குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது

  4. குற்றுயிரும் கொஞ்சம் உயிர்த்தது 
நாட்கள் பரபரப்பாக செல்ல அம்முவின் நிச்சயர்த்த நாளும் வந்தது. ஊரில் இருந்து அம்முவின் நெருங்கிய உறவினர்கள் வந்து இருக்க காலையில் எழுந்ததில் இருந்தே பரபரப்பாக இருந்தார் ஜோதி.
மோகன் கைபேசியில் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார். அம்முவின் பாட்டிகள் கூடத்தில் கதை பேசிக் கொண்டு இருக்க ஜோதியும் சில உறவு பெண்மணிகளும் சமையல் நடக்கும் இடத்தில் வேலையாக இருந்தனர்.
அம்மு அவளது அறையில் குட்டிஸ்களுடன் இருக்க வீடே கலகலப்பாக இருந்தது.
“ஜோதி மாப்ள வீட்டுகாரவங்க பக்கத்துல வந்துட்டாங்களாம் இங்க இன்னும் என்ன பண்ற? போயி அம்மு ரெடி ஆகிட்டாளாணு பாத்துட்டு நீயும் கெளம்பு”
“இதோ அவ்ளோ தாங்க ஒரு டென் மினிட்ஸ்”
“ஹய்யோ அத லாம் அக்கா பாத்துப்பாங்க நீ போயி கெளம்பு” என்று அவளை அங்கிருந்து விரட்டினார் மோகன்.
அவர் சொல்லில் உள்ளே வந்த ஜோதி அம்முவின் அறைக்கு தான் சென்றாள். அவள் இருந்த கோலத்தை பார்த்து ஆத்திரம் மூள 
“அடியே என்ன டி பண்ற இன்னும்”
“இதோ அவ்ளோ தா மா முடிஞ்சுது இவளுக்கு மட்டும் தான் ” என்றபடி தன்னிடம் கரத்தை நீட்டியவாறு இருந்த வாண்டுக்கு மெஹந்தி போட்டுவிட்டுக் கொண்டு இருந்தாள் அம்மு
“அடியே மாப்ள வீட்டுகாரவங்க பக்கத்துல வந்துட்டாங்களாம் டி இப்போ இந்த வேல ரெம்ப முக்கியம் தானா”
“ஜோ எதுக்கு கத்துற அவ்ளோ தா “
“என்ன டி கத்துறேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க நீ இன்னும் குளிக்காம கூட உக்காந்துருக்க இப்டி பண்ண கத்தாம கொஞ்சுவாங்களா இப்போ போறியா என்ன டி சொல்ற” என்று அதட்ட 
அவள் எழுந்து “ஓகே நா போயி குளிக்கிறேன் நீங்கலாம் ஹால்ல போயி காய வைங்க சரியா” என அந்த வாலு பட்டாளங்களை அனுப்பி விட்டு திரும்பினாள்.
ஜோதி முறைத்தவாறு நிக்க அவளுக்கு இதழ்களை குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு கண் சிமிட்டிவிட்டு குளியறைக்குள் புகுந்து கொண்டாள் அம்மு.
அவளை குளிக்க அனுப்பி விட்டு வெளியே வந்தவர் ஆதியும் அவனது அன்னையும் வருவதைக் கண்டு அவர்களை வரவேற்க வாயில் சென்றார்.
“”வாங்க அண்ணி , வா ஆதி” என இருவரையும் வரவேற்றார் 
“நல்லா இருக்கீங்களா அண்ணா எப்டி இருக்காங்க” என ஆதியின் அம்மா வினவ 
“நாங்க நல்லா இருக்கோம் பசங்க எப்டி இருக்காங்க அண்ணா வ கூட்டிட்டு வரலையா”
“இல்ல அண்ணி அவருக்கு வேற வேல வந்துருச்சு கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடியே ஆஜர் ஆகிருவேன்னு சொல்ல சொன்னாரு அண்ணி”
“சரி அண்ணி” என்றவாறு ஆதியின் புறம் திரும்பியவர்  
“என்ன ஆதி இவ்ளோ லேட்டாவா வரது முன்னாடியே வந்து இருக்க வேணாமா”
“சாரி ஆண்ட்டி டிராபிக் ல மாட்டிகிட்டோம் அதா லேட் ஆகிருச்சு”
“சரி சரி உள்ள வாங்க” என்று உள்ளே அழைத்து சென்றார் 
“அம்மு எங்க அண்ணி கெளம்பிட்டாளா”
“இல்ல அண்ணி இந்த குட்டிக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல குளிக்க கூட இல்லாம இந்த வாண்டுங்களுக்கு மெஹந்தி வச்சுட்டு இருக்கா இப்போ தா சத்தம் போட்டு குளிக்க அனுப்பிட்டு வரேன்”
“ஹா ஹா சின்ன புள்ள அண்ணி விடுங்க போக போக சரி ஆகிருவா சத்தம் போடாதீங்க” என்றவாறு உள்ளே வந்து அமர்ந்தனர்.
அவர்களை உபசரித்து “அண்ணி இருங்க வந்துறேன்” என்றவாறு உள்ளே சென்றாள் ஜோதி.
அம்மு தயாராகட்டும் பேசிக்கலாம் என்று ஆதி எழுந்து சமையல் வேலை நடக்கும் இடத்திற்கு சென்றான்.
“அம்மு இதுல ஜிவெல்ஸ் இருக்கு போட்டுக்கோ உன் ப்ரெண்ட்ஸ் லாம் வந்துட்டாங்க உள்ள அனுப்பி வைக்கிறேன் ரெடியா இரு” என்று பரபரப்பாக கூறிவிட்டு வெளியேறி விட்டாள் ஜோதி.
“இந்த ஜோ ஏன் இவ்ளோ டென்ஷனா திரியுது எல்லாரையும் டென்ஷன் பண்ணிக்கிட்டு திரியுது இருக்கட்டும் அப்றம் பேசிக்கிறேன்” என்றவாறு தன் வேலைகளில் ஈடுபட்டாள் அம்மு அவளது தோழிகளும் வந்துவிட ஒரே பேச்சும் சிரிப்புமாக இருந்தது அம்முவின் அறை.
சிறிது நேரத்திலேயே மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட அனைவரையும் அழைத்து உபசரித்தனர் அனைவரும் கூடத்தில் அமர்ந்து இருக்க மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு நிச்சயதார்த்த புடவையை தாம்பூலத்தில் வைத்து அளிக்க அதனை வாங்கி சென்று அம்முவிடம் கொடுத்தனர்.
அவள் தயாராக ஜோதி ஆதியிடம் சென்றாள் “வா ஆதி அம்மு கெளம்பி இருப்பா கூப்டு போவோம் வா” என்று அவனை அழைத்து சென்றாள்.
அம்முவின் அறைக்குள் நுழைந்தவர்கள் கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றுவிட்டார்கள் 
பச்சையும் நீலமும் கலந்த வண்ணத்தில் பட்டுப்புடவை அணிந்து, சுருண்ட நீள் கேசத்தை பின்னலிட்டு அதில் மல்லிகை மலர்களை சூடி, கோள விழிகளுக்கு மை தீட்டி, புருவ மத்தியில் சிறிய பொட்டு வைத்து,, குடை போன்ற ஜிமிக்கி அணிந்து கழுத்தில் அவள் எப்போதும் அணியும் சிறிய செயின் உடன் பெரியதாக ஒன்றை அணிந்து இருந்தாள். இயல்பாகவே முகத்தில் குடி கொண்ட கலையும் இதழ்களில் இருக்கும் புன்னகையும் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ள தான் செய்தது.
அம்மு அழகனாவள் என்று தெரியும் ஒப்பனைகள் செய்து கொள்ளமாட்டாள் இன்று புடவையில் அலங்காரத்துடன் நின்றவளைப் பார்த்து மூச்சுவிட கூட மறந்து தான் நின்றான் ஆதி .
ஜோதி சந்தோச மிகுதியால் கண் கலங்க ஆதியோ அவர்களை பக்கவாட்டில் அணைத்து “ஸ்ஸ் ஜோ டார்லிங் என்னது இது ” என்று தேற்ற அதில் இயல்புக்கு திரும்பியவள் சரி அவள வெளில கூட்டிட்டு வாங்க என்றவாறு தன் மகளை மீண்டும் ஒரு முறை கண்ணாற கண்டு வெளியே சென்றாள்.
“என்ன டா புதுசா பாக்குற மாறி பாக்குற”
“இல்ல இது அம்மு தானான்னு பாக்குறேன் “
“ஏன் டா இப்டி சொல்ற நல்லா இல்லயா “
“ஹேய் லூசு செம்ம க்யூடா இருக்க டி”
“தேங்க் யூ டா “
“ம்ம் இப்டியே பேசிட்டு இருந்தோம்னு வை மாப்ள உன்ன பாக்க ரூம் கே வந்துருவாரு டி”
“ஆதி அவர கிண்டல் பண்ணாத கொன்னுடுவேன் உன்ன “
“ஹா ஹா சரி சரி வா டி மேக் அப் கலஞ்சுட போகுது” என்று அவள் கரம் பற்றி அழைத்து சென்றான் ஆதி.
தோழிகள் புடைசூழ ஆதியின் கரம் பற்றி தலைகுனிந்தவாறு தரைக்கும் வலிக்காமல் நடந்து தான் வருகிறாளா என்று சந்தேகிக்கும் படிதேவதையென வந்து நின்றவளைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் வாயடைத்து போயினர்.
அவையினருக்கு தனது மருதாணி கரங்களைக் குவித்து வணக்கம் வைத்தாள். மாப்பிள்ளையின் அன்னை எழுந்து வந்து அவளுக்கு நெட்டி முறித்து “என் மருமக கொள்ள அழகா இருக்கா” என்க பெற்றவர்களுக்கு மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. 
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதவன் அதனைக் கண்டு கொண்ட ஆதி மெதுவாக அம்முவின் காதருகில் சென்று 
“அம்மு மாப்ளய பாரு டி முழுங்குற மாறி பாத்துட்டு இருக்காரு விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணிப்பாரு போல டி” என்று கிசுகிசுக்க அவனை கீழ் கண்களில் முறைத்து விட்டு தலை நிமிராமல் விழியுயர்த்தி அங்கு அமர்ந்து இருந்தவனை கண்டாள் ஆதி கூறியது போல தான் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.
அந்த பார்வையை கண்டு கொண்டவன் மெலிதாக முறுவல் செய்ய தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த மங்கை சட்டென்று பார்வையை தாழ்த்திக் கொண்டாள் அம்ருதா.
நிச்சய ஓலை வாசிக்க பட்டு இருவரையும் மோதிரம் மாற்றி கொள்ளச் செய்தனர்.
அவளது தளிர்க்கரம் பற்றி மோதிரம் இடுகையில் யாரும் அறியா வண்ணம் அவளது உள்ளங்கையில் சுரண்டினான் ஆதவன். அதில் முகம் சிவந்தவள் தனது வதனத்தை யாரும் அறியா வண்ணம் மறைத்துக் கொண்டாள் .
அவளது நிலை கண்டு குறும்பு சிரிப்பொன்றை உதிர்த்தவன் தனது கரத்தினை நீட்டினான் அவனது கரம் பற்றியவள் மோதிரம் போடும் சாக்கில் நறுக்கென்று கிள்ளி விட்டாள் எதிர்பாராத வலி என்பதால் சட்டென்று “ஸ்ஸ்ஸ் ஆஆ ” என்று விட
“என்ன மாப்ள ரிங் சின்னதா இருக்கா?” என்று மோகன் கேட்க என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தலையை அசைத்துவிட்டு எதுமே தெரியாத மாறி நின்று கொண்டு இருந்தவளைப் பார்த்து சிரித்து கொண்டான் ஆதவன் .
அனைத்தும் இனிதே முடிய விருந்துண்டு உறவினர்கள் அனைவரும் அவரவர் வீடு திரும்பினர்.
ஆதியும் விடைபெற்று கிளம்ப . இரு வீட்டாரும் பத்திரிக்கை அடிக்க கொடுத்துவிட்டு ஒரு உணவகம் சென்று அடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பற்றி பேசிக் கொண்டு இருக்க சிறியவர்கள் இருவரும் தனியாக விடப்பட்டு இருந்தனர். இருவரும் பெரிதாக எதும் பேசிக்கொள்ளவில்லை கைபேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.
அவர்கள் விடைபெற்று செல்ல அம்முவின் குடும்பமும் வீடு திரும்பியது. பாட்டிகள் மட்டும் வீட்டில் இருந்தனர் . அம்மு அவள் அறைக்கு சென்று ஓய்வெடுக்க மோகனும் ஜோதியும் பாட்டிகளுடன் பொதுவாக உரையாடி விட்டு தங்களது அறைக்கு சென்றனர்.
அம்மு வீட்டார் அனைவரும் நிம்மதியில் இருக்க அவளின் திருமண செய்தியை கேட்டதில் இருந்து கொதித்து போயிருந்தது ஒரு மனம். ஆதி தான் மணமகன் என்று தவறாக யூகித்து .
“அம்மு எப்டி சரினு சொல்லலாம் அந்த ஆதி என்ன ஜெயிக்க நா விடவே மாட்டேன்” என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டான் ஒருவன்.
யாருக்கோ அலைபேசியில் தொடர்பு கொண்டவன் “மச்சான் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்துருக்கு டா நா இங்க அவளையே நெனச்சு உருகிட்டு இருக்கேன் ஆனா அவ அந்த ஆதி கூட கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டா டா”
“—————-“
“இல்ல மச்சான் ஜூலி அவ பங்க்சனுக்கு போயிருக்க அந்த ஆதி அம்மு எல்லாரும் சேர்ந்து செல்ஃப்பி எடுத்துருக்காங்க டா அவ ஸ்டேட்டஸ் பாத்துட்டு தா டா சொல்றேன்”
“—————“
“நோ எனக்கு அம்மு வேணும் என்ன ஆனாலும் பரவால்ல எனக்கு அவ தா வேணும்”
“—————“
“நா சொல்றேன் பிளான் பண்ணி தூக்குறேன் அவள “
“————-“
“உனக்கு பயமா இருந்தா போடா நா தனியா இருந்து கூட பண்ணுவேன் இத”
“————“
“ம்ம் அம்மு எனக்கு வேணும் அவ்ளோ தா அந்த ஆதி மூஞ்சில கரிய பூசணும் டா”
“—————“
“சரி மச்சான் நா டைம் பாத்து தூக்கிட்டு சொல்றேன் நா இங்கிருந்து போறதுக்கு மட்டும் நீ ஹெல்ப் பண்ணு “
“—————-“
“சரி மச்சான் நா பாத்துக்கிறேன் நீ பயப்படாத வச்சுறேன் பை” என்றவாறு தொடர்பை துண்டித்து விட்டு 
“நீ எனக்கு தா அம்மு” என்று தனது கைபேசியின் முகப்பில் இருந்த அவளது புகைப்படத்தை கோர புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
தனது கைபேசி சிணுங்க அதனை எடுத்தவள் “சொல்லு ஆதி”
“என்ன டி பண்ற”
“நத்திங் டா சும்மா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்”
“ம்ம் சரி டி உன் ஆளு என்ன சொல்றாரு”
“ஒன்னும் சொல்லல டா நம்பர் வாங்கிருக்காரு அப்றம் கூபிட்றேன்னு சொல்லிருக்காரு டா”
“சரி டி எப்போ இன்விடேஷன் குடுக்கனும்”
“ஏன் டா எதும் வேல இருக்கா உனக்கு “
“ஆமா டி பிசினெஸ் விஷயமா மும்பை வர போறேன் அதா கேக்குறேன்”
“ஆதி என்ன டா இப்டி சொல்ற நா முன்னாடியே சொன்னேன்ல”
“சரி டூ வீக்ஸ் போதுமா உனக்கு”
“ம்ம் போதும் டா “
“சரி அப்போ நா உன் வேல முடிஞ்சதும் போயிக்குறே அப்றம் உன் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் தா வருவேன் சரியா “
“ஓகே டீல் டா”
“ம்ம் சரி டி அத கேக்க தா கால் பண்ணினேன் நீ ரெஸ்ட் எடு “
“ம்ம் சரி டா அப்றம் நீ எனக்கு சாரி சொல்லணும் மறந்துராத”
“ஹா ஹா சரி டி மறக்கல வச்சுரவா”
” சரி டா பை ” என்றவாறு தொடர்பை துண்டித்துவிட்டு படுக்கையில் விழுந்தாள் அம்மு.
காலம் தனக்கு வைத்து இருப்பதை அறியாத அம்மு தன்னவனுடனான கல்யாண கனவுகளில் இருந்தாள். நிறைவேறுமா ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *