நான் பிழை நீ மழலை
அத்தியாயம் 5
அப்பாவின் நினைவுகளில் திளைத்து கொண்டிருந்த விழியாழினியின் முன் நின்றிருந்த உருவம் தெரியவில்லை. தலையை இருமுட்டிகளுக்கு குறுக்கே வைத்த வண்ணம் அழுதுக் கொண்டிருந்தாள்.
அறைக்கு வந்த வர்மமித்ரன் என்ன செய்கிறோம் என அவனுக்கே தெரியவில்லை கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான். அங்கிருந்த பொருட்களை எல்லாம் உடைத்து எறிந்தான். அவன் ஒரு நிலையிலேயே இல்லை. எப்படியெல்லாம் அழகாக பொய் சொல்லி என்னை ஏமாற்றி விட்டாள். அவளை ஏதாவது செய்தே ஆக வேண்டும் அவ்வளவு சீக்கிரத்தில் நான் இதை விட போவதில்லை என நினைத்தவன் கீழ் இறங்கி அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
ஏய் ….. எந்திரிடி என்னும் அதட்டலை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். வர்மமித்ரன்தான் நின்றுக் கொண்டிருந்தான். இரு கைகளையும் இடுப்பில் கம்பீரமாக பிடித்திருந்தவன் அவளை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தான்.மேல வா…. என கூறியவன் அவளை திரும்பிக் கூட பார்க்காமல் அவனது அறைக்கு சென்றான்.
கடவுளே அடுத்து என்ன செய்ய போகிறானோ அப்பா முருகா என்னை காப்பாத்து…… என தலையை மேல் நோக்கி இருகைகளையும் கூப்பி வேண்டினாள்.
வர்மனின் அறைக்கு வந்தளின் அரவம் கேட்டு திரும்பியவன், இந்த ரூமை சுத்தம் செய் என ஒற்றை கட்டளை மட்டும் பிறப்பித்தவன் அந்த இடத்தை விட்டு பால்கனி இருக்கும் இடத்திற்கு சென்று சிகரெட்டை பற்ற வைத்தான். சிகரெட்டின் வாசம் வீச விழியாழினி ஏக்கத்துடன் அவனை பார்த்தாள். அன்றைய நாள் நினைவில் வந்து போனது.
ஓக்கோ…. ஓக்கோ…. ஓக்கோ…… விழி இரும்பினாள். விழி இரும்பிய சத்தத்தை கேட்டு திரும்பியவன் என்னாச்சு என் குளோப்ஜாமுனுக்கு இப்படி இரும்புறீங்க என அவளது தோல் பட்டைகளில் கை போட்ட படியே கேட்டான்.
தள்ளி போங்க மாமா இந்த சிகரெட் நாத்தம் வயித்தை பிறட்டிக்கிட்டு வருது இதை எப்படித்தான் ஸ்மோக் பண்றீங்களோ என அருவருப்புடன் பேசினாள்.
ஏய் இதுதாண்டி பல ஆண்களோட டென்சனை குறைக்குது. இதை போய் இப்படி சொல்ற என அவளை கட்டி அணைத்தான்.
ஐயோ ப்ளீஸ் மாமா பிரஷ் பண்ணிட்டு வாங்க எனக்கு இது அலர்ஜி. இதெல்லாம் உடம்புக்கு நல்லதில்ல மாமா. ஆமா உங்களுக்கு இப்ப என்ன டென்ஷன் ஸ்மோக் பண்ற அளவுக்கு? என அவனை பேசவிடாமல் இவள் பேசி கொண்டிருந்தாள்.
அப்படி ஒன்னும் சொல்லிக்கிற அளவுக்கு டென்ஷனெல்லாம் இல்லை பட் கொஞ்சம் இருக்கு பழகிட்டன்டி என்னால விட முடியாது.
ஓஹோ… அப்பனா போங்க நீங்க என்கூட பேச வேணாம்.
ஏய் உன்கிட்ட பேச கூடாதா அது மட்டும் முடியாதுடி ஜாமுன்.
அப்படியா சரி என்றவள் இந்த சிகரெட் பிடிக்கறதை நிறுத்திருங்க… என்ன நிறுத்திறீங்களா? நான் சொன்னதை செஞ்சா நீங்க என்ன கேட்டாலும் தருவேன் இந்த பழக்கத்தை விடுங்களேன் ப்ளிஸ்…. என அவனது தாடையை பிடித்து கெஞ்சி கேட்டாள்.
சரிடி விட்டற ஆனா இப்போ என்னமோ சொன்னியே நீ சொன்னதை செஞ்சா என்ன கேட்டாலும் தருவன்னு…. இப்போ உடனடியா மாமாக்கு ஹாட்டா… ஸ்வீட்டா… ரொமான்டிக்கா… லவ்வா…
ஒரு கிஸ் வேணும் தருவியா? என வர்மன் உள்ளங்கைகளை தேய்த்தப்படியே கேட்டான் வர்மன்.
அவ்ளோதான கொடுத்துட்டா போச்சு என அவன் அருகில் வந்தாள் விழி.
என்ன இவ சொன்ன உடனே ஓகே சொல்லிட்டா இவள் இப்படி எல்லாம் பண்ண மாட்டாளே ம்….. என யோசித்தவனுக்கோ விழி அவனது வலக்கையை பிடித்து அழகாக முத்தம் பதித்தாள்.
அய்யயா…..அடியேய்! நான் ஒன்னும் கையில கேக்கல இங்க கேட்டேன் என அவனது உதட்டைனை விரல்களால் தொட்டு காட்ட அய்ய ரொம்ப ஆசைதான் என கூறியவள் அவளை கட்டி அணைத்திருக்கும் கரத்தை எடுத்துவிட்டு அவனது மார்பில் கை வைத்து தள்ளிவிட்டவள் அங்கிருந்து ஓட போனாள்.
ஏய் எங்ககடி ஓட பாக்குற நில்லுடி என அவளது கையை பிடித்தவன் அவளது இதழ்களை சிறை பிடித்தான். நீண்ட நேரம் முத்த யுத்தத்தை முடித்தவன் அவள் கண்களுக்குள் கண்களை பார்த்து காதல் மொழி பேசலானான். அன்றிலிருந்து வர்மன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தியும் இருந்தான். ஆனால் இன்றோ யாருக்காக புகை பிடிப்பதை விட்டானோ அவளுக்காகத்தான் இப்பொழுது புகைப்பிடிக்கிறான்.
நினைத்து பார்த்து கொண்டே அங்கிருந்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்த விழிக்கு பக்கத்தில் உடைந்து கிடந்த பீங்கான் பூச்சாடி சில்லின் மேல் காலை வைத்து விட்டாள்.
அம்மா…… என்ற கதறளுடன் காலை பிடித்து கொண்டாள்.
அவள் அலறியதில் பால்கனியை விட்டு உள்ளே வந்தவன் விழியை தூக்கி கட்டிலில் அமர்த்தியவன்
ஐயோ ஜாமுன் ஏண்டி பார்த்து செய்ய மாட்டியா இப்படியா வேலை பார்ப்ப. பாரு கால்ல எவ்ளோ ரத்தம் வருது என்றவன் அறையிலிருந்த பர்ஸ்ட் எயிட் பாக்சை எடுத்து அவளின் கீழே அமர்ந்தப்படியே காலை பிடித்து மருந்து தடவி கட்டு போட்டான்.
அவன் செய்வது அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த விழியாழினியின் கைகள் தானாகவே அவனது தலையை வருடி கொடுக்க ஆரம்பித்தது. எனக்கு ஒன்னும் இல்ல மாமா என் மேல இருந்த கோபம் போயிருச்சுதான என அழுகையுடனும் அப்பாவியாகவும் கேட்டாள்.
அட சீ கையை எடுடி முதல்ல செத்தாலும் உன்னை மன்னிக்க மாட்டேண்டி என கூறியவன் அவளை படுக்கையிலிருந்து கீழே தள்ளிவிட்டான்.
திடீர் தாக்குதலில் கீழே விழுந்தவள் தலை கிர்ரென்று சுத்தியது. அவன் காலடியிலேயே மயக்கம் போட்டு விழுந்தாள்.
ஏய் விழி….. விழி ஜாமுன் எந்திரிடி என்னாச்சுடி என பதறியப்படியே அவளை படுக்கையில் கிடத்தினான். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை தெளித்தான். அவள் எழவேஇல்லை. மனதில் பயம் பரவவே அவன் டாக்டருக்கு போன் செய்து விஷயத்தை கூறினான் அவரும் இருபது நிமிடத்தில் வந்து விடுகிறேன் என கூறி போனை வைத்தார்.
படுக்கையில் கிடக்கும் அழகு பதுமையை, செதுக்கி வைத்த சிலையை பார்த்த வர்மனுக்கோ கோபம் போய் அவளை அள்ளி அணைக்க துடித்ததுமனம். அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன் ஏண்டி என்னைய இப்படி சாவடிக்குற… உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன் என் வாழ்க்கையில எல்லா சந்தோஷத்தையும் ஒட்டு மொத்தமா கொடுத்துட்டு இப்ப எல்லாத்தையும் பறிச்சுகிட்டியேடி…. உன்னை பார்த்ததுக்கப்பறமாத்தான் எனக்கு வாழணும்னே தோணுச்சு. ஆனா நீ பண்ண காரியத்துனால உன்னைய வெறுக்கவும் முடியாம உன்னோட வாழவும் முடியாம என்னைய சித்ரவதை பண்ணுறியேடி என மயக்கத்தில் இருக்கும் அவளிடம் புலம்பியவன் அப்பொழுதுதான் அவளது உதடுகளையும், கழுத்தையும் பார்த்தான். சே உன்னைய நான் எப்படியெல்லாம் ஒரு பூமாதிரி ஹேண்டில் பண்ணனும்னு நினைச்ச… மனசால ஒன்னா இணைஞ்ச நாம உடலாலும் ஒன்னா இணையும் நாள் வரதுக்காக எத்தன நாள் காத்துட்டு இருந்த உன்னைய பார்த்தாலே எனக்கு என்னென்னவோ தோணும். ஆனாலும் மனசை கட்டுப்படுத்திகிட்டு உன்னைய தினம் தினம் ரசிச்சேனே…. உன் அன்பான குணம்… யாரையும் அன்பாக பார்க்கும் உன் பார்வை…உன்னையவேதான் என் மனசு சுத்தி சுத்தி வந்தது. ஆனால் ஒரு மிருகத்தனமா நேத்து நான் உன்கூட நடந்துக்கிட்டேனே டாமிட்…. என அவனையே அவன் நொந்து கொண்டான்.
இல்லடி இல்ல நான் எதுக்குடி உன்னைய நினைச்சு வருத்தப்படணும் மாட்ட… கண்டிப்பா இப்படி நடக்க விட மாட்ட… நீ பண்ண துரோகத்துக்கு நான் பண்ணது சரிதான் என வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா அவனுக்குள் இருந்த அரக்கன் வெளியே வந்தான். இனி இங்கிருந்தால் தாம் பித்து பிடித்தவன் போல ஏதாவது நடந்து கொள்வோம் என எண்ணியவன் கீழிறங்கி ஹாலுக்கு சென்றான். மனதை ஒரு நிலை படுத்த எண்ணினான் ஆனா எல்லாம் வீணாய் போனது விழியாழின் முகமே வந்து வந்து போனது என்னைய மன்னிக்க மாட்டிங்களா மாமா என குழந்தை போல முகத்தை வைத்து கொண்டு அவள் பேசியதுதான் நினைவில் வந்து போனது.
எப்படி எப்படி உன்னைய என்னால மன்னிக்க முடியும் முடியாது நெவர் என மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தவன் சார் என்னும் அழைப்பில் விழித்தான்.
வாங்க டாக்டர்
பேசண்ட் எங்க?
மேல இருக்காங்க வாங்க மேடம் என அவரை அறைக்கு அழைத்து சென்றான் வர்மன்.
அறைக்குள் நுழைந்த இருவரும் சார் நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா? என டாக்டர் கூற ஓகே மேடம் என வெளியே வந்துவிட்டான்.
சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்த மருத்துவர் நீங்க அவங்களுக்கு என்று அவர் பேசி முடிக்கும் முன்னே வர்மன் நான் அவளுடைய ஹஸ்பண்ட் என்றான்.
சார் அவங்க ரொம்ப டயர்டா இருக்காங்க அண்ட் கால்லையும் அடி பட்ருகிறதுனால குறைஞ்சுது ஒரு வாரமாவது ரெஸ்ட் எடுக்கணும். மருந்து மாத்திரையெல்லாம் இதுல எழுந்தியிருக்க வாங்கி கொடுத்துருங்க எனக் கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார்.
வர்மன் உள்ளே நுழைந்தான். அவள் இன்னும் மயக்க நிலையிலே இருக்க காற்றில் அவளது நெற்றியின் முன் முடிகற்றை அசைந்தாட அவளிடம் நெருங்கி வந்தவன் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டான். அவளது நெற்றியில் இதழை பதித்தவன் அவளின் காலை பார்த்தான். மனம் அவளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டது. இருந்தாலும் அவன் எடுத்த முடிவில் பின் வாங்க போவதில்லை என்று உறுதியோடு இருந்தான்.
சிறிது நேரம் கழித்து எழுந்தவள் வர்மனை தேடினாள். அவன் அங்கு இல்லை என தெரிந்து கொண்டவள் மெல்ல எழுந்து குளியலறைக்குள் செல்ல முனைத்தாள். ஆனால் காலில் உள்ள வலி அவளுக்கு வேதனை அளிக்க அம்மா… இஸ் ஆ… என்று கத்தினாள். பால்கனியில் நின்று கொண்டு எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தவன் அவளது சத்தம் கேட்டு ஓடி வந்தான். என்னாச்சு என்றான்.
பாத்ரூம் போனும் என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்தாள் ஆனால் மறுபடியும் காலில் வலி ஏற்படவே அப்பா… என வலியில் துடித்து படுக்கையில் உட்கார்ந்தாள்.
ஒரு நிமிஷம் இரு என்றவன் அவளை தூக்கி கொண்டு குளியலறைக்கு சென்று அவளை இறக்கி விட்டவன் முடிச்சுட்டு கூப்புடு நான் இங்கேயே இருக்கேன் என்றான்.
விழி வெளியே வர வர்மன் அவளை மீண்டும் தூக்கி கொண்டு படுக்கையில் கிடத்தியவன் நீ ரொம்ப டயர்டா இருக்கேன்னு டாக்டர் சொன்னாரு. அதனால கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு அதுக்கு அப்புறம் நீ இங்கே வேலை செஞ்சுதான் ஆகணும் ஒரு வேலைக்காரியா… என வேலைக்காரி என்பதை அழுத்தி கூறினான் கோபமாக.
ஏன் மாமா இப்படி பேசுறீங்க என்னைய மன்னிக்கவே மாட்டிங்களா… நான் வேணும்னே இந்த தப்பு பண்ணல… இதுல ஒரு…. என்று அவள் சொல்லும் முன்
போதும் நிறுத்து எதுவும் சொல்லாத.. நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்… இனி உன் வாயால என்னை மாமான்னு கூப்பிடாத கால் மி சார் ஓகே என்று கோபமாக கூறிவிட்டு வெளியே சென்றான்.
மனமோ தன்னவனை நினைத்து ஏங்கியது. ஏன் மாமா இப்படி சொல்றிங்க… என்னைய மாமான்னு கூப்பிட சொன்னதே நீங்கதான். ஆனா இப்போ நீங்களே வேணாம்னு சொல்றிங்க அந்த அளவுக்கு உங்ககிட்ட நான் வெறுப்பை சாம்பாதிச்சுகிட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாதா… இந்த நிமிஷமே செத்துரலாம் போல இருக்கு என அவனை நினைத்து அழுதவள் ஏன்ப்பா என்னை விட்டு போனீங்க என்னையும் உங்களோடவே கூட்டிட்டு போயிருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலை வந்துருக்குமா என தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள். அன்றைய நினைவும் அவள் கண்முன் வந்து போனது.
********************************
ருத்ர பாண்டியன் விழியாழினியிடம் அனைத்து விஷயங்களையும் கூறியவர் கண்கள் சொருக அவருடைய இமைகள் படபடக்க மகளின் கையை கெட்டியாக பிடித்தவர் விழி…. என்னை மன்னிச்சு…… அதற்கு மேல் அவருடைய உயிர் அவரின் உடலை விட்டு சென்றிருந்தது. விழி அப்பா… எனக் கத்தி அழுதாள். அவளது சத்தம் கேட்டு வெளியே நின்றிருந்தவர்கள் பதைபதைப்புடன் ஓடி வந்தனர். ஒருவர் டாக்ட்டரை அழைத்து வா என்க இன்னொருவர் சார் அவரோட ஹார்ட் பீட்டாகுதான்னு பாருங்க கூற அதற்குள் டாக்ட்டரே வந்தார்.
ப்ளீஸ் நீங்க எல்லாரும் வெளிய இருங்க… என்க அங்குள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டனர் விழி உட்பட…
மருத்துவரும் நன்றாக பரிசோதித்து விட்டு ருத்ர பாண்டியனின் உயிர் பிரிந்து விட்டது என்பதை உறுதி படுத்திக்கொண்டவர் அனைவரிடமும் சொல்ல விழி அப்பா…….. என்னும் பெரும் சத்தம் போட்டு அந்த மருத்துவமனையே அதிரும்படி கதறினாள். அதற்கு பிறகு அவரது உடலை அவளுக்கு கொடுத்தனர். அவளுக்கோ என்ன செய்ய வேண்டும் ஏது செய்ய வேண்டும் என எதுவும் தெரியவில்லை. கண்களிருந்து கண்ணீர் மட்டுமே ஓடி கொண்டிருக்க நடப்பதை முழுதாக ஏற்றுக்கொள்ள மனம் ஒத்துக்கொள்ளவே இல்லை. அவர்கள் பள்ளியில் வேலை பார்க்கும் கூட இருந்தவர்கள் உதவி செய்ய விழியும் அவர்கள் செயலுக்கு நடை பிணமாய் சம்பிரதாயங்கள் செய்து உடலை தகனம் செய்தனர்.
முடிந்தது எல்லாம் முடிந்தது. வாழ்க்கையில் அவளுக்கென்று ஊன்று கோளாய், அன்பாய், அனுசரணாய் இருந்தவர் இப்போது இல்லை. அழுது அழுது விழியின் விழியிலிருந்து விழிநீர் வராமல் வற்றி போய்விட்டது. வந்தவர்கள் அனைவரும் அவளுக்கு அவர்களால் முடிந்த ஆதரவையும், மனதாங்களையும் கூறிவிட்டு சென்றிட பூர்ணிமா மட்டும் அவளுடன் இருந்தாள். தந்தை இறந்து 8 மணி நேரங்கள் கடந்திருக்க அவளின் வயிற்றின் பசியை போக்க பூர்ணிமா அவளுக்கு சூடாக பால் எடுத்து வந்தாள்.
விழி இந்த பாலை குடி என்று கொடுத்தாள். பூர்ணிமா வேலைக்கு சேர்ந்த நாளிருந்து விழியுடன் தோழி ஆகினாள். ஆரம்பத்தில் பூர்ணிக்கோ தயக்கம் இருந்தது எப்படி இப்பெண்ணுடன் பேசுவதென்று ஏனெனில் அவள் இந்த பள்ளி சொந்தக்காரரின் மகள் அது மட்டுமில்லாது அடுத்து இவள்தான் இப்பள்ளியை எடுத்து நடத்த போகிறாள் என்னும் நோக்கில் அவளுடன் பேசாமல் தயங்கி கொண்டே இருந்தாள். ஆனால் விழியோ அப்படியெல்லாம் இல்லை என்னவோ அவளுக்கு பூர்ணியை பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது. நாள்போக்கில் இருவரும் நல்ல தோழிகளாய் மாறினர்.
கொஞ்சம் பாலை குடி விழி பூர்ணிமா சொல்ல
எனக்கு வேணாம் பூ…
ப்ளீஸ்டி கொஞ்சமாவது குடி டி இல்லைன்னா ஹாஸ்பிட்டல்ல மயக்கம் போட்டு கீழ விழுந்த மாதிரி இப்பவும் ஏதாவது ஆகிட போகுது என கெஞ்சினாள் அவளிடம்.
பரவால்லடி மயக்கம் போட்டு கீழ விழுந்தாலும் பரவாயில்லை. அப்படியே செத்து போனாலும் பரவாயில்லை. இனி எனக்கு யார் இருக்கா…. என்றுவளை பூரணி அடித்திருந்தாள்.
பிழை தொடரும்.
ஹை பிரெண்ட்ஸ் இந்த எபிசோட் படிச்சுட்டு உங்களின் கமெண்ட்ஸ் போடுங்க.
