காதைக் கொடுங்க சொல்றேன்
என்னுடைய காதல் கதை.முழுசா படிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க.
நான் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு நான் என்னைப் பாத்துட்டு இருந்தேன். பாக்க அழகாத்தாங்க இருந்தேன். சரிசரி…உங்க கொரல் கேக்குது.நம்புங்க.
நான்.. வந்து யார் மாதிரி இருப்பேன்னா..யாரடி நீ மோகினி சீரியல்ல வர கலை மாதிரி கொழுக் மொழுக்குனு இருப்பேன்.சொல்ல மறந்துட்டேனே..
என்பேரும் கலைதான்..கலைச்செல்வி
ஆனா..அவ்ளோ குண்டு இல்லை..இருங்க கண்ணாடியிலப் பாத்து சொல்றேன்..
ஆமாங்க.. அவ மாதிரியே ஆப்பிள் கன்னம்.. சிங்கப்பல்..கொரல் எல்லாம் இருந்தாலும்.. எனக்கு.. இருபத்தோரு வயசுதான் ஆகுறதால கொஞ்சம்.. எளசான முகம் தான்….
ஐயோ உங்ககிட்ட சொல்ல வந்ததையே மறந்துட்டேன்.
நான் வந்து.. சத்யாவை
லவ் பண்றேங்க.
ஆனா அதை உங்கிட்ட கரெக்டா சொல்ல எனக்குத் தெரியலைங்க.வாங்க கதையை சொல்றேன்.
நான் வந்து பாரதியார் காலேஜ்ல பிஏ தமிழ் படிச்சேன். என்னது பிஏ தமிழான்னு எளக்காரமா கேக்காதீங்க.
படிச்சி ஒரு வேலைக்குப் போய் வீட்டை மட்டும் காப்பாத்துனாப் போதாது.. வறுமையில இருக்கிற நம்ம தமிழையும் காப்பாத்ததாங்க இந்த முடிவு.
அப்பா வந்து போஸ்ட்மேன்.அம்மா வந்து ஹவுஸ் ஒயிஃப்.நான் ஒரே பொண்ணுங்கறதால ரொம்ப செல்லம்.
நான் எது சொன்னாலும் அப்பா தலையை ஆட்டிக்கிட்டுப் போய்டுவாரு.அம்மா சிரிச்சிக்கிட்டே போய்டுவாங்க.ஆனா..இது பின்னாடி காதல் விஷயத்தில எனக்கு ஒதவாதுன்னு அப்புறம்தான்ங்க தெரிஞ்சது
ஒருநாள் நான் காலேஜ்க்கு பஸ்ல போயிட்டு இருந்தேன்.பஸ்ல நல்ல கூட்டம்.
ஏன் ஆட்டோவுல போக வேண்டியதுதானேன்னு கேக்காதீங்க. அந்த அளவுக்கு எனக்கு வசதி இல்லை.
காரணம் பணம் அதிகம் இருக்கிற எடத்துல தப்பு அதிகம் இருக்கும். அது இல்லாத எடத்தில ஆசைங்க அதிகம் இருக்கும்.என்மனசுல ஆசைங்கதான் இருந்தது.
அது என்னன்னா படிச்சு முடிச்சு டீச்சர் ஆகனும்.. அப்புறம் எவனையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கனும்..
அவ்வளவுதான்..
நான் ஒருத்தி.. சொல்ல வந்ததை உட்டுட்டு..
ஆங் அன்னைக்கு பஸ்ல போயிட்டு இருந்தேனா
ஏற்கனவே நாலுபேர் பின்னாடி இடிச்சிட்டான்.எறங்கும்போது ரெண்டு பேர் தோள்ல இடிச்சுட்டான்.
என்ன பண்றது
