என் வஞ்சம் தனிக்க வா

This entry is part 16 of 17 in the series என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா

என் வஞ்சம் தனிக்க வா :

அத்தியாயம்  : 16 

அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் காதல் நிலா அவர்கள் வாழ்க்கை எனும் வானில் சுழன்று கொண்டு வந்தது. காதல் என்னும் அழகிய உணர்வு மெய்சிலிர்க்க தங்கள் இருவரின் இணையும் இருவரும் பேணிக் காத்தனர். ஷீலா அவனுடன் காதல் வயப்பட்ட அடுத்த மாதத்திலேயே அவனுடைய வீட்டிற்கு குடிபெயர்ந்தாள். 


ராமு அங்கே அவனுக்கென்று ஒரு வில்லா வாங்கி இருந்தான். அவளின் அன்னையிடம் ஆபிஸ் ஹாஸ்டலில் தங்கிக்கொள்வதாக பொய்யுரைத்தாள். அவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் தனி தனி அறைதான். தினம் தினம் அவள் காதல் மீட்டர் ஏறியது. அவன்மீது அத்துணை ஆசை, அவனையே போர்த்திக் கொள்ள ஆசைதான் ஆனால் அதற்கான காலம் கனியவில்லையே அதனால்  அவன் அணிந்த சட்டைகளை களவாடி போட்டுக் கொள்வாள். 

அது அவளுக்கு மிகவும் பிடித்த பழக்கமானது!! ஒருகட்டத்தில் அவளுக்கு அது மிகவும் பிடித்த ஆடையும் ஆனது. இது ராமுவிற்கும் இது தெரியும்!! ஆனால் தெரியாதது போலவே கடந்து விடுவான். 

ஒருமுறை அவன் வீட்டில் இல்லாத சமயம் அவனது ஆடையை அணிந்து கொண்டு, தன் இடையளவு கூந்தளை விரித்துவிட்டு கருப்பு கண்ணாடி அணிந்து, கண்ணாடி முன் நின்று அவளுக்கு பிடித்த பாட்டு கேட்டு நடனமாடிக் கொண்டு இருந்தாள். 

ராமு அவனிடம் இருக்கும் சாவி மூலம் கதவை திறந்து உள்ளே வந்தவன் பாட்டு சத்தம் கேட்டு பூனைபோல் மெதுவாக பாட்டு வந்த அறையை நோக்கி சென்றான். அங்கு அவன் கண்டது அவனது சட்டையை அணிந்து அழகாக நடனமாடிக் கொண்டிருந்த அவனது கண்ணம்மாவை தான். ஆம்!! ராமு ‘கண்ணம்மா’ என்று தான் ஷீலாவை அழைப்பான். 

அவளது ஒவ்வொரு அசைவுக்கும் இங்க ராமுவின் காதல் மனம் துள்ளி குதித்தது. அவளது ஒவ்வொரு  இடை அசைவிற்கும் இவனது உணர்வுகள் கொப்பளிக்க ஆரம்பித்தது. ஆண்மை கொதித்த நிலையில் இருந்தான் ராம். யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் தோன்ற வாயிலை பார்த்தவள் சிலையென சமைந்தாள். அவள் சிறிதும் ராமுவை அங்கு, அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. 

பொதுவாக அவளுக்கு விடுமுறை இருக்கும் நாட்களிலும் ராமு அலுவலகம் செல்வான். அரைநாள் வேலை செய்து வீடு திரும்புவான். ஆனால் இன்றோ அவனுக்கு எந்த வேலையும் இல்லாதால் வீட்டிற்கு சென்று தன் காதலியுடன் நேரம் செலவிட எண்ணினான். ஆனால் அவனுக்கோ ஃபுல் மீல்ஸ் விருந்தாக படைக்கப்பட்டது. 


ஃப்ரீஸ் ஆகி நின்றவளின் அருகில் சென்றவன் அவளது இடை மீது தன் ஒரு கரம் வைத்து மறு கரத்தை அவள் கருத்தோடு கைகோர்த்து ஆங்கில பானியில் சால்சா நடனம் இசைக்கேற்ப ஆடினான். அவளோ அவன் கைகளில் உருகும் மெழுகாய் அவன் அசைவிற்கேற்ப, இசைக்கேற்ப அழகாக நடனம் ஆடினாள். 

இருவரும் அந்தப் பாடல் முடியும் வரை தங்களின் இமைகளை மூடவும் இல்லை, ஒருவரை விட்டு ஒருவர் பார்வை விலகவுமில்லை. பார்வையின் மூலம் ஒருவர் மற்றொருவரை ஊடுருவி சென்று கொண்டிருந்தனர். பாடல் முடியவும் சட்டென்று அவளது இடைப்பற்றி தலையை அவனை நோக்கி நிமிர வைத்து அவளது இதழை மெல்ல அணைத்தான். இதுதான் அவளுக்கும் அவனுக்கும் முதல் முத்தம். 

முதல் முத்தமொரு கவிதை என்பது யாவருக்கும் தெரியும். அது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பகுதி. பிழைகள் இருக்கலாம் ஆனால் காதல் கொண்டு தருகின்ற முதல் முத்தம் அப்பிழைகளை பார்க்காது அவர்களின் மனதினை தான் பார்க்கும். முதல் முத்தம் கொடுத்தவர் மறக்கலாம்  ஆனால் அதை பெற்றவர் மறக்கவே முடியாது. அவளது இதயம் என்னும் பேழையுள் அந்த நினைவுகள் அழகாக பதிந்து விட்டது. பொக்கிஷமாய் அடைத்துவைத்த விட்டாள். 

அவளுக்கு தெரியாது பின்னாள்களில் இந்த பொக்கிஷமான நினைவுகளே அவளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாக மாறி அவளது இதயத்தை அரித்துக் கொண்டிருக்கும் என்று. 

அம்முத்தம் நீண்டுகொண்டே சென்றது ஆனால் எல்லை தாண்டவில்லை. இருவரும் மனம் நோகாமல் மெல்ல உதடுகளை பிரித்தனர். மனமோ இந்த ஒன்று மட்டும்தானா இன்னொன்றும் வேண்டுமே என்று சண்டிதனம் செய்ய அதனைத் தலையில் தட்டி அமர வைத்தனர். 

மெல்ல சூழ்நிலையை மாற்ற ராமுதான் முதலில் பேசினான். “ஏய்!! கண்ணம்மா என்னடா என் சட்டை போட்டு இருக்க?” என்று தெரியாதவன் போல் கேட்க “அதுவா என்னோட டிரஸ் எல்லாம் துவைக்க போட்டு இருக்கேனா, வேற டிரஸ் இல்லையா, உன்னோட சட்டையை எடுத்து மாட்டிக்கிட்டேன். ஏன் போட்டுக்க கூடாதா?” என்று அவள் ராகமாய் ஏற்றி இறக்கி கேட்டாள். அதில் அவள் மீது கொண்ட மயக்கம் இன்னும் அதிகமானது. அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “என்னுடையது எல்லாமே, உயிர் முதற்கொண்டு உனக்கு தான்டா கண்ணம்மா!” என்று கூறினான். அதில் அழகாக வெட்கப்பட்டு “ம்ஹூம் ?? ஓ.கே.” என்று தலையசைத்தாள். அன்றைய நாளும் அவர்களது காதல் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாள் ஆனது. 

இப்படியாக ஐந்து மாதங்கள் கடந்திட ஆறாவது மாத்தின் இறுதியில் ஷீலாவுக்குள் ஓர் பயம் மூண்டது, இதுவரை ராமு ஒரு பணக்காரன் என்பது மட்டும் தெரிந்ததே தவிர அவனது பெற்றோர் பற்றி ஏதும் தெரியவில்லை. 

