நானும் மழையானேன்
51
வீட்டில் இருந்து இருந்து லூசாவே ஆகிட்டியா தமிழ்?.. இதோ பாரு என் லைப் உன்னால நிறய கெட்டு போச்சு.. விடு சேதாரம் எனக்கு தானே தாங்கிட்டேன்… இன்னும் கூட பண்ணு தங்குவேன்… என்னால் முடியும்… ஆனா என் பசங்க வாழ்க்கையில் விளையாடின அவ்ளோதான் பார்த்துக்கோ?.. போயும் போயும் குடும்பம் தேர்ந்தெடுத்து இருக்கப்பாரு.. குறக்குடும்பம்.. eee …மறந்துரு… இனி கல்யாணம் அது இதுன்னு விளையாட்டுக்கு கூட பேசின.. அப்பறம் என்னாகும் எனக்கே தெரியாது… கட்டிலை விட்டு எழுந்து கர்ஜித்து…
அவனின் நோய் தான் வாசகர் நல்லுலகத்துக்கு தெரியுமே… தொறந்தா மூட முடியா வாய்க்காரன்… பயந்துட்டு சட்டைய எடுத்து போட்டுட்டு .. தலைவாசல் தாண்ட முயல…
வாசல் பூரா eee அடைச்சு தமிழ் நின்னாச்சு..
அஜு கல்யாணத்தை விடுங்க… இப்ப நம்ம கல்யாணத்தை பத்தி ஒரு முடிவு சொல்லிட்டு போங்க…. யோக முரளி சார்…
திகு திகு ன்னு மூச்சு வாங்கி… லைக் மிஸஸ் கோவலனா நீதி கேட்டிங் மிஸஸ் யோகி…
வசமா யோகி தன் வாயாலேயே சிக்கிங்… மகன் கல்யாணத்துக்கு எதிர்க்க போய் இப்ப அவன் கல்யாணமே ஆடுது…. eee
ஏதோ வாய் தவறி வந்துடுச்சு விடு தமிழ்… eee
அச்சோ இவ்வளவு நாள் உள்ளே இருந்த விஷம் இப்படி வெளியில் வருது… நீங்க தியாகி… ஹாங்… பொன்மனச்செம்மல் நாங்க தான் இவரு அமரர் வாழ்க்கையை சாதா மனுஷ வாழ்க்கையா டி கிரேட் பண்ணிட்டோம்… முடிச்சுக்கலாம் யோகி சார் .. என்னை விடுங்க… எப்படியோ போறேன்… எனக்கு யாரும் வேணாம் எதுவும் வேணாம்…
தமிழ் அழுகை உண்மையிலேயே பச்ச பிள்ளைபோல ஏங்கி… ஏதாவது ஆயுதம் வச்சி குத்தினா தான் வலிக்குமா? வார்த்தைகளுக்கும் வீரியம் உண்டு… குத்திருச்சு தமிழின் மெல்லிய மனசை…
இப்ப கெட் டு கெதர் லாம் .. அப்படியா? ன்னு கேட்டுட்டு போய்ட்டே இருக்காங்க.. மலிஞ்சு போச்சு.. ஆனா 25 வருஷத்துக்கு முன்னமே அம்மா மடிக்குள்ள ஜாலியா இருந்த ஒரு பச்சப்புள்ளைய …
அது ஆரு ?.. !!! தமிழ் தான் eee.. ok ok eee
பேசி ஏமாத்தி பின்னாடியே சுத்தி அடம் பண்ணி கல்யாணம் எங்குற பேர்ல கட்டிகிட்டது மறந்துடுச்சா? அவ்ளோ தியாகியாலாம் நீங்க கஷ்ட்டப்பட்டு துன்பப்பட்டு சகிச்சு என் கூட வாழவேணாம்.. இன்னும் கிரவுண்ட் மண்டை சார் ஸ்கூல் வச்சுருக்காறு… அதே மூவாயிரம் கண்டிப்பா சம்பளம் தருவாரு.. நான் போறேன்.. உங்க வயித்தை கிழிச்சு பெத்துகிட்ட ரெண்டு எருமைகளை நீங்களே வச்சுக்கோங்க..
இன்னையிலிருந்து இவரு என் புருஷன் இல்ல.. அந்த எருமைகள் என் பிள்ளைகள் இல்ல.. கையெழுத்து போட்டுட்டு நான் வெளியேறிக்கிறேன்… உங்க சந்தோசம் என் சந்தோசம்…
கையெழுத்து போட்டுறேன்.. சொல்லும் போது கண்ணில் ஈரம் கசிய… தமிழ் மெய்யாவே கோவிச்சுக்க…
டேய்.. பெரிய வார்த்தைலாம் சொல்லாதேடா.. நீ என் செல்வம் டா.. நீ இல்லன்னா நான் இல்லடா… அம்மு…
கொஞ்சவே வராத யோகிக்கு… தமிழின் குமுறல்கள் வருத்தம் தர… பொறுமை எடுத்து.. உள்ளத்தின் மெய் வார்தைகளா தானா வர..
நம்பல தமிழ்
போங்க.. போங்க… என்னை உங்களுக்கு பிடிக்காது… அன்பே கொஞ்சம் கூட இல்ல.. (நெஞ்சறிய பொய்யா குற்றம் சொன்னா)
முட்டாள் ன்னே நினைக்கிறீங்க நான் எது சொன்னாலும்.. கொஞ்சம் கூட காது கொடுக்குரதில்லை
ஒரு நாள் பூரா வீட்டில் சும்மா இருந்து பாருங்க.. என் கஷ்டம் புரியும்.. உங்கம்மா கூட பரவாயில்லை.. கொடுமைலாம் பண்றதில்லை.. எங்கம்மா கேள்விக்கு பதில் சொல்லியே நாக்கு தள்ளுது.. ஒருபொம்பளை பிள்ளை கூட இல்ல துணைக்கு.. எல்லாம் ஆம்பளைங்க ளா இருந்து லா மட்டும் நல்லா உணக்கமா பேசறீங்க..
எனக்கு கல்யாண வாழ்க்கை வெறுத்துபோச்சு புளிச்சி போச்சு அத்து போச்சு.. வெறும் ஆம்பளைங்களா குடித்தனம் பண்ணிக்கோங்க.. இந்த அப்பாவி எதுக்கு?..
எங்கம்மா வரட்டும் .. அவங்க கிட்டே பஞ்சாயத்து வச்சு ஒரு முடிவுக்கு வருவோம்..அது வரைக்கும் நீங்க யாரோ? நான் யாரோ?
தமிழம்மா ரொம்ப வீரியமாகவே சண்டை போட…
யோகிக்கு தமிழை கூட சமாளித்து விடுவான்..
ப்ரேமாமாம்மாவை பஞ்சாயத்துக்கு கூப்பிட்டா அவ்ளோதான் அவன் மானம் கப்பலேறுவது உறுதி…
இப்படி நாலா புறமும் குண்டம்மாக்கு தாக்கத் தெரியும் என்ற சமர்த்தே இன்றுதான் யோகி கண்டுபிடிச்சிங்… eee
சரி.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேச வேணாம்.. பாக்ட் புரிஞ்சிக்கோ தமிழ்.. கல்யாணம் என்றால் மாப்பிள்ளை சம்பளம் ன்னு ஒன்னு வாங்கணும் அப்ப தான் பொண்ணு தருவாங்க..
ஏன் நம் அர்ஜுன்க்கு என்ன? சம்பாரிச்சுதான் வீட்டில் உலை வைக்கணும் ன்னு இருக்கா என்ன? லூஸா
எதிர் கேள்வி கேட்டாள் .. தமிழ்
ஏண்டி .. அவன் அவன் பொண்டாட்டியை வச்சு காப்பாத்த வேணாமா?
அவன் எதுக்கு காப்பத்தனும்.. நாம் தான் இருக்கோமே? அந்த குட்டி ஒரு பிடி சாப்பாடு திங்க போவுது அதும் கூட நம் வீட்டில் இல்லையா?
யோகிக்கு இப்படி விதண்டா வாதமா பேசும் மனைவி மீது எரிச்சல் தான் வந்தது.. அவன் கணக்கு லாஜிக் சார்ந்தது… இருந்தாலும் அடக்கிக்கிட்டு.. சம்பாரிகட்டும் கண்டிப்பா கல்யாணம் பத்தி பேசலாம்.. இப்ப வேணாம்…
அவ்ளோதான்… கட கட ன்னு ப்ரேமாம்மா ரூமுக்கு போய்ட்டா தமிழ்.. அவர் கட்டிலில் முகத்தை போர்வையால் மூடி.. உம் மென்று படுத்தாச்சு…
அவள் எங்கோ போய்ட்டா வருவா.. என்று காத்திருந்த யோகிக்கு… அவள் வராதது கண்டு… தேடி கண்டுபிடித்து..
