காவலனின் காவிய கள்ளி

This entry is part 14 of 22 in the series காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

காவலனின் காவிய கள்ளி

 காவலனின் காவிய கள்ளி -22


அந்த வீட்டில் ஒவ்வொரு நிமிடங்களும் கரைய கரைய ஷிவானிக்கு எரிச்சல் கூடி கொண்டே போனது. அதற்க்கு காரணம் இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா.. “அன்றொரு நாள் திருடி என்று தெரிந்தே இதே மயூரிய வர்மன் தான் தன் மகன் வாழ்க்கையில் இனி உனக்கு எந்த வித தொடர்பும் இருக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து விட்டு இந்த வீட்டை விட்டு போக சொல்லியவர் இன்று தன் மருமகளாக வர போகிறவள் என்று புதிய கதை விடுகிறாரே…”

அன்று சாணக்கியன் வீட்டை விட்டு பிரிந்து வந்த தினத்தை நினைத்து
பார்த்தவளின் இதழ்களில் கசந்த புன்னகை.
அந்த இரவு நேரத்தில் மாடி அலமாரியில் அருகில் யாரோ வருவதை கண்டவள்.. தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தவளுக்கு அங்கு யாரும் இல்லை என்று தோன்றியவுடன் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று விட்டாள். ஆனால் அங்கு தான் விதி தன் விளையாட்டை இனிதாக ஆரம்பித்து வைத்து இருந்தது.

அவளின் அனைத்து செயல்களையும் மயூரிய வர்மன் ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்ததை பாவம் அவள் அறிய வில்லை.
ஷிவானிக்கும் தன் மகனிடம் இருந்து வேறு ஏதோ தேவை இருக்கிறது என்பதை எளிதில் ஊகித்து விட்டார்.
அது என்ன என்பதே கேள்வியாக இருந்தாலும், அவள் எதிர் பார்த்து வந்த பொருள் ஏதும் இந்த வீட்டில் இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாகவே அவருக்கு தோன்றியது.
அதன் படியே இந்த வீட்டில் இருந்த எல்லா கண்காணிப்பு காமெராக்களும்,ஆட்டோமட்டிக் டோர் லாக் எல்லாம் தன் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் செயல் இழக்க வைத்தது எல்லாம் நியாபகம் வந்தது.
அப்போ..அ.. அந்த ரகசிய லாக்கரை கண்டிப்பாக செயல் இழக்க வைக்க முடியாது. அது மெயின் சர்வர் கூட தொடர்பில் இருக்க ஒரு லாக். கண்டிப்பா அதற்குள் தான் இவள் தேடி வந்தது இருக்கலாம்.. எதற்கும் ஒரு தடவை செயல் படுத்தி பார்ப்பதில் ஒன்றும் நட்டம் இல்லியே என்பது அவர் எண்ணம்.
அவர் எண்ணம் பொய்யாகிடவில்லை. அங்கு சிகப்பு துணிபைக்குள் ஒரு பைல் இருக்க, அதை திறந்து பார்த்தவருக்கு தெரிந்து விட்டது அரசாங்க ரகசிய கோப்பு என்பது.
இதை தான் ஷிவானி தேடி வந்து இருக்கிறாள் என்றாலும் இதை கொடுப்பதற்க்கு சற்று தயக்கம் இருந்தாலும் தன் மகனுக்கு ஏற்ற பெண் இவள் இல்லை என்று தோன்றிய நொடி அதை ஷிவானியிடம் அந்த ரகசிய லாக்கையும் காட்டி பைல் எடுத்து கொடுத்து விட்டார்.

போலீஸ் புத்தியை அவன் காண்பித்து விட்டான் என்பதை தெரிந்தவளுக்கு கண்கள் அனலை கக்கின. அவளை அறியாமல் உள்ளுக்குள் எதோ உடைந்தது போன்ற ஒரு மாயை தோன்றி நெஞ்சை பிசைந்தது. சிறிது நொடி கூட இந்த இடத்தில இருக்கப் பிடிக்காமல் அந்த பைலை வாங்கிக் கொண்டு அங்கிருந்த அவளின் மொபைலையும் எடுத்துக் கொண்டு வேகமாக எதையும் சிந்திக்க திரணியற்றவளாக அங்கிருந்து கிளம்பினாள் ஷிவானி.
இதை எல்லாம் இப்பொழுது யோசித்து பார்த்தவளுக்கு சாணக்கியன் மேல் இருந்த கோபம் மீண்டும் வந்து ஒட்டிகொண்டது.

அன்று நடந்த நிகழ்சிகளை ஒவ்வொன்றாக இவள் யோசித்துக் கொண்டு இருக்க, மயூரிய வர்மன் தான் அவள் தோளை உலுக்கவும் கனவில் இருந்து விளித்தவள் போல நிஜ உலகிற்கு வந்தாள் ஷிவானி.

அம்மாடி ஷிவானி என்று அவரின் குரல் மேலும் ஒருமுறை அழுத்தமாக அழைக்கவும் தான் அவளுக்கு சுற்றம் புரிந்தது.

தன் முன் மூக்கு கண்ணாடியை சரி படுத்திகொண்டு உற்று நோக்கும் இந்த மனிதரின் மேல் அவளுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தாலும் சாணக்கியனின் கடந்த காலத்தை பற்றிய ஆவல் அவளுக்கு இருப்பது அவளால் மறுக்கவும் முடியாது.

மயூரிய வர்மன் சிறிது தொண்டையை கணைத்து விட்டு, என் பின்னாடி வாம்மா.
அவளும் மறு வார்த்தை பேசாமல் அவர் பின்னாடியே நடக்க, மாடிப்படிகளுக்கு பின்னால் ஒரு வெள்ளை சுவர் முன் நின்று அதன் கீழ் துவாரத்தில் தன் பக்கெட்டில் வைத்து இருந்த ஒரு சிறிய சாவியை பொறுத்தவும், அந்த சுவர் இரண்டாக பிளந்தது ஒரு சிறிய விளக்கு ஒளியுடன் அறை மட்டும் அவள் கண்களுக்கு தெரிந்தது.

அவள் திரும்பி மயூரிய வர்மனை பார்க்க, அவர் கண்கள் கலங்கி ஒரு வித நடுக்கம் கைகளில் பரவி, கால்களும் சற்று தள்ளாட்டம் கண்டன.
இதை கண்ட ஷிவானிக்கு ஒரே ஆச்சரியம்.
இந்த அறையை கண்டு இவர் இப்படி நடுங்குவதைக் கண்டு, என்ன உள்ளே ஏதும் பேய் பிசாசு இருக்கிறதா…?”
இப்படி கால் கிடு கிடுவென நடுங்குது என்று சிரித்துக் கொண்டே வினவினாள்.

அவளின் கூற்றை அவர் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் தன் வேதனை எல்லாம் அந்த எச்சில் வழியாக முழுங்கி கொண்டார் போலும்.

“வா…” என்றார் கட்டளையாக.

ஹும் என இதழை கோணலாக வளைத்து விட்டு அவளும் அவர் பின்னாடியே உள்ளே சென்றாள்.
உள்ளே வந்த நொடி மின் விளக்கை உயிர்பிக்க, அங்கு அவள் கண்ட ஆள் உயர புகைப்படம் கண்டு அதிர்ச்சியில் ஸ்தம்பித்து விட்டாள் என்று சொல்வதே குறைவு.
இத்தகைய அதிர்ச்சி அவள் வாழ்நாளில் சிறிதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இமைகள் விரிந்த படியே அந்த நீல வண்ண புடவையில் நெற்றியில் கும்கும திலகமிட்டு கழுத்தில் தாலி மின்ன வீற்று இருந்த பெண்ணையும் அவளுக்கு அருகில் இருந்த சாணக்கியன் போல் ஒரு ஒருவன் இதழில் புன்னகையுடன் போஸ் கொடுத்து கொண்டு இருப்பதை தான் பார்த்தாள்.

இங்கு சாணக்கியனுக்கு கட்டுப்படுத்த முடியாத சினம் நெஞ்சில் குடி கொண்டு இருந்தது. ஷிவானியின் தம்பிகளை கடத்தி வைத்து, என்ன திட்டம் தீட்டி இருக்கிறாரோ தெரியலயே?” என்று உள்ளுக்குள் புலம்பினான்.
தான் தனியாக ஷிவானியை விட்டுட்டு வந்து இருக்க கூடாதோ என்று ஒரு மனம் அடித்துக் கொண்டு இருந்தாலும் இன்னொரு மனம் நான் அங்கு வந்து அவர்களை கையோடு கூட்டிச் சென்றால் அவருக்கு பயந்து பொத்தி பாதுகாப்பதாக நக்கல் பார்வையில் பார்த்து வைப்பதற்காகவ அங்க போகனும் என்று ஈகோ தடுக்க, கடைசியில் இரண்டு தலை கொள்ளி எறும்பாக தவித்தது தான் மிச்சம்.

அதற்கு மேல் தன் சொந்த விடயங்களை அலுவலக நேரங்களில் யோசித்து வீணடிக்க விரும்பாதவன்.. தேர்தல் நெருங்கி வருவதால் பாதுகாப்பு பணிக்காக மேற்கொண்டு ஆயத்தம் ஆனான்.
இன்னைக்கு கமிஷனரை சந்தித்து விட்டு நாளை கட்சி ஊர்வலம் நோக்கி பாதுகாப்புக்காக போக வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டவன் கையில் தொப்பியையும் லத்தியையும் எடுத்து விட்டு கமிஷனர் இருக்கும் அலுவலகம் நோக்கி ஜீப் பறந்தது.

கமிஷனர் அப்பொழுது தான் வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தார் போலும். நேரம் பத்தை கடந்து விட்டு இருந்தது.
குட் எவனிங் சார் என்று சல்யூட் அடித்து விட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றான்.

வாங்க சாணக்கியன் சார் என்று வரவேற்றவரின் குரல் அவ்வளவு கடுமையாக ஒலித்தது.
சாணக்கியன் அதை முன்பே எதிர் பார்த்தான் என்றாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் நிமிர்வாக நிற்கவும்,
அது அவருக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது போலும்.

உனக்கு வெக்கமாக இல்லை.. இப்படி ஒரு பெண்ணுக்காக அரசாங்க கோப்புகளை விற்று விட்டு என் முன்னே எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பாய் என்று சரமாரியாக பொழிந்தவரின் குரலில் இருந்தது நேர்மையை கடைபிடிக்கும் ஒரு அதிகாரியின் ஆதங்கம் மட்டுமே.

சாணக்கியன் அமைதியாக எதுவும் பேசாமல் நின்றான். தவறு அவன் மேல் அல்லவா.. அதை சரி செய்யும் யுக்தி அவனுக்கு தெரிந்தாலும் அதை செயல் படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கவே செய்தன.

நான் என் நேர்மையை அடகு தான் வைத்தேன் சார் ஆனால் ஒரேடியாக
விற்று விட வில்லை என்று தெலுங்கு பட ஹீரோ போல சாணக்கியன் சிரிப்பை இதழுக்குள் அடக்கிக் கொண்டே பேசினான்.

அவன் சிரிப்பை அடக்குவதை கண்ட கமிஷனர் ஒரு முறை முறைத்து விட்டு அவரும் இதழ் பிரித்து சிரித்தார்.
சாணக்கியா இங்கு ராணி பேட்டை பாண்டியன் மைத்துனன் தயாளன் இங்கு வந்து அந்த பைலை என் கிட்ட கொடுத்து போனான் என்று சொன்ன வுடன் சாணக்கியனின் புருவம் இடுங்கியது.
அவன் எதற்கு கொடுக்க வேண்டும் என்று சற்று குழப்பம் அடைய, அதற்கான விடயத்தை கமிஷ்னரே சொன்னார்..
மதிய நேரம் போல் கமிஷனர் அலுவலகம் வந்து இறங்கிய தயா.. உள்ளே எந்த வித அனுமதிக்கும் காத்திருக்க பிடிக்காதவனாய் அதிரடியாக கமிஷனர் இருந்த அறைக்குள் நுழைந்தவன்.. அந்த கோப்பை அந்த மேஜையின் மீது வீசி எறிந்தவன்.. இந்த டிப்பார்ட்மண்டில் இருக்க ஒருத்தனாலும் ஒன்னும் புடுங்க முடியாது என்று தன் சிகையை தூக்கி காண்பித்து விட்டு வேகமாக திரும்பி சென்றான். அந்த இரு நிமிடங்களில் ஒரு புயல் கடந்தது போல பரபரப்பாகி அடங்கியும் போனது.

இதை கேட்ட சாணக்கியனுக்கு போலிஷை அசிங்க படுத்தி பேசியவனை தூக்கில் தொங்க விட வேண்டும் என்கிற வெறியே எழுந்தாலும் தயாளனின் இத்தகைய நடத்தை இருவருக்குமே சற்று அதிர்ச்சி தான்.

புலி போல் பதுங்கி நரியாக தந்திரம் செய்து காரியம் சாதித்து கொள்பவன் இன்று வேங்கையாக உறுமிவிட்டு நேரடியாக களம் இறங்கியது சற்று திகிலுட்டியது.
சாணக்கியனின் மனதிலோ இதற்கு ஷிவானி அவன் காதலை நிராகரித்தும் ஒரு காரணமோ என்று தான் தோன்றியது.

ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன்.. இனி நடக்கும் ஆட்டத்திற்கு எதிர் வினை ஆற்ற தொடங்கினான்.

இரு புயலுக்குள் நடுவில் சிக்க போகும் பூவின் நிலை…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *