பட்டாசு பார்சல்களை சுமந்து கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன். நான் வருவதைக் கண்டு என் மகனும் மகளும் என்னிடம் ஓடி வந்தார்கள். நான் அவர்கள் முன்னால் வாங்கி வந்த பட்டாசுகளை பரப்பினேன்.அவர்கள் ஆர்வமாக பார்த்தார்கள். அங்கு வந்த என் மனைவி இதைப் பார்த்து விட்டு விலை எவ்வளவு என்றாள். நான் இரண்டாயிரம் என்றேன். பதிலுக்கு காசை ஏன் கரியாக்குகிறீர்கள் என்று என்னை முறைத்தாள். நான் பதிலுக்கு மற்ற குழந்தைகள் வெடிக்கும் போது இவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா என்று கேட்டேன். இரவு புத்தாண்டு ஆரம்பித்தது. நாங்கள் மூவரும் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடினோம்.பிறகு காலையில் எழுந்ததும் நான் வெளியே செல்வதற்காக வாயிலில் இருந்த வண்டியை துடைத்துக்கொண்டு இருந்தேன். எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்த என் மனைவி என்னை அழைத்து விட்டு எதுவும் பேசாமல் சாலையை கை காட்டினாள். நான் பார்க்க சாலை முழுவதும் குப்பையாக இருந்தது. நான் என்ன என்றேன். நன்றாக பாருங்கள் என்றாள்.நான் மீண்டும் கவனிக்க இப்போது வயதான பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் எல்லா பட்டாசு குப்பைகளையும் கடினப்பட்டு சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது யோசித்து பார்த்தேன். நம்முடைய மகிழ்ச்சிக்காக மற்றவர்களை சிரமம் செய்வது புரிந்தது.என்ன இருந்தாலும் பெண்களுக்கு கருணையும் மற்றவர்கள் மீதுள்ள அக்கறையும் புரிந்தது. இப்போது என் மனைவியைப் பார்த்தேன்.சாலை என்று கூட நினைக்காமல் அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
