குளிரே குளிரே கொல்லாதே
அத்தியாயம் 5
தமிழ் செல்வனை இறக்கிவிட்டு விட்டு காரை கிளப்பிய அருண் அடுத்தது நாம எங்கே போகிறோம் பாஸ்? என்றான்.
இந்த ஊரோட போலீஸ் ஸ்டேசனுக்குத்தான். இங்க ஓட்டல் நிறைய இருக்கு. ஆனா வெளியூர் ஆளுக தங்குறதுக்கு லாட்ஜ் வசதி எதுவும் இல்லை. என்றான் விக்னேஷ்.
அப்ப எங்க தங்குறது? என்றான் அருண்.
போலீஸ் ஸ்டேசன்லயே தங்கிக்கலாம். சம்மன் கொடுக்க போற போலீஸ்காரங்க அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேசன்ல தங்குற வழக்கம் உண்டு. நாமளும் அதைத்தான் பாலோ பண்ண போறோம்.
இன்ஸ்பெக்டர் நல்ல ஆளா இருந்தா பிரச்சனையில்லை. முசுடா இருந்தா நமக்கு பிரச்சனை தான்.
நல்லதையே நினைக்க மாட்டியா?
எதிர்மறையாவும் நினைப்போம் பாஸ்.
