கடலோரக் கவிதை…

This entry is part 1 of 13 in the series கடலோரக் கவிதை

கடலோரக் கவிதை

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

அத்தியாயம்-1

அதிகாலை  கதிரவன் இன்னும் மேலே எழும்பிடாத அந்த வேளையில் மரியதாஸ் தன்னுடைய காரில், அவருடைய தம்பி அருள்தாஸுடன் சென்று இறங்கி நின்றயிடம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்தான்.

அவரைக்கண்டதும் அங்கிருந்தவர்கள் வணக்கம் வைக்க,ஒரு புன்னகையுடனே தலையசைத்து, கம்பீரமாக அவர் நடந்து உள்ளே செல்ல,அங்கு சிறுபெரும் படகுகளில் தாங்கள் பிடித்து வந்த மீன்களை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்,அதை மேற்பார்வை செய்தவர்,தனது படகுகளில் வந்த மீன்களையும் எப்படி ஏலம் போகிறதென்று பார்த்துக்கொண்டிருந்தார்.

அருள்தாஸோ “ண்ணே நீங்க வேணும்னா வீட்டுக்கு போங்க,நான் நம்ம பசங்களை வைத்து எல்லாம் பார்த்து முடிச்சிட்டு வரேன்” என்றதும்.

வேண்டாம்ல நானும் இங்கயே இருக்கேன்,இந்த ஊதக்காத்துல நான் என்ன கறைஞ்சாப்போயிடுவேன்,

பிறந்திலிருந்து சுவாசிக்குற காற்றுதான, என்னை ஒன்னும் செய்யாது என்று சொன்னவர் சிரிக்க…அதைக்கேட்டு பக்கத்துல நின்றவர்களும் சிரித்தனர்.

மரியதாஸ்தான் அவர்களது தலைவர்,ஓங்குதாங்காக உயர்ந்து வளர்ந்தவர்,அதற்குத்தக்க உடல்வாகு பார்ப்பவரை நின்று ஒரு தடவை மரியாதையாக பார்க்கும் தோற்றம் கொண்டவர்.

ஆனால் நியாயமும் கண்டிப்புமான மனுஷன்,அதனால்தான் அவரது தந்தைக்குப்பிறகு இன்றளவும் மக்கள் “தாஸ் அண்ணேன்” என மரியாதையா அழைக்கின்றனர்

திடீரென அந்த இடத்தில் சலசலப்பும் சத்தமும் கேட்கவும்,என்னவென்று தாஸ் செல்லவும்,அங்கு நின்றிருந்தவனைக் கண்டதும் கண்களில் சிவப்பு ஏறி இதுவரை இருந்த இலகு தன்மையும்,புன்னகையும் அவரது உதட்டிலிருந்து போயிற்று. 

” என்ன சகாயம் திரும்பவும் பிரச்சனை பண்ண வந்திருக்கியா என்ன?என்னலே பிரச்சனை இங்க”என்று கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர்” தாஸண்ணே ரொம்ப குறைச்சலா ஏலம் கேக்குறாங்க,அதுதான் தரமுடியாதுனு சொன்னா,சகாயம் அண்ணே பிரச்சனை பண்ணுறாரு”

மரியாதாஸ்” என்னலே இது, கடலுக்குள்ள கஷ்டப்பட்டு   போயிட்டு வர்ற, அவனோட வயித்துல அடிக்கலாம்னு பார்க்கியோ,நீ இரண்டு பைசா சம்பாதிச்சுனா அவனும் இரண்டுப்பைசா இலாபம் பார்க்கட்டும்,கடலுள்ளப்போய்

கஷ்டப்பட்டு வர்றது அவங்க,இவன் நோகாம குறைஞ்ச விலைக்கு எடுத்து லாபம் பார்க்க திட்டம் போடுறானோ?எலேய் சகாயம் நீயும் வாழு, அவங்களையும் வாழவிடு அதுதான் சரி.நீ மட்டும் வாழணும்னு நினைக்காதே,அவங்க சொல்ற விலைக்கு எடுத்துட்டு போகமுடிஞ்சா போ,இல்லையா ஏலமெடுக்க வராத” 

