சொன்னாலும் கேட்பதில்லை ஆசை மனசு
சொன்னாலும் கேட்கவில்லை ஆசை மனசு !! …
பொம்மை போல அவனது கையில் அடித்து சத்தியம் செய்தவள் உயிர் துடித்தது …
அவன் மது போதையில் மனதில் இருப்பதெல்லாம் உலற ஆரம்பித்தான் … அவனது உயிர் வேதனையை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை … அவளுக்கு புரிந்து போனது …
அவனது கடமைக்கு தான் தடையாக இருக்க கூடாதென முடிவெடுத்தாள் …
உலறிக்கொண்டே உறங்கினான் நரசிம்மன் … அவன் உறங்க அவளுக்கு உறக்கம் பறிபோனது …
வெகு நேரம் தூங்காது விழித்திருக்க… அழுது அழுது அவளுக்கு சோர்ந்து போனது
மனசு …
இதுக்கு அப்புறம் தனது நிலைமை அவளுக்கு நன்கு புரிந்தது … அதை நினைக்க நினைக்க அவளுக்கு உயிர் போகும் போல இருந்தது …
அப்படியே அவன் மீது சாய்ந்து
உறங்கினாள் …
காலையில் சிக்கிரமே எழுந்தவன் அருகில் பார்க்க … வெகு நேரம் கழித்து உறங்கியவள் … இன்னும் குழந்தை போல அவனை கட்டி கொண்டு உறங்கி கொண்டிருந்தாள் …
அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு தான் செய்வது சரியா தவறா என்று புரியவில்லை …
ஆனால் எப்படி யோசித்தாலும் அவனுக்கு உள்ள ஒரே வழி சனா தான் …
அவளை கொண்டு சத்தியமூர்த்திக்கு பாடம் நடத்த தீர்மானம் செய்தான் நரசிம்மன் …
சத்தியமூர்த்திக்கு மிகவும் பிரியமான பொண்னு தான் சந்திரவதனா … அவளுக்கென விதம் விதமான கார்கள் அணிவகுத்து நிற்கும் …
அவளுக்கு பிடித்ததை சமைக்க வென ஓரு செஃப் நியமிக்கப்பட்டு இருந்தார் …
அவளின் மனம் புன் படும் படி யாரும் பேச கூடாதென கடுமையாக கூறிவிட்டார் … அப்படி பேசி விட்டால் அவர்களை உண்டு இல்லையென செய்து விடுவார் …
அவள் கேட்டால் மட்டும் இல்லை ஆசையுடன் பார்த்தாலே அந்த பொருளை எங்கிருந்தாலும் கொண்டு வந்து விடுவார் …
அப்படி பட்ட ஆசை மகளான சந்திரவதனா அவர்களின் சதுரங்க ஆட்டத்தில் சிக்கி கொண்டாள் …
அவளுக்கென்று மனது இருக்கும் அதுக்கு வலி வேதனை என்ற உணர்வு எல்லாம் வரும் என்று எப்போது புரிந்து கொள்வான் நரசிம்மன் ?…
ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னன்னா?… அவருக்கு மகளை காட்டிலும் பணம் தான் பெரிது …
இது அவருக்கு மட்டும் தான் தெரியும் விஷயம் …
யோசித்து கொண்டே படுத்திருந்தவன்… அவளது தந்தை க்கு போன் செய்தான் …
” வணக்கம் சத்தியமூர்த்தி நான் நரசிம்மன் பேசறேன் ” …
” டேய் என்னடா இது பேர சொல்லிட்டு … அவ்வளவு திமிரோ உனக்கு ” …
” ஹாஹாஹா திமிரா யாருக்கு ? ” …
” எனக்குத்தானே ? … இருக்கும் இருக்கும் உன் மருமகனில்லையா … அதான் தானா வருது ” …
” டேய் மரியாதையா பேசுரே இல்ல ” … அவர் கூற
” இல்லன்னா போட்டு தள்ள ஆள அனுப்புவீரோ ? ” … பதிலடி கொடுத்தான் நரசிம்மன் …
” டேய் டேய் உனக்கு எப்படி டா
தெரியும் ? ” …
” நான் நரசிம்மன் சத்தியமூர்த்தி … நீ என்ன பண்ணாலும் எனக்கு தெரியும் புரியுதா சத்தியமூர்த்தி ? ” …
” என்னை நீ எதுவும் பண்ண முடியாது டா சின்னப் பையா ” … கூறியபடியே வெறி பிடித்த மிருகமென சிரித்தார் சத்தியமூர்த்தி …
” ஹாஹாஹா சத்தியமூர்த்தி இப்போ சிரிக்க வேண்டியது நான் தான் நீ இல்லை புரியுதா ? ” … அவன் கூறவும் …
அவருக்கு சின்ன பையனான அவனால் என்ன செய்ய முடியும் என்று அலட்சிய மனோபாவம் வர …
” ஓஓ அப்படி சிரிக்கும் படி நீ என்ன கிளிச்சீரு ? ” …
” சொல்றேன் சொல்றேன் நான் சொல்லாம எங்கே போறேன் ” …
” முதல்ல சொல்லி தொலை அப்புறம் என்ன கிளிச்சேன்னு நான்
சொல்லறேன் ” …
” தயாரா இரு சத்தியமூர்த்தி … இப்போ உன் பொண்ணு எங்கேன்னு உனக்கு தெரியுமா ? ” …
அதிர்ந்து போனவர் அவனிடம் கத்தினார் … ” என் பொண்ண பத்தி பேசுற தகுதி உனக்கு இல்லை டா
நாயே ” …
” அப்போ அவ கூட குடும்பம் நடத்துற தகுதி இருக்குன்னு சொல்லுவீறோ?”…
” டேய் யாருக்கிட்ட என்ன வார்த்தை பேசுற வெட்டி பொலி போட்டுருவேன் தெரிஞ்சுக்கோ ” …
” சத்தியமூர்த்தி உன்னோட செல்ல பொண்ணு இப்ப என்னோடத்தான் இருக்கா ” …
” அதும் 5 நாளா புரியுதா ? ” …
அவர் எதுவும் பேசாது அதிர்ந்து நின்றார் …
” சத்தியமூர்த்தி பொண்ணு வேணும்னா வந்து கூட்டிட்டு போய்டு நான் இப்போ கிளம்பிடுவேன் ” …
” கைல காசும் அவகிட்ட இல்லை … அழகான பொண்ணு அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும் ” …
” நான் சொல்லித்தான் உனக்கு தெரியனும்னு இல்லை … சொத்துக்காக கொலையே பன்ற உலகம்
இது புரியுதா ? ” …
” மோசமான உலகம் சத்தியமூர்த்தி … லேட் பண்ணாம வந்து கூட்டிட்டு போயிடு … நான் கிளம்பிட்டேன் ” …
” டேய் டேய் ஒரு நிமிஷம் போன வைக்காதே ” .. பதறி போனவர் அவனிடம் கெஞ்சினார் …
” ம்ம்ம் … சொல்லு சத்தியமூர்த்தி ” …
” நான் வர வரை சந்திரா கூட இரு டா ” …
” வா வா நான் முயற்சி செய்யறேன் ” … கூறிவிட்டு அவர் கத்த கத்த போனை வைத்தான் …
போனை வைத்தவன் திரும்பி பார்க்க … அங்கே வெறித்த விழிகளுடன் சனா அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் …
அவளை அப்படி பார்க்க அவனுக்கு மனதில் சிலீரென்ற உணர்வு வர அவளையே பார்த்தான் …
எதுவும் பேசாது எழுந்த சனா பாத்ரூம் சென்று குளித்து தயாராகி வந்தாள் …
நேராக சமையலறை சென்றவள் அவனுக்கு காபி போட்டு எடுத்து வந்தாள் … இந்த நாலு நாள் பழக்கத்தில் …
இயந்திரம் போல அவனிடம் காபி டம்ளரை நீட்டினாள் …
அவளது முகம் பார்த்தவன் அதில் இருந்த முக பாவத்தில் அவனுக்கு எதுவும் புரியவில்லை …
அவளை தன்னிடம் அமரவைத்தவன் …
” சனா நீ என்ன பத்தி தப்பா நினைக்குரியா ? ” …
அவன் கேட்கவும் விரக்தியாக சிரித்தவள் எதுவும் பேசவில்லை …
” சனா ஏதாவது பேசுடி ” … அவன் கேட்கவும் அவனை பாய்ந்து கட்டி கொண்டவள் …
” இப்போ இப்பவே நீங்க எனக்கு வேணும் மாமா … தருவீங்களா” … கண்களில் உயிரை தேக்கியவாறே அவனிடம் யாசித்தாள் சனா …
” சனா ஆஅ … என் உயிரே… என் செல்லமே … உண்ண போயி நான் காயப்படுத்தறேனே … என்னை மன்னிச்சுடுடி ” … அவளை கட்டிக்கொண்டு கதறினான் …
அவன் அழுவதை தாங்கி கொள்ள முடியாது அவனது உதட்டில் தனது உதடுகளை பொறுத்தினாள் …
அது தான் கடைசி என்பதை உணர்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக நாடினார்கள் …
அவள் தன்னை அவனுக்கு வாரி வழங்கினாள் அவனது விருப்பப்படி …
இருவரும் ஒருவாறு களைப்படைந்து விலகினாள் … எழுந்து கொண்டவள் …
மீண்டும் குளித்து தயாரானவள் வெளியே வந்து அவனை தட்டி எழுப்பினாள் …
அவன் எழுந்து அவளை பார்க்க
” மாமா அப்பா வந்துடுவாங்க நீங்க இங்கேயிருந்து போயிடுங்க மாமா ” …
அவள் கூறவும் அதிர்ந்து பார்த்தான் .. அவள் அழுவாள் கெஞ்சுவாள் என அவன் நினைக்க இப்படி கூறவும் … அவனுக்கு புரியவில்லை
” நீங்க நினைக்குறது எனக்கு புரியுது மாமா … என்னோட தலை எழுத்து இது அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும் ? ” …
” என்னோட துரதிஷ்டம் உங்களை பிடிக்க வேணாம் … நீங்க போயி உங்க கடமைகளை பாருங்க ” …
” இனி மேல் நீங்க என்னை நினைக்க வேணாம் … உங்களை பொறுத்தவரை நான் ஒரு முடிஞ்சு போன அத்தியாயமாவே இருந்துட்டு
போறேன் ” …
” என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது மாமா … நீங்க என்னை மறந்துடுங்க நீங்க ” …
” அப்பா வந்தா கோபத்துல என்னை ரொம்ப கேவலமா பேசுவாறு மாமா… நீங்க அதையெல்லாம் கேட்க வேணாம் போயிடுங்க தயவு செஞ்சு ” …
அவனை கை எடுத்து கும்பிட்டவள் … அலுகையை அடக்கினாள் அவன் முன் அழக்கூடாது என …
அவள் அழுதாள் அவன் உடைந்து போயிடுவானோன்னு அவள் அஞ்சினாள் …
அவளை இறுக்கமாக அனைத்து கொண்டவன் …
” நான் வருவேண்டி உனக்காக வருவேன் அதுக்காக நீ காத்துகிட்டு இருக்கணும் என்ன ? ” …
அவன் கேட்கவும் தலையசைத்தவள் அவனிடம் இருந்து விலகி ஓடினாள் …
ஓடியவள் சமையல் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டாள் …
“சனா கதவை திர சனா ” தட்டினான் பதறி போயி …
” நீ போயிடு மாமா இங்கேயிருந்து … நீ என்னை விட்டுட்டு போறத பார்க்கற சக்தி எனக்கு இல்லை மாமா ” …
” போயிடு மாமா தயவு செஞ்சு … இப்போ நீ போகலனா நான் செத்துருவேன்
மாமா ” …
அவளுக்கு தெரியும் அவன் தான் கெஞ்சினாலும் தன்னுடன் கூட்டி செல்ல மாட்டானே … அப்படி இருக்கையில் தான் அவனை பலகினப்படுத்த கூடாதென நினைத்தவள் …
அவனுக்கான நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாயிருந்தாள் …
உயிருக்கு உயிராக காதலித்த இரண்டு உயிர்களின் சிறகுகள் வஞ்சமெனும் கத்தியால் வெட்டப்பட்ட …
அவ்விரண்டு உயிர்களும் சிறக்கிழந்த பறவையாக கிழ் விழுந்தது
