கொன்னது நீ தானா?
கொன்னது
நீ தானா 5
(5)
அகிலா இருக்கும் இடத்துக்குச் சென்றதும், வாசலில் இருபத்தைந்து வயது மதிக்கும் பெண் வெளியில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அகிலாவாக இருக்கவேண்டும்.
அவள் அருகில் சென்றவள்,
“நான் உன்னிடம் பேச வேண்டும்” என்றாள்.
“என்னிடம் பேச என்ன இருக்கு?” என்றவள், அம்பிகாவின் தோரணையைப் பார்த்ததும், சொல்லுங்க, “பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும் என்ன வேண்டும்?” என்றாள்.
“உனக்கு அருணைத் தெரியுமா?”
அவள் ஒரு விநாடி தயங்கினாள்.
“எனக்கு எந்த அருணை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை”
உன்னுடன் பள்ளியில் படித்தானே
“ஆமாம் அவனுக்கென்ன? பெங்களூரில் இருக்கிறதா சொன்னாங்க? எனக்குப் பழக்கம் இல்லையே”
“அருணுக்கு வேண்டியவர்கள் யார்?”
“பத்து வருடத்துக்கு முன்னாடி உள்ளதை கேக்கறீங்க. உங்களைப் பார்த்தாலும் பயமாக இருக்க. நான் என்ன சொல்ல?”
“சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றவளை மேலும் பயத்துடன் பார்த்து,
“அருணுடன் ஆகாஷ் இருப்பான். அவர்கள் இருவரும் கவிதாவிடம் பேசுவார்கள். கவிதா இருவரிடமும் அன்பாக இருந்தாள்”
“ஆகாஷ், கவிதா இப்பொழுது எங்கே?”
“தெரியலையே. ஆகாஷ் இந்த ஊரில் பிறந்தவன் அல்ல. படித்து முடித்ததும் அவன் போவிட்டான்”
“கவிதா?”
“அவள் இந்த ஊர்க்காரிதான். ஆனால் அவளும் இந்த ஊரைவிட்டுப் போய்விட்டாள்”
“எங்கே?”
“திருவனந்தபுரம் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். ஆனால் மேடம்”
“சொல் அகிலா” என்றாள் அம்பிகா உரிமையுடன்.
“மூன்று நாளைக்கு முன்னால் கவிதாவை இங்கு பார்த்தேன். காரில் போக்கொண்டிருந்தாள். ஆனால் நான் கூப்பிடக் கூப்பிடப் போயிட்டாள்”
“எதுக்கு வந்தாள்?”
“தெரியலையே?”
“அதற்குப் பின்னால் பார்த்தாயா?”
“இல்லை மேடம்”
“ஆகாஷும் வந்திருந்தானா?”
“வந்தாக தெரியவில்லை. வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். வந்திருந்தால் யாராவது சொல்லி இருப்பார்கள். சின்ன ஊர்தானே மேடம்”
“உன்னுடன் படித்தவர்கள் வேறு யாரையாவதுப் பார்த்தாயா?”
“இல்லையே, மேடம் என் பையனும் பொன்னும் பள்ளிக்கூடம் போகனும். நான் போய்த்தான் அவர்களை எழுப்பனும்”
“சரி நீ போ. உன்னுடன் படித்தவர்களையோ, கவிதாவையோ, ஆகாஷையோ பார்த்தால் சொல். இது என் நம்பர்; தயங்காமல் யாரையாவதுப் பார்த்தால் எனக்கு சொல் என்றாள். உன் நம்பரை சொல்லேன்” என்றாள் அம்பிகா.
அவள் பயந்து கொண்டே சொல்லி விட்டு விரைந்து வீட்டிற்குள் சென்றாள்
தொடரும்
