காவலனின் காவிய கள்ளி
12.
காவலனின் காவிய கள்ளி
சாணக்கியனை ஆள் வைத்து அக்சிடேன்ட் பண்ணி விட்டேன் என எந்த வித குற்ற உணர்ச்சிச்சியோ.. தன் உதிரத்தில் பிறந்தவன் என்கிற சிறு துளி அன்போ எதையும் முகத்தில் பிரதிபலிக்காமல் இயல்பாகவே சொல்லி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு கை கழுவ நகரும் மனிதரை பார்த்த ஷிவானியின் மனதோ அதிர்ச்சியையே தத்தெடுத்துக்கொண்டது..ஒரு மணித்துளி அவளின் இதயமே நின்று விடுவது போல் சமைந்து நின்றாள்..
தன்னை ஏதாவது செய்து இருந்தால் கூட அதில் சிறிது நியாயம் இருப்பதாகவே தோன்றி இருக்கும் அவளுக்கு..
ஏன் என்றால் அவருக்கு எங்கள் நாடகம் நிஜம் தானே.. அதனால் அவரின் வசதிக்கோ எதிர்பார்ப்புக்கோ முற்றிலும் தகுதியற்ற பெண்ணை மனம் முடித்ததாக அவர் நினைத்து இப்படி செய்து இருப்பார் என துன்பங்களையும் தாண்டி ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கும் மனதில்..
ஆ..ஆனால் அவர் பெற்ற செல்வத்தை உயிரோடு கொல்லும் அளவிற்கு வெறி கொண்ட மனிதன் இல்லை.. இ.. இல்லை அரக்கனை கண்டு உள்ளுக்குள் சகலமும் நடுங்கியது..
அவர தன்னிடம் நடந்து கொண்ட இயல்பான நடவடிக்கையை கண்டு மனதிற்குள் கோபம் வெறுப்பு எதாவது சிறு துளியாகவே அவர் மனதில் கண்டிப்பாக இருக்கலாம்.. அதை வெளி காட்ட முடியாமல் இதயத்திலே புதைத்துக் கொண்டு மகனுக்காக மாற முயற்சி செய்து கொண்டிருப்பார் என்றால்லவா நினைத்து கொண்டிருந்தாள்.. அவர் மனம் நோகாமல் நடந்து கொள்ளவே பெரும்பாலும் அவர் கூற்றிற்கு மதிப்பளித்து மரியாதையாக நடத்தினாளே.. ஆனால் இந்த வர்மனோ மகனையே புதைக்க சவக்குழி அல்லவா தோண்ட ஏற்பாடு செய்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் இருக்கிறார் என ஆற்றாமை வெடித்து புயல் போல் மனதில் கிளம்பியது..
அறைக்குள் விரைந்து சென்றவளுக்கு தன் தொலைபேசியும் இதரப் பொருட்களுயும் அடங்கிய கருப்பு பையை அவள் இங்கு வந்த நாட்கள் முதல் கண்ணிலே காணவில்லை என்றவுடன் மேலும் நொறுங்கி போனாள் பெண்ணவள்..
பருவ மழையில் வரும் மாரியை போலவே அவள் கண்கள் விடாமல் நீரை பொழிந்த வண்ணம் இருந்தது..
விலகி கிடந்த மாராப்பை இழுத்து நன்றாக முடிந்து சுற்றி கொண்டு.. கலைந்த முடியையும் தூக்கி கொண்டையிட்டு கொண்டவள்.. பால்கனி கதவின் திரைச்சீலையை விலக்கி கொண்டு பால்கனியை நோக்கி விரைந்தாள்..
கண்ணாடிகள் சுற்றி கட்டப்பட்டு சிறிது பூச்செடிகளையும் செயற்கை பச்சை புல் தரை மாட் மேல் அமர்ந்தவளின் எண்ணம் முழுவதும் சாணக்கியனின் வருகையை நோக்கிய வண்ணம் இருக்க.. அதனால் விழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்..
அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இங்கு இவளின் இதயம் திக் திக் என்று அடித்து கொண்டது..
அவளை அதிகம் சோதிக்காமல் அவனின் ஜீப் வெளிப்புற வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே சீறி பாய்ந்து நுழையவும்.. ஒரு நொடி கூட தாமதிக்காமல் கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு காணாத பொக்கிஷம் கிடைத்தது போலவே வேகமாக ஓடி சென்று ஜீப்பில் இருந்து இறங்கியவனை வேகமாக காற்று புகா வண்ணம் அணைத்து கொண்டாள் மங்கை..
சற்று இறுக்கமாகவே..
அவளின் பயம்!!
பதட்டம்!!
தவிப்பு!!
ஆற்றமை!!
தேடல்!!
ஏக்கம்!!
எல்லாம் அவனை நெஞ்சில் தஞ்சம் புகுந்து கொண்டே கைகள் இரண்டையும் அவன் முதுகோடு கெட்டியாக பிணைத்து அவன் நெஞ்சத்தில் முகத்தை சாய்த்து கொண்டு கண்கள் மூடி நடுக்கத்துடன் நின்றுருந்தாள்..
சாணக்கியானை பற்றி சொல்லவா வேண்டும்.. விசுவாமித்திரரின் தவத்தை கலைத்த மேனகையை போல இவன் தவத்தை கலைக்க ஷிவானியை இறைவன் அனுப்பி இருப்பான் போலும்..அவளின் அணைப்பில் முதலில் திடிக்கிட்டாலும் நிமிடங்கள் கடக்க கடக்க அவன் நெஞ்சோடு அழுந்த சாய்ந்து மேலும் அவனை இம்சை செய்து கொண்டிருந்தாள் காவலனின் கள்ளி ..
வந்த முதல் நாளே ஷிவானி இவனை கட்டிப்பிடித்து இருந்தால் அவளின் கதி அதோ கதி தான்..மிளகாய் பொடிக்கு பதிலாக ஒரேடியாக கழுத்தை நெரித்து கொன்று கடலில் சுறாவிற்கு இரையாக்கியிருப்பான்..
ஆனால் இப்பொழுது உள்ள சாணக்கியனுக்கு இத்தனை நாட்களில் அவள் அருகில் நெருங்க நெருங்க அவன் மனமும் அவள் பின்னால் தான் சென்று கொண்டிருந்தது.. அவன் காதல் வசப்பட்டு இருக்கிறானே..அவன் நெஞ்சில் அவனறியா காதல் குறிஞ்சி மலராய் பூத்து பல நாட்கள் கடந்தனவே..
ஆம்!!..சிறிது நாட்களாக அவள் முகம் அடிக்கடி மின்னி மறைந்து அவன் சிந்தனையைக் குழைத்து சிறு தடுமாற்றத்தையும் மனதில் விதைத்து இருந்தது..
அதை பெரிதாக பொருட்படுத்தாமல் எளிதாக கடந்து செல்ல முயற்சி செய்ய தோல்வியே பரிசாக கிட்ட… அவளை நினையாதே மனமே என நினைத்து உரு போட்டு கொண்டே நாள் முழுவதும் அவளையே சிந்திக்க வைத்து தொல்லை செய்து கொண்டிருந்தாள் அவனின் கள்ளி..
இன்று கையைப்பிடித்து இழுத்ததும் பூ மாலையாக வந்து மடியில் விழுந்தவளை கண்டு சாணக்கியனின் மொத்த ஹார்மோணும் கடல் கொந்தளிப்பது போல புது ரத்தம் பாய்ச்சி நெருப்பில் தகித்தது போல உணர்ந்தான்… அவளின் சிணுங்கள் மேலும் தூபம் போட அது மேலும் வேண்டும் என்பதாய் மனம் துள்ளியது.. அதற்காகவே அவளை வேண்டும்மென்றே மீண்டும் இறுக்கி அணைத்தவன் தந்தை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லி அவளை நெருங்க முற்பட்டான்.. அப்பொழுதும் அவன் மனமோ ஒரு பெண்ணின் மேல் முதல் முறை பூத்த ஈர்ப்பால் காமமும் விளைந்தது என்று தான் நினைத்தான்..
ஆனால் இந்த அணைப்பு மொத்த உணர்வுகளையும் தட்டி எழுப்புகிறது அல்லவா..
அவள் தன்னை அழுது கொண்டே கட்டி பிடித்து கொண்டிருப்பதை கண்டு மனம் அவள் கண்ணீரை துடைக்க கைகள் பரபரக்கிறதே!!
மேலும் மனம் அவள் அருகாமையில் பரவசமும் அவளின் பிரத்தியோக வாசனை சற்று வேட்கயையும் படர்ந்து உள்ளம் உந்துகிறதே!!
தன் சிந்தனைகளில் இருந்து தலையை உதறி கொண்டு.. “என்ன ஆச்சு டி?” என்றான் இப்போது உரிமையாக!!
காதலனாக!!
காவலனாக!!
கணவனாக!!
அவன் காதல் முழுமையாக உணர்ந்த தருணம் இத் தருணம் அல்லவா!!
அவனின் கரகரத்த குரலில் சுயம் மீட்டவள் மெல்ல அவனிடம் இருந்து விலக எத்தனிக்க..
“சும்மா சும்மா தள்ளி நிக்காதடி!!..” என சலித்து கொண்டான் சாணக்கியன்.. அவள் கன்னங்களை தாங்கி.. “இப்போ சொல்லு டி என்ன ஆச்சு..” என்றான் மென்மையாக..
அது.. உங்க அப்பா.. உ உங்களை ஆள் வச்சு ஆக்.. ஆக்சிடென்ட் என நா குழற பேசினாள்..
“பச்!! இவ்ளோ தான.. எங்க அப்பாவாவது என்ன கொலை பண்ணுறதாவது அவர் பிசினஸ் மேன் டி உன்னை நாடி பிடித்து பார்த்திருப்பார்.. அந்த மனுஷனை நம்பாதே.. நானாவது தீபாவளி பட்டாசு மாறி சரவெடியாக வைப்பேன் ஆனால் அவர் எதிர்பாரா நேரத்தில் உன் தலையில் குண்டை போட்டுவிட்டு உன் குடலை உருவிடுவார் என்றான் அவள் தோள் மேல் உரிமையாக கைபோட்டு கொண்டே..
“அடா!! இவ்ளோ தானா.. கையை எடுங்க!!” என வெடுக்கென்று தள்ளி விட..
“ஏன்டி!!.. உனக்கு என் மேல இவ்ளோ பாசமா?..
இப்படி அழுறியே?.. அதை பார்க்க பார்க்க.. என பேசி கொண்டிருந்தவனை இடை நிறுத்தியவள் ரொம்ப கற்பனை பண்ணிக்காத.. நான் இங்க வந்த வேலை முடிந்த பிறகு அப்பனும் பையனும் அடிச்சிட்டு சாகுறீங்களோ இல்ல விஷத்தை முழுங்கிட்டு சாகுறீங்களோ அது உங்க பிரச்சனை.. என்னால் யாரும் சாக கூடாது அம்புட்டு தான்.. என சொல்லி விட்டு அவிழ்ந்த முடியை அப்படியே விரித்து விட்டு முன்னால் சென்றாள்..
ஷிவானிக்கு அவன் மீது காதல் இருக்கிறதா என்று கேட்டால் அவளும் அவள் மனதை புரிஞ்சுலை சகாஸ்!! புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள போவதில்லை கன்னி மனது.. அவள் காதல் வசப்பட்டால் கூட அதை மறைத்து விட்டு அவனை வேண்டாம் என்று தான் சொல்வாளே தவிர ஏற்றுக் கொள்ள மாட்டாள்.. சாணக்கியன் பாடு திண்டாட்டம்.. அவள் வலிக்க வலிக்க வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அடிப்பாள்!!
வீட்டிற்க்குள் நுழைந்தவள் அங்கே சோபாவில் அமர்ந்து நெய் பலகாரங்களை சாப்பிட்டு கொண்டிருக்கும் மாமவை பார்த்து சினம் ஏற..
வேகமாக சென்று அதனை புடிங்கியவள்.. இதெல்லாம் சாப்பிட்டு தான் உங்களுக்கு தேவை இல்லாத கொழுப்பு உடம்பிலும் வாயிலும் ஏறி போச்சு!!.. இனி உங்களுக்கு எல்லாம் பத்திய சாப்பாடு தான் என சொல்லி விட்டு சமையல் அறைக்குள் வைக்க சென்று விட்டாள்..
டேய் மகனே!! பார்த்தியா டா உங்க அப்பன் நிலைமையை!! ஒரு பண்டம் திங்க விட மாட்டேன்குது டா இந்த பொண்ணு..
அட!! விடுப்பா.. என சொல்லிவிட்டு டிவியில் மேட்ச் பார்க்க ஆரம்பித்து விட்டான்..
அடியே ஷிவானி!! சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிட்டு போடி என மேட்ச் பார்த்து கொண்டே சொல்ல..
அவள் வர்மனை இவனையும் பார்த்து”எனக்கு ஒன்னும் வேண்டாம்”முகத்தை திருப்பி முறைத்து கொண்டு சென்று விட்டாள்..
இனி இந்த பொண்ணு எனக்கு சோறு போடாது போலையே டா!!.. இன்னைக்கு குருமா வேற நல்லா இருந்ததே..இனி சோறுக்கு திருவோடு தான டா என்றார் நாக்கை சப்பு கொட்டி..
ப்பா.. ஏன்ப்பா இப்படி?.. உங்களை போய் இந்தியாவில் டாப் பிசினஸ் மேன்னு சொன்னால் எவனும் நம்ப மாட்டான்..
அட விடேன் டா!!.. வீட்டு சாப்பாடு எல்லாம் என் வாழ்க்கையில் அபூர்வம் டா அதன் மதிப்பு உனக்கு தெரியலை..
சரி!! “ஏன் என்ன கொல்ல ஆள் அனுப்புனீங்க?.. “
சாக எல்லாம் இல்லை மை சன்.. கை கால் மாவு கட்டு போடும் அளவிற்கு அடித்தால் போதும்னு தான் ஆர்டர் போட்டேன்..நீ அடிப்பட்டு ஆம்புலன்ஸில் வருவேன்னு நெனச்சேன்.. இப்படி தப்பித்து விட்டாயே மை சன்..என்றார் சோக பாசங்கு குரலில்..
“ஏன் இப்படி பண்ணீங்க?.. நீங்க பண்ணி வச்ச வேளையில்..பாவம் ஷிவானி.. இப்படி கண்கள் வீங்கும் அளவுக்கு அழுந்திருக்காள்..”
அது தான் வேணும் மை சன்.. நீ இப்போ அடிப்பட்டிட்டு வந்தன்னு வை.. அவள் உன்னை கவனிக்குற கவனிப்பில் பஞ்சயும் நெருப்பையும் வச்சது போல கொழுந்து விட்டு எரியும்.. நான் நினைத்த வேலை முடியும் அதான்.. “
அப்பா உங்களை திருத்துவே முடியாது என தலையில் அடித்துக் கொண்டு ஷிவானியின் அறைக்குள் சென்று விட்டான்..
சே!! தப்பிச்சுட்டானே.. இப்படியே இவங்க ரெண்டு பெரும் ஒன்றாகி விட்டு நிலைமை கை மீறி போனால் ஒன்னும் செய்ய முடியாதே என யோசனையுடன் நாடியில் விரல் வைத்து அமர்ந்திருந்தார்..
மனதை திருடிவிட்டாள்!!!
