கடலோரக் கவிதை…

This entry is part 2 of 13 in the series கடலோரக் கவிதை

கடலோரக் கவிதை

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

கடலோரக் கவிதை…

அத்தியாயம்-2
தன் மகளை முதல் நாள் என்பதால் கல்லூரியில் விட்டுவிட்டு வருவதாகச் சொன்ன தன் கணவரை இன்னும் காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்தாள் ஜானகி… காலை 11 மணி ஆகியும் கணவரை இன்னும் காணவில்லை என்று அவரது போனிற்கு அழைப்பு விடுக்க அது அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று தகவல் தந்தது…
ஜானகி முற்றிலும் பதறிவிட்டார் ஏனென்றால் அவர்கள் தூத்துக்குடி ஊருக்கு வந்தே ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது.
அவளது கணவர் சிவசுப்பிரமணியன் என்ற சிவசு அங்கு உள்ள ஒரு பிரபலமான வங்கியில் மேனேஜராக மாற்றலாகி வந்திருக்கிறார்… அதனால்தான் முதல் நாள் தனது மகளுக்கு இடம் தெரியாது என்று கல்லூரியில் விட்டு விட்டு வருவதாகக் கூறிச் சென்றவர் இன்னும் வரவில்லை.
பதட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் யாரிடம் உதவி கேட்க வேண்டுமென்று கூட தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த ஜானகிக்கு ஆபத்பாந்தவனாக அழைப்பு மணி ஓசை கேட்டது.
ஓடிப்போய் கதவைத் திறந்த ஜானகிக்கு அதிர்ச்சி,தன் கணவர்  தலையில் பெரிய கட்டுடனும் கையில் சிராய்புகளுடனும் நின்றிருக்க, பக்கத்தில் நின்றிருந்த தன் மகள் நித்யஸ்ரீ உடைகிழிந்து,கைகாலெல்லாம் அடிபட்டு  காயத்துடனும் இருப்பதைப் பார்த்து ” ஐயோ என்னங்க இதெல்லாம் என்று அவர்களை உள்ளே அழைத்து ,குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்தார் அழுதுகொண்டே…யார் கண்ணுபட்டுதோ தெரியலையே! காலையிலயே நல்லாதானப் போனீங்க,எப்படி இப்படி ஆச்சுது என்று கேட்கவும்தான் மெதூவாக நித்யா நடந்ததை தன்து தாய்க்கு விளக்கினாள்.
சிவசு பதில் எதுவும்சொல்லமால் மெல்ல முன்னறையில் கிடந்த கட்டிலில் படுத்துவிட்டார் முடியாமல்…
மெல்ல நித்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற ஜானகி” காலையிலே காலேஜ்க்கு சுடிதார் போட்டுட்டு போறேன்னு சொன்ன பிள்ளைய,ஆச்சாரம் அது இதுன்னு சொல்லி தாவணிப்போட்டு கூட்டிட்டு போயி கீழே தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். இதுல நம்ம அவரு முன்னாடி பேசவே கூடாது பேசினா வேற, பொம்மனாட்டி எதிர்த்து பேசுறேன்னு சொல்லுவார். நீ இப்படி பேசினா  அதைப்பார்த்து நம்ம பிள்ளைங்க போற இடத்துல இப்படித்தான  பேசுவாங்க அதுதானே பழகுவாங்க,அப்படி இப்படினு  அதுக்கு வேற வியாக்கியானம் பேசுவார்..என்னத்தை சொல்றது, என்னத்த படிச்சு என்னத்த வேலை பார்க்கிறாரோ என்று தன் தலையில் தட்டிக்கொண்டவர் இருவருக்கும் காயங்களுக்கு  பண்டுவம் பார்த்தாள் ஜானகி.
சிவசுவோடசொந்த ஊரு கும்பகோணம்,ஜானகியின் ஊரு ஸ்ரீரங்கம்.இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் சாய்நாத்,இரண்டாவது நித்யஸ்ரீ,இளையவள் திவ்யஸ்ரீ.சாய்நாத் தன் இஞ்ஜினியரிங் படிப்பை முடித்த சென்னையில் இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கின்றான்.
நித்யாஸ்ரீ இளங்கலை ஆங்கிலம் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்,திவ்யிஸ்ரீ இப்போதுதான் ப்ளஸ்ஒன் படிக்கின்றாள்.
சிவசு இவ்வளவு படித்து மேனேஜர் வேலையிலிருந்தாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை உடையவர்… பிள்ளைகளின் உடை விஷயத்திலும் கூட… பள்ளியில் படிக்கும் வரை சுடிதார் கட்டாயம் என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு வரை அதை போடுவதற்கு அனுமதித்தவர். கல்லூரிக்குப் போகும் போது கட்டாயம் பாவாடை தாவணியில் தான் செல்ல வேண்டும் என்ற மகளிடம் கூறிவிட்டதாலும் முதன்முறை தாவணி உடுத்தி இருந்ததாலும் அதை எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் வண்டியில் இருந்து விழுந்து வாங்கி வந்தாச்சு…அப்பாவும் மகளும்.
பின்னாடி வந்த வண்டிகாரன்மட்டும் நம்மளை தூக்கி விடலைனா என்னவாகிருக்கும் என்று நித்யஸ்ரீ யோசிக்கவும்,அவளது   உடல்நடுங்கியது, தானாக, உடனே தனது அம்மாவிடம் கூறவும் “யாரு பையனோ நல்லாயிருக்கட்டும் என்றவர் தனது மகளின் தலையை வாஞ்சையாக தடவிவிட்டார்.
சிவசுவின் மகளாக பிறந்தாள் ஆடை சுதந்திரம்கூட கிடையாதுபோ.எங்கப்பா கூட எங்களை பெண்கள் என இப்படி கட்டுப்படுத்தலை என நெந்துக்கொண்டாள்.
ஜானகி அந்தபக்கமாக விலகியதும் நித்யா மெல்ல தன்னை தூக்கி தூப்பட்டாவை மூடுவதற்கு தந்தவனின் முகத்தை நியபகப்படுத்த முயன்றாள்,ஐயோ அவளுக்கு  அவனது முரட்டுமீசையும்தாடியும், கண்களும்தான் கண்முன் வந்தது,முழுமுகமும் நியாபகத்திற்கு வரவில்லை…யோசித்துக்கொண்டிருந்தவள் அப்படியே வலியிலும் மருந்தின் வீரியத்திலும் தூங்கிவிட்டாள்.
அங்கு  தேவாவோ மாலை வேலையில் தன்னுடைய சாகாக்களுடன் கால்கள் அந்த மணலில் புதைய புதைய வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தான்.அவனது எண்ணங்கள் ஒரு இலக்கில்லாமல் இருந்தது.
எப்பவுமே படிப்பைத்தவிர விளையாட்டு அடிதடியெல்லாவற்றிலும் அவனது குறி தப்பாது… விளையாட்டில் எதையாவது சாதிக்கணும் என்றுதான் வாலிபால், ஃபுட்பால், கிரிக்கெட் என எல்லாவற்றிலும் கை தேர்ந்தவன்.
ஆனால் மரியதாஸிற்கோ அவன் படிக்கவேண்டும் படித்து அதற்கு தகுந்தார்போல வேலைப்பார்க்க வேண்டுமென்ற ஒரு ஆசையிருக்கிறது. அவன் பிறந்ததிலிருந்தே இந்த எண்ணம் தோன்றிவிட்டது , அட்லீஸ்ட் கப்பல்லயாவது வேலை பார்க்கணும்னு,நம்மளைமாதிரி வந்திடக்கூடாது என ஆசைப்பட்டார். அதனால தான் அவனை கல்லூரிக்கு அனுப்புகிறார்
ஆனால் தேவாவோ தன் தகப்பனைப் போலவே நீதி நியாயம் என்ற எண்ணத்தில் இருப்பவன், தன் குடும்ப தொழிலையே முன்னெடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். தேவாவை பொருத்தவரை  அவனது  ரோல் மாடல்,ஆதர்ஷ ஹீரோ எல்லமே மரியதாஸ்தான். 
இருவருமே ஒருத்தர் மேல் ஒருத்தர் ரொம்ப பாசம் வைத்திருக்கின்றனர் ஆனால் அதை காட்டிக் கொள்வதில்லை அவ்வளவே!
விளையாட்டில் அவனது கவனம் இல்லை என்றதும் அவனது நண்பன் வசந்த்  “தேவா என்னலே உடம்பு எதுவும் சரியில்லையா,கவனம் இங்கயில்லை”என்றதும் சுதாரித்தவன் ஒன்னுமில்லை என்றதும்… பக்கத்தில் இருந்தவன்” லே  வசந்து நம்ம தேவா காலையில ரோட்டுல எதோ ஒரு பிள்ளைய காப்பாத்தி ஹீரோவாகிட்டாரு,தெரியுமா லே உனக்கு,அந்த பிள்ளை நினைப்புலதான் ஆளு ஒருமார்க்கமாக இருக்கான்  என்று கேலி பேசவும், தேவா தன் கையிலிருந்த  பந்தை அவன் மேல் தூக்கி எறிந்தவன்” போங்கல நீங்களே விளையாடுங்க என்றவன் அப்படியே  ஒதுங்கி  தங்ககலரில் இருக்கும் அந்த மணலில்  தலைக்கு கைக்கொடுத்து வானத்தைப் பார்த்துபடுத்திருந்தான்…
மெல்ல அவனருகில் யாரோ அமரவும் திரும்பி பார்த்தான் அவனது உயிர் நண்பனும்,அத்தை மகனுமான வசந்த்துதான் 
“காலையிலயே ஐயா எதோ  ஹீரோயிசம் காண்பிச்சுட்டுத்தான் காலேஜ்க்கே வந்தீங்க போல சார்” என்றுக்கேட்டவன் அப்படியே அவனருகிலயே படுத்தான் அந்த மண்ணில்…
அதுசிறுவயதிலிருந்தே அதாவது பள்ளிக்காலந்தொட்டே வசந்த் தேவாவோடு வந்துதான் விளையாடுவான்,இருவரும் கூட்டுக்களவானிங்க அப்போயிருந்தே.
அது ஒன்னுமில்லடா நான் காலேஜ் போகும்போது அந்த ஆக்ஸிடென்ட் நடந்துச்சு சும்மா உதவிசெய்தேன் அவ்வளவுதான்…
  “என்னது ஆக்ஸிடென்டா இது எப்போ நடந்துச்சு”பதறி கேட்கவும்…நடந்ததை தேவா விளக்கினான்.
ஓஓஓ…இதுவேரையா. நான் அத கேட்கலையே,காலையில ஏலம் எடுக்குற இடத்துல என்ன பண்ணின அதைக் கேட்டேன், இப்போ வர்ற வழியில அருள் மாமாவைப் பார்த்தேன் அவங்கதான் சொன்னாங்க…எங்க மவரு வீரம்விளைஞ்சவருனு ஒரே உன் புராணம்தான் அதான் கேட்டேன்.
சத்தமாக சிரித்தவன் சித்தப்பாக்கு நான் எது செஞ்சாலும் பெருமைதான்,ஆனா அப்பாவுக்கு நான் படிச்சா மட்டுந்தான் பெருமைனு இருக்காரு.
பெரிய மாமா சொல்றதும் வாஸ்தவம்தான அவருக்கு நீ அடிதடினு போறது பிடிக்கலை அதுலயிருந்து உன்னை ஒதுக்கி வைக்கிறாரு,நீ என்னடானா அதைத்தான் வீம்புக்குனு செய்யுற என்று பேசிக்கொண்டிருக்க,நல்ல இருட்டிவிட்டது…
வசந்துதான் வா மாப்பிள்ளை எழும்பு என்று தேவாவின் கைப்பிடித்து தூக்கிவிட்டான்,இருவரும் மெதுவாக நடக்க மற்ற நண்பர்களும் அவர்களோடு சேர்ந்துக்கொள்ள,ஒரு குழுவாக இப்போது அவர்கள்சென்று நின்றயிடம் பார்.
அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்க,மெல்ல வசந்த் தேவாவின் காதில் தேவா வா நம்ம கிளம்புவோம் இங்க இருக்க வேண்டாம் என்று சொல்ல…
தேவா அவனை முறைத்துப் பார்த்தவன் “அவன் வந்தா நம்ம பயந்து கிளம்பணுமா என்ன.”
வசந்தோ இல்லைடா அவன் ஏதோ திட்டத்தோடு தான் வந்திருப்பானு  எனக்கு தோணுது. நம்ம வந்த பாருக்கே அவனும் வந்திருக்கான்னாலே, கண்டிப்பா பிரச்சினை பண்ணுவான், நமக்காக காத்திருந்து உள்ள வந்த மாதிரி இருக்கு,எழும்பு என்றதும், தேவாவோ அவனது கையைத் தட்டிவிட்டு நீ வேணா கிளம்பு நான் ஆர்டர் பண்ணினதை குடிச்சிட்டுத்தான் வருவேன் என கோபத்தில் சொல்லவும், வசந்திற்கோ வேறு வழிய தெரியவில்லை அவனை விட்டுப் போகும் மனதில்லாமல் அவனுடனே அமர்ந்தான்.
வந்தது வேறு யாரும் இல்லை காலையில்  தேவாவிடம் அடி வாங்கிக் கொண்டு சென்ற சகாயத்தின் கடைசி தம்பி ராபின் தான் வந்திருந்தான். அவனும் தேவா படிக்கும் அதே கல்லூரியில் தான் படிக்கின்றான்.
ஏற்கனவே கல்லூரியிலும் இவர்கள் இருவரும் எதிரெதிர் துருவம்தான், எதிர்கட்சி பார்ட்டிகள் இரண்டும். அடிக்கடி முட்டி கொள்வார்களே தவிர பெருசா எதுவும் அவர்களுக்குள் சண்டை வந்ததில்லை.ஆனால் இனி அப்படி இருக்கப்போவதில்லை.
தேவாவுக்குமே தெரிந்தது இன்று நிச்சயமா ஏதோ ஒன்னு நடக்கப் போகுது அதுமட்டும் உறுதி,என்ன நடந்தாலும் பார்க்கலாம் என்று  அமர்ந்திருந்தான்,வசந்துதான் பயந்தான் அவனுக்குத் தேவாவையும் தெரியும் ராபினையும் தெரியும்…அதைவிட மரியதாஸ் என்ன செய்வார் எனவும்தெரியும்…தேவா ஏதாவது பண்ணிட்டு வந்தா அவங்கிட்ட நேரிடையாக கேட்க மாட்டார், வசந்த் கைல மாட்டும் போது அவன் காதிலிருந்து ரத்தம் வர்ற அளவுக்கு அட்வைஸ் மழை பொழிந்திடுவார்.
சிறிது நேரத்தில் பாரில் வேலை செய்யும் பையன் தேவா ஆர்டர் செய்திருந்த பொருள்களைக் கொண்டு வரும்போது அதை இடைமறித்து  ராபினின் கூட்டத்தினர் வாங்கிக் கொண்டனர்.
அதை பார்த்துக்கொண்டிருந்த தேவாவோ டேபிள் மேல் கால் மேல் கால் போட்டு சேரில் வந்து அமர்ந்து கொண்டு, அந்தப் பையனை அழைத்து நான் ஆரடர் செய்த பொருள் எல்லாமே, அந்த டேபிளில் இருந்து இந்த டேபிளுக்கு இப்பவே கொண்டுவந்து வைக்கணும் இல்லைன்னு வையேன், நான் வேற விதமா எடுத்துக்குவேன் என்று ராபினைப்  பார்த்து முறைத்தவன், சட்டமாக அமர்ந்துகொண்டான்.
வசந்தும் தேவாவின் நண்பர்களும் “வேண்டாம் தேவா பிரச்சினை வேண்டாம் நம்ம வேற ஆர்டர் பண்ணிக்கலாம் என்று சொல்லவும், காலையில் தான் ஒரு பிரச்சினை முடிந்திருக்கு. இப்பவும் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்தவன் மறுபடியும் அவர்களுக்குத் தேவையானதை  ஆர்டர் செய்தனர்.
தேவா வசந்த் எல்லோரும் இப்போது நல்ல போதையில் இருந்தனர்,
அந்தப்பக்கம் ராபினும்  நல்ல குடிபோதையில் இருக்க அவனுடன் இருந்த கூட்டாளிகள் அவனை உசுப்பிவிடவும்,மெல்ல எழுந்து தேவாவின் அருகில் வந்து” நீ என்ன பெரிய சன்டியரோ எங்க அண்ணனையே காலையில அடிச்சு இருக்கா, உங்க அப்பா பெரிய இவரால? இப்போ ஒத்தைக்கு ஒத்தைபோட்டுப்பார்க்கலாம் வா என்று மார்தட்டியழன் மரியதஸை தரைக்குறைவாக பேச ஆரம்பிக்கவும்…
வசந்தோ சரிதான் நரி  வாண்டடா வந்து வண்டியில ஏறுது,இன்னைக்கு வாங்கமா போகாமாட்டின் போலஎன்று நினைத்து முடிக்கவில்லை, தேவாவிற்கு வந்த கோபத்தில் தன் டேபிளில் இருந்த பீர்பாட்டிலை எடுத்துக்கொண்டு, தன் வலது கையிலுள்ள காப்பினை மெல்ல மேலேற்றியவன்,ஒரே அடி ராபினின் மண்டையில் உடைத்துவிட்டான்…
அவ்வளவுதான் ராபின் மயங்கி சரிந்தான் ,அதற்குள் வசந்த் தேவாவின் கையை பிடித்து பரபரவென்று வெளியில் ஓடி வந்து வண்டியை எடுத்தான்… பின்னாக தேவா அமர்ந்திருந்தான்…ஊரிலில்லாத நல்ல வார்த்தையால் ராபினை அர்ச்சித்துக்கொண்டு வந்தான் தேவா.
தேவாவின் வீடுவந்ததும் மெல்ல வண்டியை அணைத்து யாருக்கும் தெரியாத வண்ணம் மெதுவாக உருட்டிக்கொண்டு கேட்டை திறந்து உள்ளே செல்ல…
அங்கு வாசலில் இருந்தா ஆளைப் பார்த்து வசந்த் திருதிரு என்று முழித்தான்.. ஏனென்றால் அங்கு உட்கார்ந்திருந்தது  ரீனா, ரீனா வசந்தி முறைத்துக் கொண்டு நிற்க மெல்ல உள்ளே செல்ல எத்தனித்த தேவாவோ தங்கையைப் பார்த்து “ரீனா குட்டி நீ என்னும் தூங்கலை” என்று அவளது கன்னத்தைப் பிடிக்க…
ஆன்,நானும் தூங்கிட்டா உனக்கு யாரு கதவை திறந்து விடுவா,என அவனது கையை தட்டி விட்டவள், ரொம்பத்தான் பாசம் பொங்கி வழியுது, இரு இரு நான் அப்பாகிடாட சொல்லி கொடுக்கிறேன்”…
தேவாவோ “தன் வாயைப் பொத்தியவன் சொல்லாத என்று சைகை செய்ய”
பொழச்சிப்போ என்றவள் தேவா உள்ளே சென்றதும், தன் வீட்டிற்கு போக திரும்பிய வசந்தை நோக்கி” டேய் நில்லுடா”என்றதும்.
வசந்த் திரும்பி பார்த்து” மீ” என்று தன் நெஞ்சில் கைவைத்துக் கேட்க..
ஆமாடா உன்னைத்தான்டா நில்லூடானு சொன்னேன் என்றவளைப்பார்த்து; வேகமாக தள்ளாடியபடியே வந்தவன் அவளது கையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்து” என்னடி நினைச்சிட்டிருக்க டால்ட்டா டப்பா,கட்டிக்கபோறவனை இப்படித்தான் மரியாதையில்லாமா பேசுவியா”
யாரு கட்டிக்கப்போறா உன்னை? இந்த குடிகாரபாபைய எனக்கு வேண்டாம் என்று முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல…
“நானா குடிக்கறேன் சொன்னேன்; உங்க அண்ணன் வாங்கி கொடுக்கிறான்; குடிக்கலைன்னா ஏதாவது சொல்லுவான் அதுதான்”
நீயா ஆசைப்பட்டு குடிச்சிட்டு எங்க அண்ணன் மேலே பழி போடாத! என்றவள் அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டிவிட்டு உள்ளே ஓடி விட்டாள்…
வசந்த மெதுவாக சிரித்தவன் “வாடி வா என்னைக்காவது என் கையில் மாட்டுவதான அப்போ பார்த்திக்குறேன்,பிசாசு எப்படி கொகாடிட்டுப்போறா பாருநல்ல வலிக்குது”  என்று தன் தலையை தடவிக்கொண்டே தனது வீட்டைநோக்கி நடந்தான்.
தேவா வீட்டில் எல்லோரும் நல்ல ஆழந்த தூக்கத்தில் இருக்கும்போது அவசர அவசரமாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் மரியதாஸ் மெதுவாக எழும்பி வந்து என்னவென்று பார்க்க அருண் நின்றிருந்தார் பதட்டமாக…
அருளைப் பார்த்ததும் பயந்து மரியதாஸ் என்ன ஏது என்று விசாரிக்காவும், அப்போதுதான் தேவா செய்துவிட்டு வந்த காரியத்தின் விளைவு அறிந்தார்…
போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நேரடியாக தெரிந்தவர்கள் மூலம்  அருளுக்கு தகவல் வந்தது, தேவாவை அரஸ்ட் பண்ண வந்துட்டிருக்காங்க என்றும் அவனை எங்கேயாவது வெளியே போக சொல்லுங்க என்றும்.
மரியதாஸிற்கு கோபம் வந்தது, அப்படியே ரெஜினாவை திரும்பிப்பார்க்க அவரோ அவசரமாக ஓடிச் சென்று தேவாவை எழுப்பினார்…அரைத்தூக்கத்திலும் போதையிலும் இருந்தவனைப் பார்த்த தாஸிற்கு அவ்வளவு மனது வலித்தது…இப்போதைக்கு எதுவும் சொல்லநேரமில்லை என்பதால் அவனை அவர்களது வீஞ்ச் எனப்படும் படகில் கடலுக்குள் அழைத்து சென்றனர்…
தொடரும்….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *