குளிரே குளிரே கொல்லாதே!
அத்தியாயம் 4
மாயா எங்களோட செட்டப்னு நீங்க நினைக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா? என்றான் தமிழ்செல்வன்.
நீங்க மாயாவை பார்க்கலையான்னு ரொம்ப ஆர்வமா விசாரிச்சீங்களா? அதான் டவுட் வந்துருச்சு.
எனக்கு உண்மையாவே நீங்க இரண்டு பேரும் டூரிஸ்டு தானான்னு டவுட் வருது. நீங்க கேள்வி கேட்கிற தோரணைய பார்த்தா மப்டில இருக்கிற போலீஸ் மாதிரியே இருக்கு
எங்க ரெண்டு பேத்துக்கும் தொப்பை இல்லாததால் அந்த சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். நீங்க இன்னும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை. என்றான் விக்னேஷ்.
நாங்க பேயை ஐ மீன் மாயாவை நம்பலை. மக்களை நம்புறோம். மக்களை ஒன்று படுத்துவதன் மூலம் நாங்க ஐ மீன் மக்கள் நினைப்பதை நடத்தி காட்ட முடியும்
தமிழ்செல்வன் நீங்க கம்யூனிஸ்டா
