கனலாய் தகிக்காதே அசுரனே
அத்தியாயம் _ 20
விஜியின் செயலில் ஹர்ஷத் மீது இருந்த சிறிய நம்பிக்கை கூட நிகழினியிற்கு இல்லாமல் போனது.
அலுவலகம் முடிய சிந்தித்து கொண்டு வந்த நிகழினி விஜி செல்வதை பார்த்து அப்படியே அதே இடத்தில் நின்றாள்.
காரின் அருகே சென்ற ஹர்ஷத் திரும்பி பார்க்கையில் நிகழினி சிலை போல நின்றாள்.
‘இவளுக்கு என்னாச்சு பேயை பார்த்தது போல அப்படியே நிற்கிறாள் ’என நினைத்து கொண்டு நிகழினியின் அருகே சென்றான்.
“ஹேய் என்னாச்சு, ஏன் அப்படியே நிக்கிற..?”
ஹர்ஷத்தை பார்த்தவளின் சிந்தை முழுவதும் அவன் விஜயுடன் இருந்தது மாத்திரமே ஓடிகொண்டிருந்தது.
“ம்ஹும்…..” என்று காரினுள் ஏறி அமர்ந்து வீட்டிற்கு செல்லும் வழி முழுவதும் எதுவும் பேசாது அமைதியாக வந்தாள் அவள். வழமையாக காரினுள் ஏறினால் பேசி கொண்டே வருபவள் இன்று அமைதியாக வர ஹர்ஷத்தும் சிந்தித்து கொண்டே காரை செலுத்தினான். அவளுடைய மௌனம் அவனை வெறுமையாக உணர வைத்தது.
வீட்டிற்கு வந்த ஹர்ஷத்தோ மேலே செல்ல, நிகழினியோ அறைக்குள் செல்லாது லதாவின் அருகே வந்தமர்ந்தாள்.
“வாம்மா. ஆஃபிஸ் இன்னைக்கு எப்படி போச்சு.?” என கேட்டாள் லதா.
“ஏதோ.. ஒரு மாதிரி போகுதும்மா, நீங்க சாப்பிடிங்களா.?”
“ம்ம்ம்………, நான் சாப்பிட்டேன், ஹர்ஷத்திக்கு காபி போட்டுட்டேன், போகும் போது கொண்டு போ” என்றாள் லதா.
“ஓகேம்மா, நானும் ஃப்ரஷ் ஆகிட்டு வர்றேன்” என்று கிட்சனுக்குள் சென்று ஹர்ஷத்திற்காக போட்டிருந்த காபியினை எடுத்து சென்றாள் நிகழினி.
காபியினை கொண்டு சென்றவள் ஹர்ஷத்திடம் ஏதும் கூறாமல் டேபிளின் மீது காபியை வைத்தாள்.
குளித்து முடிய வெளியே வந்த ஹர்ஷத் மேஜை மீது உள்ள காபியினை பார்த்து,
“யாருக்கு காபி கொண்டு வந்திருக்க………?” என கேட்டான்.
பெரிதும் நாட்டமின்றி “இங்க நீங்க மட்டும்தானே இருக்கீங்க ஆகவே காபியும் உங்களுக்குதான்” என முரணாக பதிலளித்தாள் அவள்.
வழமையாக ஹர்ஷத்திக்கு தேவையான அனைத்தையும் நிகழினி செய்வதே வழமை ஆனால் இன்றோ அவள் கூறிய பதிலில் வேறுபாட்டை உணர்ந்த ஹர்ஷத் “என்ன மேடம் இன்னைக்கு வித்தியாசமா பேசுறீங்க” என கேட்டான்.
“ஒரு வித்தியாசமும் கிடையாது, நான் குளிக்க போறேன்” என சென்றாள்.
ஹர்ஷத் நிகழினி ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றாள் என அறியாமல் அமர்ந்திருந்தான்.
குளித்து வெளியே வந்தவள் எதுவும் பேசாது சோபாவில் படுத்தாள்.
நிகழினியை பார்த்து “நீ சாப்பிடலையா……?” என கேட்டான்.
“எனக்கு பசி இல்லை, நீங்க வேணும்னா சாப்பிடுங்க”
“ஏன் உனக்கு பசி இல்லை….?”
“ஏன் பசில்லைன்னு என்கிட்ட கேட்டா எனக்கெப்படித் தெரியும்.? எனக்கு தெரியாது, பசி இல்லை அவ்வளவும்தான், டயர்டா இருக்கு நான் தூங்குறேன்” என போர்வையால் மூடினாள் நிகழினி.