வா தமிழ். இங்கு ஏன் தனியா படுத்துட்டு?…
அஜூ கல்யாணம் முடியட்டும் வரேன்… முரண்டு பிடிக்க…
போவாத ஊருக்கு இவள் வழி சொல்றா.. தலையை உதறி யோகி…
அதுக்கும் இதுக்கும் என்னடி முடிச்சு போடுற.. நோக…
60 வயசு கிழவருக்கு ஒன்னா படுக்க துணை வேணுமாம்.. என் பிள்ளைக்கு 40 ஆகனுமாம்.. இதெல்லாம் போங்கு நான் வரல… போயா .. போயா… அந்த பக்கமா குண்டம்மா திரும்பி படுத்து ஒத்துழையாமை இயக்கம் நடத்த…
60 வயசா?… அடப்பாவி… உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா? 80 ன்னு சொல்லாம விட்டியே…தாயே …
தானாய் சிரிப்பு பொங்கி வர யோகி…
சத்தியாகிரகம்.. இனி ஆகாது ன்னு… பாவம் தான்… ரொம்ப கஷ்டம் தான்… வன்முறை கையாண்டு.. தமிழை அப்படியே தூக்க முயற்சிக்க… அவள் வேணும்னே அதிகமா போர்ஸ் கொடுத்து துள்ள… முடில…யோகிக்கு… மேலேயே வீழ்ந்துட்டான்…
முழுக்க இது விபத்துதான்…. eee
குண்டம்மா இந்த வீட்டில் யாருக்கு வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ… நான் தடை பண்ணல… நீ சந்தோசமா இருந்தா மட்டும் போதும். … அப்புறம் மருமக என்னை கொடுமை பண்ணிட்டா ன்னு கம்பளைன்ட் மட்டும் கூடாது… காதோரம் முடி ஒதுக்கி… இதழை உரசி பேச…
உண்மையாவா?
ஆமாம்..போன மாசம் தான் ஹரிஷ் க்கு கூட
21 ஆச்சு.. அவனும் பாவம் தான் அஜுவோடே சேர்த்தே பண்ணி விட்ரு… வஞ்ச புகழ்ச்சியா யோகி ஓட்ட..
அது கூட தெரியாது.. தெய்வீக நிலையில் தமிழ்..
இப்ப கல்யாணம் ரெண்டு வருஷத்தில் ஒரு பேர குழந்தை அடுத்தடுத்து வரிசையா.. கையில் ஒன்னு இடுப்பில் ஒன்னு… பாட்டி தாத்தா ன்னு.. சொர்க்கம் டா..வாவ்…
அக மகிழ்ந்து… யோகியை இழுத்து உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்க.. ரொம்ப நாள் ஆச்சு… இப்படி லாம் இருந்தது அவன் லேசா விலக…
பார்த்தீங்களா? என்னை உங்களுக்கு பிடிக்கல..
தமிழ் ராகம் இழுக்க… திடீர்னு பண்ணுவ ன்னு என்ன தெரியும்? என்று யோகியே முகத்தோடு முகம் சேர்த்து… கொஞ்ச…
வேணாம்.. அவள் தள்ள.. அவன் இழுக்க.. ..அந்த அறையே இருவரின் விளையாட்டு மைதானமானது…. பழய கட்டில் இப்பவா? அப்போவா? ஊசலாடியது…
ஆசை தீரவே தீராதா தமிழ்? வேகம் கூட்டி முதுகு வழி சென்று உச்சியில் மின்னல்கள் வெடிக்க.. இன்பங்கள் உடலெங்கும் பரவ… தாளாது தன் பெண்ணிடமே யோகி சந்தேகம் கேட்க…
தீரவே தீராதுங்க… இது உயிருணவு… மனநிறைவு தருவது. இதை இயல்பாக்கிட்டா வாழ்க்கை சரியா இருக்கும் … நம் அஜுவும் இதை கடந்துட்டா அவன் எங்கோ போயிருவான் சின்ன வயசிலேயே…. சரியான பருவத்தில் இருக்கான்… அழகா களையா…இருக்கான்… யாராச்சும் முன்னே பின்னே தெரியாதவ கொத்திட்டு போய்ட்டா நம் மகன் நமக்கில்ல பார்த்துக்கோங்க… பெரியவர்களுக்கு எல்லாம் வயசாயிடுச்சு காலா காலத்தில் அவன் பிள்ளையும் கண்ணில் பார்த்தால் இன்னும் நிறய நாள் நம் கூட இருப்பாங்க… நான் சொல்வது இன்று உங்களுக்கு கேலியா தெரியும்… பின்னாடி சரியாத்தான் நாம் குடும்பம் பண்ணியிருக்கோம் ன்னு பெருமை வரும்.. மாமா…
எட்டி அவனின் ஆதாம் ஆப்பிளின் பக்கவாட்டில் பல் பதிய கடிக்க…
வேண்டாம் வேண்டாம் அலறி… எடுத்துவிட்டான் யோகி… அப்புறம் கடிபட்ட காயத்தோடு அலைவது யாராம்?
இப்ப அவனுக்கு பிடிச்ச இடத்தை கடிக்க… உன்னை மாறி நான் இல்லையாக்கும்… வசதியாவே கொடுக்க… காதல் பித்தம் ஏற
முட்டி மோதி யோகி… மூச்சிரைத்தான்…
தமிழ் அவன் வேகத்தை மோகத்தை கண்டுக்காது…
காது குத்து வச்சதோடு விசேஷம் வைக்கல.. கல்யாணம் ன்னா மங்களமா இருக்கும்ங்க… காதலோடே கதை பேச… eeee
அந்த பேமிலி வேணாம்.. வேற பாரு.. அப்பா கிட்டே ஜாதகம் கொடுத்து நம் ஐயர் கிட்டே நல்ல நேரமா பார்த்து செய்…
ஓ.. உங்க கல்யாணம் அப்படி தான் நடந்துச்சோ? அடுத்த வாரமே கல்யாணம் வச்சுக்கலாம் உங்கம்மாகிட்டே பேசு சொன்னது யாராம்?.. முதலிரவில் பால் ஒரு சொட்டு விடாம குடிச்சுட்டிங்க தெரியுமா? சோபி திராட்சை… eee போங்க போங்க
தன் மேலிருந்து கீழே தள்ளி விட்டாள் தமிழ்..
இவரு மட்டும் உடனே கட்டுவாராம்… மகன் மட்டும் நாள் கிழமை நட்சத்திரம் எல்லாம் பாரக்கன்னுமாம்… அஜு மற்றும் யோகி கெட்டு போன விகிதாச்சாரத்தை கணக்கெடுத்தால்… eee
மகனே 24 காரட் வந்தான்.. யோகி நீர்யானையா சுத்தினது … இன்னும் ஒளிச்சு வச்சு பசங்கள் இல்லாத நேரம் சாமியாடுவது… இந்த வயசிலேயும் தமிழை ஏமாற்றி காதல் செய்வது eeee எல்லாம் சேர்ந்து பக்கா கோல்ட் கவரிங் யா தான் தெரிஞ்சான்…
எனக்கு அமிர்தவர்ஷினி தான் மருமகளா வேணும் சொல்லிட்டேன் சொல்லிட்டேன் .. ன்னு தமிழ் ஓவர்யா துள்ள…
பேசக்கூடாது… வாய வாயால் அடைத்து… முட்டி மோதி பிச்சி இச்சி காதல் யோகி… சட்டுனு தூங்கியும் விட்டான்… எதையும் கண்டுகாமல் கடமை முடிந்தது காதல் வாழ்க அம்புட்டுத்தான் eeee
காலையில் தீயா தமிழ்… தன் முதல் உறவு யூத் சத்யனை அழைத்து விவரம் சொல்ல…
தூக்கிட்டு வந்துரவா பேத்தியை … ஒரு வார்த்தை சொல்லும்மா..
ஜாதகம் பார்க்கோணும் அவர் சொல்லிட்டாரு?
ஓ.. இன்னைக்கு நல்ல நாளா? ஜெயா கிட்டே கேப்போம் இரு.. வரேன் என்றவர்..
சிறுது நேரம் கழிச்சு…
அம்மாடி நம் வழக்கம் குல தெய்வத்துக்கு பூ போட்டு பார்ப்பதாம்… வரியா? ஒரு பொங்கல் வச்சு வேண்டி கேப்போம்? சரியா? தவறா?
என்று அவர் வேறு சொல்ல…
அடி வயிறு பகீர்னு ஆனது தமிழுக்கு… அவர்களின் குலதெய்வம் உக்கிர வகையை சார்ந்தது விளையாட்டு மூச்..!
ஒரே நிமிஷம் தான் அந்த எண்ணம்… ஆமாம் நாம் நினைச்சோம் … கடவுள் விருப்பம் ன்னா நடக்கட்டும் இல்லாவிட்டால் எல்லாம் நன்மைக்கே ஆகட்டும்… மனசார ஏற்றுக்கொண்டாள்..!