சகாயம்” அதை சொல்ல நீங்க யாரு,தலைவர்னா இவங்களுக்கு மட்டுந்தான் எனக்கில்லை புரியுதா பெரிய இவரு வந்திட்டாரு பேசுறதுக்கு,நம்ம வந்தா மட்டும் இவனுவளுக்கு மூக்குல வேர்த்துட்டு வந்திடும்”என்றான்

அதற்குள் அருள் ஓடிவந்து ” நீ எதுக்குல இங்க வந்த,

உனக்குத்தான் இங்க ஏலமெடுக்க வரக்கூடாதுனு பஞ்சாயத்து பண்ணி பைசல் பண்ணியாச்சுல, என்ன மறுபடியும் இரண்டு ஊருக்கும் பகையை வளர்க்கலாம்னு நினைக்கயோ,இங்க வந்து உன்னால ஒன்னும் கிழிக்க முடியாதுல”

” ஏய் அருளு என்ன உங்க அண்ணன் பக்கத்துல இருந்தா ரொம்ப துள்ளுவயாலே,அடங்குல ரொம்ப சலம்பாத.இந்த சகாயம் யாருக்கு அடங்கணும்னு இல்லை,இது பொதுயிடம் நான் வர்றதுக்கு இங்க யாரோட அனுமதியும் தேவையில்லை,தள்ளுலேயென்று அருளைத் தள்ளிவிட்டு நகரப்போகவும்,மரியதாஸ் ஓடிவந்து சகாயத்தை அடிப்பதற்கிக சட்டையைப் பிடித்து இழுத்தார்..

“என்னலே எப்பவும்  என்னைய ஏலமும் எடுக்கவிடமாட்டுக்கிய,எனக்கும் இங்க பத்து வீஞ்சு ஓடுது,நானும் பெரிய மனுஷன்தான்லே,நான் மட்டும் எதுலல குறைஞ்சிட்டேன்,இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்” என்று சத்தமிட்டவன் மரியதாஸை அடிக்க கை ஓங்கினான்,அவ்வளவுதான் அவனுக்கே அடுத்து என்ன நடந்ததென்று தெரியாது, அடுத்த நொடி கீழே பொத்தென்று மீன்கள் நிறைந்த கூடையில் விழுந்து தலைகீழாக புரண்டான். 

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை  அத்தனைபேரும் அடித்தவனைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.

அங்கே நின்றிருந்தது வேறுயாருமில்லை மரியதாஸின் மகன் “தேவா என்கிற தேவவில்சன்”சகாயம் மெதுவாக உருண்டுப் பிரண்டு எழும்பி நிற்கவும்.தனது வலது கையிலுள்ள அவனதுக்காப்பை மேல ஏத்திவிட்டவன் அவனருகில் வந்து அவனது சட்டையைப் பிடித்து தூக்கியவன்” என்னலே பெரிய இவன் மாதிரி எங்கப்பா மேலயே  கைவைக்கப் போற, வகுந்திடுவேன் என்று மறுபடியும் அவனது முகத்தில் குத்த சாகாயத்தின் மூஞ்சு பஞ்சறாகி இரத்தம் கொட்ட ஆரம்பித்தது,இதைப் பார்த்த தாஸோ அருளைப் பார்த்து முறைக்க, அருளோ உடனே ஓடிவந்து தேவா…லேய்  தேவா  என்று அவனது கையைப்பிடித்திழுக்கவும்,விடுங்க சித்தப்பா:அப்பா மேலயே கை வைக்கப்பார்க்கான்” என்று அருளின் கையிலிருந்தும் எகிறி துள்ளினான்.

“அருளு  அவனை அமைதியா அடங்கி நிக்க சொல்லு, சகாயத்தை எதுக்கு இவன் அடிச்சான்,அவனை நான் பார்த்துக்க மாட்டனோ ,இவரு என்ன பெரிய மனுஷனா போகச்சொல்லு இங்கயிருந்து.இப்பவேபெரிய சண்டியரு மாதிரி “

உடனே அருள் “தேவா” என்று அழைக்கவும்.

