தேன் மதுர தென்றல் நீ
தேன் மதுர தென்றல் நீ – 13
இப்படியே நாட்கள் அழகாகவும் காதல்லாகவும் இருவருக்கும் கழிந்தது.. செமஸ்டர் எக்ஸாம் பிராஜெக்ட் என்று இருவரும் கொஞ்சம் பிஸியாகினர, அடிக்கடி சின்ன சண்டைகளும் முத்தம் பரிமாற்றங்களும் இருந்தது…
ரோஸி மற்றும் அனிதாவிடம் தன்னுடைய காதலை மலர் சொல்லும்பொழுது இருவருமே தங்களுடைய வாழ்த்துக்களை சொல்லி அதோடு அந்த விஷயத்தை பேசாமல் அமைதியாகினர்… மலரோ தன்னை தன் நண்பர்கள் புரிந்து கொண்டதில் சந்தோஷமாக இருந்தது…
அனிதாவுக்கு தான் மலர் அவளை விட்டு தூரம் சென்றதுபோல் இருந்தது.. மலர் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அவளை எதும் பேசாமல், என் தோழியை இதே மாதிரி எப்பயும் சந்தோசமா வைக்கணும் கடவுளே!! என்று மனதார வேண்டிக் கொண்டாள்..
செமஸ்டர் எக்ஸாம் முடிந்து, ஒரு வாரம் லீவும் வந்தது.. அந்த ஒரு வார காலமும் சூர்யாவை வீட்டில் அவளால் பார்க்க கூட முடியவில்லை.. மலர் போன் பண்ணாலும், எடுக்க முடியாமலும் கட் பண்ணிக் கொண்டும இருந்தான்… அவனைப் பார்க்கவே பெரிய விஷயமாக இருந்தது, இதனால் சிறு கோபமும் அப்படி என்ன என்கிட்ட சொல்ல முடியாத விஷயம்? என்று ஆதங்கமும் இருந்தது….
காலேஜ் தொடங்கும் நாளும் வந்தது, இன்று அவளை பார்க்க வேண்டும் என்று காலேஜில் மலருக்காக காத்துக் கொண்டிருந்தான் சூரியா… மலர் அவனைப் பார்த்தும் பார்க்காதபோல் தன்னுடைய கிளாசுக்கு சென்றாள்..
சூர்யாக்கு கஷ்டமாக இருந்தது.. ஒரு நாள் எனக்கு இப்படி இருந்தா, நான் இத்தனை நாள் பேசாம இருந்தது அவளுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்து இருக்கும், ஹார்ட் பண்ணிட்டேன் போல.. ரொம்ப நாள் கழித்து இன்று அவளுக்கு மெசேஜ் பண்ணி சாரி டி செல்லக்குட்டி என்று அனுப்பினான்.. அவள் பார்த்ததற்கான பியூட்டிக்கும் வந்தது ஆனால் அவள் எந்த ரிப்ளைவும் திரும்ப அனுப்பவில்லை..
அதே நேரம் அவனுடைய டைரக்டர் போன் பண்ணி இன்னைக்கு ஈவினிங் ஷூட்டிங் எதுவும் இல்லப்பா, நீ வீட்டுக்கு போயிடு நாளைக்கு பார்க்கலாம் என்று போனை வைத்தார்.. இது நல்ல சந்தர்ப்பம் என்று அவளை எப்படியாவது இன்னைக்கு சமாதானப்படுத்தியாக வேண்டும் என்று, மதியம் கிளாஸ்கு போகாத நம்ம ரெண்டு பேரும் வெளியே போலாம்… நானே உங்க வீட்டுல கொண்டு போய் டிராப் பண்ணிடுறேன் ப்ளீஸ்.. ஆப்டர்நூன் கேட் கிட்டவந்துரு என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்…
மலர்க்கோ இவன் கூப்பிடா நான் போகணுமா என்று நான் வரமாட்டேன் என்று ரிப்ளை பண்ணினாள்.. அதைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே எந்த ரிப்ளை மெசேஜ் பண்ணாமல் எப்படியும் வந்துருவேன் தெரியும் என்று, மனதுக்குள் நினைத்து அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்….
மலரோ அவன் என்ன ரிப்ளை மெசேஜ் அனுப்புவான் என்று போனை பார்த்துக் கொண்டே இருந்தால் ஆனால் அவன் எதையும் அனுப்பவில்லை ஆன்லைனில் தான் இருக்கிறான் என்று காட்டவும் இன்னும் கோபம் வந்தது அவனை வாட்ஸ் அப்பில் இருந்து ப்ளாக் பண்ணி தன்னுடைய போனை பாக்குக்குள் வைத்து விட்டாள்….
அடுத்த பத்தாவது நிமிடமே அன்ப்ளாக் பண்ணி ஏதாவது மெசேஜ் பண்ணி இருக்கானா என்று பார்க்கும் பொழுது எதுவும் வராமல் இருக்கவும், ஐ ஹேட் யூ என்று இவள் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.. அதற்கு அவன் அப்படின்னா நேர்ல வந்து சொல்லு அப்பதான் அக்செப்ட் பண்ணிப்பேன் என்று ரிப்ளை பண்ணி இருந்தான்…. அவளோ கோவமாக ஸ்மைலியை அனுப்பி போனை நெட் ஆப் பண்ணி வைத்து விட்டாள்…
அவன் சொன்ன டைமுக்கு ஐந்து நிமிடம் முன்னாடியே கேட்டிற்கு முன்னாடி வந்து இருந்தாள்.. அவளைப் பார்த்ததும் சூர்யா சிரித்துக்கொண்டே, தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு அவள் முன்னாடி நிப்பாட்டினான்… அவளும் எதுவும் பேசாமல் கோபமாக வண்டியில் குதித்து அமர்ந்தாள்…
ஆஹா ரொம்ப கோவமா இருக்கா போல இன்று எதுவும் பேசாமல் அமைதியாக தன்னுடைய ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு இன்னொரு ஹெல்மட்டை அவளுக்கு கொடுத்தான்…
அவளும் எதுவும் பேசாமல் ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு எப்ப வீட்டுக்கு போவோம் என்று கோவமாக கேட்டால் 8 மணி ஆகிடும் என்றான் அப்படியா இரு அம்மாக்கு போன் பண்ணி சொல்கிறேன் என்று தன்னுடைய அம்மாவுக்கு போன் பண்ணி அம்மா காலேஜ்ல ஒரு சின்ன காம்பிடிஷன் இருக்கு அதுக்காக சீனியஸ் வீட்டுக்கு போறோம் வர கொஞ்சம் லேட்டாகும் என்றாள்…
செல்வியோ பயந்து கொண்டே அந்த டைம் காலேஜ் பஸ்ல வராதுடி எங்க வரணும் அப்பா வர சொல்லுவ இல்ல கதிர வர சொல்லவா என்று கேட்டார்… மலர் நன்றாக படிப்பதால் இப்படி அடிக்கடி ஏதாவது காம்படிஷன் என்று அவள் பெயரை சேர்த்து காலேஜ் பெயரில் அனுப்புவார்கள்…
இது போல் அடிக்கடி ப்ராக்டீஸ் பண்ணுவதற்கு என்று சொல்வாள்.. அந்த நேரம் கதிரி இல்லான்னா அவளுடைய அப்பா வந்து அழைத்துச் செல்வார்கள்… அதேபோல் இன்றும் செல்வி கேட்கவும் அவள் அதிர்ந்து பின் சமாளித்து இல்லமா, நானே ஓலா ஆட்டோல வந்துடுறேன்…
செல்வி பெண் பிள்ளை என்பதால் யாரிடம் போகிறாள், என்று விசாரித்து பின் அனுமதி கொடுப்பார்.. அது சூர்யாவின் பிரண்ட் என்பதால் அவளும் இவர்கள் காதலுக்காக ஆமாமா ஆண்டி, எங்க வீட்ல தான் பிராக்டிஸ் பண்றோம் பத்திரமா நான் அனுப்பி விடுறேன்…
சூர்யாவும் இங்கதான் பிராக்டிஸ் பண்ண வந்திருக்கான் அப்படி லேட் ஆனா அவங்க கூட அனுப்பிறேன், சூர்யா தம்பி அங்க தான் இருக்கா அப்பனா பயம் இல்லை சூர்யா தம்பி கிட்ட கூடுமா என்றார் செல்வி.. சூர்யாவும் போனை வாங்கி சொல்லுங்க அத்தை, செல்வியோ கொஞ்சம் மலர பார்த்துக்கோபா, லேட்டானா நீயே கொஞ்சம் கூட கூட்டிட்டு வந்துருப்பார் என்றதும் அவனுக்கு ஒரே குஷி ஆகியது…
கண்டிப்பா அத்தை கூட்டிட்டு வந்துடறேன் நீங்க பயப்படாம இருங்க என்று அவன் பேசியதும் தான் செல்வி சிறிது நிம்மதியானார்… அவருக்குத் தெரியவில்லை தன்னுடைய குடும்ப நிம்மதியை கெடுக்க போவது அவன் தான் என்று….
சூர்யா பிரண்டு மலரையும் சூர்யாவை பார்த்துதுது…. பத்திரமா போயிட்டு வாங்கடா என்று இழுத்து சொல்லவும், சூரியா சிரித்தான்.. என் பேர்ல தான் உங்க அம்மா அனுப்பி இருக்காங்க மலர்.. எதோ லவ்வர்ஸ்குல சண்டை சேர்த்து வைக்கலனுத ஹெல்ப் பண்ணுறேன், எந்த ஒரு கெட்ட விஷயத்தையும் பண்ணிடாதீங்க என்று நாசுக்காக அவர்கள் எல்லை கடக்காமல் இருப்பதற்காக சொன்னாள்… அவள் சொன்னது காற்றாக போய்விட்டது…
இருவரும் தங்களுடைய எல்லையை இன்றே கடந்து விடுவார்கள் என்று தெரிந்திருந்தால், இருவருமே இந்த பயணத்திற்கு செல்லாமலே இருந்திருப்பார்கள்… இதுவே அவர்களை வாழ்க்கையை சிக்கலாக கூடிய விஷயமாக அமையப்போகிறது…