என்னைக்கு பொங்கல் வைக்கலாம்…
நாளைக்கு போகலாம்மாம் ஜெயாவே ஏற்பாடு செஞ்சுடுவா .. நீயும் தம்பியும் வாங்க… இங்கேயே நாளைக்கு சாப்பிடலாம் ம்மா…
சரிங்க மாமா…
மாமா ன்னா மாமா தான் ஒன்னு சொன்னா அதை 10 ஆ செய்வதில் வித்தகர்…
இரவு யோகியிடம் சொல்ல… ம்ம்ம் என்றான் அரைகுறை மனதுடன்… மகன் டாக்டரேட் வாங்கணும் என்பது அவன் கனவு… சின்னவன் இனிமையானவன் என்பதால் யோகிக்கு அவன் மீதில் எந்த கனவும் இல்லை…
இதை செய்றியாப்பா? கேட்டால் உங்க இஷ்டம் ப்பா.. சொல்லும் சந்திரனின் குளுமையில் இளைய மகன்..
அடுத்து இப்படி செஞ்சா நல்லா இருக்கும்? அஜு
யோகி சொன்னால்..
இதெல்லாம் உடுங்க.. எப்பன்னாலும் செஞ்சுக்கலாம்… நான் தனியா ரோபோட்டிக்ஸ்ல ஒரு ப்ரோக்ராம் கிரியேட் பண்ணிட்டு இருக்கேன்… ஜெர்மன்ல தேடுறாங்க..பிஜி முடிச்ச நெக்ஸ்ட் டே ஓடிருவேன்.. அவன் கண்ணில் தனி கனவு இருக்கும்…
யோகி சொல்லும் வழி வலியில்லாதது… வருஷங்கள் விரயம் ஆகாது எளிதில் மரியாதை தேவையை பூர்த்தி செய்வது
அஜு தேர்ந்தெடுப்பது … புதுசு .. சரியா? தவறா? தெரியாதது. … வெற்றியே என்றாலும் வருடங்கள் வீணாகும்.. படிப்பு துறையிலேயே ஊறி வித்தகனான தகப்பனுக்கு விளக்க தெரியவில்லை… போய் அனுபவப்பட்டு வரட்டும் என்றே கை விட்டான் யோகி…
இப்ப தமிழ் கிளப்பி இருக்கும் கல்யாண கூத்து.. இன்னோரு மண்டை வலி…
மறுநாள் இரண்டு தம்பதியரும் தங்கள் வாரிசின் நல் வாழ்வுக்காய் பூ போட்டு பார்க்க…
சுபம் … அறிவிக்க… தமிழுக்கு அப்படியோர் மகிழ்ச்சி.. நாளையே மகனுக்கு திருமணம் போன்ற பூரிப்பு..!
வேற பொண்ணு பாரு… இந்த பேமிலி வேணாம்… கறாரா சொல்லி யோகி முறைத்துவிட்டு செல்ல…
அமிர்தாவின் fb கணக்கு திறந்து காட்டி பெரியவர்களிடம் … எப்படி உங்க பேத்தி? கேட்க
ஜெயம்மா … அவனுக்கு ஜோடி பிரமாதம் .. வாழ்த்த..
குண்டா இருக்கோம்மா?
அப்படி செல்லமா அவங்க வீட்டில் இருக்கா… இங்கு கல்யாணம் ஆகி மூத்த மருமகளாக வரும் போது சரி ஆகிடுவா மாமா…
இனம் .. நம்மாட்களா? ஜெயா
தெரில ஆனால் சமமா இருப்பாங்க நம்புறேன் அத்தை… பேமிலி பெருசு… நம்ம அஜு அங்க வாலை சுருட்டியே ஆகணும்… மனுசாள் கூட அவன் கண்டிப்பா பழகனும்… ஓட்டாமயே திரிது… அந்த கூட்டத்தில் சிக்க வச்சுட்டா… நமக்கு எல்லோருக்கும் கோவில் கட்டிருவான்… அத்த…
தமிழ் ரொம்ப சந்தோஷமா சிரிக்க..
அவளின் கன்னம் தடவிய ஜெயாம்மா… அவனுக்கு பொண்டாட்டியா வர அந்த பொண்ணு கொடுத்து வச்சுருக்கோ இல்லையோ? உனக்கு மருமகளா வர அவ தவம் பண்ணியிருக்கணும் அம்மா…
போங்க அத்தை… சும்மா காமெடி பண்ணிக்கிட்டு… உலைக்கு எவ்ளோ அரிசி போட… மதிய சமையலுக்கு போய்ட்டா தமிழ்…
யாரை பிடிப்பது அபி வீட்டில்… அடுத்த யோசனை…
அங்குள்ள அப்பாவி யார்? நம் சசித்தான்… eee
போட்டுட்டா போனை அவனுக்கு… மாட்டுச்சு ஓர் பாவப்பட்ட ஜீவன்… விவரம் தெரியாமல்… eeee
