நானும் மழையானேன்…. 50

This entry is part 16 of 27 in the series நானும் மழையானேன்

நானும் மழையானேன்

நானும் மழையானேன்…41

நானும் மழையானேன்…41

நானும் மழையானேன்..ஆடியோ நாவல் 1

நானும் மழையானேன்..ஆடியோ நாவல் 1

நானும் மழையானேன்..ஆடியோ நாவல் 1

நானும் மழையானேன்..ஆடியோ நாவல் 1

நானும் மழையானேன்…42

நானும் மழையானேன்…42

நானும் மழையானேன்…43

நானும் மழையானேன்…43

நானும் மழையானேன்…45

நானும் மழையானேன்…45

நானும் மழையானேன்…44

நானும் மழையானேன்…44

நானும் மழையானேன்..2

நானும் மழையானேன்..2

நானும் மழையானேன்…46

நானும் மழையானேன்…46

நானும் மழையானேன்…47

நானும் மழையானேன்…47

நானும் மழையானேன்…3 (ஆடியோ)

நானும் மழையானேன்…3 (ஆடியோ)

நானும் மழையானேன்… Epi _4 ஆடியோ நாவல்

நானும் மழையானேன்… Epi _4 ஆடியோ நாவல்

நானும் மழையானேன்… Epi _5 ஆடியோ நாவல்

நானும் மழையானேன்… Epi _5 ஆடியோ நாவல்

நானும் மழையானேன்…48

நானும் மழையானேன்…48

நானும் மழையானேன்.__ 49 (நிறைவு பகுதி)

நானும் மழையானேன்.__ 49 (நிறைவு பகுதி)

நானும் மழையானேன்…. 50

நானும் மழையானேன்…. 50

நானும் மழையானேன்…. 51

நானும் மழையானேன்…. 51

நானும் மழையானேன் ….

நானும் மழையானேன் ….

நானும் மழையானேன் 2

நானும் மழையானேன் 2

நானும் மழையானேன் 3

நானும் மழையானேன் 3

நானும் மழையானேன் 3

நானும் மழையானேன் 3

நானும் மழையானேன் 5

நானும் மழையானேன் 5

நானும் மழையானேன் 5

நானும் மழையானேன் 5

நானும் மழையானேன் 6

நானும் மழையானேன் 6

நானும் மழையானேன் 7

நானும் மழையானேன் 7

நானும் மழையானேன் 8

நானும் மழையானேன் 8

நானும் மழையானேன் 9

நானும் மழையானேன் 9

நானும் மழையானேன் —– 50

வணக்கம் மேடம்…

பின்னிருந்து யாரோ அழைக்க.. அந்தா பெரிய மாலில் யார்ரா? ன்னு அதிசயமா தமிழ் திரும்ப..

கண்ணிய கதர் காட்டன் சேலையில் கண்ணை மூடிய கண்ணாடி அணிந்து.. கம்பீரமாய் காதல் கண்ணம்மா அபிராமி.. முகம் நிறைய தமிழை கண்ட மகிழ்வோடு …

வாங்க.. வாங்க.. அபி்மா.. எப்படி இருக்கீங்க?

அந்த சுற்று நடை பாதையில் சென்றவர்கள் அத்தனை பேரும் திரும்பி பார்க்கும் வண்ணம்.. உரத்த குரலில் அபிக்கும் குறையாத பெருத்த மகிழ்வில் நம் தமிழம்மா..

அவ்ளோதான்.. தன் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுக்கிறேன் என்று அழைத்து வந்த அஜூ நாய் தொல்லை தாங்காமல் கால்கடுக்க பிராண்டட் சாப் வாசலில் நின்றிருந்த தமிழுக்கு வியப்பு கலந்த ஆச்சரியம்…

நெடு நாள் உறவு ஒன்னு கண்ணில் சிக்கியது கண்டு உணர்ச்சி வசப்பட்டுட்டா..இப்படி இடம் பொருள் ஏவல் அறியாது.. eee

அபிராமியும் நாகரீகம்லாம் பார்க்கல… தன் குருவின் மனைவிக்கு மரியாதை தரும் விதமா..
தமிழின் கையை வாஞ்சையோடு பிடித்துக்கொண்டு..

நீங்க எப்படி இருக்கீங்க? சார் பசங்க எப்படி இருக்காங்க? மேடம்

சம்பிரதாய விசாரிப்பை கூட நிஜமான பாசத்தோடு கேட்க…

எல்லோரும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கோம் .. அபி்மா.. உங்க வீட்டில் அவர் பிள்ளைகள் .. உங்க கூட்டு குடும்பம்லாம் எப்படி இருக்கு? தமிழும் அபிராமிக்கு மேலே பாசமா பாய்ஞ்சு பிடுங்கி நலம் விசாரிக்க..

இங்க நின்னு என்ன பண்றீங்க? கலர் பார்த்து சொல்லுங்க சொன்னேன்ல..

அஜு.. டைனோசர் மாறி தமிழுக்கு ரெண்டு பங்கு உயரத்தில் இருந்து பின்னின்று முன்னே மூக்கை நீட்டி காய…

தன் இமேஜ் பச்ச பிள்ளையை விட மோசமா போனதை உணர்ந்து தமிழ் ..

ஹி ஹி.. அபியிடம் வழிந்து…

இவன் தெரிதா அபிம்மா நம்ம அஜு…. சின்ன பையனா பார்த்துருக்கீங்க..

அஜும்மா… இவங்களை நல்லா உத்து பாரேன் பேஸ்புக் ல இவங்க சாதனை எல்லாம் அடிக்கடி போடுவாங்க… பிரேவ் லேடி அபிராமி சசிகுமார் IAS..

என்று இருவரையும் தமிழ் தனித்தனியா அழகாய் அறிமுகம் பண்ண..

அப்பனுக்கு தப்பாம பிறந்த சிரிச்ச மூஞ்சி ராசா ஓரளவு மூஞ்ச நல்லத்தனமா முகத்தை வைக்க..

அவனும் மரியாதையின் பொருட்டு…

ஹாய் ஆன்ட்டி.. இன்னும் நாலு ஆங்கில சொல்லில் சரளமா பேச…

தமிழுக்கு ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தருணம்…

அபியும் மலர்ந்த முகமும் தாய்மையின் கனிவோடு.. அஜுவை ரசித்து.. படிப்பு .. லட்சியம்
பற்றிலாம் பொதுவில் பேசி…

உங்க அப்பா நிழல் பட்டாலே படிக்காதவங்க கூட தானா பட்டம் வாங்கிருவாங்க.. அப்படி பட்டவங்க மகன் நீங்க.. வெரி ப்ளஸ்ட்.. வாழ்த்தி..

நீங்க தம்பி கூட போறதுன்னா போங்க மேடம்.. அபி வழிவிட முயல..

நீங்க தனியாவா வந்தீங்க அபி்மா?

இல்ல.. அவரும் அமியும் வந்துருக்காங்க..

ஓ.. அப்ப சரி அவங்களுக்கு ஒரு போனை போட்டு சொல்லிருங்க…வாங்க.. நாம அவன் ட்ரெஸ் எடுக்கிற கடையிலேயே உக்காருவோம்.. பேச்சுக்கு பேச்சும் ஆச்சு.. செலக்ஷனும் ஆச்சு..

இழுத்துட்டு போய் .. காலியா கிடந்த சேரில் அமர்ந்து ..

அமிர்தா பெரிய பொண்ணா இருப்பாளே… ஆசையா விசாரிக்க..

ஆமாங்க..BCA பைனல் இயர் பண்றா.. கண்ணு மூடி திறக்கும் முன் வளர்ந்து நிக்குறா…

மெல்லிய புன்னகையோடு அபி

நீங்க கூட போகலியா? ட்ரெஸ் செலக்ஷனுக்கு?

சண்டை போட்டுத்தான் வீட்டுக்கு போவோம்.. வீணா போனதையெல்லாம் எடுப்பா..எனக்கு பிடிக்காது.. துணியில் காசு போடுவது எனக்கு அலர்ஜி மேடம்… பாவாவை இந்நேரம் வித்துருப்பா…

தாய்மை கூட்டல் மனைவியா பொலிவு முகத்தில் வெளிச்சமாய் அபி..

எங்கே நான் பார்க்கணுமே குட்டியை..

வருவா .. ஒருகடை விடாம ஏறி இறங்கி .. எவ்ளோ திண்ண முடியுமோ தின்னுட்டு… ஆடி அசைஞ்சு வருவா… எல்லாம் அவர் கொடுக்கும் செல்லம்.. தரையில் நடக்காதே வலிக்கும் என் தலையில் நட ன்னு தகப்பன் தாங்கினா .. தாய்லாம் அதுகளுக்கு எதுக்கு?..

அபி சுகமாய் சலிக்க..

நீங்க கொடுத்து வச்சவங்க அபி்மா… மகள்கள் தேவதைகள் முக்கியமா அப்பாக்களுக்கு.. அஜு அப்பாக்கு அதெல்லாம் வாய்க்கல.. ஒச்சம் தான்..
எனக்கு பசங்களுக்கு துணி எடுத்து எடுத்து நீலம் கருப்பு வெள்ளை ன்னு வாழ்க்கை நிறமில்லாமல் சாயம் போய்யுருச்சு… இப்ப அஜு வருவான் பாருங்க நீலத்திலேயே 50 சேட்ஸ் கொண்டு வந்து எது என்கிட்டே எது இல்ல ன்னு கேப்பான்.. ன்னு மகனை கிண்டல் பண்ண…

மறந்துருங்க இப்படி பொம்பளை பிள்ளை வேணும் ன்னு ஆசை இருந்தா… அமியை பார்த்தா… அப்படியே பாவா மாறி.. எல்லாத்துக்கும் தள்ளிட்டே இருக்கணும் மேடம்… முடியல.. இவளுக்கு மட்டும் துணி எடுக்க மாட்டா.. நண்டுக்கு சுண்டுக்கு ன்னு குட்டி குட்டியா.. மொத்த குடும்பத்தையும் கிப்ட் கொடுத்தே ராசி பண்ணி வச்சுருக்கா கேடி கேர்ள் இன்னும் இன்னும் உள்ளே உள்ளே போய்… இருவரும் தங்கள் தங்கங்களின் பித்தளை சேர்க்கை சதவிகிதங்களை போட்டி போட்டு ஆராய்ந்து ரிசல்ட் கண்டு பிடித்துக்கொண்டிருக்க…

தமிழ் சொன்னமாறியே கரு நீலம் அடர் நீலம் வான் நீலம் ராமர் நீலம் காக்காமுட்டை நீலம் சொட்டு நீலம் ன்னு நீலமா கொண்டு வந்து …

எது எடுக்க? அஜு கேக்க.. இருப்பதிலேயே இருட்டு நீலத்தை எடுத்து கொடுக்க…

இதுமாறி இருக்கே என்கிட்டே? அஜு சந்தேகப்பட

பாக்கெட் இப்படி இருக்காது … பவ்யமா பதில் தாய் தமிழ்

அதுகளுக்கு இதுதான் டிப்பரென்ட் ஸ்டைல்..eee

ஓ.. சட்டை?

கருப்பே எடுத்துக்கப்பா.. ராசா மட்டும் சொல்லல..

சரி அதுவும் எடுத்துட்டு வரேன் போய்ட்டான்..

இதெல்லாம் கொடுமை அபி.. முன்னே போனா முட்டுவான் பின்னே போனா எத்துவான்.. சரியானவன்… எதுக்கு வம்பு கூப்பிட்டானா? டார்க் கலர் சொன்னோமா? துவைச்சு வாஷிங் மெஷின் தர கலர் தான் என்னைக்கும் நிரந்தரம்…. பாவம் அந்த அப்பாவி புள்ள.. என்று தமிழ் சிரிக்க..

அபிக்கு… அஜு வின் சீரியஸ் தன்மைக்கு கொஞ்சம் கூட அலட்டிக்காது தன்மையா பொறுக்கும் தமிழ் குணம் ஆச்சரியம் தந்தது..

நமக்கு யாராச்சும் சும்மா விளையாட்டு வேடிக்கை என்று இருந்தாலே சுள்ளுன்னு கோபம் பொத்துக்கும்… மேடம் மாறி சகிக்க பழகனும்..

யாரையோ சகிக்கும் முன் அமியை பாசமா பார்த்துக்கோணும் .. இதுவரை இல்லா ஓர் எண்ணம் முதலில் வந்தது அபிக்கு…

நன்னயங்கள் இப்படித்தான் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்றும்…

அஜு தேடல் நிறைவு பெற…

போலாம்ம்மா.. கூப்பிட…

அபியை தனியே விட பிரியமில்லாது தமிழ்..

வா ஏதாச்சும் சாப்பிடுவோம் ஆன்ட்டி கூட…

உணவகத்துக்கு தள்ளிட்டு போய் வேணாம் வேணாம் சொல்ல சொல்ல அபிக்கு ஐட்டம்களை குவிச்சு வச்சு சாப்பிட வைக்க…

இன்னும் சசியும் அமியும் காணோம்..நேரம் ஆக.. ஆக..

அஜுக்கோ காதில் நீராவி பொங்கிட்டு வர..

அம்மா.. ஒரு நிமிஷம் ன்னு இழுத்துட்டு போய்

இப்ப வரீங்களா உட்டுட்டு போகவா? ஆளை கண்டா உடுரதில்லை.. அந்த ஆன்ட்டி நெளிராங்க உங்க பிளேடு தாங்க முடியாம… சத்தமில்லாமல் திட்ட.. அப்பன் விட்டதை மகன் கையில் எடுத்துக்கொண்டான் இப்பல்லாம்.. eee

இதெல்லாம் கூட இப்ப குடும்ப கடமை போல… eee

ஆனா… திட்டு வாங்குவதிலேயே ஸ்பெஷலிஸ்ட் ஆகிட்டா நம் தமிழம்மா.. நாடி நரம்பு ரெத்தம் சதை அத்தனையிலும் மத மதப்பு ஏறி ஒன்னும் உரைக்கவே உரைக்காது அசைக்கவே முடியாது லெவலில் இப்ப …

ஊறி போச்சு மாறிபோச்சு ஆறிபோச்சு… ரோசங்கள் மானங்கள் கோபங்கள் லாம்…

இதோர் ஜென் நிலை…

எதிராளிக்குத்தான் எகிறும் பிரஷர் சுகர் லாம் ..

அவங்களுக்கு பக்குவம் இல்லாததுக்கு இவ என்ன செய்வா? ஐயோ பாவம்.. eee

அங்கிள் வரட்டும் ஒரு ஹாய் வச்சுட்டு போயிரலாம்..

நான் போறேன்.. எப்படியோ ஊர் போய் சேருங்க.. கைப்பொருளோடு அஜு பிச்சுட்டு பறக்க…

தமிழுக்கு …பல்ப் … ம்ம்…

போடா போடா என் இதயக்கனி இருக்கும் போது
உன் தயவு எதுக்கு?

இதயக்கனியா? வேற யாரு? யோகி தான்.. eee

நாள பின்ன இவன் நமக்கு சோறு
போட்டுட்டாலும்… ஹுக்கும்… போடா போடா பொடிப்பயலே…

மாமா… உடனே யோகிக்கு கால்

மாமா என்றாலே ஏதோ பின்னாடி பூதம் வரும் யோகிக்கு அத்துபடி…

சொல்லு தமிழ்…

மால் க்கு வந்து என்ன கூட்டிட்டு போங்க..பெரிய நாய் உட்டுட்டு போயிருச்சு.

ஏன்? .. வாத்தி ல காரணம் தானே கேப்பான்.. eee

சொல்றேன் நீங்க வாங்க

கொஞ்சம் லேட் ஆகும் … பொறுப்பியா?

