என் வஞ்சம் தனிக்க வா
என் வஞ்சம் தனிக்க வா:
அத்தியாயம்: 4
இந்த கொசுவத்தி சுரூள் நடப்பது 2017 வருடம்,..
ரமி அவ்வாறு கூறியதிலிருந்து விச்சு அவளிடம் இருந்து விளகி நின்றான் (இல்ல அப்படி நிடிச்சான், நம்பாத…).
பூக்களும் அந்த மொக்க லைன்ஸ்ஸும் இல்லாமல் ரமி நிம்மதியாய் தன் ஸ்பை வேலையை தொடர்ந்தாள்(அப்படியே விட்டா என் குருநாதருக்கு எப்படி கில்மா சீன் தர முடியும்??).
இவ்வாறாக ஓர் மாதம் கடந்த நிலையில் தான் விச்சுக்கு இந்தியா அளவில்லான யோகா நடக்கும் இடத்திலிருந்து அழைப்பிதழ் வந்திருந்தது.
நாம் இந்திய அளவில் யோகா கொண்டாட ஆரபித்ததிலிருந்து இவனுக்கு தவராமல் ஓர் அழைப்பிதழ் வந்துவிடும். காரணம் சார்வாள் முறையாக யோகாவும் சிலம்பமும் கற்றுத் தேர்ந்தவர். ஓர் பள்ளி நடத்தும் அளவிற்கு திறமை உள்ளது. ஆனால் திமிரும் இருப்பதால் இந்நாள் வரை களந்துக்கொள்ளவில்லை.
இப்போது எப்படி ரமியை கரேக்ட் செய்வதுதென்று முழித்தவனுக்கு இந்த சந்தர்ப்பம் அல்வா போன்று அமையவும் தான் செல்ல வேண்டும் என குறித்துக் கொண்டான் (ஆனா பாஸ் இது அந்த பீஸ்க்கு தெரியுமா??).
அவன் ரமியை இன்டர்காமில் அழைத்து, அவள் வந்தவுடன் ‘ரமி ‘ என்று ஆரம்பிப்பதிற்குள் அவன் முன் ஓர் கவர் வைத்து ‘சார் ஜூன் 20, 21 லீவு தர முடியுமா பீளீஸ்…?’ என்று அவள் கேட்க இவனுக்கு சப்சென்று ஆனது. ஏனெனில் இவள் முன்னால் தான் அவன் சீன் பேட நினைத்தான் போச்சே!!.
‘எதுக்கு லீவ்? எனக்கு வெளியே வேலையிருக்கு.. நீயும் வர,..’ என்றான்.
‘சார் நான் உங்க ஆபீஸ் வர்க்க்கு தான் பி.ஏ. பர்ஸனல் வர்க்க்கு இல்ல,.. ‘என்றாள்.
‘சரி எதுக்கு லீவ்?’ கேட்க
‘உண்மை சொல்லனுமா? பொய்யா?’ என கேட்க
‘பொய்யே சொல்லு’ என்க
‘எங்க அம்மாக்கு உடம்புமுடில ஹாஸ்பிடல் போகனும் ‘
‘அப்போ உண்மை?’
‘கொஞ்சம் ஹர்ட்டிங்கயிருக்கும் அப்பரம் என்ன ஃபயர் பண்ணக் கூடாது’ என்று பீடிகை போட, இவனுக்கு ஆர்வம் அதிகமாக
‘இல்ல சொல்லு’ என்று ஊக்க, அவள் தோள்களை தட்டிவிட்டு
‘உங்க மூஞ்சிய ரொம்ப நாள் பார்க்க முடில அதான்’ என்று அவனுக்கு பல்பு தர ஆத்திரமானான் விச்சு.
‘இந்த முகத்துக்கு என்ன குற? ம்ம் ., ஆல் ஓவர் த வோர்ல்ட் ஐய்யாவுக்கு எவ்ளோ டிமான் தெரியுமா?’ என்று அவன் மார் தட்ட…. அவனை பைத்தியமா இவன் என லுக்கு விட்டு…
‘அப்போ அங்க போய் இந்த படத்த ஓட்டுங்க ஏன் என் முன்னாடி வேண்ணாம்.. முடில.. சரி லீவ் மேட்டர் சார்?’ அவள் காரியமே கண்ணாக கேட்க,..
‘ஓஓ.கேஏ. கிரான்டட்ட்ட் ‘என்று இழுத்து இஷ்டமில்லாமல் பதில் சொன்னான் விச்சு.
‘அப்பாடி தேங்ஸ் சார்’ என்று சிட்டாக மறைந்து விட்டாள் ரமி.
இப்படியாக ஜூன் 21யும் வந்தது ,.
அன்று லக்னௌவில் உள்ள ராமாபாய் ராலே மைதானத்தில் பிரம்மான்டமாக ஒருசேர யோகா பயிர்ச்சி நடைப்பெற்றது.
இதில் நாட்டின் பிரதமர் யோகா செய்ய அவரின் பக்கத்திலேயே நம்ம விச்சு வி.வி.ஐ.பிஸ் நிற்க்கும் இடத்தில் நின்று திருத்தமாக ஆசனங்கள் செய்ய கேமராக்கள் அவனை சுத்துபோட்டன., இங்கோ தொலைக்காட்சியில் அவன்தான் ஹாட் டாப்பிக்…
‘நாதன் குரூப்ஸ்ஸின் வாருசும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலருமான திரு. காசி விஸ்வநாதன் அவர்கள் இந்த யோகா பயிர்ச்சிக்கு வருகை தந்து இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார் ‘ என்று தமிழ் செய்தி சேனல்கள் அனைத்திலும் விச்சு தான் டாக்,..
இதைப் பார்த்த பத்தூ பாட்டிக்கு அத்தனை பெருமை. (இத்தனைக்கும் இந்த யோகாலாம் நம்ம ஸ்டேடஸ்க்கு ஒத்து வராதுனு அவ்ளோ சீன் ஓட்டினாங்க… என்ன பேசினாலும் நம்ம விச்சு தான் நான் கத்துப்பேன்னு கத்துகிட்டான்,.. )
பயிர்ச்சியேல்லாம் முடிந்ததும் அங்கு இருந்தவர்களுக்கு பானம் வழங்கப்பட்டது. அப்போது இவனை பார்த்த ஓர் வெளிநாட்டு அழகிய பொண் ‘ஹாய் விஷ் ஹௌ ஆர் யூ ?’ என கேட்க
விச்சு திரும்பி பார்த்து ‘ஹாய் லியோ அம் ஃபைன் ஹௌ ஆர் யூ ?’ என திரும்பி நலம் விசாரித்து கைக் குளுக்கினர். இதை சிறிது தூரம் நின்று பார்த்த ஓர் உருவத்தின் காதிலிருந்து புகை வந்துக் கொண்டிருந்தது, மேலும் இவர்களின் அருகில் அது நகர்ந்து வந்து மறைவாக நின்றுக்கொண்டது.
இங்கோ லியோ ‘விஷ் வாட் அபௌட் மை அன் அதர்ஸ் லவ் ப்ரோபோஸல்ஸ்?’ என்று கேட்க இதை கேட்ட அந்த உருவத்திற்கு ஷாகோ ஷாக்.
அதற்கு வச்சுவோ ‘நோ’ என்றான் சிம்பிலாக. அந்த உருவத்திற்கு அப்படி ஓர் ஆனந்தம்.
‘அப்போ தான் நீ பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணணும்னு சொன்ன ஆனா இப்போ ஏன்?’ என்று ஆங்கிலத்தில் வினவ அந்த உருவமும் ஆவளாய் கேட்க
‘ம்ம்ம் ஐ லவ் அனதர் ‘ என்றான் விச்சு,.. இப்போது அந்த உருவத்திற்கு கடுப்பு உச்சத்தில் இருக்க
‘மே ஐ நோ ஹர் நேம்?’ என லியோ வினவ
‘எஸ் இட்ஸ் மை பி.ஏ. ரம்யா’ என்று கண்களில் காதலோடு,.. பின்னாடி நின்ற ரம்யாவை இழுத்து அனைத்து கண்ணத்தில் முத்தம் வைத்து விடுத்தான்.
கலவையான உணர்வுகளில் தத்தளித்தாள் ரம்யா,.. (எஸ் அந்த உருவம் ரம்யா தான்).
அத்தோடு பெரும் அதிச்சியும் கொண்டாள்….
வருவான்.,.
tq guys for ur support and continue the same… comment ur thoughts…
