் பணம் அது என் பணம் என் பணமும் என் பணம் அதான் பணத்தோட நிலை.

ஆனா நம்பிக்கை இன்னைக்கு
ஒரு நிறுவனம்
நம்ம மேல நம்பிக்கை இல்லாம ஒப்பந்தத்த ரத்து பண்ணும் போது பணம் இருந்து என்ன பிரயோஜனம்.

 

இந்த நம்பிக்கைக்காக மட்டும் தான இத்தனை நாள் உழைப்பு.

எண்ண அலைகள் நாலாப்புறமும் அவனை சுற்றி வளைக்க சுழலில் சிக்கிய சிறு மீனாய் தவித்து தான் போனான்.

 

மீன் சுழலுக்குள்ள சிக்கிடுச்சு
அப்போ தூண்டில போடுறவனுக்கு கொண்டாட்டம்
தான.சிக்க வைச்சதே மீன ரோஸ்ட் போட தான . மீனுக்கு
மூளை இருந்தா சிக்காம பக்காவா வெளிய வந்துரும்
பார்ப்போம் ப்ரோஸ்.

 

அசோக சக்ரவர்த்தியின் மிடுக்கோடு
அலையும் மாதவனும்
அன்னை மடிதேடும்
கன்றாய் அறைக்குள்ளே
நுழைந்தான்.

 

யோசனைகளில் சிக்கிக்கொண்டு அவன் நெற்றியில் இருந்த புருவங்களின் முடிச்சே
சொன்னது அவன் உள்ளத்தின் அலைப்புறுதலை
அவனுக்கும் தான் யார் இருக்கிறார்
அனைத்தையும் கொட்டி விட்டு அமைதியை தேடுவதற்கு.

 

மாயவனின் தோற்றம் மனதினை பிசைய அவனை வாரி எடுத்து நெற்றி முத்தம் இட்டு நெஞ்சோடு
அணைத்து கொஞ்சமாய்
தேற்றிட தோன்றிய போதிலும் தள்ளியே நின்றிட விதி வழி செய்ததால்
வலி கொண்ட கண்களோடே அவனை கண்டாள் கயல் விழி கொண்ட நாயகியும்.

 

குட் மார்னிங் பாஸ்.

 

குட் மார்னிங் சுனந்தா.
சுரத்தே இல்லாமல்
அவன் சொல்ல

 

சற்று சோர்ந்தே போனாள் இவள்

 

சார் நீங்க இப்படி  இருக்கிறது
கொஞ்சம் கூட நல்லா இல்லை
.
ஒரு பிரச்சனைக்கு தீர்வு அந்த பிரச்சனைக்குள்ள இருந்து வெளிய வந்து பார்க்கும் போது தான் தெரியும்.

 அதாகப்பட்டது
மகாஜனங்களே நம்ம பொண்டாட்டிகிட்ட தண்ணியடிச்சுட்டு போகும் போது மாட்டாம தப்பிக்க எப்படி யோசிச்சாலும் ஐடியா கிடைக்காது ஆனா நம்ம பிரண்ட் நம்ம கிட்ட ஐடியா கேட்கும்
போது ஆயிரம் ஐடியா அருவியா கொட்டும் அப்படிதான்
ப்ரோஸ்.

 

எப்படி யோசிச்சாலும் ஒரு கேள்விக்கு பதிலே கிடைக்கலயே சுனந்தா.நம்ம அனுப்பின
பொருட்கள் நிச்சயமா
சரியானது தான் ஏன் அப்படினா
நாம தான் அது தயாரிக்கும்
போது சரிபார்த்திருக்கோம்.ஆனா அவங்க கையில கிடைச்சது வேற பொருட்கள் அங்க இருக்கிற பொருட்களே
நம்மோடது கிடையாது.

 

இதுல செய்யாத தப்புக்கு
நஷ்ட ஈடு வேற அதான் எரிச்சலா இருக்கு.

 

பாஸ் அப்போ நீங்க நடுவுல தான் சரக்கை யாரோ மாத்திருக்காங்கனு சொல்லுறீங்களா?

(எம்புட்டு அறிவு சுனோ உனக்கு எப்பவும் ஸ்லோ மோசன் தான் நீ)

 

அதே தான் சுனந்தா நடுவுல தான் எங்கயோ  தப்பு நடந்திருக்கு.

 

(நடுவுல கொஞ்சம் பக்கம் தான காணாம போகும் இவிங்க என்ன மொத்தமா தொலைச்சிருக்காங்க நீங்க கேட்கிறது எனக்கு கேட்குது வைட் ப்ரோஸ் அதையும் சொல்லுவோம்.)

 

அந்த எங்கயோ எங்க பாஸ்.

 

அடிங்கொய்யால அது தெரிஞ்சா
நான் ஏன் இப்படி டென்சனா சுத்தபோறேன்.

 

அட ஆமால்ல.

 

உன்னை எல்லாம் பிஏ வா வைச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே.போ போய் வேலைய பாரு.

 

(ஆத்தாடி நெற்றிக்கண்ண
திறக்க ரெடியாகிட்டானே எஸ்கேப் சுனோ,போர்ல எதிர்க்க முடியல புறமுதுகு பேஸ்ட் நம்ம எல்லாம் யாரு புறமுதுகு
ஸ்பெசலிஸ்ட்)

 

மயில் அழகா அசைஞ்சு ஆடுறத பார்த்து
இந்த வான் கோழியும் தன்னை மயிலுனு கற்பனை பண்ணிக்கிட்டு ஆடிக்கிட்டே
திரியுமாம் .

 

அந்த வான் கோழி யாருனா நம்ம நந்திதா தான்.

 

அழகா நடக்கிறோம்னு  நினைப்புல காலை குறுக்க மறுக்க வைச்சு அவ போட்டுருக்க அரை அடி நீள செருப்பு பளபளனு இருக்கிற பளிங்கு தரையில வழுக்கி வாசல்ல பொத்துனு
விழுந்தா.

 

படிக்கிற நீங்க பல்லை காட்டுனாலும் பதறிபோய்
ஓடி வந்து தூக்குனான் நம்ம மாதவ்.

 

பதறத்தான செய்யும் பாசம் வேசம் எல்லாம் சேர்ந்த காவியக்காதல் ப்ரோஸ்.

 

இதை ஒரு ஓரமா நின்னு பார்த்த சுனோ குத்தாட்டம் போட்டா மனசுக்குள்ளயே.

 

குந்தானி ஒழுங்கா நடக்காம எப்படி விழுந்துருக்கா தேவைதான் இவளுக்கு ஆனா அதுக்காக
அவளை ஓடி வந்து மாயக்கண்ணன் தூக்குறது தான் லைட்டா ஹார்ட்ல ஒரு ஓட்டை விழுகுது
.

 

பார்த்து சுனோ ஓட்டை ஓசோன் ஓட்டையா இருந்திடாம நீ கதைக்கு தேவை மகளே.

 

என்னாச்சு நந்திதா  எங்கயாவது அடிபட்டுச்சா?

 

இல்லை மாதவ் ஐ ம் ஓகே…

 

பார்த்து வர மாட்டீயா பன்னி.

 

உன்னை பார்த்துட்டே வந்தேனா அதான் விழுந்துட்டேன்.முப்பத்திரண்டு பல்லையும் காட்டி அவள்
வழிந்து வைக்க

 

இவனுக்கு இதயமெல்லாம் ஜில்லுனு ஆகிடுச்சு இருக்கும்ல இளவயசு ,அவனும் சிரித்துக்கொண்டே

போடி லூசு,சரி வா உள்ள போய் பேசலாம் என்றான்.

 

ஆமா அவ பார்த்ததும் விழுந்துட்டா இதை இவன் நம்புறான் கண்ணாடி கதவா இங்க இருக்கு,மரக்கதவு தான இங்க இருக்கு அது இந்த
மரமண்டைக்கு புரியுதானு பாரு
, என சுனோ மனதிற்குள் பொரிய

 

சுனோ அப்படியெல்லாம் சொல்ல  கூடாது இது காதல் மயக்கம் அப்படிதான்
இருக்கும்
.

 

காதலிக்கும் போது காக்கா கூட கலரா தான் தெரியுமாம் ,கல்யாணம் பண்ணதுக்கப்பறம் தான் உண்மையெல்லாம்
புரியுமாம் இதெல்லாம் லெஜண்ட் சொன்னது நமக்கெல்லாம் எங்க இவ்ளோ அறிவு
.

 

சொல்லு நந்திதா, ஏதாவது முக்கியமான விசயமா நேர்ல வந்திருக்க.

 

சும்மா உன்னை பார்க்கலாம்னு தோணுச்சு மாதவ்,அதான் வந்தேன்.அதோட நாம உன் சரக்கெல்லாம் வெளிநாடுக்கு
போறதுக்கு என்னோட டிரான்ஸ்போர்ட் சர்வீஸோட ஒரு அக்ரிமெண்ட் போட்டோமே அது முடிய போகுது
,அதான் அதை திரும்ப எக்டெண்ட் பண்ணலாம்னு
கேட்க வந்தேன்
.

 

அதான குள்ளநரி ஏன் குடை பிடிக்குதுனு இப்போ தான தெரியுது என சுனோ நொடித்துக்கொண்டாள்.

 

சுனந்தா அந்த பைல் கொஞ்சம் கொண்டு வா.

 

இதோ எடுத்திட்டு வரேன் சார்.

 

பைலை கையில் வாங்கியன் சற்றே யோசனை வயப்பட்டான்.

 

என்ன டார்லிங் எப்போ நம்ம திரும்ப சைன் பண்ணலாம். என சுனோவை ஒரு அலட்சிய பார்வை 
பார்த்துக்கொண்டே நந்திதா வினவ

 

(எப்பா இந்த காட்டுப்பன்னி வேற கடுப்பேத்துறாளே டார்லிங் டார்ஜிலிங்னு இருடி மகளே
உனக்கு இருக்கு ஒரு நாள்
)

 

நந்திதா இந்த அக்ரிமெண்ட் சைன் பண்ணுறது பத்தி நான் கொஞ்சம் யோசிக்கனும்.அதுனால உனக்கு ஒரு இரண்டு நாள்ல பதில்
சொல்றேன்
.

 

ஏன் மாதவ் என்னாச்சு இப்படி சொல்லுற? என மறுபடியும் வினவ

 

நந்திதா எனக்கு கொஞ்சம் யோசிக்கனும் சொல்றேன் உனக்கு புரியுதா இல்லையா? என வார்த்தைகளில் அழுத்தம் கூட்ட

 

குள்ளநரி கொஞ்சம் பம்மிடுச்சு

 

ஸாரி மாதவ் ,நீ யோசிச்சு சொல்லு நான் கிளம்பறேன்.

 

(சுனோவுக்கு மனசுக்குள்ள குற்றால சாரல் தான்)

 

நந்திதா வெளிய செல்ல இருக்கையில் சாய்ந்து கண் மூடினான்.

 

ஒரு வேளை நாம நினைக்கிறது சரியா இருந்தா இந்த எல்லா பிரச்சனைக்கு முடிவு வந்திடும்.

 

சில நிமிடங்களுக்கு பிறகு கண்விழித்தவன் சுனோ எனக்கு ஒரு காபி வேணும் .

 

இதோ கொண்டு வரேன் சார்.இந்தம்மாக்கு ஓவர் லவ்ஸ்

 

அச்சோ டென்சனா இருக்கான் போல முதல்ல காபிய கொடுத்து அவன சரிபண்ணுவோம்னு ஓவர் திங்கிங்

 

சில நபர்களுக்கு அழைத்து பேசியவன் அரை மணி நேரத்துல நான் கேட்ட எல்லாம் என் கையில
இருக்கனும்
.

 

இந்தாங்க சார் காபி.

தாங்க்யூ சுனந்தா.

 

ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க.இவள் முகம் முழுக்க கவலை (காதல் செய்யும் வேலை)

 

ஒன்னுமில்ல சுனந்தா நீ இன்னைக்கு சீக்கிறம் வீட்டுக்கு கிளம்பிடு .நான் சாயங்காலம் வர மாட்டேன்.

 

கொஞ்சம் வாடிய முகத்தோடு சரியென தலையாட்டினாள்.

 

நல்லா தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டுற போ போய் வேலைய பாரு, என கூறியவன் அலுவலகம் விட்டு வெளியேறினான்.

 

………

ஒரு முழு பாட்டில் விஸ்கியையும் உள்ளே இறக்கியவனின் கண் இரண்டும் கோபத்தில் சிவந்திருக்க

சிறு பறவையின் ஒலிகூட மிகதெளிவாய் கேட்கும் இரவின் நிசப்பத்தத்தில்

விடாமல் நந்திதாவின் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி கொண்டிருந்தான்.

 

கதவை திறந்தவள் வா மாதவ் ,என்ன இந்த நேரத்துல வந்திருக்க? கேள்வி கேட்ட மறுநொடி இடியென அவள் கண்ணத்தில்
கரங்களை இறக்கியிருந்தான்
.

 

ஏய் இப்போ எதுக்கு என்னை அடிச்ச?

 

அடச்சீ வாய மூடுடி ? அசிங்கமா ஏதாவது சொல்லிட போறேன்.

 

கேவலமா இல்லை என் பணம் தான் வேணும்னு சொல்லிருந்த அப்படினா தூக்கி போட்டிருப்பேண்டி
அதுக்கு ஏண்டி என்னை காதல்னு சொல்லி ஏமாத்துன கேவலமா இல்லை உனக்கு
. கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான்

 

என்ன சொல்லுற மாதவ் எனக்கு எதுவும் புரியல. என அப்பாவி போல் கண்ணை விரிக்க

நடிக்காதடி ,என்னோட சரக்கு தரம் இல்லனு சொன்னதுக்கு காரணமே நீ தான் உன்னோட எல்லா பித்தலாட்டத்தையும்
உங்கூட இருந்த அல்லக்கை அடிச்ச அடியில உளரிட்டான்
 
உன் படத்துக்கு ரீல் அந்து போச்சுடி. என கோபமாக உறும

 

நந்திதா சற்றே அதிர்ச்சியில் சிலையென சமைந்தாள்.

 

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *