தென்றலை தீண்டாதே ராட்சசா
21
தென்றலை தீண்டாதே ராட்சசா!!
படுக்கையில் சாய்வாக அமர்ந்திருந்த சுரபி மயக்கம் தெளிந்ததும் கேட்டது.. அவன் குடும்பத்தை பற்றி தான்.. எதற்காக இப்படி குடும்பம் விட்டு தனியாக நின்று, பெண்களை தவறாக நடத்துபவர்களை வேட்டை ஆடுகிறான் என்பதை அறிந்து கொள்ளும், ஆசையை விட, அவனுடைய காயங்களுக்கும், புண்களுக்கும் ஏதாவது தன்னால் ஆறுதல் கொடுக்க முடியுமா? என்று தான் நினைத்தாள்..
மாதவி அவனுடனான பிரச்சனை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டது .. தனக்கு பிடித்தமான மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாக இன்னும் வெறி அடங்காமல் நீலத்திமிங்கலமாக ரத்தம் குடிக்க சுற்றி வருகிறான் என்றால் அவனுடைய கோபத்தின் அளவு குறையவில்லை என்றுதானே அர்த்தம் .. அவனுடைய மனதில் சாந்தி வந்தால்தானே அந்த வேட்டைக்கு முற்றுப்புள்ளி வரும்.. தன் கணவனின் கடந்தகால வலிகளிலிருந்து தூக்கிக் கொண்டு வருவது தன்னுடைய தலையாய கடமை என்று நினைத்தாள்…
இத்தனை காலங்களாக மறக்க முயன்று மறக்க முடியாமல் தினமும் நெஞ்சை காயப்படுத்தும் ஒவ்வொரு சம்பவங்களும் தன்னை வட்டமடிக்க காலை பொத்தி கொண்டு….
“ஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஐ வாண்ட் டூ கில்!! அவன்க சாகணும் , என் தங்கச்சி மாதிரி எத்தனை பொண்ணுங்க தினம்தினம் அழிச்சு போறாங்க தெரியுமா ..அத்தனை பேரையும் கொல்லணும்”..
“கொன்னுட்டு ,எத்தனை பேரை கொல்லுவிங்க.. ஒருத்தன கொன்னா, நூறு பேர் வருவான்” என்றாள் ஜாஸை நிமிர்வாக பார்த்து கொண்டு…
“அதுக்கு விட சொல்றீயா.. பச்சை குழந்தைடி அவ.. அவள போய் .. ச்சை, மூணு வருசம் ஆகுது நாங்க தூங்கி,சிரிச்சி தெரியுமா?”..
“இப்போ தேஜா எங்க பேபி??”…
“தரண் கல்யாணம் பண்ணிகிட்டார்…”
“திரும்பவும் தப்பு பண்ணி வச்சிருக்கிங்க பேபி…”
“ஏன் என்னாச்சி?? அவர் நல்லா பார்த்துப்பார்..”
“ம்ம் ஓகே,, பட் எத்தனை நாள் ..அவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கே பேபி…”
“அதனால்தான் வேற லைப் வாழ சொன்னேன்.. ஆனா அவர் மறுத்துட்டார்… இதுல என்னடி தப்பு இருக்கு.. என்னையும் ,விஜயையும் பார்த்தா பழசெல்லாம் ஞாபகம் வந்துடும்.. அவளுக்கு காலம் முழுக்க இப்படி ஒரு அசிங்கம் அவளுடைய வாழ்க்கையில நடந்தது தெரியவே கூடாது.. அதுக்கு நாங்க இப்படி ஒதுங்கி இருந்தாதான் முடியும்.. அதே சமயம் அவளுக்கு ஒரு பாதுகாப்பு கண்டிப்பா வேணும்.. அந்த பாதுகாப்பு தரண் மட்டும் தான் கொடுக்க முடியும் .. அதனால் தான் அவன் கிட்ட கேட்டேன் அவரும் கல்யாணம் பண்ணிகிட்டார்… எப்படி என் தங்கச்சிய ஏத்துகிட்டார்னு இன்ன வரைக்கும் மலைப்பா இருக்கு குட்டி”…
“இதுல அதிசயப்பட என்ன இருக்கு பேபி.. பொண்ணுங்களுக்கு கற்பு போச்சுன்னா ,உயிரே போச்சுனு அர்த்தம் கிடையாது.. சில பேருக்கு அது தெரியிறது இல்லை பேபி.. நாம சாக்கடையில விழுந்துட்டா, எழும்பி குளிச்சிட்டு போற மாதிரி ஏதோ நாலு நாய்ங்க குதறுணத்துக்காக .. அவளோட வாழ்க்கையை இழக்கணும்னு அவசியம் கிடையாது.. கற்பு மனசு சம்பந்தப்பட்டது.. அந்த மனச யாரு தொடுறாங்களோ , அவங்களுக்குத்தான் அவ பெண்மையை திருடுற உரிமையும் இருக்கு.. உங்க தங்கச்சியை பொறுத்தவரைக்கும் இன்னும் அவர் தூய்மையானவதான் முதல்ல அத நீங்க மனசுல வெச்சுக்கோங்க”…
“ஒரு டாக்டரா என்னால அத ஏத்துக்கு முடியுது.. ஆனா ஒரு அண்ணனா என்னால அத ஏத்துக்க முடியலடி.. அவ எங்கள கண்டு மிரண்டு ஓடுவா பாரு மரண வேதனைடி!! கல்யாணத்தை கூட பக்கத்துல இருந்து நடத்த முடியாம யாரோ மூணாவது ஆட்கள் போல தூண் மறைவா நின்னு நானும் ,விஜியும் பார்த்துட்டு வந்தோம்..இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதான் அதோட வலி புரியும்”…
“அதுக்கு, நடந்த முடிஞ்சி போனதுக்கு விடை தேட முடியாது பேபி.. நீங்க பட்டது பெருசுதான் ..நீங்க தேடி தேடி கொலை பண்றதும் சரிதான்.. ஆனா அதை தாண்டி நீங்க பண்ண வேண்டியது ஒன்னு இருக்கு “அவன் புரியாமல் அவளை பார்க்க..
“முதல்ல இங்க என் பக்கத்துல வந்து உட்காருங்க” என்று தள்ளி அமர்ந்து அவனை கை நீட்டி அருகில் அழைக்க..
“காயம் இருக்கு குட்டி, ஸ்டெயின் பண்ணாத…”
“என் காயத்துக்கு மருந்து போட்டா போதும்.. பேபி..ஆனா உங்க காயத்துக்கு மருந்து நான் மட்டும்தான்னு இப்போ புரியுது” என்று இரண்டு கையை நீட்டி அழைக்க தாயை அடையும் சேவை போல அவள் நெஞசில் புகுந்து கட்டி கொண்டான்.. இத்தனை நாள் பாரம் அவள் நெஞ்சில் இறக்கி வைத்ததில் சிறிது நிம்மதி கூட வந்திருந்தது .. உயிரை காக்கும் நாம் உயிரை எடுக்கிறோமே எனதான் ஒவ்வொரு கொலை செய்த பிறகும், தன்னை காயப்படுத்தி கொண்டு நிற்பான்… சுரபியே அது தவறில்லை என சொல்ல கொஞ்சம் நிம்மதி வந்தது..
“பேபி….”
ம்ம்…..
“இப்போ ஓகேவா??”…
“நாட் பேட்!! கொஞ்சம் பெட்டர்…”
“எல்லாம் சரிதான் நீங்க ஒரு பெரிய தப்ப பண்ணிட்டீங்க…”
“புரியல குட்டி!! எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லு,, அப்பதான் உன் மனசுல என்ன நினைக்கிறேன்னு தெரியும்…”
“தரணுக்கு கல்யாணம் பண்ணி வச்சது ஓகே.. பட் தேஜா சரியான பிறகு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்… “
“அப்படிதான் யோசிச்சேன், கல்யாணமே வேண்டாம்னு இருந்த விஜி உன் ப்ரெண்ட லவ் பண்ணினான்.. சரி நாமதான் வாழ முடியாம போயிட்டோம் ,அவனாவது வாழட்டும்னு கல்யாணம் பண்ண சொன்னா..அவன் ,பாப்பாவுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்காம .. என்க்கும் கல்யாணம் வேண்டாம்னு விடாப்பிடியா நிற்கிறான்.. தேஜா சரியாக எத்தனை வருடம் ஆகும்னு தெரியல அதான் இப்படி அவச முடிவு எடுக்க வேண்டியதாகி போச்சி குட்டி.. “
“இப்போ அடுத்து என்ன பண்ண போறீங்க.. இப்படியே நேரப்போக்கு போல கொலை பண்ணிட்டே எண்ணிக்கையை கூட்டிட்டு போக போறீங்களா?..
“வேற என்ன பண்ண சொல்ற?”..
“விட்ட டாக்டர் தொழிலுக்கு மறுபடி வரணும்”…
“நோ !! முடியாது உயிர எடுக்கிற நான் டாக்டர் தொழிலுக்கு அருகதை இல்லாதவன்”..
“அப்போ இப்ப எனக்கு ஒன்னுன்னதும் பார்த்தீங்க”..
“அது நீ, நீ ..வேற வழியில்லைடி”..
“அதேபோல உங்க சேவை, மருத்துவத்துக்கு வழி இல்லாம பேர் இருக்காங்க பேபி.. சோ மறுபடி டாக்டர் கோர்ட் மாட்டணும்..”
“நடக்காத விஷயத்தை பத்தி பேசாத குட்டி.. விடு நான் போக மாட்டேன்…”
“நான் உங்க கூட வாழணும்னா இத எனக்காக செஞ்சிதான் ஆகணும்..”
“புரியாம பேசாதடி எனக்கு இரக்க குணம் ,அடுத்தவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா பதறுற குணம், எல்லாம் அழிஞ்சு போச்சி.. மருத்துவருக்கு தேவை கருணையும், இரக்கமும் அது எங்கிட்ட ஒரு சதவிகிதம் கூட கிடையாது”…
“அது இப்போ வந்ததுதான பேபி, முன்ன அப்படி இல்லைதான”…
“ப்ச் இப்ப எதுக்கு நட்ககாததை பேசி என்னடார்சர் பண்ற.. என்ன, என் போக்குல விடு”..
“உங்கள உங்க இஷ்டத்துக்கு விட போய்தான் ஜாஸா மாறி நிக்கிறீங்க ..உங்களுக்கும் ஒரு லைப் இருக்கு… அம்மாவை சரி பண்ணனும்.. அவங்க கடந்த காலத்தை மறந்து சிரிக்கணும்..தேஜாவை, தரண் கூட சந்தோஷமா வாழ வைக்கணும்.. தலைமைத்துவம் இல்லாம சீர்கெட்டு கிடக்கிற எஸ்வி ஹாஸ்பிட்டல மறுபடி முதல் இடத்துக்கு கொண்டு வந்து, உங்க சேவையை உலகம் முழுக்கும் செய்யணும் .. இத்தனை கடமை உங்களுக்கு இருக்கு.. அத விட்டுட்டு யாரோ நாலு பேர் செஞ்ச தப்புக்காக உங்க வாழ்க்கையையும், சுத்தி இருக்கிறவங்க வாழ்க்கையும் கண்டுக்காம போவீங்களா??”..அவளும் அறிவாளிதான் என நிரூபித்தாள்..
“இப்போ என்னடி சொல்ல வர்ற? நான் செய்யிறது தப்புன்னு சொல்றீயா??”கோவம்தான் வந்தது அவனுக்கு .. இனி எப்படி முடியும் அவன் வழி மாறி வந்து பல மாதங்கள் ஆகிறது..மனம் கல்லாகி போய் கிடக்கிறது அதில் ரோஜா பூக்கவா செய்யும்..
“இல்ல பேபி, அவன்கள எப்போதும் போல சம்பவம் பண்ணுங்க.. அதுக்காக உங்கள சுத்தி இருக்கிறவங்களையும் பார்க்காம விடாதீங்கன்னு சொல்ல வர்றேன்”..நியாயம் தானே அவனுக்கு ஒரு வாழ்க்கை உண்டே..
“அம்மாவதான் விஜய் பாரத்துக்கிறானே..எனக்கு அவஙகள பார்த்தா எல்லாம் நியாபகம் வருது.. முடியல குட்டி ,விட்டிரு ,நான் இப்படியே இருக்கேன்”…
“நான் வேணும்னா என்கூட சந்தோஷமா இருக்கணும்னா?? இனி நாம உங்க அம்மாகூட தான் இருக்கணும்.. ஹாஸ்பிட்டல் போறீங்க டாட் !! இதுல எந்த மாற்று கருத்தும் இல்லை.. முடிவ சொல்லுங்க நான் உங்க கூட இருக்கணுமா..போகணுமா??” என்று கைகையை கட்டி கொண்டு கேட்ட.. இவளை குத்தி கொன்றால் என்ன என்பது போல் பார்த்து வைத்தான் ஜாஸ்..
“ரொம்ப முறைக்காதீங்க பேபி.. பயந்து பயந்து வருது!! எப்படியும் என்ன அடிக்க மாட்டிங்க எனக்கு தெரியும் .. சொல்லுங்க இருக்கவா?போகவா?”
“நீ எங்கிட்ட நல்லா சொகுசு கண்டு பழகிகிட்ட குட்டி, அதான் பயமே இல்லாம போச்சி ..நான்தான் சொல்றேன்ல முடியாதுன்னு”…
“முடியும், அது ஏன் முடியாது இத்தனை வருஷம் விரும்பி பண்ணின தொழில்தானே!!”..
“அது அப்ப இப்போ என் மைண்ட் பிளாங்க் ஆகி போச்சி!! எவனையாவது கொல்லணும், கொல்லணும் அது மட்டும்தான் மனசுல ஓடுது..”
“மாற்றம் கொஞ்சம் கொஞ்சமா வரும் பேபி .. டிரை பண்ணி பார்க்காம சொல்றது தப்பு “…எப்படியும் விடேவே மாட்டாள் என நினைத்தவன்..இப்போதைக்கு தலையாட்டி வைப்போம் என நினைத்து
“ம்ம் ஐ வில் டிரை..பட் முடியலைன்னா கம்பெல் பண்ணாத..”
“லவ் யூ ஜாஸ் பேபி !!”என்று அவன் கழுத்தை சுரபி கட்டி கொள்ள…
“ஏய் வலிக்க போகுது…”
“டாக்டரே அடி அந்த பக்கம்தான்.. இந்த பக்கம் ப்ரீ.. தாராளமா ஹக் பண்ணலாம்.. இப்படி கிஸ் பண்ணலாம்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட.. அதிசயம் ஆனால் உண்மை!! என்பது போல் அவள் முத்தத்தை விழி விரித்து ஜாஸ் பார்க்க…
“இப்போ நீங்க ஒரு லிப் லாக் பண்ணணும் ,ஃபாரின் சிட்டுவேஷன்ல ,ஒரு டூயட் சாங் போகணும்னு ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க.. அதுவும் டாக்டர் ,சோ ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கணும் இனிமே.. உதட்டை கடிச்சி வைக்காம அனுபவிச்சு முத்தம் தரணும்.. சோளத்தட்டையை ஆவு ஆவுன்னு மாடு கடிக்கிற மாதிரி கடிச்சி வச்சிங்க.. பதில் கடி பலமா விழும் ..இடம் ,என் கோவத்தை பொருத்து மாறுபடும்” என்று கண்ணடிக்க ..அவளை சிமிட்டாத இமை கொண்டு பார்த்தவன்.. அவள் அடிப்பட்ட பக்கம் இடிக்காது அவள் தலையை தன் முகம் முன்னால் கொண்டு வந்தவன்…
“என் மேல கோவம் இல்லையா குட்டி?”…
“இருக்கே வண்டி வண்டியா”…
“பிறகு எப்படி??”..என்றவன், உதட்டில் விரல் வைத்து வார்த்தைக்கு தடை போட்டவள்…
“மாதவி அக்கா பாவம்னு இன்னமும் எனக்கு வருத்தம் இருக்கு.. “
“அவள பத்தி பேசி எரிச்சல் பணணாத”…
“சரி சரி, ஆனா அக்காவை விட ,நீங்க ரொம்ப பாவம்.. அவங்களுக்கு வீரா அண்ணா லவ் பண்ண கொடுப்பார்.. ஆனா என் பேபிக்கு ,என்ன விட யாரும் லவ்வ கொடுக்க முடியாது.. பேபிக்கு தேவை மாதவி இல்லை.. இந்த சுரபின்னு புரியுது”..
“லேட்டா புரிஞ்சி என்ன பண்ண குட்டி??” என்றான் ஆடையில் முன்பகுதி திறந்து கிடந்ததை பார்த்து…
“அய்யய்யோ!! இத எப்ப திறந்திங்க ,கருமம்!! கருமம்!! இது கூட தெரியாம” என்று முன் கொக்கிகளை மாட்ட போக..அவள் கை மீது கைவைத்தவன்…
“டைட்டா போடாத காயம் வலிக்க போகுது, அதான் கழட்டி விட்டேன்”..என்றான் அவள் வேலைக்கு தடா போட்டு தன் கையை அங்கே வைத்து மெல்ல பூனைக்குட்டி தடவுவது போல் தடவி கொண்டே கண்கள் சொக்கினான்
“அப்போ பார்த்துட்டிங்க அப்படிதான??”என்றாள் அவளும் அவனுக்கு பிடிக்க வசதியாக கொடுத்து கொண்டே
“அதான் நேத்து நைட் முழுசா பார்த்தாச்சே, இது மட்டும் ஏறி இருந்தது நேத்தே அதையும் பண்ணியிருக்பேன் ” என்றான் அவள் நெஞ்சிடுக்கில் கிடந்த தாலியை தொட்டு காட்டி…ஜாஸ் அவள் விரலோடு விரல் வைத்து அழுத்தி கொண்டே அந்த நிசப்தங்களை ரசிக்க …
“டாக்டர்ஸ் ரொமாண்டிக்கா இருப்பாங்களாம் அப்படியா பேபி??”…
“யாரு சொன்னா??”..என்றான் கிசுகிசு குரலில் அவனுக்கும் உடல் அவளை தேடியது, மருத்துவனாக ஆயிரம் உடல்களை பார்த்தவன்தான் ஆனால் அவன் உயிரானவள் உடல் மட்டுமே அவனை அந்தரங்கமா தேட சொல்லி கரம் நீட்டி அழைக்கிறது..
அவன் பார்வை மாற்றத்தில் சுரபி, குனிந்து கொண்டு… விலகி அமர .. அவளை இழுத்து தன்னருகில் இடித்து அமர வைத்தவன்.. அவள் தொடை மேல் தன் கால்களை போட்டு அசைய விடாது அமர்த்தி கொண்டு…
“எந்த டாக்கர் எப்படியோ.. இந்த டாக்ட்டர் உன்ன பார்த்தா மட்டும் அவுட் ஆப் கண்ட்ரோல்தான் .. கடிச்சி தான் வைப்பேன்.. மாங்காயை பார்த்தா எச்சில் ஊரும் பாரு ,, அது மாதிரி உன்ன பார்த்தா எனக்கு அங்கங்க நட்டுகிட்டு நிற்கும்.. என்ன கண்ட்ரோல் பண்றதே இப்பெல்லாம் பெரிய கஷ்டமா இருக்கு குட்டி” என்றான் அவளை எதுவும் செய்ய முடியாத ஏக்கத்தில்.. அடி மட்டும் படாமல் இருந்திருந்தால் விடவா செய்வான் கற்றது மொத்தமும் அவளிடம் இறக்கி இருப்பான்… அவளுக்கு காயம் ஆற நேரம் கொடுக்க வேண்டுமே.. இன்னும் மாதவிமேல் கோவம் வந்தது இப்படி தவிக்க வைக்க காரணம் ஆகி விட்டாளே என்று..
“அப்போ ஏன் சும்மாவே இருக்கிங்க பேபி முரட்டு தனமா ஒரு பஸ்ட் நைட் டிரை பண்ணுவோமா??”..
“அடிங்க!! யாருகிட்ட??… காயம் காஞ்ச பிறகுதான் இனி அத பததி யோசிக்கவே செய்வேன்.. ஒழுங்கா ரெஸ்ட் எடு குட்டி”…
“அய்யய்ய முத்தம் கொடுத்த ஜாடையை பார்த்து நான் ஏமாந்து போயிட்டேன் டாக்டரே!! .. பஸ்ட் நைட் முடிஞ்சி எழும்பவே முடியாதுங்கிற அளவுக்கு யோசிச்சேன் .. நீங்க இப்படி சொல்லிட்டிங்க “என்று அவனை கிண்டல் அடித்து சகஜ நிலைக்கு கொண்டு வர…
“ம்ம் அந்த நாளுக்காகதான் வெயிட்ங் !! மாட்டுவ, அப்ப சொல்லு என் பெர்பாரம்ன்ஸ் எப்படின்னு?”…
“அப்போ இப்ப எதுவும் இல்லையா, முத்தம்ங்கிற பேர்ல ரணகளமா ஒன்னு தருவீங்களே தரலாம்தான??!!..
“நோ கழுத்துல காயம் ஏதாவது பண்ணிடும்”..
“நீங்க தரலைன்னா போங்க ,நான் தர்றேன்” என்று அவன் உதட்டை கவ்வி கொள்ள.. அவனும் தன் தலை அவளுக்கு சாய்த்து கொடுத்து கையை அவள் அடிபட்ட கழுத்து பக்கம் அசையாது, பிடித்து கொண்டு.. அவள் தந்த முத்தத்தை தனதாக்கி நாவுகள் இரண்டும் கத்தி சண்டை போட ஆரம்பித்தது.. இதழில் மடல் எழுதும் நேரமிது போல!! எல்லாம் மறந்து இருவரும் முத்தக்கவியில் மூழ்கி விட்டனர்…
மாதவி கதவை தட்டிவிட்டு உள்ளே வர.. சுரபி ஜாஸை விட்டு தள்ளி அமர போக .. அவள் இடுப்பில் கை போட்டு பிடித்து அமர வைத்து கொண்டான் ஜாஸ்…இருவர் நெருக்கத்தைப் பார்த்து ஊமையாக நின்ற மாதவி…
சாரி சுரபி!!”..
“பரவாயில்லை அக்கா விடுங்க ,தெரியாமதான”..
“கோவத்துல பண்ணிட்டேன்” …
“மன்னிப்பு கேட்டாச்சின்னா போகலாம் மாதவி” என்று ஜாஸ் வெட்டி பேச..
“பேபி சும்மா இருங்க அக்கா பாவம்”…
“நீ சும்மா இருடி முதல்ல ,அக்கா பாவம், ஆட்டுக்குட்டி பாவம்னுட்டு..கொஞ்சம் ஏறி கத்தி பட்டிருந்தா உன் கதி என்னன்னு யோசிச்சியா?”
“நானும் சாக கிடந்தேன் ஜாஸ்.. அத மறந்துட்ட”..என்றாள் மாதவி ஜாஸ் அருகில் நடந்தபடி
“நீ கொழுப்பு எடுத்து சாக கிடந்தா, அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது…
“உனக்காக நான் எல்லாம் செஞ்சேனே ஜாஸ்”…
“அதுல உன் தப்பும் இருக்குன்னு மறந்துடாத, மாதவி.. நான் செஞ்சது, செய்யிறது தப்புன்னா காட்டி கொடுத்துட்டு போ.. அத பத்தி கவலை இல்லை”…
“எனக்கு அந்த பழக்கம் இல்லை.. நான் ஏட்டப்பனா இருக்க விரும்பல..”
“ரொம்ப சந்தோஷம் இடத்தை காலி பண்ணு இனி உன் உதவி ,எதுவும் தேவையில்லை”…
“ஜாஸ் “என்று மாதவி அருகில் போக..
“ப்ளீஸ் மாதவி , கோவத்துல வார்த்தையை விட வைக்காத.. என் தோழியா இருந்திருந்தா, என்னோட சந்தோஷத்துக்கு நீ குறுக்க வர மாட்ட..அப்போ உன் ஆதயத்துக்கு என்கூட பழகியது போல இருக்கு.. முடிச்சிக்கலாம் எல்லாத்தையும்”…
“பைன்!! நானும் இத சொல்லதான் நினைச்சேன்… இப்போ வந்தது அவள காயப்படுத்தினதுக்கு சாரி கேட்கதான்.. மத்தபடி உங்க மேல உள்ள கோவம் எனக்கு குறையாது.. என் வாழ்க்கை இப்படி கேள்விக்குறியாக நீங்க இரண்டு பேரும் தான் காரணம்”..
“அப்படி நீ நினைச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது .. லவ்னா என்னன்னு உனக்கு புரியல.. சீக்கிரம் அதோட ஆழம் புரியும், அப்போ நான் செஞ்சது சரின்னு சொல்லுவ … என் தோழிக்காக காத்திருக்கேன் சீக்கிரம் வா.. என்றதும் மாதவி பெருமூச்சி விட்டு அவர்களை விட்டு நீங்கி சென்றாள்.. அவர்கள் வாழ்க்கையை விட்டும்தான்…
*************
“ஏம்லேய் செத்த மூதிகளா!! இங்க அண்ணன் சர்வேஷ கொலை பண்ணினவன கண்டுபிடிங்கலேன்னு சொன்னா மூணு வருஷமா கோமாவுல இருக்கியலா..என்று வெள்ளை வேட்டியை காலை தூக்கி கட்டி கொண்டு எதிரில் நின்ற டிடெக்டர் இருவரை நெஞ்சில் மிதித்து கீழே தள்ளினான்…
சக்திவேல் ….
தீனா தயாளன் இரண்டாவது மகன் ஜாஸினால் கொலை செய்யப்பட்ட சர்வேஷ் கூட பிறந்த தம்பி.. படிப்பு வராத காரணத்தால்,மதுரையில் தன் பாடடி வீட்டில் தங்கி வளர்தவன் நல்லவனா ,கெட்டவனா என்று பட்டிமன்றம்தான் வைக்க வேண்டும்…
தன் தந்தை, தமையன் இருவர் கொலைக்கு காரணமானவனை இரண்டு வருடமாக வலை போட்டு தேடுகிறான்…
சக்தி சார்…
“சார் மோரு வேண்டாம் அண்ணாத்த சொல்லு இல்ல அதுக்கு நாலு ஏத்து ஏத்திபுடுவேன்”..
“அண்ணாத்த இப்பதான் ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு, அத பத்திதான் பேச வந்தோம்”…
“இனி சல்லி பைசா தரமாட்டேன்.. ஒரு கருமமும் கண்டுபிடிக்கல..நாலு ரோஸ்கலர் பேப்பரை கொண்டு வந்து ஆதாரம் சேதாரம்னு துட்ட வாங்கிட்டு போக வேண்டியது .. என்ன பார்க்க கோட்டி கணக்கா இருக்காலே!!” என்று அடுத்த மிதி மிதிக்க போக ..
“அண்ணாத்தை இது பெரிய க்ளூ கண்டிப்பா கொலைகாரன் மாட்டுவான்”…
“அப்படியா சொல்லுத சரி யாரு?” என்று நெல் மூட்டை மேல் ஏறி அமர்ந்தான் ஒரு சிகெரட்டோடு..
எஸ்வி ஹாஸ்பிட்டல் சேர்மன் மகன்க சூரியா ,விஜய் …..என்று சொல்லி விஜய் கேஸ் பதிந்தது, அதற்க்கு பிறகு ஒரு வாரத்தில் தந்தையும் தமையனும் இறந்தது என கணக்கு போட்டவன்…
“லேய் கேட்க நாதி இல்லைன்னு போட்டுட்டு ,தெனாவெட்டா நிற்க்கிறிங்கல்ல.. எனக்கு பதில் சொல்லி ஆகணும்லே, இதோ வர்றேன் இந்த சக்தி கையில எப்படி தப்பிக்கிறியன்னு பார்க்கிறேன்” என்று சக்தி சென்னை நோக்கி கிளம்பினான்….
உண்மைகள் மறைக்கப்பட்டு கிடக்க.. யார் யாரை வேட்டையாட போகிறார்கள்? …