கடை சார்த்துவதுக்குள் மறக்காமல் வந்தா சரிதான்.. மாமா வச்சுட்டா…

யோகியின் 54 வயதில் தமிழ் க்கான காதல் பெருகியதே தவிர சலிப்பு வரல…

தமிழ் தன் 51 வயதில் சேட்டைகள் கூடுச்சே தவிர குறையல…

மூர்த்தி தாத்தாக்கு 75+ நெருங்கினாலும் யோகியிடம் இன்னும் ஒழுக்கங்கள் குறிச்ச பாடங்கள் பல மணி நேரங்கள் கற்றும் திருந்தல..

வாரத்துக்கு ஒரு மண்டகப்படி யோகியிடம் அவருக்கு நிச்சயம்..

இப்ப பேரன்களும் கூட்டு .. ஏன் தாத்தா இப்படி? ன்னு தனியா குட்டி குட்டி பாடங்கள் எடுப்பார்கள்.. எல்லாம் சீடத்தன்மையா கேட்டுட்டு…

நானும் ரௌடிதான் நானும் ரௌடி தான் ன்னு அவர் ஒற்றே ஜல்சா தான்… வெளியில்.. இன்னும் கலர் ஜிகுனா சட்டைகள்.. ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி போட்டு… கூலர்ஸ் போட்டு புல்லட் ராஜா தான்..

முன்பு fb ல தான் அவருக்கு கேர்ள் பிரன்ட்ஸ்…
விபத்தில் இவரின் பெண் நண்பர்களின் எண்ணிக்கை அனைவருக்கும் தெரிந்து விட…
ரொம்ப வசதியான போச்சு… யூத் சத்யனுக்கு.. eee

முழுக்க நனைஞ்சாச்சு எதுக்கு முக்காடு என்று

உதயம் வாட்ஸ் ஆப் குரூப் …

சத்யன்ஸ் ஏஞ்ஜெல்ஸ்.. eee

ஒற்றே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கும்மாளம்
ஒரு நாளைக்கு 3000+ செய்திகள் அதில் சத்திக்கு மட்டும் ஹார்ட்டும் லிப்ஸ்யும் மட்டுமே 2000 பறந்து வரும் உலகமெங்கும் இருந்து…eee

அனுஷ்க்காவை மட்டும் மறந்துட்டார்… டீபி பார்த்து ஏமார்ந்த துக்கம் இருக்கும் ல …

நாள் கிழமையானா கெட் டு கெதர்..

இவ்வளவும் தமிழ் கிட்டே மட்டும் நேர்மையா சொல்லிட்டு தான் செய்வார்.. மூர்த்தி..

+_×÷ பண்ணி பார்த்தா இதுக ரெண்டும் கூட்டு கள்ஸ்… eee

யோகியிடம் பேசி விட்டு.. அபியிடம் புட் கோர்டிலேயே காத்திருக்க….

பொசு பொசு உடம்பில் கன்னங்கள் இட்லியா உப்பி இளமஞ்சள் நிறத்தில் அனார்கலியில் அம்சமா அமிர்தவர்ஷினி..

யாருன்னு தெரியாமலேயே வாங்க ஆன்ட்டி… என்று பாந்தமா விளித்து தந்தையோடே ஒட்டிக்கொண்டு தாயை கை நிறைய வைத்திருந்த பாக் களை காட்டி.. சிறு பிள்ளையா ஒழுங்கு காட்டி அச்சிறுபெண் தமிழின் மொத்த கவனத்தையும் கவர..

அஜு உயரம் நிறம் .. சராசரி உடம்பு.. சிடு மூஞ்சித்தனம் .. அமியின் கலர் அழகு உயரம் சிரிப்பு குழந்தை முகம் படத்தோடு படம் சேர்க்க.. பக்கா…

நான் பிடிச்சுட்டேன் என் மருமகளை… தமிழுக்கு ஜாதி மதம் பொருளாதாரம் எல்லாம் கண்ணில் படல… பொருத்தமே விஞ்சி நின்றது..

அதுவும் அமியின் அப்பாவி லுக்… வாவ் பச்சை பிள்ளையா இருக்கா… நாம் பத்திரமா வச்சுக்கலாம் தான் முதலில் தோணிச்சு..

டேய் அஜு விட்டுட்டா டா போற… இரு உன்ன வகையா சிக்க வைக்குறோம்ல… நாங்க ரெண்டு பேர் ஷாப்பிங் வந்தா எப்படி விட்டுட்டு போவ? … வா.. வா.. தீச் சேவல்… கோழிக்கு எதிர்பதம் eee

அப்புறம் அன்பா பேசி எடுத்து அவர்கள் தயங்கி கிளம்ப… அவர் வந்துட்டாரு.. நானே போய்ப்பேன்.. தனியா தமிழ்…

இப்படித்தான் ஊர் தனியா இருக்குன்னு பாதுகாக்க கடைசியில் நம்மை தனியா விட்ருவாங்க.. உஷார் bros

இப்போதைக்கு தமிழுக்கு வெறும் கைதான்.. மகன் கூடத்தான் வந்திருக்கிறோம் ன்னு ஒன்னுமே கொண்டு வரல.. போட்டிருக்கும் தங்க நகைகள் மட்டுமே அசட்..

ஆனாலும் அவசரகாரனாய் விட்டுட்டு போன மகன் மீதும் வருத்தமில்லை.. அபி பேமிலி கூட இல்லன்னும் கோபமில்லை..

அஜுக்கு அவன் ஹாஸ்டல் டயம் அவசரம்…. ம்ம்

நெருக்கடியான அபிசியல் கால்.. யோகி சார் வரவிற்கு காத்து இருக்க முடியாது ரொம்ப பீல் பண்ணிதான் அபியும் சென்றது..

அதனாலென்ன? அவரவர் பக்கம் சரிதான்..

தமிழ் நிர்ச்சலனமாய் கண்ணை கவரும் ஆடை உடுத்தி நகரீகமாய் அலையும் ஜோடிகள் குடும்பங்கள் பெண்கள் ஆண்கள் என்று ஒவ்வொருவரையும் வேடிக்கை பார்த்து…

இந்த பொண்ணு கொஞ்சம் டீசென்டா ட்ரெஸ் பண்ணியிருக்கலாம்.. எல்லோரையும் பார்க்க வைக்குது… அது எதுக்கு? என்று ஒவ்வொன்னாய்

குட்டி பசங்களுக்கு இவ்ளோ காஸ்ட்லி ட்ரெஸ் எதுக்கு? லூசான பருத்தி ஆடை போதுமே? குழந்தைக்கு விலை பணம் பற்றி தெரியுமா?

ஆடம்பரத்தை பாசம் என்ற பெயரில் இப்பவே புகுத்தினா பிற்பாடு சிரமம் தான்.. வருங்கால பெற்றோர் மேல் உலக கவலை தமிழுக்கு…

இன்னும் இடுப்பில் கைகோர்த்து உரசி செல்லும் வெளிப்படையான காதல்???!!! ஜோடிகள் குறித்து அப்பத்தான் கவலைப்படலாம் கோட்டை தொட்டா… யோகி விடல…

வா.. வா.. நேரமாச்சு இழுத்துட்டு போய்ட்டான்…

தனியாவா உக்கார்ந்துட்டு இருந்த? எப்படி பெரியவன் விட்டுட்டு போவான்? கூர்ப்பா கேள்வியால் குடைய…
ஆண்மை என்பது யாதெனில் தன் இணையின் காப்பை பேணுவது… அதை முழுமையா செஞ்சான் யோகி…

அந்த வார்த்தைகளில் அன்பின் அளவை ரசித்தவள்…

எல்லாம் சரியா போச்சு… உங்க குண்டு மல்லி சேப்… போலாம் போலாம்.. ன்னு கேலி பண்ணிட்டே தமிழ் காரில் ஏற… யோகிக்கு

குண்டு மல்லி பேர் ரொம்ப பிடிச்சி போய் மயங்கிட்டு வாய் தொறக்கல…

சென்னையில் அஜு ME படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *