என் மன்னனோ! கண்ணனோ
7. என் மன்னனோ! கண்ணனோ
முத்தம் கொடுக்க ஆரம்பித்து நொடிகள் நிமிஷங்கள் ஆனது.. அவனது சூடான எச்சில் கலந்த வன்முத்தத்தை மெல்லிய பூங்கொடியாள் அவளால் தாங்க முடியாமல் அவன் மீதே துவண்டு விழுந்தாள்.. பெண்ணவள் மயங்கி சரிந்ததும் தான் செய்த காரியம் என்னவென்பது அவனது அறிவுக்கு எட்டியது.
“ச்சே முட்டாள்டா நீ” என அவளை பூ போல அள்ளிக்கொண்டு பக்கத்தில் இருந்த ஆற்றுக்கு சென்றான்.. பக்கத்தில் காட்டு வன தேவதை சிலை இருந்தது.. அங்கே படுக்க வைத்து தண்ணீரை எடுத்து வந்து பெண்ணவளின் முகத்தில் தெளிக்க கண்திறக்கவில்லை தேன் மதுரா.. அவள் கண்விழிக்காதது கண்டு கொஞ்சம் அவன் மனதில் பயம் எட்டித்தான் பார்த்தது.. யோசிக்காமல் கண்மூடிக்கொண்டு தன் பருத்த உதட்டை அவளின் தேன் தரும் உதட்டில் பதித்து தன் மூச்சு காற்றை அவளுக்குள் செலுத்தினான் மன்னவன்.
இப்போது அவளுக்கு உணர்வுகள் மெல்ல வர துவங்க கண் திறந்தவள்.. ஆழந்து தன் உயிரினுள் புகுந்து கொள்ளும் அளவிற்கு அவன் தன் உதட்டில் பதித்திருப்பது கண்டு அவளும் அவன் கொடுக்கும் முத்தத்துக்கு மயங்கிச் இந்த நிமிஷம் நீளாதோ என்று எண்ணத் துவங்கினாள் தேவ் கண்ணனின் தேன் மதுரா.
தேவ் உயிர் மூச்சை அவனால் முடித்த மட்டும் செலுத்தி விட்டோம் என கண்விழித்து அவள் முகத்தை இப்போது கண்திறந்திருப்பாளா என நேருக்கு நேராக கொஞ்சம் பதட்டத்துடன் அவள் முகம் பார்த்தான்.
அவளோ அவனை பார்த்து அஞ்சி நடுங்குவது போல கண்ணை திறந்து திறந்து பட்டாம்பூச்சி இறக்கையை படப்படப்பது போல கண்ணை சிமிட்டி சிமிட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹே ஹனி சாரிடி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என அவள்மீது படர்ந்திருந்தவன் எழுந்து அழுந்த தலையை கோதிக்கொண்டான் அவள் கண்விழித்து விட்டாள் என மன நிம்மதியுடன்.
தேன் மதுரா எழுந்து நின்று “யோவ் தனியா வர பொண்ணுகிட்ட இப்டி தான் உங்க ஊர்ல காவாளித்தனமா நடந்துப்பாங்களா” என அவனை காளியாய் முறைத்து பேசினாள்.
“எங்க ஊர்ல லவ் பண்ணுற பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாம் ஹனி” என அவள் பக்கம் செல்ல..
“யோவ் மரியாதை தள்ளி நின்று பேசு.. இத்த முத்த கித்தம் கொடுக்கற வேலையெல்லாம் உங்க ஊர் பக்கம் வைச்சுக்க” என விரலை நீட்டி பேசிக்கொண்டே பின்னே நகர்ந்து கொண்டே இருந்தாள்.
“ரொம்ப தைரியசாலி போல அன்னிக்கு பேசின.. இப்ப பேசு புள்ள.. நான் கேட்குறேன்” என சிரித்துக்கொண்டே அவள் கையை பிடித்து வளைத்து தன் கைவளைவில் புறாக்குஞ்சைப்போல வைத்துக் “ஏய் ஒரு ஐந்து நிமிஷம் நான் சொல்றது கேளு புள்ள” என அவள் காதோரம் மீசையை தூரிகை ஆக்கி உரசினான்.
“சீ.சீக்கிரம் சொல்லுங்க.. இப்டி என்னை புடிச்சாதான் உங்களுக்கு பேச வருமா.. என்ன விட்டு பேசலாம்ல” என கிள்ளை மொழியில் பேசினாள் மங்கை.
“உன்னை எனக்குள்ள பொத்தி வச்சுக்க தோணுதுடி.. நான் வந்தனைக்கே உன்ன பார்த்த நிமிஷம் முதல் என் மனசுகுள்ள வந்துட்டடி.. நான் உன்ன என் பெண்சாதியா ஆகிக்கபோறேன்.. நீ இந்த நிமிஷம் ஓ.கே. சொல்லு.. எங்க ஊருக்கு தூக்கிட்டு போயி தாலி கட்டுறேன்” என அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.. இவளுக்கோ நடப்பது கனவா நனவா என்றிருந்தது.. எங்கே மாமனின் ஆட்கள் இந்தபக்கம் வந்து விடுவார்களே என அச்சம் அவள் மனதில் துளிர் விடத் துவங்கியது.. தேவ் காதல் மொழியும் அவளை மயங்கி சித்தம் கொள்ள செய்தது.. என்ன செய்வாள் பெண்.. ஒரு பக்கம் அவள் மலை ஜாதி பெண்.. இன்னொரு பக்கம் அவள் மனதை கொள்ளை கொண்ட கண்ணன்.. தராசு போல எந்த பக்கம் சாய்வது என மனதிற்குள் போராடிக்கொண்டிருந்தாள் தேன் மதுரா.
“ஏ புள்ள.. சொல்லு! என்ன பிடிச்சிருக்கா!” என அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அதில் முத்தமும் வைத்தான்.. அவன் செய்யும் குறும்பும் அவளுக்கு பிடித்திருந்தது.. அவன் கேட்கும் விதமும் பிடித்தது. அவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் மயங்கி அவன் கையில் நெளிந்து கொண்டிருந்தாள்..
இறுதியில் அவளின் காதல் மனது வென்றது..
“முதல்ல என்னை வி.விடுங்க நா.நான் சொல்றேன்.. இப்டி என்னை இறுக்கி பிடிச்சிக்கிட்டா எப்டி பதில் சொல்வேன்” என வாய் திறந்து கேட்டே விட்டாள்..
“ஏய் நான் மெதுவாதான்டி பிடிச்சிருக்கேன்.. அவன் கைகள் அவளின் இடையை சோதித்துக்கொண்டுதான் இருந்தது.. எந்த பெண்ணும் இவ்ளோ காதல் இல்லாமல் அணைச்சு பிடிக்க விடமாட்டா என்பதை அவளை அணைத்த உடனே தெரிந்து கொண்டான்.. அவள் வாயிலிருந்து காதலிக்குறேன்” என்ற மந்திரத்தை கேட்க சுவாமிகளிடம் பேச காத்திருக்கும் அடியேன் போல காத்திருந்தான்.
“இல்ல.. என்ன விடுங்க நான் பேசுறேன்” இம்முறை அவனிடமிருந்து திமிற சற்றே அவன் பிடியை தளர விட்டான்.. அவன் பிடி தளர்ந்ததும் அவள் விலகி.. “இந்த மீசையை வச்சு என்னை மயக்கிபுட்டயா..” என அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.
“உடனே காதலுக்கு ஓ.கே சொல்லிட்டா” ஏனா பிளாஸ்பேக் எனக்கு இழுக்கு பிடிக்காது.. அதான் சீக்கிரம் தேன் மதுரா தேவ் கண்ணனின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டாள்..
“புள்ள இந்த மீசை உனக்கு பிடிச்சிருக்கா” என மீசையை தடவிக் டான்ஸ் ஆடினான்
“ஆமாடா கருவாயா.. எனக்கு மீசையை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என அவன் மார்பில் தஞ்சம் கொண்டாள்.. மாலை மங்கி இருள் சூழ நேரம் ஆனது கூட தெரியாமல் இருவரும் கானகத்தில் காதல் கிளிகளாக சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்..
தேன் மதுராவின் தாத்தாவிற்கோ இன்னும் தண்ணீர் எடுக்க போன பேத்தியை காணல.. ஏதோ மிருகம் அவள ஏதாவது செய்திருக்குமோ என பயந்து மதுராவை தேடி வந்தார்.
இப்போதும் தேவ் அவளை அணைப்பிலேயே வைத்துக்கொண்டான்.. “இப்பவே செத்துபோனா கூட நான் கவலைபட மாட்டேன்டி.. ஒரு இங்கிலீங்ஸ் கிஸ் கொடுடி..” அவள் கன்னத்தில் இவன் கன்னம் வைத்து தேய்த்தான்.
“அதான் எவ்ளோ கொடுத்தீங்கள்ள..”
“அது.அது. என்னை பிடிச்சிருக்கானு சொல்றதுக்கு முன்ன.. இப்ப பிடிச்சிருக்கு சொல்லிட்ட.. இப்ப ஒரு கிஸ் வேணும்டி ப்ளீஸ்” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டான்..
அவளுக்கு ஒரு அச்சம் இருந்தது.. எங்கே சோளியை முடித்து விட்டு தன்னை கைகழுவி விட்டு போய்விடுவானோ என்று அவள் மனதிற்கு கிளி பரவியது.
“என்னடி பேசாம இருக்க.”
“ இல்ல என்னை ஏமாத்திட மாட்டிங்களே” என நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னை நீ இப்டி கேட்குறேன்.. என் உசிரு இருக்க வரை உன்னை மறக்கமாட்டேன்டி.. இந்த காட்டு தேவதை முன்னால சத்தியம் பண்ணுறேன் புள்ள” என நிலத்தில் அடித்து சத்தியம் செய்தான்.
அதன் பின்பு கேட்க வேண்டுமா? தேவ் சத்தியம் செய்தவுடன் இதழ் முத்தம் கொடுக்க தெரியாமல் தடுமாறினாள்.. அவள் தடுமாற்றத்தை சரிசெய்து இவன் அந்த பணியை எடுத்துக்கொண்டான்.. அவன் கைகளோ நாபி புள்ளியை வட்டமிட்டது.. அவன் அவள் கழுத்தில் முத்தம் வைத்தான்.. இருள் சூழ்ந்து கொண்டது.. அந்த இருள் அவர்களுக்கு சாதகமாகி போனது.. மெல்ல மேலாடையில் கை வைத்தான்.. “வேண்டாம்” என்று தலையசைத்தாள்.. “வேண்டும்” என தலையசைத்தான்.. இறுதியில் வென்றது தேவ் கண்ணனே.. அவன் அவள் கண்களை பார்த்து கல்யாணத்துக்கு முன்னால கொஞ்சமா எடுத்துக்குறேன்.. தாலி கட்டிட்டு முழுசா எடுத்துக்குறேன் என அவளை நிலத்தில் மெல்ல சரித்தான்..
அவள் மேலாடை வனதேவதையின் முன் மரத்தில் தொங்கி மறைத்து விட்டது.. இப்போது ரவிக்கையுடன் அவன் மார்பின் மஞ்சத்தில் படுத்திருந்தாள்.. “என்னங்க என்னை காணோம்னு தாத்தா தேடுவாரு நான் போகட்டுமா..”
“ உங்க தாத்தாகிட்ட ஏதாவது பொய் சொல்லுடி” என பசக்கென்று இதழில் முத்தமிட்டான்.. நெற்றயில் முத்தம்.. இருகண்களில் முத்தம், இரு கன்னத்தையும் கடித்து ஆப்பிள் போல சாப்பிட்டான்..
“யோவ் வலிக்குய்யா.. மெதுவா முத்தம் கொடுக்க தெரியாதா உனக்கு? இப்டி மெதுவா முத்தம் கொடுக்கணும்” என அவன் கன்னத்தில் பூவை ஒற்றி எடுப்பது போல முத்தம் கொடுத்தாள்.
“போடி இவளே ஆசை தீர உன் உதட்டுல குடியிருக்கணும்.. உனக்குள்ள இருக்க தேனை உறிஞ்சி குடிக்கணும்.. உன்ன அணுஅணுவா இரசிக்கணும்.. ஆசை திர ஆராதிக்கணும் என மோகத்துடன் பேசிக்கொண்டே மேடுபள்ளங்களில் ஏறி விளையாடினான்..
“யோவ் ஒருநாளுல உனக்கு இவ்ளோ இடம் தரேன் நம்மோட காதலுக்கு ஆயுசு குறைவா இருக்குமோ எனக்கு பயமா இருக்கு” என அவனை இறுக கட்டிக்கொண்டு “என்ன இப்பவே எடுத்துக்கய்யா” என ஆடைகளை தளர்த்தினாள்.
கலைத்த ஆடைகளை அவள் மேல் போட்டு விட்டு.. “நாம நூறு வருஷம் வாழ்வோம்டி.. நம்ம காதலுக்கு ஆயுசு கெட்டி” என அவளை இப்போது இவன் அணைத்துக்கொண்டு அவளின் அபாய வளைவில் முகம் முட்டி குழந்தையாய் அவளுக்கு சோதனை கொடுத்தான்.. அதை சுகமாக ஏற்றுக்கொண்டாள்.. இங்க முத்தம் கொடுத்துக்கவா.. அங்க கொடுத்துக்கவா என அவளின் உடலில் முத்தம் கொடுக்காத இடம் இல்ல.. போதும்யா.. என அவள் சலித்துக்கொள்ளும் அளவிற்கு அவளிடம் முத்தம் கொடுத்தபடி இருந்தான்.
“ஏண்டி இந்த முத்தத்துக்கே இப்டி சொன்னா முத ராத்திரில நான் கொடுக்கும் முத்தத்த எப்டி தாங்குவ” என அவள் காதில் அந்தரங்கம் பேசினான்
“சீ போயா” என அவனை விட்டு எழுந்திரிக்க பார்க்க.. விடுவேனா என்று இன்னும் ஐஞ்சு நிமிஷம் நானே உன்ன விட்ல கொண்டு வந்து விடுறேன்
“என்ன சொல்லி விடுவீரு..மீசக்காரரு..”
“ஹா புலி வந்துருச்சு நான் தான் மரத்து மேல ஏத்தி வச்சிருந்தேன் சொல்வேன்டி என் ஜிலுக்கு” என அவள் நெற்றியில் முட்டினான்.
“யோவ் நீ பெரிய கில்லாடியா” என அவன் மீசை முடியை திருகி அவன் கருத்த இதழில் ஆசையாக முத்தமிட்டுக்கொண்டு அவனை விடாமல் இறுக்கிக்கொண்டாள்.
“என்னமோ எனக்கு பயமா இருக்குய்யா.. உனக்கு தெரியுமா? எனக்கு ஒரு உதவாகரை மாமன் இருக்கா.. காட்டுல மரம் கடத்தி அராசாங்கத்துக்கு தெரியாம வேலை பண்ணுறான்.. அவன் நீ புடிச்சு உள்ள போடுய்யா நாம சுதந்திரமா இருக்கலாம்” என அணைத்தப்படி பேசினாள்.
“சேது உன் மாமனா” என அவன் குரல் இறுகியது.. கண்கள் சிவந்து போனது.
“ஒரு மரத்து ஈசியா வெட்டிப்புடலாம்டி.. ஆனா அதே புதுசா வளர்க்க முடியுமா? அவன சீக்கிரம் புடிக்கிறேன்” என மீசையை தடவிக்கொண்டான்.
8. என் மன்னனோ! கண்ணனோ
“யோவ் பார்த்துயா.. அந்த ஆளு ரொம்ப மோசமானவன்..” “என அவனை உசார் படுத்தினாள்.
“ம்ம் உன் மாமன் 10 பேர ஒரே நேரத்துல அடிப்பேன்டி.. அந்த அளவு உடம்புல தெம்பு இருக்கு.. அதே நேரம் உனக்கு 10 புள்ளயும் கொடுப்பேன்..” அவள் மென் பஞ்சு சதையில் மஞ்சள் பூ பறித்தான்.
“யோவ் நீ ரொம்ப மோசம்யா” என சிணுங்கினாள்..
“இதெல்லாம் கண்ணாலத்துக்கப்புறம் வச்சுக்கலாம்” என அவள் வாய்தான் பேசியது.. அவன் செய்கைக்கு அவள் உடல் ஒத்துழைத்தது.
அதற்குள் தாத்தா மதுராவை காணவில்லையென்று காட்டுக்கு விளக்கு பிடித்துக்கொண்டு தேடிவர.. எதிரே வந்த சேதுவின் தாத்தா இந்த நேரத்துல எங்க போறீங்க என கேட்க
அவர் தண்ணீ கொண்டு வர போன நம்ம மதுரா இன்னும் வீட்டுக்கு வரலப்பா.. சிங்கம் புலி நடமாடுற காடு வேற.. எனக்கு பயமா இருக்கு.. கொஞ்சம் என் கூட வரியா என கேட்க
தாத்தா அங்க தனியா போயிருக்கற எங்க மதுரா நான் உங்க கூட வரேன்.. இந்த விஷயம் மட்டும் அண்ணனுக்கு தெரிஞ்சதும் என்ன பாராட்டுவாரு என தாத்தாவின் பின்னே சென்றான் சேதுவின் ஆள்.
இங்கே இருவரும் புனையல் பாம்பு போல பின்னிக்கிடக்க.. அவளை இன்றே ஆண்டு விட துடித்தது அவனது இளமை.. அவள் சிணுங்க.. இவன் முணகல் அந்த இடத்தை எதிரொலித்தது.. தூரத்தில் தாத்தா பேச்சு சத்தம் தேன் மதுராவின் காதில் கேட்க.
யோவ் தாத்தாவோட குரல் கேட்குது.. அவரு என்னை தேடிட்டு வந்துட்டுறாரு.. நீ இருக்கயே என அவனிடம் போலியாக கோபம் கொண்டு என்னை விடுங்க என சொன்னதும் தேன் மதுராவை விட மனமே இல்லாமல் அவளை விட்டு பிரிந்து அவளை மரத்தில் ஏற்றி விட்டு தானும் ஏறிக்கொண்டு மரத்தில் தொங்கி அவளின் மேல் மாராப்பை எடுத்து அவள் அங்கம் படுமாறு அழுத்தி விட்டு மேலே போட்டு விட்டான் மாய கண்ணன்.
இப்போது அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து அம்மாடி மதுரா மதுரா எங்க இருக்க.. தனியா வராதனு சொன்னா கேட்குறீயா என கண்ணீர் விட்டார் தாத்தா.
தாத்தாவின் குமுறலை பார்த்தவள்.. யோவ் எல்லாம் உன்னால தான் அவனை கிள்ளி வைத்தாள்.
இப்போ பாருடி அய்யாவோட பர்பாமென்ஸனு தாத்தா இங்க பாருங்க மேல என தேவின் குரலை கேட்டு இருவரும் அன்னார்ந்து பார்த்தனர்.
தாத்தாவிற்கு மதுராவை தேவுடன் பார்த்ததும் மனதில் ஏதோ ஒன்று உறுத்தியது.
தாத்தா இந்த பொண்ணு தண்ணி எடுக்க வந்தப்ப புலி வந்துருச்சு.. நான் சரியான நேரத்துக்கு இந்த பக்கம் ரவுண்ட்ஸ் வந்தேன்.. துப்பாக்கி வேற எடுத்துட்டு வரல.. அதான் இந்த பொண்ண மரத்துல ஏத்தி விட்டு பாதுகாத்து வச்சிருக்கேன் என மாயமாய் பேசினான்.
உங்களுக்கு நன்றி சொல்லணும் தம்பி.. என்னோட உசிரை காப்பாத்தி பத்திரமா வச்சிருக்கீங்க.. என தேவ்விற்கு நன்றி சொன்னார்..
சேதுவின் ஆளிற்கோ சந்தேகம் வந்தது.. பாரஸ்ட் ஆபிஸர் துப்பாக்கி இல்லாம காட்டுக்குள்ள வருவாங்களா என தேவ்வை ஐயத்துடன் பார்த்தான்.
தேவ் அவனை ஒரு துளி கூட மதிக்கவில்லை.. முதலில் தேவ் மரத்தில் இருந்து இறங்கி மதுராவிவை மெதுவாக இறங்கச் சொல்லி கைகொடுத்தான்.. அவள் இறங்கியதும் அவன் கையை விட்டு தாத்தாவின் கையை பிடிக்க
“மதுரா கண்ணு தம்பிக்கு நன்றி சொல்லிட்டு வா.. உன்னை புலிகிட்டயிருந்து காப்பாத்தியிருக்காருல்ல” என தாத்தா பேத்தியிடம் சொல்ல
“எப்புடி” என புருவத்தை உயர்த்தினான் தேவ் கண்ணன்.
“ம்ம் ரொம்பத்தான் இதழை சுளித்து இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி நன்றி தேவ் சார்” என கண்ணை சிமிட்டினாள்.
“பாருடா” என உதடு குவித்து முத்தம் வைத்தான்.
காதல் பித்தில் இருட்டாக இருக்கு இருவரும் தங்களை கவனிக்கவில்லை என இருவரும் காதல் மொழி பேசினர்.. இதையெல்லாம் அந்த இருட்டிலும் கழுகு கண் கொண்டு பார்த்தான் சேதுவின் ஆள்.
“சரி தம்பி நாங்க வரோம்” என மூவரும் செல்ல.. போகும் தன் காதலியை இருட்டாக இருந்தாலும் அவள் உருவம் மறையும் வரை பார்த்திருந்தான் தேவ் கண்ணன்.. இப்படி காதலிப்பவர்களை பிரிக்க ஒருத்தன் காத்துக்கொண்டிருக்கிறான்.
தேன் மதுராவையும் தாத்தாவையும் வீடு வரை கூட்டி சென்று விட்டு விட்டு சேதுவை பார்க்கச் சென்றனர்.
தேன் மதுரா வீட்டுக்குள் சென்றதும் “தாத்தா சாப்டலாமா”
“மதுரா பொண்ணு நீ அந்த தேவ் தம்பி மனசுல நினைக்கிறயா.. அப்டி ஒரு எண்ணம் இருந்துச்சுனா.. அத இப்பவே அழிச்சுடு கண்ணு.. உன் மாமன் சேது.. உன்னையும் அந்த தம்பியையும் சேர விடமாட்டேன்.. ஏதோ கிறுக்குத்தனம் பண்ணுவான் சாமி.. நீ புள்ள குட்டியோட வாழ்றத இந்த கிழவன் பாக்கணோம் தாயி..” என தேன் மதுராவின் கையை பிடித்து கன்னத்தில் வைத்துக்கொண்டார்.
“தாத்தா எனக்கு தேவ் சார் ரொம்ப பிடிச்சிருக்கு.. எனக்கு அவரையே கட்டி வச்சிருங்க” என கண்ணீர் தாரை தாரையாக வந்தது அவள் கண்ணிலிருந்து.
“கண்ணு உங்கப்பனும் ஆத்தாளும் கைகுழந்தையா என்கிட்ட கொடுத்துட்டு இறந்துட்டாங்க.. அப்பயிருந்து நான் சொன்னத தான் கேட்ட.. நான் உனக்கு நல்லதுதான் தாயி சொல்லுவேன் எனக்கு சாப்பாடு வேணாம் தாயி நான் படுக்குறேன்” என கட்டிலில் முடங்கினார் தாத்தா.
கொஞ்ச நேரம் முன்பு தான் தேவ்விடம் என்னை ஏமாத்தமாட்டிங்களேனு கேட்டேன்.. இப்ப நான் அவரை எப்டி விரும்பலனு சொல்ல முடியும் தாத்தா.. என் உசிரு உள்ளவரை அவரை நினைச்சுகிட்டு தான் இருப்பேன் என இவளும் சாப்பிட பிடிக்காமல் சாதத்திற்கு தண்ணீரை ஊற்றி விட்டு தாத்தாவின் பக்கத்தில் பாயை போட்டு படுத்து விட்டாள்.
“பேத்தி சாப்பிடாமல் படுத்துட்டா
என மனது கேட்காமல் தாத்தா எழுந்து பக்கத்தில் வைத்திருந்த வாழை பழத்தை எடுத்து..
“மதுரா இராவு சாப்பாடு சாப்டாம தூங்க கூடாது சாமி இந்தா இந்த பழத்தை சாப்ட்டு படு” என மதுராவிற்கு பழத்தின் தோலையும் உரித்துக்கொடுத்தார்.
“தாத்தா” என படுத்திருந்த மதுரா எழுந்து அவளை அணைத்துக்கொண்டு “என்னால தேவ் சார மறக்க முடியாது தாத்தா.. உங்களுக்கு தெரியும் நம்ம இனத்துல ஒரு பொண்ணு ஒரு ஆணா மனசார விரும்பிட்டா அதை கட்டை காடு போகும் வரை மறக்கமாட்டானு உங்களுக்கு தெரியாதா” என தேம்பி தேம்பி அழுதாள்.
“எனக்கு புரியுது தாயி ஆனா உன் மாமக்காரன நினைச்சா எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு.. அதுக்குள்ள நீ அந்த தேவ் தம்பி கண்ணாலம் கட்டி இந்த ஊர விட்டு போயிடுங்க..”என அந்த ஊர் கட்டுப்பாட்டை மீற தன் பேத்தியின் காதலை வாழ வைக்க ஆசைப்பட்டார் அந்த முதியவர்.. அது நடக்குமா? என்பது அந்த ஈசன் ஒருவன் மட்டுமே அறிந்தது.
சேது தங்கியிருக்கும் காட்டுக் குகைகள் சென்றான் சேதுவின் ஆள்… பத்த வைக்க போறான்டா பறட்டை.. சேது அண்ண எங்கயிருக்கிங்க என கூவினான்.
“டேய் பன்னாடை பயல? எதுக்குடா இந்த சத்தம் போடுற எங்கப்பன் குதிருகுள்ளனு நீயே என்ன காட்டிக்கொடுத்துடுவ போலிருங்கே.. அந்த புசுசா வந்த பாரஸ்ட் ஆபிஸர் யாரோ தேவ் கண்ணனாமே என்னை பிடிக்க ஒத்த காலில் நிற்கறானமே” என பீடியை குடித்துக்கொண்டே பேசினான்.
“ஆமா அண்ணே உன்ன வலை வீசி தேடுறான் அந்த தேவ்.. இன்னொரு விஷயம் உங்க கிட்ட சொல்ல வந்திருக்கேன்” என பீடிகை போட்டான்..
“சீக்கிரம் சொல்லித் தொலைடா.. ஹா சரக்கு கொண்டு வந்தியா.. அத மொதல்ல ஊத்துடா” என அதற்கு அவனை கடித்தான்.
“இதோ கொண்டு வந்திருக்கேன்” சரக்கை பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி சேதுவின் கையில் கொடுத்தான்.
சரக்கை குடித்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு.. “என்னமோ என்கிட்ட சொல்லணும்னு சொன்னியே சொல்லு” என கையை ஆட்டினான்.
“அண்ணே அது வந்து” என மண்டையை சொறிந்தான்.
“இப்ப சொல்ல போறியா இல்லியாடா” என அவனின் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
கன்னத்தை தேய்த்து அண்ணேய் “நம்ம மதுரா அண்ணி அ..அந்த பாரஸ்ட் ஆபிஸர் தேவ் சார் கூட இன்னிக்கு நைட் இருந்தாங்க” என அங்கு நடந்ததை ஒன்று விடாமல் கூற
“அடியேய் கூறு கெட்ட சிறுக்கி மவளே மதுரா நீ எனக்கு தாண்டி சொந்தம்.. எவனுக்கு உன்ன விட்டுக்கொடுக்க மாட்டான் இந்த சேது” என தொடை தட்டிக்கொண்டான்.. இவனை பிடிக்க தான் நம்ம தேவ் இங்க வந்ததே.. அதையும் நாளையே செய்ய போகிறான் என்பதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான் சேது.
தேன் மதுராவை அனுப்பி விட்டு சேதுவின் ஆள் மீது தேவ்விற்கு சந்தேகம் வந்தது.. அவன் பின்னயே சென்றான்.. சேது இருக்கும் இடத்தையும் அறிந்து விட்டான்.. அடுத்த நாள் காலை போலீஸ் படையுடன் அவனை சுற்றி வளைத்தான்.
காலையில் கொட்டாவி விட்ட “டேய் பீடி கொடுடா” என அதிகாரம் செய்து எழுந்தான் சேது
“ஏய் சேது கண்ணை திறந்து பாருடா” என கர்ஜித்தான் தேவ் கண்ணன்.
தேவ் கண்ணனின் குரலை கேட்டவன் திடுக்கிட்ட கண்ணை தேய்த்து பார்த்தான்.. அங்கே தேவ் கால் கால் போட்டு மீசை திருகிக் கொண்டு அமர்ந்திருந்தான்.. தேவ்வை இப்பொழுது தான் முதன் முறை பார்க்கிறான் சேது.. தேவ்வை பார்த்தும் சேதுவிற்கு சற்று அல்லு விட்டது ஒரு நிமிஷம் அவனை விடாது பார்த்திருந்தான்.. கருப்பு சிங்கம் போல தோரணையாக அமர்ந்திருப்பதை கண்டு ஒரு நிமிஷம் ஜர்க்கானான் சேது.
“என்னடா அப்டி பார்க்குறா கட்டம் கட்டி தூங்கிட்டேன் பாத்தியா” என காலை ஆட்டிக்கொண்டு புருவத்தை உயர்த்தினான்.
“ம்ம் என்னை புடிச்சிட்டேன் ஆட்டம் போடாத நான் நாளைனைக்கே வெளியே வந்துடுவேன்.. அப்புறம் என் மாமன் மவ மதுரா எனக்குத்தான் உனக்கு எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் இப்ப நீ வந்த வேலையை செய்” என கையை நீட்டினான்.
“இன்ஸ்பெக்டர் இவன் கைக்க விலங்கு போடுங்க” என அதிகாரத்துடன் கூற.
இன்ஸ்பெக்டரும் சேதுவை கைசெய்தார்.
“திரும்ப வருவேன்டா உன்னை பழிவாங்க” என முறைத்துவிட்டு சென்றான் சேது.
“பார்க்கலாம் போடா போடா உன்னை மாதிரி லுச்சா பசங்களை நான் எங்க ஊர்லயே பார்த்துட்டேன்” என தோளை குலுக்கிச்சென்றான்.. சேது அடிப்பட்ட பாம்பு என்பதை அறியாமல்.
தேன் மதுரா சேதுவை கை செய்த விபரம் தெரிந்து தேவ் கண்ணனை காணச் சென்றாள்.. அவனும் தேன் மதுராவிற்காக காத்திருந்தான்.. ஆனால் இன்னும் சில நாட்களில் இருவரையும் பிரித்து வைக்க போகிறான் அந்த சேது.
