குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது
6. குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது
தங்களது வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் ஏற்பாடு செய்யப் பட்டு இருந்த பார்ட்டி க்கு குதூகலமாக கிளம்பினர் அம்முவின் குடும்பத்தார்.
ஆதவன் மட்டும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு ஏற்பாடுகளைக் கவனிக்க முன்னாடியே சென்று இருந்தான் ஆதவன் அவனின் குடும்பம் மட்டும் அம்மு வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
“வாங்க சம்பந்தி வாங்க” என்று தம்பதியர் வரவேற்க உள்ளே வந்தனர் ஆதவனின் தாய் மற்றும் தந்தை.
வழக்கமான பேச்சு வார்த்தைகளை முடித்துக் கொண்டு ஆதவனின் தாய் கற்பகம் “எங்க அண்ணி அம்மு வ காணோம்” என்று வினவ.
“இன்விடேஷன் குடுத்துட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தா அண்ணி வந்தா ரூம் ல ரெடி ஆகிட்டு இருக்கா இருங்க வர சொல்றேன்”
“இல்ல அண்ணி அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க அவ கெளம்பி வரட்டும் பாவம் அலைச்சல் அதிகம்”
“சரிங்க அண்ணி இருங்க குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வரேன்”
“அதலாம் ஒன்னும் வேணாம் எல்லாம் சாப்டுட்டு தா வந்துருக்கோம் தண்ணி போதும் வந்து உக்காருங்க வாங்க”
“சரி அண்ணி” என்றவாறு தண்ணீர் கொடுத்து விட்டு கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டாள் ஜோதியும்.
“மா ” என்றவாறு தனது அறையை விட்டு வெளியே வந்தாள் அம்மு
சந்தன நிறத்தில் முழுவதுமாக கை வேலைப்பாடுகளுடன் கண்களைப் பறிக்கும் வண்ணம் இருந்த முழு நீள உடையில் லேசான ஒப்பனையுடன் தேவதையாக நின்றாள் அம்மு.
அவளை பார்த்த கற்பகம் புன்னகையுடன் அருகே சென்று
“என் கண்ணே பற்றும் போல இருக்கு அண்ணி” என்றவாறு கண்களில் தீட்டி இருந்த மையை சிறிதளவு எடுத்து காதின் பின்புறம் திருஷ்டிப்பொட்டு இட்டாள்.
நாணத்தில் தலையை கவிழ்ந்து கொள்ள
“போலாமா அம்மு?” என்றாள் ஜோதி
“கெளம்பலாமா அத்த?”
“வா டா உனக்காக தா இருந்தோம்”
“சரிங்க அத்த” என்றவாறு வாயில் நோக்கி சென்றனர்.
இரு குடும்பங்களும் மகிழ்ச்சியாக வீட்டை விட்டு கிளம்பினர் .
ஆதி க்கும் முன்னாடியே தெரிவிக்க பட்டு இருந்ததால் அவனும் கிளம்பி வந்து சேர்ந்தான்.
மாலை மயங்க ஆரம்பிக்க அவ்விடத்தில் மட்டும் மின்விளக்குகள் ஒளிர விடப்பட்டன.
தேவதையாக உள்ளே நுழைந்தவளை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.
அவனை கண்டு விட்ட அம்மு கையசைத்தவாறு அவனிடம் வந்து சேர்ந்தாள் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்க சிறியவர்கள் அங்காங்கு நின்றவாறு உரையாடிக் கொண்டு இருந்தனர்.
“ஹாய் டா என்ன அப்டி பாத்துட்டு இருக்க”
“ஹாய் டி செம்மயா இருக்க டி அத நாம அம்மு தானனு டவுட் ல பாத்துட்டு இருக்கேன்”
“எப்போ பாரு என்ன கலாய்ச்சுட்டே இருக்க டா”
“ஹா ஹா உன்ன பாத்தாலே கலாய்க்க தோணுது டி”
அவனின் முதுகில் அடித்தவள் “ஆது எங்க டா”
“இப்போ தா ஒர்க் முடிச்சுட்டு மேல ரூம் க்கு போனாங்க டி செம்ம கேரக்டர் டி உன் ஆளு போயி பாரு பேபி எனக்கு இங்க ஒர்க் இருக்கு என்று அவளை அனுப்பினான்.
மேலே சென்றவள் “ஹயயோ எந்த ரூம்னு கேக்காம வந்துட்டோமே ” என்று ஒரு அறையின் கதவில் சாய்ந்தவாறு ஆதி க்கு போன் செய்து கொண்டு இருக்க அவள் சாய்ந்து நின்ற அறையின் கதவு வேகமாக திறக்கப் பட அதில் சாய்ந்து நின்றவளோ உள்ளே இருந்து வந்த ஆடவனின் மேல் மொத்தமாக சரிந்து விட்டாள்.
திடிரென்று ஏற்பட்ட நிகழ்வால் அவனும் சுதாரிக்கும் முன் அவளது முழு பாரத்தை தாங்காமல் சற்று தடுமாறி பின் தங்கி நிறுத்தினான்.
“யாரு டா இந்த பைத்தியம் ரூம் டோர் ல இப்டி சாஞ்சு நின்னுட்டு இருக்கது” என்று அவளைப் பற்றிய கரங்களை விடுவிக்க
அவளோ என்ன நடந்தது என்று புரியாமல் விழிக்க அப்போது தான் தெரிந்தது அவள் சாய்ந்து நின்றது சுவர் அல்ல கதவு என்று.
தான் ஒரு ஆடவன் மேல் விழுந்ததை எண்ணி தர்ம சங்கடமாக உணர்ந்தவள் சட்டென்று விலகி நின்று தலையை நிமிராமல்
“சாரி சார் சாரி நா கவனிக்கல சாரி சார் “
நமட்டு சிரிப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்த ஆதவ் எதும் பேசாமலேயே தன்னவளது அருகாமையை ரசித்து கொண்டு இருக்க
“என்ன டா நாம இவ்ளோ பேசுறோம் எதுமே சொல்லாம நிக்குறான் திட்ட கூட இல்ல ” என்றவாறு நிமிர்ந்து தன் முன் நின்றவனை நோக்க அவனோ கைக்களைக் காட்டியவாறு சுவரில் சாய்ந்து நின்று இவளை தான் பார்த்து இருந்தான் .
எதிரில் நின்றவனை அடையாளம் கண்டதும் முதலில் ஆச்சரியத்தில் விழிகள் விரிய பின் நாணம் கொண்டு தலை குனிய
“நீங்க தானா” என்று பெருமூச்சொன்றை எறிந்தாள்.
“ம்ம்” என்று மட்டும் கூற
அவன் கோபமாக இருப்பதாக நினைத்து “சாரிங்க நா உங்க ரூம் எதுன்னு கேக்க ஆதிக்கு கால் பண்ணிட்டு இருந்தேன் சுத்தமா கவனிக்கல ” என்றாள் மன்னிப்பு கோரும் தொனியில்
அவன் நிலையில் மாற்றம் இல்லாததால் “ஆது கோபமா ” என்றாள் .
“ஆமா கோபம் தா ” என்க
“சாரி” என்று முடிப்பதற்குள் அவளை கரம் பற்றி இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டான்
பெண்ணவளோ அவனது எதிர் பாரத இந்த செயலால் அவனைப் பார்த்து இருக்க
“இவ்ளோ தூரமா நின்னு பேசினத்துக்கு கோபம்”
அவனது அருகாமை பெண்ணவளின் உள்ளத்துள் பூக்கள் பூக்க செய்ய உணர்ச்சிகளின் பிடியில் நின்று இருந்தாள் அம்மு.
“என்ன அம்மு எதுமே பேச மாட்டேங்குற” அவன் மூச்சின் வெப்பம் இவளது முகத்தை உரச பேச்சிழந்து நின்று இருந்தாள் அம்ருதா .
“அம்மு” என்றான் தாபமாக
“ம்ம்”
“என்ன பாரு டி “
“ம்ஹும் ” என மறுப்பாக தலையசைக்க
“ஏன் பிடிக்கலையா” என்க
“பிடிக்காமலா இப்டி நின்னுட்டு இருக்கேனு நெனைக்குறிங்க”
“அப்போ என்ன பாத்து பேசு டி”
அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க அவளது முகம் பற்றி
“செம்ம கியூட்டா இருக்க டி இந்த ரெண்டு முட்ட கண்ணும் கொல்லுது என்ன இதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் குடுக்கணுமே என்ன பண்ணலாம்” என்க
அவள் எதோ சொல்ல வாயெடுக்க அவள் இதழ்களில் ஒற்றை விரல் வைத்து
“ஸ்ஸ்ஸ் எதும் பேசாத ப்ளீஸ்”
அவள் தலையசைத்து அவன் மார்பில் முகம் புதைக்க அவளது நாடி பற்றி முகம் நிமிர்த்தி கண்களின் வழியே அவள் மனதைப் படிக்க முயல அவன் முயற்சியில் தோற்று அவள் விழி கடலுக்குள் மூழ்கிப் போனான் ஆதவன்.
அவள் இதழ்களை விரலால் வடிவெடுக்க
“சாரி டி நீ என்ன எப்டி வேணா நெனச்சுக்கோ பட் ஐ காண்ட் கண்ட்ரோல்” என்று அவளது காதுகளில் கிசுகிசுக்க அவனது வார்த்தையின் அர்த்தத்தை உணரும் முன்னே அவளது இதழ்களை தனது இதழ் கொண்டு பற்றி இருந்தான் அவளது ஆது.
அவள் கைகளில் கிடைத்த அவனது மேல் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் அம்மு.
அவன் உணர்ச்சியின் பிடியில் இருந்து தன் இயல்புக்கு திரும்ப அவளைத் தன்னில் இருந்து மெதுவாக விலக்கி அவளது முகம் காண அவளோ அவனது மார்புக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.
அவளது தலையில் முத்தம் ஒன்றைப் பதித்தவன் “அம்மு லவ் யூ சோ மச் என்னோட என்டைர் லைப் க்கும் நீ வேணும்” என்றான் காதலாக.
அவள் எதும் பேசாமல் இருக்க “கோபமா அம்மு நா இப்டி பேட் ஆ பிஹேவ் பண்ணிட்டேன்னு?”
அவள் மறுப்பாக தலையசைக்க “எதாச்சும் பேசு அம்மு எனக்கு நீ இப்டி இருக்கது எதோ தப்பு பண்ணிட்டோம்னு பீலா இருக்கு “
அவன் வார்த்தையில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து “லவ் யூ ஆது இதுக்கு மேல என்ன தெரியணும் உங்களுக்கு?”
“இது போதும் டி” என்று அவளை அணைத்துக் கொண்டான் ஆதவன்.
“ஹய்யயோ ஆது விடுங்க” என்றாள் அவசரமாக
“என்ன ஆச்சு அம்மு ” என்றவாறு அவளை விடுவிக்க
“ஆது என் ஹேர் டூ கலைஞ்சுரும் ” என்றாள்
“ஹா ஹா அடியேய் என் டிரஸ்ஸ பாத்தியா நீ என்ன வேல பாத்துருக்கனு” என்று அவள் கைபட்டு கசங்கிய தனது மேற்சட்டையை காட்ட அவளோ கன்னம் சிவக்க திரும்பிக் கொண்டாள்
“நா கீழ போறேன் வரிங்களா” என்க
“அது சரி நீ மட்டும் நீட்டா போவ நா இப்படியே வரவா ?” என்க
“சரி சரி மானத்த வாங்காதீங்க” என்றவாறு அவனது சட்டையை கரம் கொண்டு நீவி விட சிரித்துக் கொண்டே
“போதும் போதும்” என்று அவளது கரம் பற்றி அழைத்துக் கொண்டு போனான்
கீழே ஒரு சேர வந்தவர்களைக் கண்டு குடும்பத்தார் ஆனந்தமாக கண்டு உள்ளம் பூரித்தனர்.
அவர்களை இரு கண்கள் ஆக்ரோஷத்துடன் பார்த்து இருக்க அதனை அறியாத இருவரும் மகிழ்ச்சியில் உள்ளம் ததும்ப வந்து நின்றனர்.
அவர்களை ஆவலாய் வரவேற்றனர் பெற்றோர். நல்ல ஜோடி பொருத்தம் என்றனர் ஆதியின் பெற்றோர்.
ஆதியும் அவர்களைத்தான் பார்த்து இருந்தான்.
அனைவருடனும் உரையாடி விட்டு அம்முவை கரம் பற்றி அனைவர் முன்னிலையிலும் அறிமுகப்படுத்தினான் ஆதவன்.
அனைவரும் மனம் நிறைவாக உணவுண்ண செல்ல ஆதிக்கு அவசரமாக அழைப்பு வந்துவிட “அம்மு அப்பா ஆபிஸ் ல எதோ ப்ரோப்லம் அம்மு நாங்க கெளம்புறோம் யூ கேரி ஆன் மார்னிங் கால் பண்றேன் ” என்றவாறு அங்கிருந்து அவசரமாக நகர்ந்தனர் ஆதி குடும்பத்தினர்.
அனைவரும் விருந்து முடிந்து கிளம்ப அம்முவும் விடை பெற்றாள்.
அப்போது தெரிந்திருக்கவில்லை இது தான் அம்முவை கடைசியாக பார்க்கும் நொடி என்று.
கார் வரை சென்று திரும்பிப் பார்த்தவளை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டான் ஆதி. தலையசைத்து விடை தர அவளும் சின்ன சிரிப்புடன் விடை பெற்றாள்.
வாயில் தாண்டும் வரை அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள் அம்மு.
அடுத்த நாள் காலையில் எழுந்து வழக்கமாக தன்னவளுடன் உரையாடிவிட்டு வைத்தான் ஆதவன்.
பதினோரு மணிக்கு வீடு வந்து சேர்ந்த ஆதி தான் வந்துவிட்ட செய்தியைக் கூற அம்முவின் தொலைபேசியை தொடர்பு கொள்ள முயற்சிக்க அது அணைக்கபட்டு இருந்தது என்ற செய்தியைக் கூற ஆதியும்
“சரி சார்ஜ் இல்ல போல ஆன் பண்ணிட்டு கூப்டுவா” என்று விட்டுவிட்டான்.
மதியம் வரைக்கும் அம்முவிடம் இருந்து ஒரு அழைப்பும் வராததால் “இவளுக்கு என்ன ஆச்சு” என்ற யோசனையுடன் குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு உணவுண்ண சென்றான்.
5 மணி வரைக்கும் எந்த பதிலும் இல்லாததால் முதன்முதலாக அவன் மனதில் சந்தேகம் துளிர்விட்டது.
அம்மு எங்கே சென்றாள் ?? என்ன ஆனது அவளுக்கு ??
