தென்றலை தீண்டாதே ராட்சசா
16
தென்றலை தீண்டாதே ராட்சசா!!
சுரபி சென்னையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்கு புற ஹாஸ்டலில் தங்கி கொண்டாள் ஜாஸ் கண்டுபிடிக்க முடியாது என அவளே தன்னை மெச்சிக்கொண்டாள் ஒரு வாரம் காலேஜ் போகாமல் இருந்து விட்டால் நம்மை மறந்து விடுவான் என கண்மூடித்தனமாக நினைத்து, மொத்த நியூஸ் பேப்பரையும் எடுத்த வைத்து ஏதாகிலும் பார்ட் டைம் ஜாப் கிடைக்குமா என தேடி கொண்டிருந்தாள்..
சுரபி, கையில் ஜாஸ் செலவுக்கு கொடுத்திருந்த பத்தாயிரம் ரூபாய் அப்படியே இருந்தது .. அதை வைத்துதான் ஹாஸ்ட்டல் அட்வான்ஸ் கட்டினாள்… இனி வேலைக்கு சென்றால்தான் அடுத்து வாழ்க்கை கட்டம் ஓட்ட முடியும் என நினைத்து தேடி கொண்டிருந்தாள்.. மகாவை கேட்டால் விஜயிடம் சொல்லி வேலையோ ,உதவியோ செய்வாள்தான் ஆனால் ஜாஸிடம் தா என உரிமையாக கை நீட்டி வாங்கியது போல், யாரிடம் வாங்க அவளுக்கு மனம் வரவில்லை.. குரங்கை நினையாதே மனமே!! என்றாலும் அவள் எண்ண ஏட்டில் ஜாஸ்தான் சுத்தி வந்தான்..
‘ஷாப்பிங் போயிருப்பாங்கல்ல ,என்ன எங்க பேபி தேடியிருக்க போறார்.. அவருக்கு எப்பவும் மாதவி அக்கா ஸ்பெஷல்தான்.. என் மேல ஏதோ ஈர்ப்பு அவ்வளவுதான், நாலு நாள் பார்க்கலைன்னா தானா மறந்திட போறார் ம்ம்.. எனக்கு எதுவும் நிரந்தரம் இல்லை போல.. .நம்ம பொழைப்பை இனி பார்ப்போம்.. எப்பவாவது அவங்க இரண்டு பேரையும் பார்த்தா .. நீ நல்லா இருக்கியா? நான் நல்லா இருககேன்னு.. பேசிட்டு போயிடணும் .. அதுதான் நல்லது…பச் நினைக்க கூடாதுன்னு பேபி பத்தியே நினைச்சிட்டு இருக்கேன்.. இது நல்லதுக்கு இல்ல” என்று ஜாஸ் பின்னால் ஓட போன மனதை பிடித்து இழுத்து வேலையில் கவனம் செலுத்தினாள் சுரபி….
ஜாஸ் காரில் சென்னை முழுவதும் ரவுண்ட் அடித்தான் … அவள் கையில் மாட்டியிருந்த வாட்ச்சில் ஜிபிஎஸ் பொருத்தியிருந்தான்..சுரபியோ அதை ஹாஸ்டல் தேடி அலையும் போது எங்கேயோ மிஸ் செய்துவிட்டாள்… அந்த இடம் நோக்கி எப்படியும் சுரபியை கண்டுபிடித்து விடலாம் என ஓடி போய் பார்க்க .. வாட்ச் ஒரு மரத்தடியில் அம்போவென கிடந்தது.. அதை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு…
“குட்டி எங்கடி போய் தொலைஞ்ச… இனி ஒரு இழப்பை என்னால தாங்க முடியாது … பலத என் வாழ்க்கையில இழந்து அனாதையா நிற்கிறேன்.. இப்பதான் எனக்கு சிரிக்க கத்து கொடுத்த.. இப்படி அம்போன்னு இடையில விட்டிட்டு போனா விடுவேனா? … இதோ நீ இந்த உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் வருவேன்டி வந்து உன்ன தூக்குவேன், அரை மணிநேரத்துல நீ கையில இருப்ப.. என்ன விட்டு சொல்லாம கொள்ளாம போனதுக்கு அனுபவிக்க போற ,குட்டி காத்திரு’ என்று யார் யாருக்கோ போனை தட்டினான் எல்லாம் அடித்த பந்து போல் திரும்பி வர… கைகள் கோவம், விரக்தி எல்லாம் சேர்ந்து நடுங்க ஆரம்பித்தது,. அவள் இதழ் சுவைத்த பிறகு புகை பழக்கம் விட்டிருந்தான் .. இப்போது தன் அலைக்கழியும் மனம் சாந்திபடுத்த தெரியாமல்.. சிகரெட்டை வாங்கி பத்த வைக்க.. ஒரு பெட்டி கடையில் வண்டியை நிப்பாட்டி வாங்கி கொண்டு புகைக்க ஆரம்பித்தான்…
“டேய் ஈவினிங் பார்த்த பொண்ணு சோக்கா இருந்துச்சில்ல “என்றான் பான்பராக்கை வாயில் ஒதுக்கி கொண்டே ஒருவன்..
“ஆமாடா !! பட்சி செம அழகு, அதுலேயும் அந்த பச்சை கலர் சுடிதார்ல பச்சை கிளி போல இருக்கா”..
அதை சுரபி என அவன் சத்தியமாக நினைக்க வில்லை …ஏதோ ஒரு பெண், ஆனாலும் எப்படி தனக்கு சொந்தமில்லாத ஒருத்தியை ரசிப்பது என்று திமிங்கலமாக கோரைபற்கள் இரத்தம் குடிக்க தயாராக..
“ஹாஹா இந்த ஊருக்கு ஒதுக்குபுற ஹாஸ்ட்டல் எப்படின்னு தெரியாம, வந்து சேர்த்திருக்கா ..ராத்திரி பலான தொழில் நடக்கிற இடம்னு தெரியாது போல..”
“அது நமக்கு சாதகம்தான மச்சி.. அதனால தான இப்போ அவள நாம சேர்ந்து அனுபவிக்க போறோம்…”
“புது ஐட்டம்னு பத்தாயிரம் ரூபாய் கேட்டுச்சே, ரெடி பண்ணிட்டியா மச்சி??”..
“ஆமாடா!! செயினை அடமானம் வச்சி எடுத்து வந்துட்டேன், அவள தொட போற முதல் ஆளு நான்தான்.. அவளுக்கு பத்தாயிரம் ரூபாய் என்ன பத்து கோடி கொடுக்கலாம்..”
“அப்போ நாம தெரு கோடியில தான் நிக்கணும்”
“அவளுக்காக நிற்கலாம்டா, என்னா அழகு!!” என்று சுரபி கீழே தொலைத்து விட்டு போன காலேஜ் ஐடியை உதட்டில் வைக்க போக..ஜாஸ் சிறு கத்தியால் நான்கு கோடு போட்டு விட வேண்டும்.. என அவர்களை நோக்கி நடந்து வந்தவன்.. கண்ணில் சுரபி ஐடி கார்ட் கண்டு, ஒரு நொடி இதயம் கலங்கி போனவன்.. மண்டையில் விதவிதமான எண்ணங்கள் அழுகுரல் , சாவு ஊர்வலம் எல்லாம் வந்து அவன் மறக்க முடியாமல் திணறும் பழைய நியாயங்களை கிளறிவிட.. ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி என கூட யோசிக்காது .. இருவரையும் கத்தி கொண்டு சர்சர் என கிழிக்க .. அவர்கள் அலறி கொண்டு ஓட துரத்தி கொணடு போய் தன் வேட்டையை துவங்கும் முன்பு.. போலீஸ் ஜீப் அவன் முன்னால் வந்து நின்றது…அதிலிருந்து விஜய் இறங்கினான்..
திருமணம் முடிந்த கையோடு வேலைக்கு வந்துவிட்டான்.. இந்த பக்கம் ரவுண்ட்ஸ் வந்தவன் ,இருவரை விரட்டி கொண்ட வந்த ஜாஸை கண்டு ஏதோ பிரச்சனை என்று இறங்கி ஓடி வந்தான்….
“சார் காப்பாத்துங்க சார் ,எங்கள கொல்ல பண்ண பார்க்கிறான் “என்றதும் எட்டி ஜாஸை பார்க்க ..அவனோ, நரசிம்மன் குடலை உருவுவது போல் நின்றான்.. சட்டை எல்லாம் கலைந்து பைத்தியக்காரன் போல் நின்றவனை நோக்கி விஜய் தன் துப்பாக்கியை நீட்டி..
“மிஸ்டர் !! அங்கேயே நில்லு, பக்கத்துல வந்த சுட்டு பொசுக்கிடுவேன்”..ஜாஸ் விஜய்யை கவனித்தது போலேயே தெரியவில்லை.. அவன்தான் வேறொரு அவதாரத்தில் நிற்கிறானே .. வேறு எந்த பெண்ணையாவது பேசி இருந்தாலே.. இரத்தம் பார்க்காமல் விட்டிருக்க மாட்டான் தன் சுரபியை என்ற பிற்கு விடுவானா ..நீட்டிய துப்பாக்கியை அலட்சியம் செய்து விட்டு ..ஜாஸ் அவர்களை நோக்கி அடி எடுத்து வைக்க
“கண்டிப்பா சுட்டிருவேன் வராத” …
கண்களை நிமிந்து விஜய்யை பார்த்தவன்.. உதட்டை நக்கலாக வளைத்து விட்டு .. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு துப்பாக்கியை எடுத்து இருவர் காலிலும் குறிபார்த்து சுட்டு கீழே விழ வைக்க.. விஜய் ஜாஸை நோக்கி சுட.. அவன் தலையை நகட்டி கொண்டு.. விஜய்யை நோக்கி சுட்டான் .. இருவரும் மாறி மாறி சுட… விஜய் வலக்கை சட்டையை குண்டு உரசி சென்றது.. கொஞ்சம் தான் இல்லை அவன் கையை பதம் பார்த்திருக்கும் குண்டு…
“யூ_________”என்று திட்டி கொண்டு விஜய் தன் துப்பாக்கியை சுட கிரீட் கீரிட் என்ற சத்தம் மட்டும்தான் வந்தது…..
“ஹாஹாஹா இவ்வளவுதானா உன் டக்கு .. ச்சோ சோ ,நீ வீணாக்குற குண்டுக்கு கணக்கு சொல்லணும் .. ஆனா நான் யூஸ் பண்ற குண்டுக்கு எவனுக்கும் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..இது எனக்கும் அவங்களுக்கும் உள்ள கணக்கு.. நீ இடையில வந்து செத்து போவாத, தள்ளி போ.. “
“சட்டத்தை பாதுகாக்கிறது என் கடமை.. உன்னால என்ன தாண்டி அவன்கள தொட முடியாது, என்ன செய்றாலும் சட்டபடி நான் தண்டனை வாங்கி கொடுக்கிறேன்’..
“நீயா?? நீயா?? நீயா உன்னால முடியுமா? சும்மா புலம்பாத, போயிடு … நான் கொலை வெறியில இருக்கேன் ..செத்து மடிஞ்சிடாத.. அவன்கள விடு விடுடா”..
“மாட்டேன், என்ன பண்ணுவ? ஒழுங்காக துப்பாக்கியை கீழ போடு மிஸ்டர்…”என்பதற்குள் ஜாஸ் குதித்து வந்து, தன் துப்பாக்கியை வைத்து விஜய் தலையில் ஒரு போடு போட..இந்த எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க முடியாது விஜய் நிலைக்குலைந்த சமயத்தில்.. ஜாஸ் இரண்டு கத்தியை ஒரே நேரத்தில் உருவி.. விஜய் பின்னால் பாதுகாப்பாக நின்ற இருவர் கழுத்திலும் சதக்கென சொருகி கொன்றவன்..
“சட்டபடி முடிஞ்சா, இந்த கொலையை பண்ணினது நான்தான்னு கண்டுபிடிச்சி தூக்கி உள்ள போடுடா.. அப்போ நான் நம்புறேன் சட்டம் தன் கடமையை செய்யும்னு “என்று கத்தியில் இருந்த இடத்தை விஜய் காக்கி சடடையில் தடவி தன் நீண்ட முடியை உதறி விட்டு திரும்பி நடந்தான் ஜாஸ்…
“ஒரு அடி எடுத்து வைக்காத நில்லு.. என்று விஜய் கத்த…
“விளையாட்டு துப்பாக்கியை வச்சி பொட்டு வெடி வெடிச்சி விளையாடு, வரட்டா” என்று கீழே கிடந்த கல்லை எட்டி உதைத்து விட்டு ஜாஸ் செல்ல..விஜய் தன் துப்பாக்கியை வைத்து தலையில் அடித்து கொண்டு நின்றான்…இருளில் மறைந்து போன அவன் பிம்பத்தை எரிச்சலாக பார்த்தவன்.. அவனை எப்படி அரெஸ்ட் பண்ண என யோசித்தான்.. ஜாஸை பிடிக்க, அவன்தான் கொலைகாரன் என்பதற்கு ஆதாரம் காட்டி கைது செய்ய வழியில்லாது முழித்தான்….
காவலர்கள் நேரில் பார்த்ததாக சாட்சி கூற இயலாது .. அந்த இடத்தில உன்னை தாண்டி எப்படி கொலை நடந்தது.. அது இதென கேள்வி வரும்… ஆதாரம் கிடைக்கிறதா என விஜய் தேட ஆரம்பித்து விட்டான்.. ஜாஸை பிடித்தே ஆக வேண்டும் எனும் வெறியில் அந்த இடத்தையே அலசி கொண்டு நின்றான்…
ஜாஸ் , கொலை செய்த ரத்த கறை படிந்த சட்டையை கழட்டி காரில் போட்டு லாக் பண்ணி.. காரை ஹாஸ்ட்டல் நோக்கி விட்டான்.. அவனுக்கு கொலை புதிதா பதட்டம் அடைய.. விஜய் அரெஸ்டு வாரெண்டோடு வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கும் மார்க்கம் தெரியும்…
இரவு பத்து மணிக்கு ஹாஸ்ட்டலில் போய் நிற்க..
ஸ்பெஷலா? சாதாவா?…என்று ப்ரோக்கர் வார்டன் அவன் சட்டையில்லா உடல் கண்டு மத்ததுக்கு வந்திருக்கிறான் என நினைத்தது ..கூடவே இவன் வேறு வாயில் வைத்து புகை வண்டி விட பார்க்க அப்படிதான் இருந்தது..
“அடுத்த கொலை பண்ண வைப்பா போலயே??” என்று பல்லை கடித்தான்…
“சாதான்னா என்ன? ஸ்பெஷல்னா என்ன ?”என்றான் கஷ்டபட்டு பொறுமையாக..
“சாதான்னா, பழைய பொண்ணு.. ஸ்பெஷல்னா புதுசு.. அதுவும் காலையில புதுசா ஒன்னு வந்திருக்கு.. செம மார்டன் .. நீ பார்க்க ஹை கிளாஸா இருக்க .. தரவா ,கைபடாத பொண்ணு முரண்டு பிடிக்கும்.. இந்தா இத மூக்குல வச்சி விடு தானா ஒத்துழைப்பு கொடுக்கும்..” என ஒரு வெள்ளை பொட்டலததை ஜாஸ் கையில் கொடுத்து முடிக்க வில்லை..வார்டன் தலை தொங்கி மேஜையில் கண்கள் திறந்த நிலையில் ரத்தம் வாயில் வடிய கிடந்தது ..ஜாஸ் தன் கையை உதறி கொண்டவன்…
“செத்து ஓழி ,, எத்தனை பொண்ணுங்க வாழ்க்கை போச்சி” என்று செத்த பிணத்தை நாலு மிதி போட்டு விட்டு.. ஒரு கட்டையை எடுத்து சிசிடிவி கேமராவை அடித்து நொருக்கி அதன் சீப்பை கழட்டி தன் பாக்கெட்டில் போட்டு விட்டு.. வருகை பதிவேட்டில் சுரபி பெயரை தேடி கண்டு பிடித்து..அதையும் கிழித்து எடுத்து விட்டு..அவள் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தான்…
“உன்ன உன் போக்குல விட்டு வச்சதால என் மேல பயம் இல்லாம போச்சிடு .. ஓடி வந்த காலை உடைச்சி தூக்கிட்டு போறேன்… குட்டி பொண்ணேன்னு பாவம் பார்த்தா, எனக்கே டகால்டி காட்டுறீயா… அந்த பொம்பள முகத்தை பார்த்ததுமே தெரியுது.. பான்ப்ராக் கறையும் , ஆளும் எப்படின்னு.. பெரிய இவ மாதிரி நான் அத்தனை புக்கையும் கரைச்சி குடிச்சிருக்கேன்னு சொன்னா.. இவ புதிர் போட்டி கோடு போட்டு விளையாடுற கேட்டகிரின்னு தெரியாம போச்சி… அடிக்கிற அடியில நாளை பின்ன போகணுங்கிற எண்ணமே வர கூடாது” என்று அவளை வாய் விட்டு திட்டி கொண்டே.. படியில் தாவி ஏறி போக.. ஒரு பெண் ஓடி வந்து தன் மாரப்பை கழட்டி போட்டுவிட்டு…
“வர்றியா சாரே ஆயிரம் ரூபாய்தான்”..
ஜாஸோ, வேண்டாம் என்று அவளை தாண்டிபோக..
“துட்டு வேணாம் சும்மா வா, ___ஏத்துனதுல உடம்பு நடுங்குது” என்று போதை மருந்து ஏத்தியதில் நடுங்கி.. அவன் பக்கம் இன்னும் தன் ஆடையை குறைத்தபடி நெருங்க…
பச் என்று சலித்தவன் ,அவளுக்காக,பாவம்தான் பட்டான்… எப்படி பழக்கப்பட்டு வாழ்வை சீரழித்து விட்டு நிற்கிறார்கள்.. என்று நினைத்து தன் போனை எடுத்து யாருக்கோ மெசேஜ் தட்டிவிட்டு கைநிறைய காலை எடுத்து அவள் கையில் போட…
“ம்ஹூம்______இருக்கா??” என்றதும் தன் கையில் ப்ரோக்கர் கொடுத்த பொட்டலததில் ஒன்றை அவள் கையில் கொடுத்ததும்…அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு ஓட.. விரக்தியாக சிரித்தவன்…
உனக்கு இதுதான் கடைசி பொட்டலம் என்று அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த வழி செய்து விட்டு .. சுரபி அறையில் போய் கதவை தட்ட அவளோ திறக்காது.. கதவு பக்கம் வந்து..
யாருங்க? என்றாள்.. சுரபி உள்ளிருந்து
சுரபிக்கு என்ன வைத்து காத்திருக்கிறானோ?
(ரொம்ப யோசிக்காதீங்க அடுத்து ரொமான்ஸ் தானே)