நிகழினியின் மனதில் ஏதோ ஒன்று உள்ளது ஆனால் தன்னிடம் கூறாது மறைக்கின்றாள் என அறிந்த ஹர்ஷத் அவளது தூக்கத்தினை குழப்ப முடிவெடுத்தான்.
தனது அறையில் உள்ள டீவியை ஆன் செய்து சத்தமாக வைத்தான் அவன்.
அறையினுள் ஒலித்த பெருஞ் சத்தத்தில் திகைத்தவாறு எழுந்தவள் “சார்………..” என சத்தமாக அழைத்தாள் நிகழினி.
நிகழினி அழைத்தது கேட்டும் கேட்காதது போல டீவியில் போகும் பாட்டினை தலையாட்டி இரசித்து கொண்டிருந்தான் அவன்.
“சார்…… சார்……” என கத்தி கொண்டே ஹர்ஷத்தின் முன் வந்து நின்றாள் நிகழினி.
“என்னடி.?
“சத்தத்தை குறைங்க சார்” .
“ஆஆஆஆ புரியல….?”
“சத்தம்…. சத்தத்தை குறைங்க….” என்றாள்.
தனது காதுகளில் கை வைத்து கேட்கவில்லை என சைகை செய்தான் ஹர்ஷத்.
ஹர்ஷத்தின் அருகிலிருந்த ரிம்மோட்டை எடுத்து டீவியை ஆஃப் பண்ணியவள் கோபத்துடன் திரும்பி நடக்க, சட்டென அவளுடைய கரத்தை பற்றி நிறுத்தியவன்,
“ஏன் டீ ஆஃப் பண்ணின…?” எனக் கேட்டான் அவன்
அவன் கரங்களுக்குள் இருந்த தன் கரத்தை உருவி எடுக்க முயன்றவாறு “ஹா.. இவ்வளவு சத்தமா இருந்தா எப்படி நான் தூங்குறது” என கேட்டாள்.
“நீ தூங்குறதுக்கு நான் என்ன பண்ண முடியும்” அலட்சியமாக வந்து விழுந்தன அவனுடைய வார்த்தைகள்.
“ப்ச்…. சத்தம் போடாம இருங்க” என்றாள் நிகழினி.
“அப்படிலாம் இருக்க முடியாதுடி”.
‘வர்ற கோபத்துக்கு அப்படியே அவனை பிடிச்சு குத்தினா எப்படி இருக்கும்’ என மனதில் நினைத்தாள் அவள்.
“என்னடி மனசுக்குள்ள எனக்கு திட்டிகிட்டு இருக்க போல.”
“ஆமா…. அச்சோ இல்லை….. இல்லை” என பல்லை காட்டினாள் அவள்.
அவனோ அவளுடைய கரத்தை மெல்ல வருடத் தொடங்க சட்டென இழுத்து எடுத்தவள்,
“சார் சாருவோட கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கு நான் நாளைக்கு போகனும்” என்றாள்.
நிகழினி தன்னை விட்டு சென்றால் மீண்டும் தனிமையில் இருக்க வேண்டுமென நினைத்த ஹர்ஷத்தோ
“இன்னும் மூனு நாள் இருக்குத்தானே ஆறுதலா போகலாம்” என்றான்.
“ஐயோ, சார் நாளைக்கு மெஹந்தி ஃபங்ஷன் இருக்கு சோ நான் கட்டாயம் போகனும்” என்றாள் அவள்.
“மெஹந்தி ஃபங்ஷன்னா அப்படின்னா என்ன..?” என கேட்டான் ஹர்ஷத்.
“அது கூட தெரியாதா உங்களுக்கு..?” என நகைத்தாள் நிகழினி.
முறைத்தவாறு “கேட்டா பதிலைச் சொல்லு இல்லைன்னா அடிதான் விழும்” என்றான் ஹர்ஷத்.
“மெஹந்தி ஃபங்ஷன்னா கல்யாணத்துக்கு முதல் நாள் பொண்ணுக்கு மெஹந்திலாம் வைச்சு பெருசா கொண்டாடுவாங்க” என்றாள் நிகழினி.
“அதுக்கு நீ ஏன் போகனும், நீ கல்யாணத்துக்கு மட்டும் போனால் போதும்” என்றான் அந்த அடாவடிக் காரன்.
“சார் நான் நல்லா மெஹந்தி வைப்பேன் அதனால நான் கட்டாயமா போகனும்”
“உனக்கு மெஹந்திலாம் வைக்க தெரியுமா….?” என கேட்டான் ஹர்ஷத்.
