காதலும் காமமும்
காதல் போற்றுதும்
காமம் போற்றுதும்
காதல் புனிதம் – என
புளுகித் திரிவது போதும்
காமம் மறைத்து காதல் புரியாதீர்
காமம் மீறி
காதல் வளராது
காதல் தொடராது
காதல் போற்றுதும்
காமம் போற்றுதும்
காதல் சாரா காமமும்
காமம் சாரா காதலும்
காமமும் இல்லை
காதலும் இல்லை
காதல் போற்றுதும்
காமம் போற்றுதும்