கேட்டுச்சு கேட்டுச்சு உங்க அண்ணன் சொன்னதெல்லாம் என் காதுலயும் கேட்டுச்சு.நான் போறேன் ஆனா எவனாவது மறுபடியும் இங்க வந்தானு தெரிஞ்சது;

வெட்டிபோட்டிருவேன் அவனை என்று சொல்லியவன்: கீழே இரத்தத்தோடு அமர்ந்திருந்த சகாயத்தை ஒரு எத்து எத்திவிட்டுத்தான் போனான்.

போகும் போது தன் அப்பாவை ஒரு பார்வை பார்க்க அவரோ இங்கயிருந்து போவியா? மாட்டியா?என்ற ரீதியில் பார்த்து வைக்க.

சித்தப்பா நான் கிளம்புறேன் உங்க அண்ணங்கிட்ட சொல்லிடுங்க என்றவன்; அங்கே நிறுத்தியிருந்த  தனது என்ஃபீல்டு வண்டியை எடுத்துக்கொண்டு கம்பீரமாக ஓட்டிச்சென்றான்.

அவன் சென்றதும் டேய் “அருளு அவனை தூக்கி ஹாஸ்பிட்டல்ல கொண்டு போடுங்கடா,அவனுக்கு வேற வேலையேயில்லை என்றவர்.

ஆமா தேவா எப்படி இங்க வந்தான்,அதுவும் இந்த நேரத்துல,நீ தான் அவனை இங்க கூட்டிட்டு வந்தியா…படிக்கிற பிள்ளைய இங்க கூப்பிட வேண்டாம்னு எத்தனை முறை சொல்லிருப்பேன்.கோபத்தில் கத்தினார்

இப்போது அருளுக்கு தன் அண்ணனிடம் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தார்.இப்போ என்ன பதில் சொன்னாலும் இன்னைக்கு முழுவதும் அதைவச்சே பாடுவார்னுத் தெரியும்,அதனால அவசரமாக ஓடி சாகாயத்தை தூக்கப்போக அதுக்குள்ள அவனோட கைத்தடிகளே வந்து தூக்கி சென்றனர்.

மரியதாஸிற்கு நான்கு பிள்ளைகள்,அதில் மூன்று பெண்பிள்ளையும் ஒரே ஒரு ஆண்பிள்ளை.

அவன்தான் தேவா,மரியதாஸை மாதிரியே நல்ல உயரமும் உடம்பும் உடையவன்,மற்றவர்களை பார்வையாலே எச்சரிக்கும் தீரன்.

முதல் இரண்டு பெண்களையும் அங்கயே திருமணம் முடித்துக்கொடுத்துவிட்டார்,மூன்றாவது தேவா நான்காவது ஒரு பெண் ரீனா.

அருள்தாஸுக்கு குழந்தைகள் கிடையாது அவர்களுக்கு தேவாதான் செல்லபிள்ளை…

தேவா தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் இண்டாம் வருடம் எம்.எஸ்ஸி ஐ.டி படிக்கின்றான்.ரீனாவும் அதே கல்லூரியில்தான் இப்போது ஆங்கில இலக்கியம் படிப்பதற்கு சேர்ந்திருக்கிறாள்.வீட்டிற்கு வந்தவன் நேராக சென்று தனதறையில் படுத்துக்கொண்டான்…

காலை ஒரு ஏழுமணிபோல நல்ல தூக்கத்தில் இருந்தவனின் முதுகில் நாலு அடிபோட்டார் அவனது அம்மா ரெஜினா.

கனவில் சன்னிலியோனுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவனுக்கு அது உரைக்கவில்லை என்றதும்.

மறுபடியும் இரண்டு அடிபோட்டவர் தலையைப்பிடித்து உலுக்கினார்.இன்னைக்கு காலேஜ் திறக்குது…முடியை பாரு காடுமாதிரி, அப்பா வந்து உன்ன கேட்டாங்க என்றதும் தான்…அதறிபதறி எழும்பி அமர்ந்தான்.

அதான நான் கரடியா கத்தி எழுப்பினா அசைஞ்சானில்லை..அப்பானு சொன்னா மட்டும் தூக்கத்துலயும் கேட்குதோ! எழும்பு காலையிலயே அங்க என்னடா செய்து வச்ச.மனுஷன் என்மேல வந்து காய்ஞ்சுட்டு போறாரு.படிக்கற பிள்ளை நாங்க கெடுக்குறமாம்…போட போய் கிளம்பி வா  ரீனாவுக்கு வேற இன்னைக்கு முதல்நாள் அவளையும் சேர்த்து காலேஜ் கூட்டிட்டுப்போயிடு என்று பேசிக்கொண்டே மகனின் அறையை ஒதுங்க வைத்தவர் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

குளித்து தயாராகி சாப்பிடவந்து அமர்ந்தவனின் அருகில் வந்து தாஸ் அமர்ந்ததும்: எழும்பி போயிடலாமா!என்று யோசிப்பற்குள் சாப்பாட்டை கொண்டுவந்து வைத்துவிட்டார் ரெஜினா.

அதற்குள் ரீனாவும் வந்துவிட சாப்பிட ஆரம்பித்தவனின் காது தீய்ஞ்சுபோறளவுக்கு பேசியே தள்ளிவிட்டார் தாஸ் ” நாங்கதான் இப்படி அடிதடில இறங்கிட்டோம் நீயாவது படிச்சோமா தொழிலைப் பார்த்தமானு ஒதுங்கி நிம்மதியா வாழனும்னுதான் உன்னை ஒதுங்கியிருக்க சொன்னா நீ என்னடானா,அதே அடிதடியில இறங்குற,சகாயத்தை அடிக்க என் உடம்புல தெம்பில்லையா,நீ வந்து அடிக்குற,ஒழுங்கா உன் படிப்பை மட்டும் பாரு” என்று…

தேவாவோ ரெஜினாவை பார்க்க…அவரோ அமைதியா சாப்பிட்டு கிளம்பு என்று கையைக் காண்பித்தான்.சாப்பிட்டு எழும்பியவன்  கைகழுவ போகும்போது ரெஜினா கணவனுக்குத் தெரியாமல் மகனுக்கு காசு கையில் கொடுத்தார் முதல்நாள் காலேஜுக்கு போறானென்று.

அவனும் ரீனாவும் வெளியே வரும்போது மேஜையில் கொஞ்சம் பணத்தை எடுத்து தாஸ்  தள்ளி வைக்கவும்  தேவா அதை எடுத்துக் கொண்டான்.

அப்பாவுக்கும் மகனுக்கும் பேச்சுவார்த்தை அவ்வளவு இருக்காது,ஆனால் மகனின் தேவைகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்.

ரீனாவோ நீ நடத்து  ண்ணே மாத்தி மாத்தி பணம் கிடைக்குது,உன் காட்டுல பணமழைதான் என்றவளை, தன் உதட்டில் கைவைத்து ஷ்ஷ் என்று அடக்கியவன் வெளியே வரவும்.

அருள்தாஸும் அவரது மனைவி அகதாவும் வந்தனர். தம்பி காலேஜ்க்கு கிளம்பிட்டியா? உனக்கு  காலையில மீன்வடை செய்து கொண்டு வந்தேன் என்று அவனிடம் நீட்ட…

சித்தி உள்ள வச்சுடுங்க…உள்ள உங்க மச்சான் செம கடுப்புல இருக்கார்,இப்போ இதை சாப்பிட்டுட்டு நின்னேன் அவ்வளவுதான். நாங்க கிளம்புறோம் என்று வண்டியை எடுக்க.

அருள் ஓடி வந்து ” என்னடா மகனே இப்படி பண்ணிட்ட அந்த சகாயத்துக்கு மூஞ்சில எட்டு தையல் போலீஸ் கேஸாகம, ஸ்டேஷன்  பணம் கொடுத்து செட்டில் பண்ணிருக்கு”

விடுங்க சித்தப்பா அப்பா மேலயே கைய வைக்க பார்க்கறான். அதைப் பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்,அதான் ஒரு காட்டு காட்டினேன் என்று தன் காப்பை திருக்கி காண்பிக்கவும்.

அருள்”நீ காட்டு காட்டிட்ட,உங்கப்பா எங்களையெல்லாம் காட்டு காட்டுனு காட்டுறாரு காலையிலிருந்து,இன்னும் இரண்டு வாரம் இதே தொடருவார்”

விடுங்க சித்தப்பா இதென்ன நமக்கு புதுசா,வழக்கம்தான என்று சிரிக்கவும் அருளும் சேர்ந்து சிரிக்க,அப்படியே கல்லூரிக்கு கிளம்பினார்கள்.

ரீனா இப்போதுதான் இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்திருக்கிறாள்,அவளுக்கு அந்த கல்லூரியே புதுசுதான்…ஆனால் தேவா அங்க நான்குவருடம் மூடிந்து இது ஐந்தாவது வருடம் என்பதால் சீனியர் என்ற கெத்தோடு இருப்பான்.

அதே கெத்தோடு வண்டியை மெயின் ரோட்டில் ஓட்டிக்கொண்டிருந்தவன் கண்டது…

முன்னாடி சென்று கொண்டிருந்த வண்டியில் பின்பக்கம் இருந்தப் பெண்ணின்  தாவணி வீலைத் தொட்டுக்கொண்டிருக்க,அதைக் கண்டவன் கையை நீட்டி கத்தி சொல்வதற்குள்: தாவணி வீலில் சிக்கி சட்டென்று இழுக்க நிலைத்தடுமாறி அந்தப் பெண் மொத்தமா ரோட்டில் விழுந்துவிட்டாள்,வண்டியை ஓட்டியவரும்  வீல் சிக்கி வண்டியோடு சரிந்துவிழுந்திருந்தார்.

அவ்வளவுதான் தாவணி வீலில் சிக்கியிருக்க,வெறும் பாவாடை சட்டையோடு ரோட்டில் விழுந்தவளின் பின்னாக வந்தவன் வண்டியை நிறுத்தி அடுத்தடுத்து வந்த வாகனங்களை மறித்திருந்தான்…

இல்லையென்றால் அவளது ஆயுள் அன்றே முடிந்திருக்கும்,ஓடிச்சென்று தூக்கியவன் பார்த்தது கைகால்களில் உரசி அவளது சட்டையெல்லாம் கிழிந்து பார்க்கவே பரிதாபமாக நின்றிருந்தாள் அந்தப்பெண்,

அதற்குள் கூட்டம் கூடியிருக்க படபடவென செயல்பட்டவன் ;அவளது நிலையைக் கண்டு தனது தங்கையிடம் துப்பட்டா வாங்கி,அவளுக்குப் போர்த்தியவன்,தங்கையிடமிருந்து தண்ணீர் பாட்டில் வாங்கி இருவருக்கும் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவன், அவர்களை ஆட்டோவிலேற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

அவனுக்கே அந்தப் பெண்ணைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.

மான்போல விழியில் அவன் தூக்கியதும் 

மருண்டுப்பார்த்தவளின் உடலெல்லாம் அவன் தூக்கியதும் உதறியது…சிறு பெண் ரீனாவோட வயசுதான் இருக்கும் பதினேழு பதிணெட்டு.

அவன் கண்களில் முழுதாக விழுந்துவிட்டாள் அந்தப்பெண்.

ரீனா அவனிடம் “என் ஷால் அந்த பொண்ணுகிட்ட கொடுத்திட்ட ண்ணா.எனக்கு புதுசு வாங்கிக்கொடு என்றதும்தான் நினைவுக்கு வந்தவன், தன் தங்கயை பக்கத்தில் இருந்த கடைக்கு அவரச அவசரமாக  அழைத்துச் சென்று ஷால் வாங்கிக்கொடுத்து காலேஜ்க்கு சென்றனர்.

முதல்நாளே அமோகமாக சென்றது இருவருக்கும்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *