சொன்னாலும் கேட்பதில்லை ஆசை மனசு
சொன்னாலும் கேட்பதில்லை ஆசை மனசு!!..
எபி … 5
சந்திரவதனாவுக்கு செண்பக மலர் னா ரொம்ப பிடிக்கும் … அம்மலரின் வாசம் ஆளை மயக்கும் …
அதனால் … அவள் மேல் உயிரையே வைத்திருந்த சத்திய மூர்த்தி , தனது ஒரே அன்பு மகளுக்காக ஒரு செண்பக தோட்டத்தையே உருவாக்கி கொடுத்திருந்தார் …
அவளுக்கு பள்ளிக்கூடம் போய் வந்த பின்னர் ஒரே புகலிடம் இதுதான் …
முழு நிலவில் மலர்களின் வாசனையை ஆழ சுவாசித்தபடி மரத்தடியே வந்தாள் …
அங்கு நரசிம்மன் அவளது முகத்தையே ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தான் … அவனது கூர்மையான விழிகள் அவளையே அளவெடுத்தது …
10 வயதில் சிறு பெண்ணாக இருந்த போது பப்ளி மாதிரி குண்டு பெண்ணாக இருப்பாள் …
இப்போ நன்கு வளர்ந்து தங்க சிலை மாதிரி இருந்தவளை கண்டவனுக்கு விழிகளை அகற்ற முடியவில்லை …
வெளிநாட்டில் படிக்கும் போது அவனது கவனம் எந்த பெண்ணின் மீதும் போகலை …
தனது பெண்ணை கட்டி கொள்ள வேண்டும் என்ற அக்காளின் வேண்டுகோளுக்காக கட்டுப்பட்டு இருந்தான் …
அவளை அளவெடுத்தவனின் பார்வை அவளது முகத்தை விட்டு அகல மறுக்க …
சந்திர ஒளியில் அவளது வதனம் மின்ன … அவளது அழகில் தன்னை இழந்து கொண்டிருந்தவனின் அருகில் …
அவன் இருப்பது தெரியாமலேயே வந்தாள் …
மரத்தடியில் வந்தவள் அதிலிருந்த மலர்களையே பார்த்தவாறு வர … அவனை பார்த்து அப்படியே நின்று விட்டாள் …
அவள் தன்னருகே வந்து நிற்கவும் அவனுக்கு தன் உணர்வு வர …
அவளுடன் இதுவரை பேசியதே இல்லை எனவே அவளது குரலை கேட்க எண்ணியவன் …
மேலும் தன்னை என்ன சொல்லி கூப்பிடுவாள் என்று அறிய வெகு ஆவலாக இருந்தான் …
எனவே அவளை பேச தூண்டினான் …
” ஏய் ! … இங்கே என்னடி பண்ற ? ” … அதட்டினான் …
அவன் தன்னிடம் பேசவும் பயந்தவள் , அம்மா சொல்லி கொடுத்த உறவு முறையை மறந்தவளாக …
” அண்ணா அது வந்து நான் … ஆஆ … ஆஆ அம்மா வலிக்குது .. அண்ணா கையை விடுங்க ” …
வலியில் துள்ளி குதித்தாள் சந்திரா ..
” வலிகட்டும் டி நல்லா வலிக்கட்டும் ” … கூறியவாறே மேலும் கையை பிடித்து முறுக்க …
” நான் என்ன அண்ணா பண்ணேன் ” … மீண்டும் அண்ணா போடவே …
” மவளே கொன்னுடுவேன் உண்ணை , யாருக்கு யாருடி அண்ணா ? .. ம்ம்ம் ” …
அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது முழித்தவள் , பயத்தில் அழுக ஆரம்பித்தாள் …
அவள் அழுக ஆரம்பித்தவுடன் அவனுக்கு பயம் எடுத்தது …
” ஏய் மூச் வாய மூடுடி ” … அடிக்க கையை ஓங்கினான் …
அடிச்சுடுவானோ என்ற பயத்தில் , வாயை கையால் மூடிக்கொண்டாள் …
” அறிவிருக்காடி உனக்கு ? … ராத்திரி நேரத்துல அழுவுர ” …
” யாராச்சும் பார்த்தா , நான் உன்னை ஏதாவது பண்ணிட்டேன்னு இல்ல நினைப்பங்க ? ” … சிடுசிடுத்தான் அவளிடம் …
அவனையே எதுவும் பேசாது … பயத்துடன் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் …
அவளுக்கு வெகு அருகே வந்து நின்றவன் , அவளையே மயக்கத்துடன் பார்த்தான் …
அவன் அருகே வரவும் அவளுக்கு என்னவோ போல ஆக கண்களை மூடினாள் …
அவளது முகத்தை தொட்டு நிமிர்த்தியவன் அவளை மிருதுவாக அழைத்தான் …
” ஏய்! … எங்கே என்னை கண்ணை திறந்து பாருடி ” … கூறியவாறே முகத்தில் ஊதினான் …
அவனது சுவாசம் முகத்தில் படவே தளிர் உடல் நடுங்க கூசி சிலிர்த்தவள் , கண்களை மெதுவாக திறந்து அவனை பார்க்க முயன்றவள் … வெட்கம் தடுக்கவே … வேறு புறம் பார்த்தாள் …
” ப்ச் என்னை பாருடின்னா ” … கொஞ்சினான் கிறக்கமாக …
” ம்ஹும் ” … வெட்கத்தில் சிவந்து போனது அவளது சந்திர வதனம் …
அவளது வெட்கத்தை ரசித்து பார்த்தவன் தன்னை மறந்து அவளிடம் விழுந்து விட்டான் …
” நரேன் நரேன் எங்க பா இருக்க ? ” …
குமாரின் அழைப்பை கேட்டவன்
” இனிமேல் … நீ என்ன மாமா ன்னு தான் கூப்பிடனும் சரியா ? ” …
” ம்ம்ம் … சரிங்க மாமா ” … வெட்கத்துடன் தலையசைத்தாள் …
” சரி நான் போறேன் கரடி பய பக்கத்துல வரான் ” … என்றவன் அவளை வீட்டுக்கு போக அறிவுறுத்தி விட்டு கிளம்பினான் …
அவன் குமாருடன் கிளம்பி போகவே … மரத்தடியே அப்படியே அமர்ந்து விட்டாள் …
இன்னும் ஒரு மாதத்தில் 17 வயதை அடையப்போகும் அவளுக்கு , அவன் மீது தோன்றிய உணர்வை இனம் காண முடியவில்லை …
அவளுக்கு மனசெல்லாம் ஏதோ செய்ய , என்ன அலைகள் கட்டுக்குள் அடங்காது அவனை நோக்கி சிறகடித்து பறந்தது …
அவனை நினைத்தவாறே அங்கேயே வெகு நேரம் அமர்ந்து விட்டாள் …
அதே நேரம் கூண்டில் அடைபட்ட புலி போல நடந்து கொண்டிருந்தார் சத்திய மூர்த்தி …
நரசிம்மனின் பெயரில் 1200 ஏக்கர் நிலம் அவனது தந்தை எழுதி வைத்திருக்க …
அவனுக்கு சொந்தமாக 5 இடத்தில் மில்லும் இருக்க … 3 சுகர் பேக்டரி உம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்தது …
அதுவும் அவனுக்கு 25 வயதில் தான் கிடைக்கணும் என அவன் தந்தை ராஜதுரை எழுதி வைத்திருக்க … பத்திரம் எங்கிருக்குன்னு தெரியல இன்னும் …
அதனால் சத்தியமூர்த்தியால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது …
அவனை போட்டு தள்ளி விடலாம் என்று பார்த்தால் …
தனது மனைவி மீனாட்சி குறுக்கே நிற்க அதுவும் முடியவில்லை …
” இன்னும் 9 மாசம் தான் இருக்கு … அதுக்குள்ள அந்த பயலே ஏதாவது செய்யணும் ” … மனதில் திட்டமிட்டவாறே உலாவினார் …
அவரது முகத்தையே தூங்குவது போல பார்த்து கொண்டிருந்த மீனாட்சி …
நரசிம்மனுக்கு இன்னும் தனது பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த நினைத்தார் …
அவரை மீறி சத்தியமூர்த்தியால் எதுவும் செய்ய இயலாது …
ஏனெனில் அவர் தனது மனைவி மகள் மீது உயிரையே வைத்து இருந்தார் …
அதனால் மீனாட்சி மனம் நோக கூடாதென நினைத்தார் …
ஆனால் அவரை உயிரோடு கொன்று விட்டதை அறியவில்லை சத்தியமூர்த்தி …
நிலவு மறைந்து சூரியன் தனது கதிர்களை கொண்டு உயிரினங்களை தட்டி எழுப்பியது …
5 மணிக்கே எழுந்த நரசிம்மன் திரும்பி படுக்க … அங்கு குமார் ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தான் போல …
பல்லை காட்டி ‘ ஹிஹிஹி ‘ … ன்னு சிரிக்க
‘ அய்யோ பேயி ‘ … பயந்தவன் அவனை எட்டி உதைக்க , கட்டிலோடு எகிறி விழுந்தான் குமார் ….
” அய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்க ” கத்தியவாறே எழுந்து பார்க்க …
நரசிம்மன் அவனை முறைத்து கொண்டு நின்றிருந்தான் …
” ஹிஹிஹி … குட் மோர்னிங் மச்சி ” …
அவனை சமாதானப்படுத்த எண்ணி அசடு வழிந்தான் …
” சகிக்கல போய் கிளம்பி வா ஜாக்கிங் போகலாம் ” …
” இப்போவா இன்னும் விடியலயே டா கண்ணா ” …
நரேன் அருகில் இருந்த கத்தியை எடுத்து கூர் பார்த்தான் …
‘ ஆத்தி கத்தி … இவனை நம்பவே கூடாது ஏற்கனவே கை நீளம் இவனுக்கு … குத்தினாலும் குத்திடுவான் … ம்ம்ம் … வெரி டேஞ்சர் பாய் ” … யோசித்தவன்
” ஜாக்கிங் உடம்புக்கு ரொம்ப நல்லது இல்ல நரேன் இதோ வந்துட்டேன் ” …
எழுந்தவன் ஓடி சென்று கிளம்பி வந்தவன் அவனுடன் ஜாக்கிங் கிளம்பினான் …
இருவரும் அதிகாலை குளிரில் நடக்க சுகமாக இருந்தது …
” இதுவும் நல்லாத்தான் இருக்குது
மச்சி ” …
” ஆமாம் டா இனி தினமும் வருவோம் என்ன ” … நரசிம்மன் கேட்க …
” இதுவரை நான் இப்படி பார்த்ததே
இல்ல … நான் ஒரு வேஸ்ட் பீசு டா நரேன் பிச்ப்ச் ” … அவன் துக்கப்படவே …
அதை சந்தேகத்துடன் பார்த்தவன் , அவன் பார்க்கும் திசை பார்த்தவன் …
” நாயே நீ செத்தடா உண்ணைக் கொள்ளாமல் விடமாட்டேன் டா ”
என அவனை துரத்த அவன் நிற்காமல் ஓட …
அங்கு நண்பர்களுக் கிடையில் இனிமையான விளையாட்டு
ஆரம்பமானது …
தனது நல்லது , கெட்டது , தான்படும் அவமானம் எல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் வராது ஒருவரிடம் பகிரணும்னு நினைத்தால் …
உடனே மனதில் வருவது நட்புதான் … அதுவும் உண்மையான நட்பா இருக்கணும் …
ஒருவழியாக ஜாக்கிங் முடித்து வீட்டுக்கு போனவர்கள் , 11 மணிக்கு காலேஜ் போனார்கள் …
” மச்சி உனக்கு காலேஜ் பிடிச்சிருக்கா டா” … நரசிம்மன் ஆர்வமாக கேட்க …
‘ ம்க்கும் … பிடிக்கலனு சொன்னா மட்டும் மீனாட்சி மம்மி விடவா போகுது ‘ …
என்னடா பதிலே காணோம் …
” எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா மச்சி ” …
” நிஜமாவே சொல்றியா டா ? ” …
‘ இல்லன்னு சொல்லிட்டு … உன்கிட்ட அடிவாங்கி சாக … எனக்கு ஒன்னும் வேண்டுதல் இல்ல டா … அவ்வ்வ் ” … மனதில் அழுதான் …