தவளை தன் வாயால் கெடும் எனும் பழமொழியிக்கு ஏற்ப நிகழினியும்,
“ஆமா சார், உங்களுக்கு போட்டு விடவா..?” என கேட்டாள் ஆர்வ கோளாறு பிடித்த நிகழினி.
மருதாணி பற்றி அறியாத ஹர்ஷத் “எஸ் போட்டு விடு” என்றான்.
“வாவ் நிஜமாவா.? அச்சோ என்கிட்ட மெஹந்தி இல்லையே. இப்போ மெஹந்தி வாங்கனுமே” என்றாள்.
“ஓகே வெயிட் பண்ணு யாருக்கிட்டையும் சொல்லி வாங்குவோம்” என்று தனது வீட்டில் வேலை பார்க்கும் ஒருவரை அழைத்து தேவையான அளவு அரைத்த மருதாணி இலைகளை வாங்கினான் ஹர்ஷத்.
“என்னங்க இது.? இதுல அழகா வைக்க முடியாது. மருதாணி ட்யூப்தான் வேணும்.”
“இதுவாடி.?”
“ஹே… இதுவும் வாங்க சொன்னீங்களா.? சூப்பர். இதே தான் கொடுங்க.”
என்றவாறு மருதாணியை கையில் எடுத்து கொண்டு கட்டிலின் மேல் கால்களை மடித்து அமர்ந்தாள்.
ஹர்ஷத்தையும் தன் முன்பே அவளை போலவே கால்களை மடித்து உட்கார வைத்து அவனது ஒரு கையினை தூக்கி தனது மடியில் வைத்தாள்.
மங்கையின் பஞ்சு போன்ற மென்மையான தேகத்தில் தன் கைகள் பட அவனது உள்ளமோ காதலால் ஆட்கொள்ளப்பட்டது. உள்ளுக்குள் அலையாய் காதல் பெருக,
‘மெஹந்தி போடுறது இவ்வளவு நல்லா இருக்குமா….?” என எண்ணியபடி மங்கையை இரசிக்க தொடங்கினான் அவன்.
மங்கையின் நெற்றியை காற்றில் ஆடும் கூந்தல் சிறிதாய் மறைக்க விழிகளோ ஆட்டப்பட்ட ஊஞ்சல் போல அங்குமிங்கும் அலைந்து திரிய,
கொவ்வை பழங்களை ஒத்த இதழ்களில் ஒன்றை கடித்தவாறு அவளது கைகளோ ஹர்ஷத்தின் கையினை வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தது.
“சார் உள்ளங்கையில என்ன டிசைன் போடுவோம்….?” என கேட்டாள் நிகழினி.
“எந்த டிசைன் போட நிறைய நேரம் போகும்..?” என கேட்டான்.
“அது வந்து….. ஹா ரங்கோலி டிசைன் போடுவோம் அதான் ரொம்ப கஷ்டம்” என்றாள்.
“அப்படின்னா அதையே போடு நான் டைம்மானாலும் வெயிட் பண்றேன்” என வெளியில் கூற மனமோ மங்கையை இரசிக்க வேண்டி துடித்தது.
அவளது சிறு சிறு அசைவுகளை கூட இரசித்து கொண்டிருந்தான் ஹர்ஷத்.
அவளோடு இருந்த நேரம் இடியை விஞ்சிய மின்னல் போல வேகமாக சென்றது.
“ஓகே சார் முடிஞ்சுது…..” என்றாள்.
“என்னது அதுக்குள்ள முடிஞ்சா…?” என்றான் ஹர்ஷத்.
“என்னது…?, அரை மணி நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கேன், இடுப்புலாம் ஒரே வலி” என்று பின்புறமாக இடையில் கை வைத்து முன்னோக்கி உடலை அசைத்தாள்.
அவளது அசைவில் அணிந்திருந்த ஆடையினுள் உள்ள மாதுளை கனி இரண்டும் ஹர்ஷத்தை நோக்கி வர அவனது கைகளோ தாங்கி கொள்ள துடித்தது. மூச்சடைத்து போனவனாய் அவளையே விழுங்கி விட துடித்தான் அவன்.
வலிக்கும் அவளுடைய வளைந்த இடையை தன் விரல் கொண்டு அழுத்தி விட அவன் மனம் ஏங்கியது.
‘டேய் ஹர்ஷா….., சும்மா இருக்கிற நம்மள தூண்டிட்டு அப்புறமா அசிங்க படுத்திருவாள் இவள் இப்பதான் கொஞ்சம் நல்லா பேசுறா மறுபடியும் பிரச்சனை வேணாம் சோ கையை வைச்சுட்டு சும்மா இரு’ என அவனது ஆழ்மனம் கூற அனைத்தையும் அடக்கி கொண்டு இருந்தான் ஹர்ஷத்.
“அப்படின்னா என்னோட மற்ற கைக்கும் போடு” என்றான்.
“மற்ற கையுமா…..?, என்னால முடியாது” என்றாள்.
“நீதானே சொன்னா நல்லா பண்ணுவேன்னு அப்புறம் ஏன் முடியாதுங்குற….? போடுடி.”
“எனக்கு கை வலிக்குது சார்”
“அப்படின்னா சின்ன டிசைன் ஒன்னு போடு நிகழி.”
“ஹா ஓகே அப்போ உங்க நேம் போடுவோமா….?” என கேட்டாள்.
“ஹார்ட்டின்ல என்னோட நேம் போட்டு விடு”
“ஹார்ட்டினா….?, ஓகே உங்க நேமோட ஃபர்ஸ்ட் லெட்டரையும், வேற என்ன லெட்டர் போடனும் சார்..?” என கேட்டாள் நிகழினி.
சிறிது கூட யோசிக்காது “என்(N) னு போடு” என்றான்.
சுவிட்ச்சை போட்டும் எரிய தாமதமாகும் டியூப் லைட்டை போல நிகழினியிற்கு அவன் கூறியது விளங்கவில்லை.
‘யாரோ புதுசா ஒருத்தியை செட் பண்ணிட்டான் போல அதான் என் எழுத்த போட சொல்றான்’ என நினைத்து கொண்டு ஹர்ஷத்தின் மற்றைய கையினை தூக்கி தனது மடியில் வைத்தாள்.
நிகழினியின் ஸ்பரிசம் கிடைக்க ஏங்கி கொண்டிருந்த மற்றைய கையும் நிகழினியின் தீண்டலை பெற்று திருப்தியடைந்தது.
நிகழினியோ மருதாணியை வைத்து முடித்த பின்னர்,
“சார் நான் கஷ்டப்பட்டு இதை வைச்சிருக்கேன், சோ டென் மினிட்ஸ் இந்தக் கையால ஒன்னுமே பண்ண வேணாம், எதுவும் வேணும்னா என்கிட்ட கேளுங்க…” என்றாள் நிகழினி.
ஹர்ஷத்தின் ஏழாம் அறிவுக்கு எட்டியது அவளது வார்த்தைகள்.
ஏழாம் அறிவென்பது காதலர்களை கரெக்ட் பண்ணுவதற்காக காதலிக்கும் அனைவருக்கும் தோன்றும் விசித்திரமான அறிவாகும்.
‘இது போதுமே…., இன்னைக்கு இவளை ஒரு வழி பண்ணிரலாம்’ என தனக்குள் எண்ணியபடி,
“நிகழினி எனக்கு பசிக்குது…..” என்றான்.
“சார் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க மருதாணி கையில சேர்ந்ததுக்கு அப்புறம் சாப்பிடலாம்”
“அதுலாம் முடியாது, எனக்கு இப்பவே சாப்பிடனும்” என சிறு பிள்ளையை போல அடம்பிடித்தான் அவன்.
“பத்து நிமிஷம் உங்களால வெயிட் பண்ண முடியாத சார்…..?”
“முடியாது எனக்கு இப்பவே சாப்பிடனும், நீ ஊட்டி விடு” என்றான்.
“ஊட்டி விடவா…!, ஆமா இவர் அப்படியே சின்ன பாப்பா தானே, நான் ஊட்டி விடுறதுக்கு” என நகைத்தாள் அவள்.
“நீ ஊட்டனும் இல்லைன்னா நானே சாப்பிட போவேன்” என கட்டிலிலிருந்து எழுந்தான் அந்தக் கள்ளன்.
தான் கஷ்டப்பட்டு இடுப்பு வலிக்க போட்ட மருதாணி வீணாகி விடும் என நினைத்து,
“சும்மா இருந்த உங்களுக்கு மருதாணி போட்டு விர்றேன்னு சொன்னனே, எனக்கு இது தேவைதான் நானே சாப்பாடு ஊட்டி விடுறேன்” என்று ஹர்ஷத்திற்காக உணவு எடுத்து வர சென்றாள்.
புற்களின் மேல் படர்ந்த பனியை போல ஹர்ஷத்தின் மனமோ குளிர்ந்தது.
உணவினை கொண்டு வந்தவள் கையில் கரண்டி ஒன்றையும் கொண்டு வந்தாள்.
சூரியனின் வருகையை வெட்கத்தில் உருகம் பனி துளிகளை போல ஹர்ஷத்தின் ஆசையும் கரைய தொடங்கியது.
அருகில் வந்து அமர்ந்து கரண்டியினால் ஊட்ட தொடங்கினாள்.
தவழும் குழந்தையை போல நிகழினி கொடுத்த உணவை வேண்டுமென சிந்தியபடி உண்டான் அவன்.
“என்ன சார் ஒழுங்கா சாப்பிட கூட தெரியாதா…?” என வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
“யாரு எனக்கா சாப்பிட தெரியாது….?, உனக்கு தான் ஒழுங்கா ஊட்ட தெரியலை” என்றான்.
“நான் ஒழுங்காதான் ஊட்றேன், உங்களோட வாய்தான் சரியில்லை” என்றாள் அவள்.
நிகழினியை பாசமாக முறைத்தவாறு “கையால ஊட்டி விடு, சாப்பாடு அநியாயமா கீழே கொட்டுது” என நிகழினியும் கீழே பார்க்கையில் உணவு சிந்தியபடி இருந்தது.
உணவு வீணாகின்றது என எண்ணி நிகழினியும் தன் கைகளால் ஊட்ட தொடங்கினாள்.
தாயின் அரவணைப்பை நினைவு தெரியா வயதில் அனுபவித்ததன் பின் மற்றுமொரு தாயின் அன்பை உணர்வது போல எண்ணினான் அவன்.
நிகழினியோ ஹர்ஷத்தின் அன்பை தொல்லையாகவே எடுத்து கொண்டாள்.
“நிகழினி…..”
“ம்ம்ம்……..”
“எப்படி இன்னைக்கு சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு”
“இல்லையே வழமையாக இருக்கிற போலதானே இருக்கு”
“இல்லையே, ஒருவேளை நீ கை கழுவாம ஊட்டி விடுற போல” என கூற நிகழினி ஹர்ஷத்தை குனிந்த தலையில் புருவத்தினை உயர்த்தி பார்க்க ஹர்ஷத்தோ எதுவும் தெரியாதது போல மேலே பார்க்க,
“ஆமா நாலு நாளா கை கழுவாமதான் இருக்கேன்” என்றாள் அவள்.
இருவரும் பேசி கொண்டே உணவு உண்ட பின் தனது கை கொண்டு ஹர்ஷத்தின் வாயினை துடைத்து விட்டாள்.
“தண்ணி தர யாரு வருவா..?”
“நான் தான் தரனும், வேற வழியில்லையே” என நிகழினி கூறி நீரை அருந்த கொடுத்தாள்.
“டைம் ஆகிருச்சு இனிமேல் கையை கழுவலாம்” என்றாள்.
“கை கழுவுறதுக்கு முன்னாடி நீ ஆசையா போட்ட மெஹந்தியை போட்டோ எடுத்துரலாம்” என நிகழினியிடம் தனது ஃபோனை எடுத்து வர சொல்லி அதில் படங்களை எடுக்க சொல்ல நிகழினியும் எடுத்தாள்.
“ஓகே அப்பறம் நான் பாத்ரூமுக்குள்ள போகனும்”
“பாத்ரூமா…., அதுக்கு நான் என்ன பண்ணுறது”
“ஓபன் பண்ணி விட்டாதானே போக முடியும்?”
“சார்…., என்ன பேசுறீங்க…?” என அதிர்ச்சியாக கேட்க,
“கை கழுவுறதுக்கு உள்ள போகனும் சோ பாத்ரூம் கதவை திறக்க சொன்னேன், நீ என்ன நினைச்ச..?” என்றான் ஹர்ஷத்.
நிகழினியிடம் விளையாட்டுக்காகவும் அவளை குழப்புவதற்காகவே பேசினான்.
“ம்ஹும் நான் ஒன்னும் நினைக்கல” என்று கூறி கதவை திறந்து விட்டாள்.
உள்ளே சென்று இரண்டு நிமிடத்தில் “நிகழினி…….” என ஹர்ஷத்தின் அலறல் சத்தம் நிகழினி இருந்த அறையை அதிர வைத்தது.
அதிரடியாக இருந்தவன் நிகழினியால் சில்மிஷக்காரனாக மாறிப் போனான்.
காதல் அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத் தொடங்கியது.
காதல் அவனை புன்னகைக்க கற்றுக் கொடுத்தது.
காதல் அவனை பொறாமை கொள்ள கற்றுக் கொடுத்தது.
அந்தக் காதலை அவன் நிகழினியிற்கும் கற்றுக் கொடுப்பானா.?