அவள் மட்டும் என்ன அவளைப்பற்றி சொன்னால் ?? இல்லை என்ன சொல்லுவாள்?? தன் தாயை விட்டு தன் தந்தை பிரிந்தார் என்பதையா?? அவர் பிரிந்தபின் குடும்பம் நிலைகுலைந்து என்பதையா?? இல்லை தங்கள் குடும்பத்திற்கு இருவர் இழைத்த துரோகத்தை பற்றியா?? எதை கூறுவாள்?? 

ஆனாலும் அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே, இன்று கேட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். அந்த முடிவு அவளது காதல் வாழ்வினை சிதைக்கப் போகிறது என்பதை அந்தப் பேதைக்கு யார் கூறுவார்??( மீ நோ!!) 

அந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையிலேயே உணவு தயாரித்து ராமுவை எழுப்பினாள் ஷீலா. மெல்ல எழுந்த ராமு தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வரவும் இருவரும் ஒன்றாக உணவு அருந்தினர். பின்னர் ஷீலா மெல்ல ராமுவிடம் “ராம் கண்ணா நீங்க உங்க அம்மா அப்பா பத்தி எதுவுமே சொல்லலையே??” என்று அவள் கேட்க அவளின் புறமாக அவன்  உட்கார்ந்து “என்ன தெரியனும் என்னோட கண்ணம்மாக்கு?? நானும் ரெண்டு நாளா பாக்குறேன் நீ நார்மலா இல்ல!! இதுதான் பிரச்சனையா என் ஃபேமிலி பேக்ரவுண்ட் தெரிஞ்சுக்கணுமா??” என்று அவன் கேட்க பதற்றத்துடன் “உன்னோட சொத்து பத்திலாம் எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு கேட்கல உன்னோட அப்பா அம்மா பத்தி தான் தெரிஞ்சிக்கணும்!” என்று அவள் கூற மெல்ல அவளது கன்னங்களை கில்லி முத்தமிட்டான். 

புன்னகையுடன் “உன்னபத்தி தெரியும்டா சொல்றேன்!” என்ற கூற ஆரம்பித்தான். அவனது வாயாலேயே அவனது அழகிய நாட்களை இழக்கப் போகிறான் என்பது தெரியவில்லை அந்த பைத்தியத்திற்கு. மெல்ல “எங்க அப்பா பேரு செல்வநாதன், அம்மா பானுமதி, ஒரு தங்கச்சி பத்மலோசனி ப்ரியானு கூப்பிடுவோம். பெரிப்பா பத்மநாதன், பெரியம்மா அமுதவல்லி சோ ஸ்வீட் கேரக்டர், அவங்க பையன் தான் விஸ்வநாதன், அப்புறம் தாத்தா பாட்டி..” என்று இழுத்து கேள்வியாக நிற்க.. இறுகிய முகத்துடன், “அரங்கநாதன்-பத்மாவதி” என்று இவள் கூறி முடித்தாள். 

அவனோ “ஆமா எப்படி தெரியும்?” என்ற அவன் ஆச்சரியமாக கேட்க “அப்போ நீங்க நாதன் குரூப்ஸோட நெக்ஸ்ட் ஜென்னா??” என்று இவள் உணர்ச்சி மருத்த குரலில் கேட்டாள். அவனுக்கோ அவளது மாற்றங்கள் யோசனையை கொடுக்க “ஆம்” என்று தலையை அசைத்தான். அவன் ‘ஆம்’ என்று சொல்லி முடிக்கவும் அவள் கண்களிலிருந்து கோடாக கண்ணீர் வழியாகும் சரியாக இருந்தது. ஏதும் பேசாமல் அவள் அறைக்கு சென்றுவிட்டாள். 


திடீரென்று அவள் இப்படி நடக்க “என்னாச்சு இவளுக்கு?” என்ற யோசனையுடன் அவள் பின்னேயே போய் கதவை தட்ட அவளோ “ப்ளீஸ்!! என்ன டிஸ்டர்ப் பண்ணாத ராமநாதன்!!” என்று கூறினாள். அவள் ஒரு போதும் அவனது முழு பெயரை கூற மாட்டாள். கோபித்தால் கூட ராமு என்று தான் கத்துவாள். இந்த அண்ணியம் அவனுக்குள் ஏதோ தவறு என்று உணர்த்தியது. ஏதும் பேசாமல் தன் அறையினுள் நுழைந்து கொண்டான். 

ஷீலாவோ அவள் அறையில் ‘தான் எப்படி ராமுவிடம் மனதை தொலைத்தோம்?’ ‘எப்படி அவன் இல்லாமல் வாழ போகிறோம்?’ என்று தெரியாமல் ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கரைந்தாள். ஒருபுறம் அவள் வாழ்நாள் முழுக்க சாதிக்க வேண்டிய லட்சியம் மறுபுறமோ  வாழ்க்கையிலேயே அவளை இந்த ஐந்து மாதகாலமேனும் உயிர்ப்புடன் வைத்திருந்த காதல். அவளின் ஒரு மனதோ “ச்சீ!!  எப்படி நீ அவளோட பேர்ன்ன காதலிச்ச?” என்று அவளை அசிங்கப்படுத்த, மறுமனமோ “காதல் யார் மேல வேணாலும் வரலாம் அவன் யாருனு தெரியாமதான காதலிச்ச இவன் நல்லவனா தான் இருக்கிறான்” என்று அவள் காதலுக்காக போராடியது. 

இரு மனங்களும் மாறி மாறி அவளுக்கு குழப்பத்தை உண்டாக்க இறுதியில் அவளது வைராக்கியமும் வஞ்சமும் ஜெயித்தது. ஆனால் தோற்கடிக்கப்பட்ட காதல் மனமோ அவளை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. தன் மனம் ஆறும் வரை அழுதாள். அவள் மதியம் சாப்பிட வரவில்லை இவனும் கதவை தட்டி ஓய்ந்து விட்டான். இரவிலும் வெளியே வரவில்லை. ஆனால் கதவைத் தட்டும் பொழுது மட்டும் அதே வாசகத்தை மீண்டும் மீண்டும் கூறினாள். அவனும் அலட்டிக்கொள்ளவில்லை. 

அடுத்த நாள் காலையில் வீங்கிய கண்களுடன் அவளது அறையிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்தாள். அவளை பார்த்தாலே தெரிந்து கொண்டான் நேற்று முழுவதும் அழுதுயிருக்கிறாள் என்று. 

அவளிடம் பேச முற்பட அவனை ஏறிட்டுப் பார்த்து “நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்!” என்று கூறினாள். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்ன பிரேக் அப்பா?? எதுக்கு??” என்று கேட்க அவன் கண்களை தீர்க்கமாக பார்த்து “நான் இந்த உலகத்தையே ஒருதங்களை வெறுத்து அவங்களோட இரத்தத்தைக் குடிக்க ஆசைப்படுறேன் அப்படினா அது உங்க தாத்தா பாட்டி அரங்கநாதன் பத்மாவதிதான்!” என்று அவள் கூறி முடிக்கவில்லை அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் ராமு. “என்னடி சொன்ன என் தாத்தா பாட்டியோட ரத்தத்தை நீ குடிப்பியா? அதுக்கு நீ உயிரோட இருக்கணும்!” என்று அவள் என் கழுத்தை நெறிக்க போக அவள் மெல்ல பின்னே நகர்ந்து அவன் கழுத்தில் தன் கரத்தை மூலம் கற்ற தாக்குதலை ஒன்று வைத்தாள். அவ்வளவுதான் அங்கேயே மயங்கி விழுந்தான். 

பின்பு ஷீலா அவனது சட்டைகளையும் ஒரு பெட்டியில் அடுக்கி அவள் ஏற்கனவே பேக் செய்த அவளது பெட்டியையும் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை ஒரு முறை நன்றாக பார்த்து விட்டு அவளது ராமு கண்ணனையும் கண்களில் நிரப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். 

இங்கு சென்னைக்கு வந்ததும் அவள் குடும்பத்தாரால் ஏற்கனவே நடத்த பட்ட ‘ஏ பி சொல்யூஸஷ்ன்ஸை’ இவள் மேலும் விரிவு செய்ய அவர்களிடம் இருந்த சிறிது பணம் மற்றும் பேங்கில் இருந்து வாங்கிய கடன் மூலமும் அவளுடைய உற்ற நண்பன் வாசுதேவன் அவனால் முடிந்த முதல் கொண்டும் சற்று விரிவாக்கம் செய்திவள் புதுபித்தாள். 

அதன்பின்  முதலில் சிறிது தடுமாறினாலும் அவளது நிர்வாகத் திறமையும் அவளது கண்டிப்பும் வாசுதேவனின் பிசினஸ் மேனேஜ்மென்டும் அவளது கம்பெனியை  ஒரு வருடத்திற்குள் முன்பு இருந்ததை விட பன்மடங்கு உயர்த்தி தற்போது கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கும் நாதன் குரூப்ஸ்க்கே சவால் விடும் நிலையில் இருக்கிறாள். 

பழையதை நினைத்து பார்த்ததில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள். வாசுதேவ் வந்து அவளை எழுப்ப மெல்ல அவனை ஏறிட்டுப் பார்த்து கசந்த புன்னகை ஒன்று சிந்தினாள். 

அவனுக்கு தான் அவளது கடந்தகாலம் தெரியுமே! அவளுடன் கல்லூரி காலங்களில் படைத்தவன் ஆயிற்றே! ராமையும் அவன் மீது ஷீலா கொண்ட காதலும் தெரியும்!! அவளின் தோளை அழுத்திப்பற்றி ஆறுதல் கூறினான். கண்களை இறுக்கமாக துடைத்துக்கொண்டு “கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்!” என்று கூற “நாம மனுசங்க தாண்டி!! ஃபீலிங் வரும் பொழுது அதை வெளிக்காட்ட வேண்ணும்” என்று கூறி அவளை தேற்றினான். அவள் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்ட அடுத்து அவன் நகர்த்த நகர்த்த வேண்டிய காய்களை பற்றி கூறிக் கொண்டிருந்தாள். 

அதேசமயம் அங்கே பத்தூவின் அறையில் அவளுக்கு மிகவும் விசுவாசமான கூலி ஆலிடம் “நான் உனக்கு அனுப்பின போட்டோ வந்துச்சு தானே?” என்று வினவ “வந்திருச்சு மேடம்! என்ன பண்ணனும்?” என்று கேட்க.. 
அதற்கு பத்தூவோ “வழக்கமா பண்ற மாறி ஆக்சிடென்ட்! பட் அவ முகம் சிதைச்சிடு” என்று கூறினாள். 
அந்தக் அடியாலும் “ஓ.கே. மேடம்!” என்று போனை வைத்து விட்டான். அவன் பத்மா அனுப்பிய போட்டோவை மறுபடியும் எடுத்து பார்க்க அதில் அதே நிமிர்வுபுடனும் திமிருடனும் சிரித்துக்கொண்டிருந்தாள் ஷீலா. 

பத்தூவின் சதிவேலை வேலை செய்யுமா?? 


வருவான்…


Hi friends!! Plz do support my story by your likes and comments… That will help me to continue writing with enthusiasm…

ஹாய் சகோஸ்!! தங்களின் ஆதரவை எனக்கு தொடர்ந்து கீழே உள்ள லைக்ஸ் மூலமும் கமன்ட்ஸ் மூலமும் தரவும். இது என்னை உத்வேகத்துடன் எழுத தூண்டும்.!!

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *