என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா??

அத்தியாயம்  – 3 

அவளது பேச்சைக் கேட்ட இருவரும் அதிர்ந்து போயினர். தாரகனோ “வாட்??????? செத்துப் போன மீனா???? அப்போ சமைக்காமல் பச்சையாவா சாப்பிடுவாங்க????” என அவளை விசித்திரமாகப் பார்த்தவாறு கேட்டான்.

‘அச்சச்சோ உளறிட்டோமே….’ என மானசீகமாக தன் தலையில் அடித்தவள் வெளியே   “ஹி… ஹி… சும்மா சொன்னேன்….” என சிரித்து மழுப்பினாள்.

“சரிமா கொஞ்சமா சாப்பிடு…..” என சகுந்தலா கூற, 

“இல்ல ஆண்டி பசியே இல்லை…..” 

“ம்ம்ம் உன்னோட ட்ரெஸ்  எல்லாம் தாரகனோட ரூம்ல வெச்சிட்டேன்மா.. “
அவளோ எதுவும் கூறாது புன்னகைத்த வாறே இருந்தாள். 

அவர்களுக்கான முதல் இரவும் வந்தது. சகுந்தலா அவளை அவனது அறையில் விட்டுச் செல்ல எந்த வித தயக்கமும் இன்றி உள்ளே நுழைந்தாள் ஆழியா.

அவளுக்கோ அந்த புடவையோடு நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தடுமாறியவள் அறைக்குள் நுழைந்ததுமே தாரகன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு புடவையைக் கழற்ற முயற்சி செய்தாள். 

 அவளது புடவையில் ஏராளமான சேப்டி பின் குத்தியிருக்க அதைக் கழற்றுவதில் எல்லாம் பழக்கப்பட்டிராதவள் அப்படியே புடவையோடே கட்டிலில் அமர்ந்தாள்.

பாத்ரூமில் இருந்து வெளியே வந்த தாரகன் அவளை நெருங்கி “என்னாச்சு????? ஏன் இப்படியே இருக்க???”

“புடவைல இருக்கிற சேப்டி பின்களை கழற்ற முடியலை….. கொஞ்சம் உதவி பண்றீங்களா????”

“வாட்??? நானா??????”

“இங்க நீங்க தானே இருக்கீங்க…. அப்போ உங்ககிட்ட தானே கேட்க முடியும்….”

“வாயாடி….. வா….” என்றான் தாரகன். 

முறைத்தவாறே எழுந்து அவனது அருகில் சென்று திரும்பி நிற்க, அவனோ அவளது பின் பக்க முந்தானையில் இருந்த சேப்டி பின்களை கழற்றியவன் அவளது தோளோடு இருந்த சேப்டி பின்னையும் அகற்ற அவளது புடவை நழுவியது.. 

திடீரென நடந்த சம்பவத்தில் அவள் அதிர அவளின் முன்னே வந்து அவளைப் பாராது  புடவையை பற்றியவன் “பிடி… பிடி… கீழே விழுந்தால் டஸ்ட் பட்டுரும்….” என்றான் தாரகன்.

அவளோ ‘இவன் கண்ணுக்கு நான் அழகாத் தெரியலையோ.??’ என ஐயம் கொண்டாள். ‘இந்த ரொபோவை கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் போலவே…’ என நினைத்தவாறு அவனது கையில் இருந்த முந்தானையைப் பறித்து தன் மீது போட்டவாறு விலகிச் சென்றாள் ஆழியா.

அவள் விலக அவளின் கையைப் பற்றி பின் பக்கமாக நெருங்கியவன் அவளது பிளௌஸின் முடிச்சை அவிழ்த்தவாறு “நீ ரொம்ப அழகுடி…..” என்றான்.

தாரகனுக்கோ அவளது உடலின் மென்மையில் ஒரு பிடிப்பு ஏற்பட அவளைத் தொட்டு மென்மையின் தன்மையை பரிசீலிக்க அவன் மனம் ஆவல் கொண்டது.

குப்பென முகம் சிவந்து போக அவனிடமிருந்து விலகி பாத்ரூமினுள் சென்று மறைந்தாள் ஆழியா. அவளது செயல்களை ஒவ்வொன்றாக இரசிக்கத் தொடங்கினான் தாரகன்.

 அவனோ படுக்கையை நேராக விரித்த பின் அதில் படுத்து கண்களை மூடவும் உடையை மாற்றிக் கொண்டு ஆழியா வரவும் சரியாக இருந்தது. 

அவள் எங்கே படுப்பது என சிந்தித்தவாறு நிற்க, தனக்கு அருகே இருந்த இடத்தைச் சுற்றிக் காட்டி தூங்கும் படி தாரகன் கூறினான்.

“ஹேய் படுக்கை விரிப்பு கலைந்தால் எனக்குப் பிடிக்காது… மெல்ல படு…” என்க, அவனைத் தன் மனதினுள் இம்சை எனத்திட்டியவாறு ஆடாமல் அசையாமல் படுத்துக் கொண்டாள் ஆழியா. 

சற்று நேரத்திலே அவன் தூங்கி விட அவளுக்கோ பசிக்கத் தொடங்கியது. ‘அச்சோ அந்த ஆண்டி கொடுத்த செத்த மீனையே சாப்பிட்டு இருக்கலாமோ…???’ என மெல்ல எழுந்தவள் தங்களுடைய அறையில் உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா எனத் தேடத் தொடங்கினாள். 

அவளது தேடலில் அவனது அழகான அறையோ அலங்கோலமாக மாறியது. அவனது அறையை விட்டு வெளியே வந்தவள் தாரகனுடைய அம்மா கிட்சனில் தனியாக நிற்பதைக் கண்டதும் அவளது மனதின் அடியாழத்தில் இருந்த பழி வெறி அதிகமாகியது.

அங்கே மேசையில் இருந்த கூர்மையான கத்தியை தன் கரங்களில் ஏந்தியவாறு சகுந்தலாவை மெல்ல நெருங்கினாள் ஆழியா.

அவளது நீல நிறக் கண்கள் பழி வெறியில் மின்னின. 

 கத்தியை அவரது முதுகில் குத்துவதற்கு  அவள் கையை ஓங்க “ஏய்ய்……..” என்ற தாரகனது சத்தத்தில் ஆழியாவும் சகுந்தலாவும் அதிர்ந்து திரும்பினர். 

ஆழியாவுக்கோ பயத்தில் வியர்த்து வடிய அவளது கையிலிருந்த கத்தி நழுவி கீழே விழுந்தது.

“இடியட்… என்ன பண்ணி வெச்சிருக்க நீ?????” என கர்ஜித்தான் தாரகன். 

அவனது சிம்மக் குரலில் பதறிப் பயந்து போனாள் ஆழியா.

சகுந்தலாவோ இருவரையும் புரியாத பார்வை பார்த்தவர் “என்னாச்சு தாரகா???” எனக் கேட்டார். 

“மாம் என்னோட அறையை மொத்தமா நாசம் பண்ணி வெச்சிருக்காமா..” என்றான் சினத்தில் பல்லைக் கடித்தவாறு.. 

அவரோ அவனைப் பார்த்து சிரித்தவாறு “ஹா….. ஹா…. நீயே அதைப் பார்த்துக்கோ…..” என்றவாறு அவளிடம் தலை அசைத்து விடை பெற்று தன் அறைக்குச் சென்றார்.

கீழே விழுந்து கிடந்த கத்தியைப் பார்த்தவன் அதைக் குனிந்து எடுத்தவாறு “இதை ஏன் உன்னோட கையில் வெச்சிருந்த????”

அவளோ கண்கள் கலங்கி பயத்தில் தடுமாறிபடி “பசி… பசிக்கிறது…. பழம் ஏதும் சாப்பிடலாம்னு வந்தேன்….” என்றாள் ஆழியா.

அவனோ பிரிட்ஜைத் திறந்து குமளிப்பழத்தை (ஆப்பிள்) எடுத்து சிறு துண்டுகளாக  வெட்டி அவளுக்குக் கொடுத்தான்.

முதலில் தயக்கத்துடன் வாங்கியவள் பின் அதன் ருசி பிடித்துப் போக முழுமையாக உண்டு முடித்தாள். 

தங்களுடைய அறைக்குச் சென்றதும் அனைத்தையும் சுத்தம் செய்தவன் அதன் பின்பே படுக்கையில் சரிந்தான். 

அவளது மனமோ ‘ஆழியா நீ இப்போ பார்க்கிற காதல் பார்வைல அவன் உன் பின்னாடியே வரனும்…’ என மனதில் நினைத்தவள் அவனையே கண் சிமிட்டாது பார்க்க,

அவளது பார்வையைப் பார்த்து “ஏன்டி என்னை முறைக்கிற….????” என அவள் நினைப்பில் மண் அள்ளிப் போட்டான் தாரகன்.

‘ எதே நம்மளோட காதல் பார்வை முறைப்பது போலவா தெரியுது?????’ என மனதில் நினைத்தவாறு வெளியே  “நான் ஒன்னும் முறைக்கலை….” என்றாள் ஆழியா.

“ம்ம் உன்னோட அம்மா எங்கே??????”

“அவங்க இப்போ உயிரோடு இல்லை…” என்றவள் தன் கண்களை மூடி  அவனுக்கு முதுகு காட்டியவாறு மறு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். 

அவளது கண்களில் அன்றைய சம்பவம் விரிய அவளது முதுகோ அழுகையில் குலுங்கியது.

“ஐ அம் சாரி….” என்றான் தாரகன்.
தன் மனைவி அழுவது அவனுக்கும் வேதனையே ஏற்படுத்த அவளைப் பற்றி இழுத்து தன் மார்போடு சாய்த்தவன் “இட்ஸ் ஓகேமா…..” என ஆறுதல் அளித்தான். 

அவனது ஆறுதல் அவளுக்குத் தேவைப்பட இன்னும் அவனது மார்பில் அழுத்தமாக முகம் புதைத்தாள்.. 

அதே நேரம் வெளியே இடி ஓசை கேட்க “ஹேய் இது மழை தானே… ???” என அவள் ஆர்வமாகக் கேட்டாள்.
அவனோ ஆம் என தலையசைத்தவாறு அவளை மாடிக்கு அழைத்துச் சென்றான். 

மாடியிலே மழை நீர் தம்மீது  படாதவாறு இவர்கள் ஒரு கூரையின் கீழ் ஒதுங்கி நின்றனர்.

ஆண் மேகமும் பெண் மேகமும் காதல் கூடி இணைந்தது போலும்.. அக் காதலர்களின் மோகச் சத்தமான சிணுங்கல்கள்  இடியாக பூமியை  வந்தடைய, அக் காதலின் கூடலிலே வெளிப்பட்ட குழந்தையாய் மழை பூமியை வந்து தழுவியது.

ஆழியாவோ அசைவின்றி இரசித்தாள் அந்த மழையை. இந்த அனுபவம் எல்லாம் அவளுக்கு புதிதல்லவா??? 

அவளது உடலில் சில மழைத்துளிகள் பட்டதும் அவளது உடல் சிலிர்த்தடங்கியது.

அவளைத் தன் கரத்திற்குள் கொண்டு வந்தான் தாரகன். “மழைல நனைய ரொம்ப பிடிக்குமோ????”

“ம்ம்ம் ரொம்ப…… ரொம்ப… பிடிக்கும்…..”

“நான் நனைய போறேன்….” என அவள் விலக அவளை இடையோடு பற்றி தன் உடலோடு அணைத்துக் கொண்டவன் தன் உதடுகளை அவளது காதோரம் பதித்து “உன்னோட பேர் என்னடி????” எனக் கேட்டான்.

அவளோ அவனது கேள்வியில் அதிர்ந்து பின் தன்னுடைய மெல்லிய குரலில் “ஆழியா….” என்றாள். திருமணம் முடிந்து முதல் இரவில் பேர் தெரிந்து கொண்ட கணவன் இவனாகத் தான் இருப்பான் என பல்லைக் கடித்தாள் அவள்.

“ஆழியா……  ஆழி…. ம்ம் நைஸ் நேம்…….”

“ம்ம்ம்…….”

“நான் போகவா?????”

“எங்கே?????”

“மழைல நனையனும் போல இருக்கு….. ப்ளீஸ்…” 

“வேணாம்டி… இங்கிருந்தே பார்…..”

“ப்ளீஸ் தாரு……. “ என அவனது பெயரை சுருக்கி அவள் அழைக்க, அவனது பழைய காதலினால் வறண்ட மனதோ  ஆழியாவின் சில செய்கையில் மீண்டும் மலரத் தொடங்கியது.

அவளது கெஞ்சலில் இதயம் தாளம் தப்பித் துடிக்க “சரி போ….” என தன் கைச் சிறையில் இருந்து அந்த அழகியை விடுவித்தான் தாரகன். 

அவன் போ என்றதும் சிட்டுக் குருவி போல பறந்து சென்றவள் தன் கைகளை விரித்து மழையைத் தன் கரங்களில் ஏந்தியவாறு வானை நிமிர்ந்து பார்த்தாள். 

அவளது நிமிர்ந்த வதனத்தின் நெற்றியில் பட்ட மழைத்துளி அவளது செவ்விதழ் தாண்டி கழுத்தை வந்தடைந்து தன் பயணத்தை தொடர்ந்தது.

“தாரு….. நீங்க வரலையா???”

“ம்ஹூம்ம்… நீயே என்ஜாய் பண்ணு…” என்றான் தாரகன்.

அவளோ ஆடை நனைந்து உடல் நனைந்து சிலிர்க்க அவனோ அவளது ஒப்பனையற்ற அழகில் சிலிர்த்துப் போனான். 

அவன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அவள்புறம் சாயத் தொடங்கியது. 

“ஆழி….. போதும் வா…… உள்ளே போகலாம்…..” 

“ம்ஹூம் நான் வரலை….” என்றாள் அந்த கடல் மங்கையான பிடிவாதக்காரி.  

அவளை நெருங்கி வந்தவன் அவளது கரத்தைப் பற்றி மழைநீர் படாத இடத்திற்கு அழைத்து வந்தான். 

அவளோ “விடுங்க தாரு… ப்ளீஸ்  இன்னும் கொஞ்ச நேரம் நனையிறேனே ப்ளீஸ் ப்ளீஸ்….” என அவனிடம் இருந்து விலகி மழைக்குள் ஓட அவளை இழுத்துப் பிடித்து சுவற்றோடு சாய்த்தான்  தாரகன்.

அவளது அழகிய வதனம் மழைநீர் பட்டு அழகாகத் தெரிய அந்த மழைத்துளிகளை எல்லாம் தன் இதழ்களால் துடைத் தெடுக்கும் ஆர்வம் நொடிக்கு நொடி பெருகிக் கொண்டே போனது ..

இவ்வளவு நேரமும் மழையிலேயே தன் கவனத்தை வைத்திருந்தவள் தற்போது தான் தாரகனது உணர்ச்சி நிறைந்த முகத்தைப் பார்த்தாள்…

அவனது பார்வை உயிர் வரை சென்று தீண்ட அவளது இமைகள் படபடக்கத் தொடங்கின. 

சற்றே படபடப்பு அதிகமாக தன் கண்களை இறுக மூடிக் கொண்ட ஆழியாவின் இதழ்கள் ஒரு வித அழுத்தத்தை உணர்ந்தன. ‘இதுதான் முத்தமா??????  முத்தம் இப்படித்தான் கிறங்க வைக்குமோ????? என் இதழ்கள் என்ன இவருக்கு லாலிபாப் மிட்டாயா???’ என அவனது முத்தத்தை அனுபவித்தவாறு  முத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டாள் ஆழியா.

அவளோ மூச்செடுக்க சிரமப்பட அவளை விட்டு விலகியவன் அவளைப் பாராது மழையைப் பார்த்தான்.  

ஆழியாவோ அவனைக் காதலில் விழ வைக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்தவள் “ஐ லவ் யு தாரு….” என்றிருந்தாள்.

இவ்வளவு நேரமும் அவனிடம் இருந்த நெருக்கம் சடாரென காணாமல் போனது. அவனது கண்களில் அவள் மீது  இருந்த மயக்கம் நீங்கிப் போனது. 

காதல் என்றதுமே அவன் ஏமாந்தது தொடக்கம் அனுபவித்த வலி வரை நினைவு வந்து அவனைப் பேரிடியாய் தாக்க, 

“சாரி…. ஆழியா.. எந்தப் பொண்ணையும் நம்பி காதலில் விழும் எண்ணம் எனக்கில்லை…” என்றான் தாரகன்.

ஆழியாவோ தாரகன் இவ்வாறு மறுப்பான் என்பதை சற்றும் எதிர்பாராதவள் அதிர்ந்து போனாள்.

“காதல் இல்லேன்னா எதுக்கு என்னை கிஸ் பண்ணீங்க????”

“பிடிச்சிருந்திச்சு பண்ணினேன்…..”

“அப்போ அதுக்கு பேர் வேற…..”

“இருக்கலாம்.. பட் ஷ்யூர் இது காதல் இல்ல.. என்னோட காதல் பவித்திராவோடையே முடிஞ்சு போச்சு….. இனி எந்தப் பொண்ணு மேலயும் அது வராது.” என்றான் உறுதியாக.

ஆழியாவுக்கோ அவனது காதலை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி மேலோங்கியது. 

இருவருக்குள்ளும் மற்றவர் மீது ஒருவித நேசம் உண்டு…. அந்த நேசமே காதல் தானே … அதை இருவரும் உணறத் தவறினர்.

அவனோ “நாம ஆல்ரெடி பேசி முடிவெடுத்தாச்சு….  இன்னும்  கொஞ்ச நாள்ல டிவோர்ஸ் பண்ணிருவோம்.. அதுக்கு இடைல எதுக்கு இந்த லவ் எல்லாம்?????”  எனக் கேட்க, 

 அவளோ சீற்றத்தில் “ஆமா.. இப்படி ஒரு லவ் தேவையில்லை தான்…பட்  தயவு செஞ்சு இனி என்னைத் தொட வேணாம்…” எனக் கத்திவிட்டு மாடியில் இருந்து சென்று தங்களுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள் ஆழியா.

அவள் சென்றதும்  மாடியில் இருந்த அறையினுள் நுழைந்து கொண்ட தாரகனுக்கு ஆழியாவின் கூற்றில் சினம் பொங்கியது. 

அந்த சினத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தன் தொலைபேசியில் சில வேலைகளை முடிக்கும் பொருட்டு கடல் சார்ந்த பொருட்களையும் சேமிக்கத் தொடங்கினான்.

தன் வேலையை முடித்த தாரகன் அறைக்குள் நுழைய ஆழியாவோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

 அவள் படுத்திருந்த கோலத்தைப் பார்த்து வேண்டுமென்றே அவளை நுனி விரலால் தட்டி எழுப்பினான்.

அவளோ அந்த நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு  எழுந்தவள்  அவனைப் புரியாது பார்த்தவாறு 
“இப்போ என்னை எதுக்கு எழுப்பினீங்க????” எனக் கேட்டாள்.

“அறிவில்லையா உனக்கு???” என்ற அவனது சீற்றத்தில் பதறி எழுந்தமர்ந்து கொண்டு “ஏன்  என்னாச்சு?????” எனக் கேட்டாள்.

அவனோ அவளைப் பாராது அவளை படுக்கையில் இருந்து எழும்பச் செய்தவன் கசங்கி மடிந்திருந்த படுக்கை விரிப்பை நேராக்கினான். 

அவளோ அதிர்ந்து போய் விழிகளைப் பெரிதாக விழித்து அவனை நோக்க , 
“என்ன அப்படி பார்க்கிற??? எனக்கு பெட் நீட்டா இருக்கனும். ம்ம் இப்போ படு…..” என்றான்.

“நீங்க சரியான இம்சை” என அவள் மீண்டும் படுக்க முயல, 
“ஓ மை காட்…. நோ…..” என அலறினான் தாரகன்.

அவளோ “இப்போ என்ன” என்றவாறு அவனை சலிப்பாகப் பார்க்க, 
அவனோ அவளது தலையணையை முகம் சுழித்தவாறு சுட்டிக் காட்டினான்..


அவளது ஒற்றை முடி அதில் உதிர்ந்து கிடக்க அந்த தலையணையைக் கொண்டு போய் வெளியே வீசியவன் புது தலையணையை அவளுக்கு கொடுத்து “ம்ம் பெர்பெக்ட்.. இப்போ தூங்கு….” என்றான்.

“மிஸ்டர் இம்சை நான் வேணும்னா மொட்டை அடிச்சிட்டு வந்து தூங்கவா….???” என சினத்தில் கேட்க,

“வாவ் குட் ஜடியா….” எனாறானே பார்க்கலாம்.. வெறுத்துப் போனது ஆழியாவுக்கு.

அவளோ அர்த்த ராத்திரியில் அவன் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து ‘நான் இவனை பழி வாங்குறனோ இல்லையோ… பட் இவன் என்னை நல்லா  பழிவாங்கிட்டு இருக்கானே பாவி….’ என மனதோடு புலம்பிக் கொண்டாள்.

“ஏய் மார்னிங் அஞ்சு மணிக்கே எந்திரிக்கனும் புரிஞ்சிதா???” என அடுத்த கட்டளையை அவன் விதிக்க,

 “போடா இம்சை…..” என்றவாறு அந்த அறையில் இருந்து தப்பித்து மாடி ஏறினாள். மழையோ நின்று ஓய்ந்திருந்தது.

அந்த அழகிய மாடியில் பூச் செடிகளுக்கு மத்தியில் அமைந்திருந்த நீச்சல் குளத்தைப் பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்க அதனுள் பாய்ந்து மூழ்கினாள் அந்த மங்கை. 

அவளது உடலில் கழுத்தளவு நீர் பட்டதும் அவளது கால்கள் பழையபடி வாலாக மாற அடி ஆழத்திற்குச் சென்று படுத்தவள் தாரகனை நினைத்து புன்னகைத்துக் கொண்டாள்.

‘என்னோட ஒற்றைத் தலை முடி இருந்ததால தலையணையை மாத்திறானா…. கள்ளன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிஸ் பண்ணும் போது என்னோட முடிக்குள்  கையை நுழைத்து வருடி சேட்டை செய்யும் போது மட்டும் என்னோட முடி நல்லது போல…  பிராடு எல்லாம் நடிப்பு’ என எண்ணி சிரித்தவாறு தூங்கிப் போனாள் ஆழியா.

💙💙காதல் துளிரும்..💜💜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *