பேரில் என்ன இருக்கிறது

நெடுநாட்களாக எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அது என்னுடைய பெயர் தான். எனக்கு பெற்றோர் வைத்த பெயர் சீவலப்பேரி பாண்டி.இந்த பெயர் வைக்கக் காரணம் ;அப்போது சீவலப்பேரி பாண்டியன் என்ற படம் வந்து இருந்தது. கர்ப்பிணியான என் தாய்க்கு அந்த படத்தை பார்க்க ஆசை.ஆனால் ஒன்பது மாதம்.தியேட்டருக்கு கூட்டிப் போக சொல்லி இருக்கிறார்கள். அப்பா முதலில் மறுத்தாலும் கடைசியில் கூட்டிப்போய் இருக்கிறார்.அங்கேயே இடுப்பு வலி ஏற்பட்டு நான் பிறந்து விட்டேன். அப்போது யாரே ஒரு ஆள் என்னைப் பார்த்து விட்டு திரையில் வரும் அவனல்ல சீவலப்பேரி பாண்டியன். இவன் தான் என்று விளையாட்டாக சொல்ல அதுவே எனக்கு பெயராகிப் போனது.இந்த பெயரை வைத்துக்கொண்டு இப்போது நான் சென்னையில் அல்லாடினேன்.ஆபிசில் வெளியில் என்று எல்லோரும் இந்த பேரை சுருக்கி செவலை என்று அழைத்தார்கள்.
இவ்வளவு ஏன் நான் தங்கியுள்ள மேன்சனில் ஒரு குட்டி புதிதாக குடி வந்தது. முதலில் நான்கு நாள் நன்றாக பார்த்தது.ஆனால் என் நண்பன் செவலை என்று அழைப்பதை பார்த்தது. அத்தோடு ஆளை காணவில்லை.அதனால் நான் முடிவெடுத்து விட்டேன். என் பெயரை எப்படியாவது மாற்றி விடுவது என்று. இரண்டு வாரம் அலைந்து தாசில்தார் ஆபிசில் எல்லா விண்ணப்பங்களையும் எழுதி கொடுத்து ;இப்போது பெயர் சான்றிதழ் தருவதற்கு நேரில் அழைத்தார்கள். நான் போய் அதிகாரியிடம் பேசி முடித்துவிட்டு அருணாச்சலம் என்ற என் புதிய பெயரோடு வெளியேற ஆயத்தமானேன்.வெளியே வரும் போது டேபிளில் இருந்த
அந்த பெயர்ப் பலகையை கவனித்தேன். குஞ்சிதபாதம் தாசில்தார் என்று இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *